Published:Updated:

வெள்ளியும் ஏறுது... விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

வெள்ளியும் ஏறுது... விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

வெள்ளியும் ஏறுது... விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

வெள்ளியும் ஏறுது... விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

Published:Updated:
நடப்பு
வெள்ளியும் ஏறுது... விலை உயர்வுக்குக் காரணம் என்ன?
 

வெள்ளியும் ஏறுது...
விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெள்ளியும் ஏறுது... விலை உயர்வுக்குக் காரணம் என்ன?
வெள்ளியும் ஏறுது... விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

வெ ற்றிக் கூட்டணி போல ஜோடி போட்டுக்கொண்டு விலை ஏறுகின்றன தங்கமும் வெள்ளியும். தங்கமாவது கொஞ்சம் தயங்கித் தயங்கி ஏறுகிறது. ஆனால், வெள்ளியின் விலையில் சமீபகாலமாக இறக்கம் என்பதே இல்லை. தற்போது ஒரு கிராம் வெள்ளியின் விலை 17 ரூபாய். கடந்த 22 ஆண்டுகளில் இதுதான் உச்சபட்ச விலை. ஆறுமாதத்துக்கு முன்புவரை 12 ரூபாயாக இருந்தது. இன்று ஜிவ்வென ஏற ஆரம்பித்திருக்கிறது!

இந்த விலையேற்றத்தைக் கவனித்து வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்குக் கொண்டாட்டம்தான் என்றாலும் இந்த விலையேற்றம் ஆரோக்கியமானதா அல்லது யாராவது செயற்கையான விலையேற்றத்தை உருவாக்கி பயனடையப் பார்க்கிறார்களா என்பதுதான் இப்போது பலருக்கும் ஏற்பட்டிருக்கும் குழப்பம். இந்த விலை ஏற்றம் மீண்டும் பழைய நிலைக்கு வருமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

உள்ளூர் வெள்ளி நிலவரம் பற்றி ஜி.ஆர்.டி தங்க மாளிகை நிறுவனத்தைச் சேர்ந்த அனந்தபத்மநாபன் குறிப்பிடும்போது, ‘‘தங்கமும் வெள்ளியும் சகோதரிகள் என்று சொல்வார்கள். தங்கத்தின் விலை ஏறும்போதெல்லாம் வெள்ளியின் விலையும் அதிகரிப்பது சில்லறை மார்க்கெட்டில் எப்போதுமே நடக்கிற இயல்பான ஒன்றுதான். வெள்ளியின் விலை நிர்ணயமும் தங்கத்தைப் போலவே லண்டன் மார்க்கெட்டில்தான் தீர்மானிக் கப்படுகிறது. அங்கிருக்கிற தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்கான தேவை அதிகமாகும்போது அங்கே விலை ஏற்றம் நடக்கிறது. அது நம்மூர் சந்தையிலும் எதிரொலிக்கிறது. இங்கே விலை ஏறினாலும் அடிப்படைத் தேவைகளுக்காக வாங்குபவர்கள் அந்த விலையேற்றத்தைப் பொருட்படுத்தாமல் வாங்கத்தான் செய்கிறார்கள்.

அதோடு, தற்போது தங்கத்துக்கு அடுத்தபடியாக வெள்ளியில் முதலீடு செய்வது நல்ல முதலீடு என்ற கருத்து மக்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய அதிக பணம் தேவைப்படும். வெள்ளி வாங்க குறைவான பணம் இருந்தாலே போதுமே!

தங்கத்தைப் போலவே வெள்ளிக்கும் மறுபயன்பாடு இருப்பதால் பழையவற்றைக் கொடுத்து புதியவற்றை வாங்குவதும் அதிகரித் துள்ளது. அதனால்கூட அதன்மீது ஆர்வம் ஏற்பட்டு வாங்கத் துவங்கியவர்களும் உண்டு. முதலீட்டாளர்கள் வாங்கும்போது பார் கட்டிகளாகவோ அல்லது கிலோ கணக்கிலோ வாங்குவார்கள்.

வெள்ளி வாங்கினால் இரும்பு பீரோவில் அப்படியே வைக்கக் கூடாது. காற்றுப்படாமல் இருக்கவேண்டும். அடிக்கடி மென்மையான துணியால் துடைத்து வைக்கவேண்டும். இதுபோன்ற முறையான பராமரிப்புகள் இருந்தால் வெள்ளி எப்போதும் ஜொலிக்கும் முதலீடாக இருக்கும்’’ என்றார்.

வெள்ளியும் ஏறுது... விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் துணைத்தலைவர் உம்மிடி உதயகுமாரிடம் இதுபற்றிப் பேசியபோது, ‘‘பொதுவாகவே வெள்ளி விலை குறைவு என்பதால், நாம் அதைக் குறைத்துதான் மதிப்பிடுகிறோம். ஆனால், விலை உயர்வு விகிதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், தங்கத்தைவிட வெள்ளியின் ஓட்ட வேகம் கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. வெள்ளி எந்த அளவுக்கு ஏறியிருக்கிறது என்றால், கிட்டத்தட்ட 40% விலை உயர்வைச் சந்தித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரம் வெள்ளியின் பயன்பாடு சமீப காலமாகவே அதிகரித்து வந்திருப்பதையே காட்டுகிறது.

மக்களின் வெள்ளி ஆபரண மோகம் மட்டும் காரணமில்லை. போட்டோகிராஃபி, எலெக்ட்ரானிக்ஸ், அணு உலை, ஆப்டிகல், பல் மருத்துவம் என்று பல துறைகளிலும் வெள்ளியின் தேவை இருக்கிறது. இவையே கிட்டத்தட்ட 95% வரை பயன்பாடு கொண்டதாக இருக்கிறது. மீதமுள்ள 5% தான் முதலீடாக இருந்தது. இப்போது முதலீட்டிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பதும் வெள்ளி விலையேற்றத்துக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.

அதேபோல, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேடுக்கு உள்ளது போன்று தற்போது வெள்ளி மியூச்சுவல் ஃபண்ட் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 21\ம் தேதி, அமெரிக்காவின் பங்குச் சந்தை அமைப்பான செக்யூரிட்டி எக்ஸ்சேன்ஞ் கமிஷன் வெள்ளிக்கான மியூச்சுவல் திட்டத்தை (சில்வர் எக்ஸ்சேன்ஞ் டிரேடட் ஃபண்ட்) விற்பனை செய்ய அனுமதி கொடுத்துள்ளது.

இதை அடுத்து கமாடிட்டி சந்தையில் வெள்ளியின் விலையை அதிகப்படுத்த அங்குள்ள புரோக்கர்கள் செயற்கை விலையேற்ற முயற்சியில் இறங்கி அதிக அளவில் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் காரணமாக விலை அதிகரிப்பு நடந்தது. இதன் தாக்கம் உள்ளூர்ச் சந்தையிலும் விலை அதிகமானது’’ என்றார்.

இப்படி விலை அதிகமாக இருந்தாலும் தேவை காரணமாக வெள்ளியை வாங்குபவர்கள் முன்பைவிட அதிகரித்துள்ளனர். இதனால் இப்போது ஏற்றத்தில் இருக்கிற வெள்ளியின் விலை மீண்டும் கீழிறங்கி பழைய நிலைக்கு வருமா என்பது சந்தேகம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism