Published:Updated:

தொடர்: சிகரம் தொடுவோம்!

தொடர்: சிகரம் தொடுவோம்!

தொடர்: சிகரம் தொடுவோம்!

தொடர்: சிகரம் தொடுவோம்!

Published:Updated:
பங்குகள்
தொடர்: சிகரம் தொடுவோம்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்: சிகரம் தொடுவோம்!
தொடர்: சிகரம் தொடுவோம்!
தொடர்: சிகரம் தொடுவோம்!

ற்புதமான காலை நேரக் குளிர். விடியல் பறவைகளின் சங்கீதம். நல்ல நாளுக்கான எல்லா அம்சங்களுடன் வெளிச்சம் மெல்ல பரவும் இனிய பொழுது. வழக்கம்போல் காலை ஐந்து மணிக்கே எழுந்து கடற்கரை வாக்கிங் முடித்த ராமனாதன், வீட்டுக்குத் திரும்பினால், அங்கே காத்திருந்தார் கிருஷ்ணன்.

“என்னப்பா, சென்செக்ஸ் பதினோராயிரத்தை தொட்டுடுச்சே! நல்லா காசு பண்ணியிருப்பியே” என்ற கிருஷ்ணனின் பெருமூச்சு கலந்த வார்த்தைக்கு வழக்கம் போல் தனது புன்னகையே பதிலாகத் தந்தார் ராமனாதன். அதைப் பார்த்த கிருஷ்ணன், “ராமனாதா, சென்செக்ஸ் ஏறினாலும் சரி... இறங்கினாலும் சரி! இந்தப் புன்னகை மட்டும் மாறாதே உனக்கு!” என்றார் ஆச்சர்யத்துடன். அந்த ஆர்ப்பாட்டமில்லாத அமைதிதான் ராமனாதனின் வெற்றிக்கு அடித்தளம் என்பது அவருக்குத் தெரியும்.

வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவுடன், சுடச்சுட காபியும், பிஸினஸ் செய்தித்தாள்களும் அவருக்காகக் காத்திருந்தன. அதிசயமாகக் காலையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணனைப் பார்த்த, ராமனாதனின் மனைவி அவருக்கும் காபி கலந்து கொடுத்தார்.

தொடர்: சிகரம் தொடுவோம்!

ஆவி பறக்க சிக்கரியில்லாத சுத்தமான காபியைச் சுவைத்துக்கொண்டே, மெல்ல தனது பார்வையை செய்தித்தாளில் பதித்த ராமனாதனைப் பார்த்து, ‘‘எதுக்கு இவ்வளவு காலை நேரத்தில் உன்னைப் பார்க்க வந்தேன்னு கேட்கவேயில்லையே” என்று மௌனச் சூழ்நிலையைக் கலைத்தார் கிருஷ்ணன்.

அவர் பேப்பருக்குள் போனால் வெளிவர ஒருமணி நேரமாவது ஆகும் என்பது தெரியும் கிருஷ்ணனுக்கு. நிமிர்ந்த ராமனாதன், “சொல்லு நான் கேக்கலேன்னாலும் நீயே எப்படியும் சொல்லத்தான் போறே. நான் என்ன பண்ணனும் உனக்கு?” நேரடியாக விஷயத்துக்கு வந்தார் ராமனாதன்.

“அது வந்து ராமனாதா... ஆபீஸ்ல இருக்கிறப்போ ஷேர் மார்க்கெட் பத்தி அப்பப்ப, அப்படியே கொஞ்சம் எடுத்துவிடுவேன். எங்க மேனேஜர் என்னைப் பங்குச் சந்தையில் பெரிய ஆளுனு நினைச்சுக்கிட்டு, ‘எல்லாரும் பணம் பண்றாங்களே... என்னையும் பங்குச் சந்தையில் சேர்த்து விடு!’னு ஒரே அடம். ‘முதலீடுதானே! பணத்தை ரெடி பண்ணுங்க... ஷேர்ல இறங்கிடலாம்!’னு கெத்தா சொல்லிட்டு வந்துட்டேன். நீதான் ராமனாதா என்னைக் காப்பத்தணும்’’ என்றார் பரிதாபமாக.

‘‘சரி... பார்ப்போம். அடுத்த வாரத்திலே ஒருநாள் என்னை அவர்கிட்டே அறிமுகப்படுத்திவிடு! மேட்டரை முடிச்சுடுவோம்’’ என்றார் ராமனாதன்.

“அடுத்த வாரமா..? சரியாப் போச்சு! இன்னிக்கு ஆபீஸுக்குப் போனா, என்னைத் துளைச்சு எடுத்துடுவார், இப்பவே கொஞ்சம் டயம் ஒதுக்கிடு. புண்ணியமாப் போகும். ப்ளீஸ்!” என கோரிக்கை வைத்தார் கிருஷ்ணன்.

ஊரே பற்றிக்கொண்டாலும் அதிகாலையைப் பார்த்திராத கிருஷ்ணனை, மேனேஜர் விஷயம் காலையில் எழுந்திரிக்க வைத்திருக்கிறதென்றால், நாம் உதவி செய்துதான் ஆக வேண்டும் போலிருக்குதே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட ராமனாதன், “கிச்சா... கவலைப்படாதே! உன் மேனேஜரை எனக்கு லஞ்ச் டைமில் போன் பண்ணச் சொல்லு!” என்று கிருஷ்ணனின் தோளில் தட்டியவர், செய்தித்தாளுக்குள் புகுந்தார்.

சரியாக ஒருமணி. கிருஷ்ணனின் மேனேஜர் செந்தில் போன் செய்தார். ‘‘மிஸ்டர் ராமனாதன். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமென்பது பல வருட ஆசை. எங்கே ஆரம்பிப்பது, எதில் முதலீடு செய்வது எதுவும் தெரியாது. எனக்கு நல்ல வழியைக் காட்டி பங்குச் சந்தையோட சூட்சுமத்தைச் சொல்லித்தர சரியான குருவைத் தேடிக்கிட்டிருக்கேன்!’’ என்று ராமனாதனை ரொம்பவே உருக்கிவிட்டார்.

கோயமுத்தூர்காரரான செந்திலின் மரியாதையான பேச்சும் பங்குச் சந்தையில் அவரது ஈடுபாடும், கற்றுக் கொள்வதில் இருந்த பணிவும், ராமனாதனை உதவி செய்யத் தள்ளிவிட்டது. உடனே, ‘‘ஓகே. நானிருக்க பயமேன்!’’ என்று சொன்ன ராமனாதன், அந்த நிமிடமே பாடத்தை ஆரம்பித்துவிட்டார்.

“இதில் தியரி கிளாஸைவிட, பிராக்டிகல் கிளாஸ்தான் அதிகமிருக்கும். பங்குச் சந்தை பற்றி நான் சொல்வதைவிட, நீங்களே உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால், அதில் நீங்கள் நேரடியாக முதலீடு செய்தால்தான் அதைப்பற்றி முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியும்’’ என்றார் செந்திலிடம்.

“தாராளமா இறங்கிடலாம் சார்... ஆனா, அது ரொம்ப ரிஸ்க்னு சொல்றாங்களே! அதான் யோசனையா இருக்கு!” என்றார் செந்தில்.

தொடர்: சிகரம் தொடுவோம்!

இம்மாதிரி கருத்து சாமானியர்களிடம் பரவலாக நிலவிவரும் ஒன்றுதான். செந்திலிடம் ராமனாதன் சொன்ன வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

“நீச்சல் கற்றுக்கொள்வதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதும் ஒன்றுதான். எப்படி தண்ணீரில் இறங்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாதோ, அதைப் போலத்தான் பங்குச் சந்தையும். வாழ்க்கையில் ரிஸ்க் இல்லாதது எது? கீழே விழுந்துவிடுவோம் என்ற பயம் இருந்தால், சைக்கிள் ஓட்டக்கூட கற்றுக்கொள்ள முடியாது” என்றார் ராமனாதன்.

செந்தில், அவர் சொல்வதை உடனே செய்வதாகக் கூறினார். ஆபீஸ் முடிந்தவுடன் சந்திக்கலாம் என்று இருவரும் பேசி முடிவுசெய்தனர். ராமனாதன் சொன்ன நேரத்துக்கு ஐந்து நிமிடம் முன்னதாகவே ட்ரைவ்\இன்னுக்கு வந்துவிட்டார் செந்தில். அவரது ஆர்வம் அப்படி. சாம்பார் வடை சாப்பிட்ட நேரத்தில், பங்குச் சந்தையில் நுழைவதற்கு வேண்டிய சங்கதிகளை ஒரு பட்டியல் போட்டுக் கொடுத்துவிட்டார் ராமனாதன்.

‘‘முதலில் டீமேட் அக்கவுன்ட் ஒன்று தொடங்கவேண்டும். நல்ல பங்குச் சந்தைத் தரகருடன் டிரேடிங் அக்கவுன்ட் ஆரம்பிக்கவேண்டும்! இது இரண்டையும் முடித்துவிட்டு என்னை வந்து பாருங்கள். அடுத்த பாடத்தை அப்போது பார்ப்போம்’’ என்று ராமனாதன் சொல்ல... மகிழ்ச்சியோடு எழுந்தார் செந்தில்.

வா சகர்களே... செந்திலோடு சேர்ந்து உங்களது பங்குச் சந்தைப் பயணத்தை இங்கே துவங்கப் போகிறீர்கள். உங்களுக்குத் தேவை குறைந்த பட்சம் 2,000 ரூபாய். இந்த முதலீட்டில் பங்குச் சந்தையின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வரப் போகிறோம்.

நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய ஹோம்வொர்க்குகளைக் குறித்துக் கொள்கிறீர்களா..?

பான் ( PAN ) நம்பர் : ‘டீமேட் கணக்குத் துவங்குவதற்கு பான்கார்ட் அவசியம்!’ என சமீபத்தில் செபி வலியுறுத்தியுள்ளது. நமது வருமான வரித்துறையினரால் வழங்கப்படுகிற இந்த பான் நம்பர் கார்ட் இல்லாதவர்கள் தங்கள் ஆடிட்டர் மூலமாகவோ அல்லது யூ.டி.ஐ வங்கியின் குறிப்பிட்ட கிளைகளின் மூலமோ, இதற்கென உள்ள படிவத்தை பூர்த்திசெய்து சமர்ப்பித்தால் சில நாட்களில் பான் கார்ட் உங்கள் வீடு தேடி வரும். விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை:

ஒரு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ... விலாசத் துக்கான ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ரேஷன் கார்ட் போன்றவற்றில் ஏதோ ஒன்றின் நகல்... விண்ணப்ப கட்டணம் ரூ.60. பான் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் இணைய தளத்திலும் கிடைக்கிறது. http://new.incometaxindia.gov.in/Archive/Form49aE.PDF என்ற இணைய தளத்துக்குச் சென்று படிவத்தை பிரதி எடுத்து விண்ணப்பிக்கலாம். அல்லது http://new.incometaxindia.gov.in என்னும் இணையதளத்தில் ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

பேங்க் அக்கவுன்ட்: ஷேர் வாங்க, விற்க தேவைப்படும் பணத்தை ரொக்கமாகக் கையாளாமல் காசோலை மூலமாகக் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வதே மிகச் சிறந்தது. அதற்கு ஒரு வங்கிக் கணக்கு தேவை!

டீமேட் ( DEMAT ) அக்கவுன்ட்:

முன்பு போல உயர்ரக காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட ஷேர் சர்டிஃபிகேட்கள் இப்போது வருவதில்லை. நீங்கள் வாங்கும் ஷேரை, இதற்கென உங்கள் பெயரில் இருக்கும் ஒரு கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள். இந்தக் கணக்கிற்குப் பெயர்தான் டீமேட் அக்கவுன்ட். விற்கும்போது இந்தக் கணக்கிலிருந்து எடுத்துக் கொடுக் கலாம். ரொக்கத்துக்கு பதில் காசோலையைக் கையாள்வது போலத்தான் இதுவும். முந்தைய நாட்களைவிட, இது மிகவும் பாதுகாப்பானதும்கூட.

தொடர்: சிகரம் தொடுவோம்!

சென்னை பங்குச் சந்தை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஐ.டி.பி.ஐ வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் ஏதோ ஒன்றில் இந்த அக்கவுன்ட்டை ஆரம்பிக்கலாம். இவர்களை டி.பி (டெபாசிட்டரி பார்ட்டிசிப்பன்ட்) என்பார்கள். உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள டி.பி-யிடம் இந்த அக்கவுண்ட்டைத் தொடங்குவது நடைமுறையில் சௌகரியமாக இருக்கும். அல்லது உங்களது புரோக்கரிடம் இந்த வசதி இருந்தால் அவரிடமேகூட தொடங்குங்கள். இந்தக் கணக்கை துவங்க, மொத்தத்தில் ரூ.350\ல் இருந்து ரூ.750 வரை ஆகும்.

இதற்கு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, இருப்பிடச் சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை தேவைப்படும். சரியாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதற்கு தேவையான இணைப்புகளையும் கொடுத்தால், ஒரு வாரத்தில் உங்கள் டீமேட் அக்கவுன்ட் ரெடி!

டிரேடிங் அக்கவுன்ட்: வங்கி கணக்கு ரெடி. டீமேட் கணக்கும் ரெடி. இனி உங்கள் வேலை, நல்ல பங்குத் தரகரைத் தேர்ந்தெடுத்து, பங்குகளை வாங்க, விற்க அவரிடம் ஒரு கணக்கைத் துவக்கவேண்டும். இது ஒன்றும் சிரமமான வேலையில்லை. மேலே சொன்னது போன்ற சான்றிதழ்களைக் கொடுத்தால் போதும்.

தொடர்: சிகரம் தொடுவோம்!

இதற்கான விண்ணப்ப படிவத்தையும், ஒப்பந்தப் பத்திரத்தையும் தரகரிடம் பெற்று பூர்த்திசெய்து மேலே சொன்ன சான்றிதழ்களை இணைத்தால் போதுமானது. சில வங்கிகளும் கணினி மூலம் பங்குகளை வாங்க, விற்கக்கூடிய வசதிகளை அளிக்கிறது. இது தரகரின் வேலையைப் போன்றது. முதல் தடவை பங்குச் சந்தையில் காலடி வைக்கும் உஙகளுக்கு ஒரு நல்ல தரகர் மிகவும் உதவியாக இருப்பார். இதற்கு பணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. இந்தக் கணக்குத் துவங்க, குறைந்த பட்சம் இரண்டு முதல் மூன்று நாட்களாகலாம்.

பங்குத் தரகரை தேர்வு செய்வது எப்படி?

செபி என அழைக்கப்படும் ‘செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பிடம் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பங்குத் தரகராக முடியும். எனவே, நீங்கள் தேர்வு செய்யும் தரகர் அல்லது அவர்கள் கீழ் வர்த்தகம் செய்யும் துணைத் தரகர், செபி அனுமதி பெற்றவர்களா என உறுதி செய்துகொள்ளுங்கள். முடிந்தவரை ஏற்கெனவே அங்கு பங்கு வர்த்தகம் செய்பவர்களிடமும் விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மும்பை பங்குச் சந்தையின் சென்னை அலுவலகம், சென்னையில் இருக்கும் தேசியப்பங்குச் சந்தை அலுவலகம், சென்னை பங்குச் சந்தை, இணையதளம், விளம்பரங்கள், நண்பர்கள், யெல்லோ பேஜஸ்... என்று பலவழிகளில் பங்குத் தரகரின் விலாசங்களைப் பெறலாம். டீமேட் அக்கவுன்ட்டையும் தரகரின் டிரேடிங் அக்கவுன்டையும் துவங்கிவிட்டு வாருங்கள்... அடுத்த கட்டத்துக்கு...

தொடர்: சிகரம் தொடுவோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism