Published:Updated:

பங்குப் பரிந்துரை - முத்தாக மூன்று!

பங்குப் பரிந்துரை - முத்தாக மூன்று!

பங்குப் பரிந்துரை - முத்தாக மூன்று!

பங்குப் பரிந்துரை - முத்தாக மூன்று!

Published:Updated:
பங்குகள்
பங்குப் பரிந்துரை - முத்தாக மூன்று!
 

மார்ச் 27 அன்று, தேசிய பங்குச் சந்தை விலைகளின் அடிப்படையிலான பரிந்துரைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குப் பரிந்துரை - முத்தாக மூன்று!
பங்குப் பரிந்துரை - முத்தாக மூன்று!

ந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான இது, எண்ணெய் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. முன்பு ‘மெட்ராஸ் ரீஃபைனரிஸ்’ என்ற பெயரில் இயங்கிவந்தது. தற்போது சென்னை, நாகப்பட்டினம் என இரு இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்களைக் கொண்டிருக்கிறது.

இடையில் இந்த நிறுவனத்தை, தாய் நிறுவனத் துடன் இணைத்துவிடத் திட்டமிடப்பட்டு ஏனோ அது கைவிடப்பட்டது. நாகையில் உள்ள யூனிட்டின் சுத்திகரிப்பு திறனை இரட்டிப்பாக்க 30 கோடி ரூபாயிலும், சென்னையில் ஒரு கூட்டு நிறுவனமாக 1,600 கோடி ரூபாயில் மின் உற்பத்தியிலும் ஈடுபடும் திட்டமும், மலேஷியாவின் ‘பெட்ரோநாஸ்’ நிறுவனத்துடன் சேர்ந்து 7,500 கோடி ரூபாயில் நாகப்பட்டினத் திலேயே ஒரு விஸ்தரிப்புத் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது.

இப்போது நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷ னுடன் சேர்ந்து 490 மெகா வாட் மின் உற்பத்தி திட்டம் ஒன்று பரிசீலனையில் உள்ளது. 2004 இறுதியில் இதன் ஹைட்ரோகிராக்கர் யூனிட், ஆண்டுக்கு 3 மில்லியன் டன் திறனில் செயல்படத் தொடங்கிவிட்டதால், இப்போது நாட்டின் சுற்றுப்புற சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற பாரத் மிமி, யூரோ மிமிமி போன்ற தரத்தில் எரிபொருளை வழங்க முடிகிறது. கடந்த நிதியாண்டில் இது 1.5 லட்சம் டன் பாலிப்ரோப்லின் உற்பத்தியில் ஈடுபடும் திட்டத்தை ஆய்வுசெய்யத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் அதிகரித்தும் வரும் பாலிப்ரோப்லின் தேவையை ஈடுகட்ட இத்திட்டம் உதவும். இவ்வாறு பல விரிவாக்கத் திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 5,467.55 கோடி ரூபாய்க்கு டர்ன் ஓவரும் அதில் 21.28 கோடி ரூபாய் நிகர லாபமும் பெற்றுள்ளது.

பங்குப் பரிந்துரை - முத்தாக மூன்று!

டிசம்பருடன் முடிந்த ஓராண்டில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு வருமானம் 44.8 ரூபாய். இதன் அடிப்படையில் முழு ஆண்டுக்கான பி/இ விகிதம் 5.09. இன்றைய நிலையில் 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட இப்பங்கின் புத்தக மதிப்பு 134.40 ரூபாய். மார்ச்சுடன் முடிந்த காலாண்டு நிதிநிலை அறிக்கை இன்னும் வலுவான நிலையை எட்டும் எனச் சொல்லப்படுகிறது. ரீஃபைனரித் துறையின் சராசரி பி/இ விகிதமான 14.4 உடன் ஒப்பிடும்போதும், மற்ற காரணங்களாலும் பங்குவிலை அடுத்த சில மாதங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காணும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இப்போதுள்ள விலையில் இந்த பங்குகளில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம்.

பங்குப் பரிந்துரை - முத்தாக மூன்று!
பங்குப் பரிந்துரை - முத்தாக மூன்று!

மிழகத்தின் மூத்த தனியார் துறை வங்கிகளில் ஒன்று. இந்தத் துறையில் சீர்திருத்தங்கள் தொடங்கியவுடன் அதைச் சந்திக்க எல்லாவகையிலும் தயாராகி - கம்ப்யூட்டர்மயமானது, வராக் கடன்களைக் குறைத்துக் கொண்டது, மூலதன தன் னிறைவு பெற்றது என்று எல்லா வகையிலும் குறிப்பிடத்தக்க அளவு வலுவடைந்து இன்று நாட்டின் வலுவான வங்கி கள் வரிசையில் இடம் பிடித் துள்ளது.

230க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள இந்த வங்கி, பாரதி குழுமத் துடன் இணைந்து தகவல் தொழில்நுட்பப் பணிகளை வலுவாக்கிக் கொண்டுள்ளது. கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் இது 194.41 கோடிக்கு வருமானம் பெற்று அதில் 25.86 கோடியை நிகர லாபமாகப் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த வங்கியின் ஒரு பங்கு லாபம் 14.38 ரூபாய். இதனடிப்படையில் முழு ஆண்டுக்கான இதன் பி/ இ விகிதம் 8.53. பத்து ரூபாய் முக மதிப்பு கொண்ட இந்தப் பங்குகளின் புத்தக மதிப்பு 422.7 ரூபாய். ரிசர்வ் வங்கி கோரும் 9% குறைந்தபட்ச மூலதன தன்னிறைவுக்கு எதிராக, இப்போது இதன் விகிதம் 16.23.

பங்குப் பரிந்துரை - முத்தாக மூன்று!

அண்மைக்காலமாக நிதிச்சந்தையில் உணரப்பட்டு வரும் பற்றாக்குறை, வரும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்ற நிலை இருப்பதாலும், வங்கிகளின் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு சீக்கிரமே உள்ளதாலும் வங்கிகளின் லாபவிகிதங்கள் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அத்துடன் தனியார்த் துறை வங்கிகளின் சராசரி பி/இ விகிதமான 22.2 உடன் ஒப்பிடும்போது இப்போது இந்த வங்கியின் பி/இ விகிதம் மிகக்குறைவுதான். அதனால் கரூர் வைஸ்யா வங்கியின் லாபமும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்தப் பங்குகளில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம்.

பங்குப் பரிந்துரை - முத்தாக மூன்று!
பங்குப் பரிந்துரை - முத்தாக மூன்று!

ந்திர மாநிலம் ஹைதராபாத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது காயத்ரி சுகர்ஸ் நிறுவனம். கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் இந்நிறுவனம், இப்போதுதான் லாபப் பாதையை நோக்கி நகரத் தொடங்கி இருக்கிறது.

பொதுவாகவே இது போன்ற நிறுவனங்கள் பங்குச் சந்தை முதலீட்டாளர் களின் செல்லப்பிள்ளைகளாகக் கருதப்படுவது ஒருபக்கமிருக்க, இன்றைய நிலையில் சர்க்கரை நிறுவனங்களுக்கு இருக்கும் மவுசும் சேர்ந்து கொள்வதால் இது கூடுதல் கவனம் பெறுகிறது. முன்பு என்.சி.எஸ் காயத்ரி சுகர்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த இது, இப்போது கம்மாரெட்டி மாவட்டத்தில் சர்க்கரை பாகிலிருந்து எரிசாராயம்/எத்தனால் வடித்தெடுக்கும் பணியில் இறங்கியுள்ளது. அடுத்த நிதியாண்டு இறுதி யில் இந்த உற்பத்தி தொடங்கும் எனத் தெரிகிறது.

பங்குப் பரிந்துரை - முத்தாக மூன்று!

பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்த மாற்று எரிபொருளாக எத்தனால் வேகம் பெற்றுவருவதாலும், மற்ற பல சிக்கன நடவடிக்கைகளாலும் இந்நிறுவனத்தின் வருங்காலம் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் கடந்த கால நஷ்டங்கள் முழுமையாக அடுத்த சில ஆண்டுகளில் துடைக்கப்பட்டுவிடும் என்று சொல்வதற்கு ஏற்ப, கடந்த டிசம்பருடன் முடிந்த ஓராண்டில் பிரமாண்ட வளர்ச்சி கண்டுள்ளது.

டிசம்பருடன் முடிந்த காலாண்டில் இது 18.37 கோடி ரூபாயை விற்பனை வருமானமாகப் பெற்று, அதில் 3.04 கோடியை நிகர லாபமாகப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் ஒரு பங்கு லாபம் 0.9 ரூபாயாக இருந்தது. டிசம்பருடன் ஓராண்டுக்கு மட்டும் எடுத்து கணக்கிட்டால் 2.1 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதனடிப்படையில் இதன் பி/இ விகிதம் 6.79. சர்க்கரை நிறுவனங்களின் சராசரி பி/இ விகிதமான 19.5 உடன் இதை ஒப்பிட்டால் இந்நிறுவனப் பங்கு கணிசமான வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism