Published:Updated:

‘ஐ.சி.ஐ.சி.ஐ’ பாலிசி என்னாகும்..?

‘ஐ.சி.ஐ.சி.ஐ’ பாலிசி என்னாகும்..?

‘ஐ.சி.ஐ.சி.ஐ’ பாலிசி என்னாகும்..?

‘ஐ.சி.ஐ.சி.ஐ’ பாலிசி என்னாகும்..?

Published:Updated:
பாதுகாப்பு
‘ஐ.சி.ஐ.சி.ஐ’ பாலிசி என்னாகும்..?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 

‘ஐ.சி.ஐ.சி.ஐ’ பாலிசி என்னாகும்..?

‘ஐ.சி.ஐ.சி.ஐ’ பாலிசி என்னாகும்..?

ன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது. அதிலும் குறிப்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ. புருடன்ஷியல் இன்ஷூரன்ஸில் பாலிசி எடுத்தவர்களுக்கானது இந்தச் செய்தி. இந்தியாவின் முன்னணி தனியார் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ புருடன்ஷியல், ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் இங்கிலாந்து நாட்டு பங்காளியான புருடன்ஷியல் நிறுவனத்துக்கு அவர்கள் நாட்டில் ஒரு திருகு வலி! அதனால், இந்த நிறுவனத்தின் பெயர் தொடர்ந்து இப்படியே இருக்குமா அல்லது மாற்றம் வருமா என்ற கேள்வி புதிதாக முளைத்து உள்ளது.

இந்தியாவில் தனியார் துறை நிறுவனங்கள் இன்ஷூரன்ஸ் துறையில் அனுமதிக்கப்பட்டபோது இந்திய நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புருடன்ஷியல் என்ற இன்ஷூரன்ஸ் நிறுவனமும் கை கோத்து, ஐ.சி.ஐ.சி.ஐ புருடன்ஷியல் என்ற புதிய இந்திய நிறுவனத்தைத் தொடங்கின. இந்த நிறுவனத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 74 சதவிகிதப் பங்குகளையும், புருடன்ஷியல் நிறுவனம் 26 சதவிகிதப் பங்குகளை வைத்துக்கொண்டன. இன்று வரை நல்லபடியாகவே பிஸினஸ் நடப்பதால் இங்கே சிக்கல் எதுவுமில்லை.

ஆனால் இங்கிலாந்து நாட்டில், புருடன்ஷியலைவிட பெரிய மார்க்கெட் லீடரான, அவிவா என்ற இன்ஷூரன்ஸ் கம்பெனி ஆயுள்காப்பீடு, பொதுக்காப்பீடு உள்ளிட்ட வலுவான சந்தையை வைத்துள்ளது.

அத்துடன், இந்தியாவில் இல்லாத இன்னொரு நிலையும் இங்கிலாந்தில் உள்ளது! அதாவது, அங்குள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பொதுமக்களுக்கும் விற்று, பங்குச் சந்தையில் அன்றாடம் வர்த்தகமும் நடைபெறுகிறது. அவிவா, புருடன்ஷியல் இரண்டுமே அந்த வகைதான்.

‘ஐ.சி.ஐ.சி.ஐ’ பாலிசி என்னாகும்..?

இந்த நிலையில் தனக்கு அடுத்த இடத்தில் இருக்கும் புருடன்ஷியல் மீது அவிவா கண் வைத்துவிட்டது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்துவிட்டால், அது இங்கிலாந்து நாட்டின் அசைக்கமுடியாத நிறுவனமாக மாறுவது ஒருபக்கம்... கூடவே, உலகின் ஐந்தாவது பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனமாக மாறும் என்பது அவிவாவின் கணக்கு. அதனால் புருடன்ஷியல் பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தைத் தனதாக்கிக் கொள்வதில் அவிவா ஆர்வமாக உள்ளது. அதற்காக கணக்குப் போட்டுப் பார்த்த அவிவா, கடந்த வாரத்துக்கு முன் ஒருகட்டத்தில் 100 புருடன்ஷியல் நிறுவனப் பங்குக்கு 83 அவிவா பங்குகள் வழங்கப்படும் என அறிவிப்பும் செய்துவிட்டது. இதில் புருடன்ஷியல் நிறுவன பங்குதாரர்கள் சிலர் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. ஆனால் புருடன்ஷியல் நிர்வாகம், ‘நம் முதலீட்டாளர்களுக்கு இத்திட்டத்தால் பெரிய லாப மில்லை’ என்று சொல்லி பேரத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

இவர்கள் அணி ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் இங்கிலாந்து நாட்டின், இதே அவிவா நிறுவனம்தான் இந்திய நிறுவனமான டாபருடன் கூட்டு சேர்ந்து இந்தியாவில் இன்ஷூரன்ஸ் பணியில் இறங்க உள்ளது.

இதனால், அவிவா செய்துள்ள அறிவிப்பை, புருடன்ஷியல் நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்கள் ஏற்றுக்கொண்டு விட்டால் புருடன்ஷியல் நிறுவனமும் அவிவாவும் ஒன்றாகிவிடும். அப்போது ஐ.சி.ஐ.சி.ஐ-யும், டாபரும் இந்தியாவில் ஒரே கம்பெனியைத் தங்கள் கூட்டாளியாகக் கொண்டிருக்கும்.

அப்போது, புருடன்ஷியல் என்ற பெயர் ஐ.சி.ஐ.சி.ஐ பெயரோடு முன்போலவே தொடருமா... அதில் மாற்றம் எதுவும் வருமா? இதனால் ஐ.சி.ஐ.சி.ஐ புருடன்ஷியல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்திருப்பவர்கள் பாதிக்கப்படுவார்களா என்பதுதான் பலருக்கும் எழுந்துள்ள கேள்வி! இன்னொருபக்கம் மியூச்சுவல் ஃபண்ட் நடவடிக்கையிலும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இதே புருடன்ஷியல் நிறுவனத்துடன்தான் சேர்ந்துள்ளது. அதற்காகத் தொடங்கப்பட்டுள்ள ‘புருடன்ஷியல் ஐ.சி.ஐ.சி.ஐ அசட் மேனேஜ்மென்ட் கம்பெனி’யில் புருடன்ஷியலின் பங்கு 49%. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு 51% பங்குகள் உள்ளன.

புருடன்ஷியல் நிறுவனத்தை அவிவா வாங்கி விட்டால் இங்குள்ள முதலீட்டாளர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் வரும்? இதில் ஐ.ஆர்.டி.ஏ-வின் பங்கு என்ன?

இன்ஷூரன்ஸ் துறை சட்ட நிபுணர்கள், ‘‘இது போன்ற ஒரு சம்பவம், இந்தியாவில் நடந்ததில்லை. அத்துடன் இன்ஷூரன்ஸ் துறை தொடர்பான இந்திய சட்டங்களிலும், ஐ.ஆர்.டி.ஏ. சட்டத்திலும் இதுபோன்ற சூழலில் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து தெளிவாக எதுவும் இல்லை. அதனால் ஐ.ஆர்.டி.ஏ-தான் இது குறித்த இறுதி முடிவை எடுக்க வேண்டியிருக்கும்’’ என்கிறார்கள். ஒரே நிறுவனம் இரண்டு வெவ்வேறு பங்குதாரர்களுடன் வெவ்வேறு திட்டம், வெவ்வேறு அணுகுமுறையுடன் செயல்படுவதை அனுமதிப்பதில் ஐ.ஆர்.டி.ஏ-வுக்கு தர்மசங்கடம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இங்கிலாந்தில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த மர்மமும், ஆர்வமும் ஒருபக்கம் இருந்தாலும், இங்கே முதலீடு செய்துள்ள நம்மவர்களுக்கு இதனால் பாதிப்பு வருமா என்ற கேள்விக்கு பதில் தேடினோம். கம்பெனி நிர்வாகத் துறையில் நீண்ட அனுபவம் உள்ள அசோக் கும்பத், ‘‘புருடன்ஷியல் பங்குகளை அவிவா வாங்குவதால், நேற்றுவரை புருடன்ஷியல் ஈடுபட்டிருந்த தொழிலில் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மாறாது. அதிலும் இந்தக் குறிப்பிட்ட பிரச்னையில் புருடன்ஷியல் நிறுவனம் மட்டுமின்றி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அதனால், இணைப்புக்கு பிறகு நடக்கும் விஷயங்களில் மாற்றம் வரலாம். ஆனால், ஏற்கெனவே செய்துகொண்ட நீண்ட கால ஒப்பந்தப்படி பாலிசிதாரர்களின்... மியூச்சுவல் ஃபண்ட் யூனிட் வாங்கியவர்களின் நலன் பாதுகாக்கப்படும்’’ என்றார்.

கிட்டத்தட்ட இதே கருத்தைச் சொல்கிறார் சர்வதேச வழக்குகளில் பல பன்னாட்டு நிறுவனங்களின் வழக்குகளுக்கு ஆஜராகும் சட்ட ஆலோசகர் ஏ.ஏ.மோகன். ‘‘இது போன்ற டேக் ஓவர்கள் இப்போது சர்வதேச அளவில் நிறைய நடக்கிறது. ஆனால், இந்த கேஸில் இந்தியாவில் உள்ள, ஏற்கெனவே இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கும் அப்படித்தான். ஆனால் கம்பெனியின் பெயர் மாறுமா என்பதெல்லாம் பல விஷயங் களைப் பொறுத்தது... மாறலாம் அல்லது வேறு ஏற்பாடுகள் ஏதாவது செய்து கொள்ள லாம். இணைப்புக்குப் பிறகு இந்தியாவில் சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களின் சார்பில் கூடிப் பேசிதான் அவற்றைத் தெளிவு படுத்தவேண்டி இருக்கும்’’ என்கிறார்.

இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்கள் அஞ்ச வேண்டியது இல்லை என்பது ஆறுதலான செய்திதான். ஏ.எம்.பி சன்மார் நிறுவனம் தனது இன்ஷூரன்ஸ் கம்பெனியை, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்ற சம்பவம் இங்கே நடந்துள்ளது. அப்போது அந்த கம்பெனியின் முழு நிர்வாகமே மாறியபோதும் பழைய பாலிசிதாரர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விஷயத்திலும் பாதிப்பு வராது. அதிகபட்சமாக நடந்தால், அது நிறுவனத்தின் பெயர் மாற்றமாக மட்டுமே இருக்கும். எத்தனை நிறுவனங் களின் பெயர்... லோகோ... மாற்றத்தைப் பார்த்தவர்கள் நாம்! அதோடு, இதுவும் ஒன்று. அவ்வளவுதான் என்றே தோன்றுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism