Published:Updated:

கடன்: தொழிலை விரிவாக்கணுமா..?

கடன்: தொழிலை விரிவாக்கணுமா..?

கடன்: தொழிலை விரிவாக்கணுமா..?

கடன்: தொழிலை விரிவாக்கணுமா..?

Published:Updated:
கடன்
கடன்: தொழிலை விரிவாக்கணுமா..?
 

தொழிலை விரிவாக்கணுமா..?

மு ன்பெல்லாம் சிறிய தொகை, கால்நடைக் கடன் வாங்குவது என்றால்கூட, வங்கிக்கு நடையாக நடக்கவேண்டும். இன்று நிலைமை அப்படியில்லை! அனுபவமும் அணுகுமுறையும் சரியாக இருந்தால்,
கோடி ரூபாய் திட்டத்துக்குக்கூட எளிதாகக் கடன் கிடைக்கிறது.
அந்த அளவுக்கு கடன் விஷயத்தில் வங்கிகள் தாராளமாகிவிட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடன்: தொழிலை விரிவாக்கணுமா..?

‘‘தொ ழில் துறைக்கு முக்கியத்துவம் பெருகிவிட்ட இந்தச் சூழலில் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதில் வங்கிகள் தயக்கம் காட்டுவதே இல்லை. சரியான திட்டத்தோடு வந்து உங்கள் தேவை என்ன என்பதைச் சொல்லுங்கள். கடன் வழங்கத் தயாராக இருக்கிறோம்’’ என்று ஊக்கமூட்டும் குரலில் சொல்கிறார் பாரத ஸ்டேட் வங்கியின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரிக்கான துணைப் பொதுமேலாளர் பாஸ்கர் நியோஜி.

இன்றைக்கு வங்கிகள் கொடுத்திருக்கும் மொத்தக் கடனில் 45% வரை சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இரண்டு கோடி பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். அடுத்து, இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு, இந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரால் உற்பத்தி செய்யப்படுகிற பொருட்கள்தான் 35% வரை ஏற்றுமதி ஆகின்றன!

‘‘அதனால்தான், எங்கள் வங்கியில் இந்தத் துறைக்கு 37 வெவ்வேறு வகையான கடன்களை அளிக்கிறோம். கடை தொடங்குபவர்கள், சுயதொழில் தொடங்கும் பட்டதாரிகள் போன்ற புதியவர்களுக்கு அவரவர் தேவைக்கேற்ப 25,000 ரூபாயிலிருந்து 5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு ஒரே கண்டிஷன்... உங்கள் தொழிலுக்கான முதலீட்டில் 15 முதல் 25% பணம் கையில் இருக்கவேண்டும். அவ்வளவுதான்!

பெண்களுக்கு அதிக அளவில் ஊக்கம் கொடுக்கும் வகையில், ஆண்களுக்கு வழங்குவதைவிட அரை சதவிகிதம் குறைவான வட்டியில், 5 லட்சம் ரூபாய்வரை கடன் வழங்குகிறோம். இது ஒரு சிறப்புத் திட்டம் என்பதால் இதற்கு எந்த செக்யூரிட்டியும் காட்டத் தேவை யில்லை’’ என்று சொன்ன பாஸ்கர் நியோஜி, தொடர்ந்தார்.

கடன்: தொழிலை விரிவாக்கணுமா..?

‘‘புதிதாகத் தொழில் தொடங்குபவர் களுக்குத்தான் என்றில்லை. ஏற்கெனவே தொழிற்சாலை நடத்துபவர்களின் விரிவாக்கப் பணிகளுக்கும் கடன் தருகிறோம். இதை வருட தொடக்கத்தில் விண்ணப்பித்து வங்கியின் ஒப்புதலைப் பெற்று வைத்துக் கொண்டு, அந்த ஆண்டில் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காகவே எங்கள் வங்கியில் ஓபன் டெர்ம் லோன் என்ற வசதி இருக்கிறது.

திடீரென்று கிடைக்கும் பெரிய ஆர்டருக்காக உடனே சில மெஷின்களை வாங்க வேண்டியிருக்கலாம். ஆனால், அப்படி ஒரு ஆர்டர் கிடைக்கக்கூடும் என்று எதிர் பார்க்கும் நேரத்திலேயே வங்கியில் லோனுக் கான விண்ணப்பத்தைக் கொடுத்து ஒப்புதலை வாங்கிக்கொண்டால் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்துவது எளிதுதானே!

இதுமட்டுமின்றி, தொழில்தொடர்பாக வெளிநாட்டுப் பயணம் செய்ய வேண்டி இருந்தால், அந்தச் செலவுகளுக்குக்கூட இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு கருத்தரங்கோ, கண்காட்சியோ வெளிநாட்டில் நடக்கும்போது இந்த ஒப்புதலைக் காட்டி உடனடியாகக் கடன் பெற்று பயனடைய முடியும். ஒருவேளை, அந்த ஆண்டு முழுவதும் அந்தக் கடன் தேவைப்படாமல் போகும் பட்சத்தில் அடுத்த ஆண்டு புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தக் கடன் பெறுவதற்கு செக்யூரிட்டியாக சொத்துக்களைக் காட்டவேண்டி இருக்கும். 10% வட்டியில், அதிகபட்சமாக 2 கோடியே 50 லட்சரூபாய் வரை கடன் தருகிறோம்’’ என்ற பாஸ்கர்,

‘‘எங்கள் வங்கியில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிக்கென சிறப்புத் திட்டங்களும் இருக்கின்றன. சிவகாசி என்றால் பட்டாசு... திருச்சி என்றால் காற்றாலை தொடர்பான தொழிற்சாலைகள்... ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடியில் தோல் தொழில்கள் என்று சில பகுதிகளில் ஒரே தொழிலுக்கான சூழல் இருக்கும். ஒரே தொழிலில் ஏராளமானவர்கள் அங்கங்கே ஈடுபடும் இடங்களில் அந்தத் தொழிற்சாலைகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை எடுக்கிறது எங்கள் வங்கி.

கடன்: தொழிலை விரிவாக்கணுமா..?

அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கூட்டாக ஒரு தொழிற் பேட்டையை உருவாக்கினால், அதனை ஆராய்ந்து, சிறப்பு வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறோம். எந்த தொழிலுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதற்கு ஏற்ப, வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் மாறுபடும். பட்டாசு போன்ற குறைவான லாபம் கிடைக்கும் தொழிலில் ஈடுபடும் சிவகாசி தொழிற்பேட்டைகளுக்கு 9.5% முதல் 10.25% வட்டியில் கடன் வழங்குகிறோம். இதுவே, லாபம் அதிகம் கிடைக்கும் தொழிற்சாலைகள் என்றால் அதற்கு வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். இதுவரை 13 பகுதிகளுக்கு கடன் வழங்கியுள்ளோம்.

ஆண்டிபட்டியில் நெசவுத்தொழில் செய்பவர்கள் அதிகமாக இருப்பதால் அரசின் கூட்டு முயற்சியுடன் பின்னலாடை தொழிற் பேட்டையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதேபோல் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் அணுகினால் உதவத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

‘‘பாரத ஸ்டேட் வங்கியைப் பொறுத்தவரை பொதுவாக ஒருவர் கடன் கேட்டு விண்ணப் பிக்கும்போது அவருடைய பொருளாதார நிலை, நிர்வாகத் திறமை, அவரது தொழிலில் உள்ள ரிஸ்க், வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால் அவருக்கும் வங்கிக்கும் இடையிலான உறவு போன்றவற்றை எங்கள் குழு மதிப்பீடு செய்யும். அவர் வாங்கும் மதிப்பெண்களைப் பொறுத்து கடன் வழங்குகிறோம்.

இந்த வருடத்தில் இதுவரை 1,150 கோடி ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளோம். இன்னும் கொடுக்கத் தயாராக உள்ளோம்’’ என்றார்.

பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism