Published:Updated:

சிக்கனம்: வரவுக்குள் செலவுக்கு... வழிகள் ஐந்து!

சிக்கனம்: வரவுக்குள் செலவுக்கு... வழிகள் ஐந்து!

சிக்கனம்: வரவுக்குள் செலவுக்கு... வழிகள் ஐந்து!

சிக்கனம்: வரவுக்குள் செலவுக்கு... வழிகள் ஐந்து!

Published:Updated:
சிக்கனம்
சிக்கனம்: வரவுக்குள் செலவுக்கு... வழிகள் ஐந்து!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிக்கனம்: வரவுக்குள் செலவுக்கு... வழிகள் ஐந்து!

ணத்தை சம்பாதிக்க எப்படி எல்லாம் திட்டமிடுகிறோமோ, அதேபோல் வந்த வருமானத்தை எப்படி, எவ்வளவு, எதற்குச் செலவிடுவது எனத்திட்டமிடுவதும் அவசியம். உங்கள் வருமானம் ஆதாரமாக வைத்துக்கொண்டு சேமிப்பு, எதிர்காலத்துக்கான முதலீடு, அதனை நடைமுறைப்படுத்தல் என செலவுகளைப் பட்டியலிட்டு பட்ஜெட்டுக்குள் வர உதவும் ஐந்து வழிகள் இங்கே.

சேமிப்புப் பாதைகள்!

மு தலாவதாக, உங்களது மாத வருமானத்தில் பிடித்தம் போக எவ்வளவு வீட்டுக்கு எடுத்துச் செல்கிறீர்கள் என்பதுதான் உண்மையான கையிருப்பு. வீட்டுச் செலவுகள் அனைத்தையும் இதில் கொண்டுவர வேண்டும். அதோடு வீட்டு வாடகை, சொத்துவரி, பராமரிப்பு மற்றும் பிளாட் மெயின்டனன்ஸ் என அனைத்தும் சேர்ந்த செலவுகள் உங்கள் கையிருப்பு தொகையில் 30 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது.

உதாரணமாக, ஒருவரது வருமானத்தில் பிடித்தம் போக ரூபாய் 5,000/- மீதமிருந்தால், அவர் வீட்டுக்காகச் செலவழிக்கும் அத்தனை செலவுகளும் ரூபாய் 1,500-க்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அதேபோல, போக்குவரத்துச் செலவுகள் கையிருப்பில் 15%-க்கு மேல் போகக்கூடாது. அதாவது அலுவலகம், பள்ளி, சுற்றுலா, வெளியூருக்கான போக்குவரத்துச் செலவு, குழந்தைக்கான பள்ளி வேன் கட்டணம் மற்றும் தொடர்பான அனைத்துச் செலவுகளும் 750 ரூபாயைத் தாண்டக்கூடாது.

சேமிப்பு என்பது வட்டி நோக்கத்திற்காக அல்ல. அது திடீரென ஏற்படும் அவசர அவசியத் தேவைகளுக் கானதாகும். மேலும் அதனைப் பெரிதாக ஒரு பொருள் வாங்கவோ அல்லது கோடை விடுமுறை சமயங்களிலோ பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படியான மாத சேமிப்புக்காக கட்டாயம் 10 சதவிகிதத்தை ஒதுக்கவேண்டும். மாதத்தின் துவக்கத்திலேயே இதை எடுத்துவைப்பது உத்தமம். இதுபோன்ற சேமிப்புத்தொகை ஒருவரது இரண்டுமாதச் சம்பளம் என்ற அளவில் எப்போதும் கையிருப்பாக வீட்டில் இருப்பது நலம். அது அவசர தேவைகளைச் சமாளிக்க ஏதுவாக இருக்கும். இதனால் அதிக வட்டிக்கு வெளியில் கடன் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

முதலீட்டுக்குத் திட்டமிடுங்கள்!

மு தலீட்டு திட்டங்களான பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் இறங்கும்போது, எப்போதும் மூன்று பிரிவுகளாக வைத்துக் கொள்ளுங்கள். இந்தத் திட்டங்களில் எப்போதும் நீண்டகால முதலீடாகவே செய்யுங்கள். குறைந்தது 3 முதல் 10 ஆண்டுகள் வரை வைத்திருங்கள். அது ஒரு சொத்தாக வளர்ந்து நிற்கும். இதற்கான பணமும் உங்களது தேவை, திட்டமிடல் போக உபரியாக வரும் கூடுதல் வருமானத்தில் இருந்து முதலீடு செய்யப்படுவதாக இருக்கட்டும்.

வருமானத்திட்டம்

ருமானத்தை நோக்கியே முதலீடுகள் இருப்பதால் எதில், எவ்வளவு முதலீடு செய்வது என்ற அளவீடும் முக்கியம். அதிகம் ரிஸ்க் உள்ளவையானாலும் லாபம் அதிகமாகக் கிடைக்கும் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் 50%, ரிஸ்க் அதிகம் இல்லாத, அதேசமயம் லாபமும் சற்று நிதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிற அரசு மற்றும் தனியார் நிறுவன கடன் பத்திரங்களில் (டெஃப்ட் ஃபண்ட்ஸ்) 30%, மீதமுள்ள 20 சதவிகிதத்தைப் பணமாகவோ அதற்கு இணையான, எப்போதும் உடனடியாக மாற்றக்கூடிய திட்டங்களிலும் (தங்கம், வங்கியின சேமிப்புத் திட்டங்களில்) முதலீடு செய்யலாம்.

இந்த மூன்றின் முதலீட்டு சதவிகிதங்கள் நபருக்கு நபர் வேறுபடும். இளைஞர் முதலீடு செய்யும்போது, அதிக ரிஸ்க் எடுக்க முன்வருவார். அவர்கள் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்களில் கூடுதலாக 80% வரை முதலீடு செய்யலாம். அதிலும் ப்ளூசிப் கம்பெனிகள், தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் உணவுத்துறை மற்ற முக்கிய துறைகளில் வளர்ந்துவரும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம். ஒன்று விழுந்தாலும் ஏதாவது ஒரு நிறுவனப் பங்கு பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழுந்து அதிக லாபத்தைச் சம்பாதித்து தரும்.

பணம் இரட்டிப்பாக...

மு தலீடு, சேமிப்பு என எதைச் செய்தாலும், அவை எப்போது இரட்டிப்பாகும் என்பதை அறிந் திருக்க வேண்டும். வங்கிகளில் டெபாசிட், கடன் பத்திரங்கள், தொழில் என எதுவாக இருந்தாலும் சரி... என்ன வருமானம், வட்டி என்பதை வைத்து இரட்டிப்பாகும் காலத்தைக் கணக்கிடலாம். அதாவது, ஒருவர் வங்கியில் 6% வட்டியில், ரூபாய் 4,000 டெபாசிட் செய்தால், அது பன்னிரண்டு ஆண்டுகளில் இரண்டு மடங்காகும்.

நமக்கு வரும் இந்த ரிட்டர்னைக் கணக்கிட ஒரு எளிய வழி இருக்கிறது. அதுதான் ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்பான 72 என்ற எண்தான். இதனை நமக்கு அளிக்க இருக்கும் வட்டி சதவிகிதத் தால் வகுத்தால் கிடைக்கும் விடை தான் எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாகும் எனும் வித்தை. முதலீடு செய்யும் பணம் எவ்வளவு என்றாலும் இதைக்கொண்டு கண்டு பிடித்துவிடலாம்.

இதையே ஒருவர் 8% வட்டியில் ரூபாய் 4,000 முதலீடு செய்தால் அது ஒன்பது ஆண்டுகளிலேயே இரட்டிப்பாகி விடும்.

அதாவது 72/8 = 9 (வருடம்). இதனை மனதில் கொண்டு உங்களது முதலீடு எதுவென்றாலும் இந்தக் கணக்கைப் போட்டு பொருத்திப் பாருங்கள். உங்களது பணம் எப்போது இரண்டு மடங்காகும் என்று தெரிந்துகொள்ளுங்கள் அதைவைத்து சொத்து வாங்குவது பற்றிய எதிர்காலக் கனவை நிறைவேற்றலாம்.

கடன்களைச் சமாளிக்க...

டன் என்றதும் கை நீட்டி வீடு, கார் அல்லது பைக் என எதையாவது வாங்கி விடுகிறோம். இதுபோதாதென்று கிரெடிட் கார்ட்களை அடுக்குகிறோம். நினைத்த மாத்திரத்தில் எளிதாகக் கிடைக்கிறது என்பதற்காக சக்திக்கு மீறி கடனை வாங்கிக் குவித்துவிட்டு, பிறகு அடைக்கமுடியாமல் தவிக்கிறோம். அதனை எப்படி நிர்வாகித்து சரிசெய்வது என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.

எந்தக் கடன் வாங்கினாலும் அதன் மொத்த தொகை உங்களது மாத வருமானத்தில் இருபது சதவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்பதை பிடிவாதமான சட்டமாகவே எழுதிக் கொள்ளுங்கள்.

உதாரணமாக, 10,000 ரூபாய் சம்பளக்காரரா..? மாத முதல் தேதியில் கடன் வாங்கிய பொருட்களுக்காக கட்டவேண்டிய தொகை 2,000 ரூபாயைத் தாண்டவே கூடாது. எல்லாவகைக் கடன்களையும் எழுதிப் பார்த்து உடனே இந்த முடிவுக்கு வாருங்கள். வங்கிக்கடன் குறைந்த வட்டி, விழாக்கால சலுகை, அது வாங்கினால் இது இலவசம் என மனதை மயக்கும் மாயாஜால விளம்பர வார்த்தைகளில் மயங்கவே மயங்காதீர்கள்.

சரி... தெரிந்தோ, தெரியாமலோ கடனை வாங்கி குவித்துவிட்டீர்கள். என்ன செய்யலாம் என விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றாலும் பரவாயில்லை. சமாளித்துவிடலாம். உங்களது கடனுக்கான வட்டியாக மட்டும் எவ்வளவு தொகை கட்டுகிறீர்கள்... மாதம் செலுத்தும் கடன் தொகை அனைத்தையும் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அதில் எது குறைந்த வட்டியில் இருக்கிறதோ அந்த வட்டிக்கு அனைத்துக் கடனையும் மாற்றிவிடுங்கள். ஒரே இடத்தில் கடன் இருந்தால் கட்டுப்பாட்டிலும் இருக்கும்... வட்டிச்சுமையும் குறையும்.

பத்து பேருக்கு பதில் சொல்வதைவிட, ஒருவருக்கு பதில் சொல்லி சரியாகக் கட்டி வரலாம். கிரெடிட் கார்ட் பிரச்னையில் சிக்கித் தவித்தாலும் நேரடியாகச் சென்று செட்டில்மென்ட் பேசி, அவகாசம் வாங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து நிம்மதியாகத் தூங்குங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism