Published:Updated:

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

Published:Updated:
ஸ்பெஷல்
ஹலோ வாசகர்களே,
 

‘‘இ தழுக்கு இதழ் புதிய தொழில் வாய்ப்புகளைக் கண்முன் விரித்து எங்களைத் திக்குமுக்காடச் செய்கிறீர்கள். எதை எடுத்துச் செய்வது என்று பிரமிப்பே ஏற்பட்டுவிடுகிறது!'’ - இப்படி சந்தோஷத் திக்குமுக்காடலோடு உங்களில் பலரும் தெரிவிக்கும்போது மகிழ்ச்சி பொங்குகிறது. கூடவே, இன்னும்கூட பரவலாகவும் எளிமையாகவும் எடுத்துச் செய்யக்கூடிய புதுப் புது தொழில் வாய்ப்புகள் பற்றி உங்களுக்கு அளிக்கவேண்டும் என்கிற பொறுப்பு எங்களுக்குக் கூடுகிறது.

ஏற்கெனவே வெற்றிகரமாக தொழில் வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டும், நல்லதொரு பதவியில் மாத வருமானம் பெற்றுக்கொண்டும் இருப்பவர்களுக்கும் எதிர்காலக் கனவுகள் எத்தனையோ இருக்கும்தானே..! கார், பங்களா என்ற அந்தக் கனவுகளை நனவாக்கும் வகையில், உங்கள் பாதுகாப்பான முதலீட்டுக்கான புதிய வாய்ப்பாக இந்த இதழில் துவங்குகிறது மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய பளிச் தொடர்.

அதிலும், மியூச்சுவல் ஃபண்டில் பணம் போட்ட பலரும் டிவிடெண்ட்களாக வாங்கிப் பெட்டியில் அடுக்கிக்கொண்டிருக்கும் வேளை இது! இதுவரை சரியான தூண்டுதலோ, வழிகாட்டுதலோ இல்லாத காரணத்தால் இந்தத் துறையில் கால் பதிக்காதவர்கள் எத்தனையோ பேர். அவர்களுக்காகவே அடிப்படையில் இருந்து ஆரம்பிக்கிறது இந்தக் கட்டுரைத் தொடர்.

வழக்கமான உற்சாகச் செய்திகளுக்கு இடையில், இன்னொரு புது முயற்சி பற்றியும் இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும்.

ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட பல்வேறு முதலீடு மற்றும் சேமிப்பு வழிமுறைகள் பற்றி அச்சிலேயே நாம் பேசிக்கொள்வது ஒருபக்கம் இருக்க... நேரிலேயே கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும், உங்கள் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கவும் விரும்பினோம். அதை முதல்கட்டமாக கோவையில் செயலாக்கவும் போகிறோம். உங்கள் மனம் கவர்ந்த இரட்டை எழுத்தாளர்களான ‘நாகப்பன் - புகழேந்தி’ இந்த மாதம் 16-ம் தேதி, கோவைக்கு வருகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்களை அழைத்து, அவர்களை நேரில் சந்தித்து ஆக்கப்பூர்வமான பல எண்ணங்களை வெளியிடப் போகிறார்கள். அதற்கான அழைப்பு இந்த இதழின் 59-ம் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

பொருளாதார வல்லுநர்களின் பார்வை வேகவேகமாக விவசாயத் துறையை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கிறது. அதனாலேயே விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இந்த இதழில், கண்வலிக் கிழங்கு பற்றியும் அதன் ஆச்சரியகரமான வருமான வாய்ப்பு பற்றியும் கட்டுரை தந்திருக்கிறோம். அதிகம் கண்டு கொள்ளப்படாத அந்தப் பயிருக்கு இப்படி ஒரு மகத்துவமா என்று எங்களைப் போலவே நீங்களும் ஆச்சர்யம் அடைவீர்கள்!

இதுபோல் இன்னும் இன்னும் புதியவை வந்துகொண்டே இருக்கும். படியுங்கள்... பணத்தைப் பெருக்குங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism