Published:Updated:

இண்டஸ்ட்ரி - காகிதத் துறை... நிச்சய லாபம்!

இண்டஸ்ட்ரி - காகிதத் துறை... நிச்சய லாபம்!

இண்டஸ்ட்ரி - காகிதத் துறை... நிச்சய லாபம்!

இண்டஸ்ட்ரி - காகிதத் துறை... நிச்சய லாபம்!

Published:Updated:
முதலீடு
இண்டஸ்ட்ரி - காகிதத் துறை... நிச்சய லாபம்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இண்டஸ்ட்ரி - காகிதத் துறை... நிச்சய லாபம்!
இண்டஸ்ட்ரி - காகிதத் துறை... நிச்சய லாபம்!

ந்திய காகித உற்பத்தித் தொழிலுக்கு 100 வயது! காகித உற்பத்தி என்பது கல்விதொடர்பான அச்சுக்காகிதம், நியூஸ்பிரின்ட் காகிதம், மற்றவகை காகிதம் எல்லாம் சேர்ந்தது. இத்தனை ஆண்டுகளில் இந்தியாவின் தேவையை ஈடுகட்டும் அளவுக்கு இங்கே காகித உற்பத்தி இல்லை! இன்னும் இறக்குமதி செய்கிற நிலையில்தான் இருக்கிறோம். இது இந்திய காகித உற்பத்திக்கு எப்போதுமே நல்ல மார்க்கெட் இருக்கும் என்ற நம்பிக்கை தரும் செய்தி!

இந்தியாவில் இப்போது சுமார் 450 காகித உற்பத்தி ஆலைகள் உள்ளன. (உலக அளவில் 30 ஆயிரம் ஆலைகள்) இவற்றில் பெரும்பாலானவை சிறிய ஆலைகள். மிகச்சிறிய எண்ணிக்கையிலேயே நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் பெரிய ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் தினமும் சுமார் 10 டன் முதல் 600 டன் வரை காகித உற்பத்தி செய்கின்றன. அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள ஆலைகளோ 300 முதல் 3,000 டன் வரை காகித உற்பத்தி செய்கின்றன.

அந்த அளவுக்கு இங்கே உற்பத்தி செய்ய முடியாமலிருப்பது, நம் நிறுவனங்களின் லாப விகிதத்தைப் பாதிக்கும் முக்கிய அம்சம். இதை மனதில்கொண்டு, தற்போது ‘சென்ட்ரல் பல்ப் அண்ட் பேப்பர் ரிசர்ச் இன்ஸ்டி டியூட்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டு, அது தற்போது பல புதிய தொழில் நுட்பங்களைக் கண்டுபிடித்து வருகிறது. அவை பயன்பாட்டுக்கு வரும்போது இந்திய காகித ஆலைகளின் லாபம் அதிகரிக்கும். அது இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு வருங்காலத்தில் பலன் தரும்.

இண்டஸ்ட்ரி - காகிதத் துறை... நிச்சய லாபம்!

இன்று இந்திய ஆலைகளின் மொத்த காகித உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 60 லட்சம் டன். அதன் மொத்த விற்பனைத்தொகை 17 ஆயிரம் கோடி ரூபாய். உள்ளூர் தேவையை ஈடுகட்டவே இங்கு நடக்கும் உற்பத்தி போதுமானதாக இல்லை என்பதால் அடிக்கடி விலையேற்றத்துக்கு உள்ளாகிறது. கடந்த 2005\ம் ஆண்டு மட்டுமே இந்திய காகித ஆலைகள் தொடர்ந்து 3 முறைக்கும் மேல், அதாவது டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் என்கிற அளவுக்கு விலையை அதிகரித்துள்ளன. இது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் தொடரும் வாய்ப்புள்ளது என்பது இத்துறை நிபுணர்களின் கருத்து. இது ஒருபக்கம் இருக்க, காகிதத் தொழிலுக்கு விதிக்கப்பட்டிருந்த உற்பத்திவரி அண்மையில் 16-லிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. ஆனால், இது நுகர்வோருக்குப் போய்ச் சேராமல் நிறுவனங்களின் லாபமாகவே அமைந்துவிட்டது. இதுபோன்ற சூழல் காகித ஆலைகளின் லாபத்தை அதிகரிக்கிறது.

சமீபகாலமாக கிராமம், நகரம் என எல்லா பகுதியிலும் காணப்படும் கல்வி வளர்ச்சி, வரும் நாட்களில் இந்தியாவின் தேவை கிடுகிடுவென அதிகரிக்கும் என்ற நம்பிக்கை தருகிறது. எதிர்காலத்தில் காகிதப் பயன்பாட்டின் சராசரி வளர்ச்சி மற்ற நாடு களைவிட, இங்கு மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்பது இந்திய காகித உற்பத்தியாளர் சங்கத்தின் கணிப்பு. எனவே, கடந்த காலங்களை விட, காகித விற்பனையும், லாபமும் தொடர்ந்து அதிகரிக்கும் என நம்பலாம்.

இண்டஸ்ட்ரி - காகிதத் துறை... நிச்சய லாபம்!

இந்த வகையில் நம் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி அதிகமாக இருந் தாலும், காகித இறக்கு மதிக்கு இந்தியாவில் 15% வரை வரி கட்ட வேண்டி யிருப்பதால், மிகக்குறைந்த அளவிலேயே இறக்குமதி செய்யப் படுகிறது. அந்த இறக்குமதியும் பெரும் பாலும் நியூஸ் பிரிண்ட் காகித இறக்குமதி யாகவே உள்ளது என்கிறார்கள் இத்துறையினர். இப்போதைக்கு இந்திய நியூஸ் பிரிண்ட் தேவையில் சுமார் 60% வரை இறக்குமதி செய்யப் படுகிறது. ஆனால், தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் ஆலை (டி.என்.பி.எல்) போன்ற பல நிறுவனங்கள் இப்போது முழுமூச்சாக உற்பத்தியில் ஈடுபட்டு வருவதால், வரும்நாட்களில் இது 40 சதவிகிதமாகக் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அடுத்து, இந்திய காகித ஆலைகளின் முக்கிய பிரச்னை - மூலப்பொருள் பற்றாக்குறை. இன்றைய நிலையில் இந்திய ஆலைகள் மூன்றுவிதமான மூலப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். இதில் மிக முக்கியமானது மரங்கள். இதுதவிர, கரும்புச் சக்கை போன்ற ‘வேளாண்மை மிச்சங்கள்’ பழைய காகிதம், போன்றவற்றைக் காகித உற்பத்திக்குப் பயன்படுத்த முடியும். நார்ப்பொருளான கரும்புச் சக்கையை மிக முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தும் டி.என்.பி.எல் இதற்கு உதாரணம். ஆனால், இது எல்லா காலத்துக்கும் ஏற்ற மூலப்பொருளாக இல்லை. இது ஒரு பக்கமிருக்க, கிடைக்கும் கரும்புச் சக்கையும் ஒரே தரத்தில் இல்லை என்பது இன்னொரு பிரச்னை.

இண்டஸ்ட்ரி - காகிதத் துறை... நிச்சய லாபம்!

அடுத்தது, இந்திய ஆலைகளில் 20%வரை பழைய காகிதம் பயன் படுத்தப்படுகிறது. பழைய காகிதத்தைச் சேகரித்து மறுசுழற்சி யாக மீண்டும் பயன்படுத்துவது இந்தியாவில் இன்னும் பெரிய அளவில் தொடங்கவில்லை. நம் மக்களிடம் சுற்றுப்புறச் சூழல், காற்றுமாசு போன்றவை குறித்து போதுமான விழிப்பு உணர்வு இல்லை என்பதால், மறுசுழற்சிக்கு உட்படுத்தாமல், காகிதத்தை எரித்து விடுவது பரவலான வழக்கமாக உள்ளது. அதனால் தற்போது நம் பழைய காகிதத் தேவைக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைத்தான் நம்ப வேண்டி இருக்கிறது.

இந்திய ஆலைகள் இப்போது காடுகளில் வளரும் மரங்களையே பெரிதும் நம்பியுள்ளன. ஆனால், இவ்வாறு காட்டு மரங்களை வெட்டுவது மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையைப் பாதிக்கிறது என்ற வாதம் எழத் தொடங்கியுள்ளது. இதற்கு மாற்றாக, கிராமப்புற தரிசுநிலங்களில் பெரிய அளவில் காடுகளை வளர்க்க காகித ஆலைகளே முயற்சி எடுக்க ஆரம்பித்துள்ளன. இது, காகித ஆலைகளுக்கு மூலப் பொருட்களை வழங்குவ தோடு, சுற்றுச்சூழல் பாதிப்பு களைத் தவிர்ப்பதோடு, கிராமமக்களின் வேலை வாய்ப்புக்கு புதிய கதவுகளைத் திறக்கவும் செய்கிறது.

இண்டஸ்ட்ரி - காகிதத் துறை... நிச்சய லாபம்!

‘‘மரங்களைப் பயன் படுத்தும் ஆலைகள், அதை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, அரைத்து கூழாக்கி, பதப்படுத்தி காகித உற்பத்தி செய்கிறார்கள். தற்போதைக்கு இந்திய ஆலைகளில் மேலே கண்ட மூன்று வகை மூலப்பொருளும் கிட்டத்தட்ட சம அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஒரே மாதிரியான மூலப் பொருளைப் பயன்படுத்துவதுதான் உற்பத்தி முறையை எளிதாக்கும். இதனால் இந்திய காகித ஆலைகள் பல சிரமங்களைச் சந்திக்கின்றன’’ என்கிறார் இந்திய பல்ப் மற்றும் பேப்பர் தொழில்நுட்ப சங்கத் தலைவர் காசி விஸ்வநாதன்.

‘‘மூலப்பொருளை அடுத்து, காகித உற்பத்தியில் எரிபொருளுக்குத்தான் அதிக செலவாகிறது. இது, மொத்த உற்பத்திச் செலவில் கிட்டத் தட்ட 25% ஆகும்’’ என்கிறார் சேஷசாயி பேப்பர் அண்ட் போர்ட்ஸ் கம்பெனியின் சி.எம்.டி கோபால்ரத்தினம். தொடர்ந்து பேசும்போது, ‘‘எரிபொருள் சிக்கனத்துக்கு புதிதாக வரத்தொடங்கி இருக்கும் தொழில்நுட்பங்களை நம் தொழிற்சாலைகள் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கவில்லை. அப்படித் தொடங்கினால் மொத்த செலவில் கிட்டத்தட்ட 5% வரை மிச்சம் பிடிக்கலாம். இதன் மூலம் மட்டுமே ஆண்டுக்கு 356 கோடி ரூபாய் அளவுக்கு சேமிக்கமுடியும்’’ என்கிறார். அப்படி நடந்தால், அது இந்த நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு மிகப்பெரிய லாபத்தைத் தர வாய்ப்பு இருக்கிறது.

இண்டஸ்ட்ரி - காகிதத் துறை... நிச்சய லாபம்!

இது தவிர, டி.என்.பி.எல் போன்ற நிறுவனங்கள் நிலக்கரிக்கு பதிலாக கரும்பு சக்கையை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்துகிறது. இது சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதைக் குறைப்பதுடன், ‘கார்பன் டிரேடிங்’ எனக் குறிப்பிடப்படும் புதிய வருமானத்துக்கு வழி செய்கிறது. இவ்வகையில் டி.என்.பி.எல் -லுக்கு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் கிடைக்கிறது. ஆனால், இது எல்லா நிறுவனங்களுக்கும் சாத்தியமில்லை.

இந்திய காகித ஆலைகள் உடனடி யாக பெரிய அளவில் லாபம் ஈட்ட வாய்ப்பில்லை என்றாலும், குறைந்த ஊதியத்தில் திறமையான ஆட்கள் வேலைக்குக் கிடைப்பது, மிகச்சிறந்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கான வாய்ப்பு, அதில் கிடைக்கும் முன்னேறிய தொழில் நுட்பம், அது தெரிந்த நபர்களின் எண்ணிக்கை, இத்துறைக்குத் தேவையான பிறவகை மூலப்பொருட்கள், இதர உபரி வேலைகளைச் செய்து தர இருக்கும் சிறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை போன்றவை இப்போது இந்திய ஆலைகளுக்கு இருக்கும் நம்பிக்கையான அனுகூலங்கள் என்றே சொல்லவேண்டும்.

இண்டஸ்ட்ரி - காகிதத் துறை... நிச்சய லாபம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism