Published:Updated:

பிராஜெக்ட் லக்ஷ்யா... எல்-டி-யின் புதிய பயணம்!

பிராஜெக்ட் லக்ஷ்யா... எல்-டி-யின் புதிய பயணம்!

பிராஜெக்ட் லக்ஷ்யா... எல்-டி-யின் புதிய பயணம்!

பிராஜெக்ட் லக்ஷ்யா... எல்-டி-யின் புதிய பயணம்!

Published:Updated:
ஸ்பெஷல்
பிராஜெக்ட் லக்ஷ்யா... எல்-டி-யின் புதிய பயணம்!
 

பிராஜெக்ட் லக்ஷ்யா...
எல் & டி-யின் புதிய பயணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிராஜெக்ட் லக்ஷ்யா... எல்-டி-யின் புதிய பயணம்!

ல் & டி-யின் கம்பீரம் எங்கிருந்து வந்தது என்பது கடந்த வாரத்தில் சென்னைக்கு வந்திருந்த அதன் சி.எம்.டி-யான நாயக்கைப் பார்த்தபோது புரிந்தது. தீர்க்கமான பார்வையில், சுருக்கமில்லாமல் மேஜை விரிப்பை விரித்த அலுவலக சிப்பந்தியைக் கவனித்து, அழைத்துப் பாராட்டும் கனிவு என்று எமோஷலான கலவைதான் நாயக்.

கட்டுமானம், அணு உலை அமைத்தல், ராக்கெட் மற்றும் ஏவுகணை தயாரிப்பில் பங்களிப்பது, சிறுகப்பல் கட்டும் வேலைகள், மென்பொருள் துறை என்று பல துறைகளில் தன் தடத்தை அழுத்தமாகப் பதித்து வரும் எல்-டி நிறுவனம், இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயிற்சி நிலைய கிளைகளை அமைத்து வருகிறது. சென்னை கிளைகளைத் துவக்கி வைக்க வந்திருந்த நாயக்கிடம் சிறிது பேசினோம்.

‘‘இன்றைய சூழலில் இந்திய இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு பற்றிய மாறுபட்ட சிந்தனை இருக்கிறது. பணியாற்றும் இடம், கொஞ்சம் வசதி குறைவான இடமாக இருந்தால், அந்த வேலையையே ஒதுக்கிவிட்டு, தங்களுக்கு வசதியான, அதேசமயம் கைநிறைய சம்பளம் தரும் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்கிறார்கள். அந்த வேலை என்பது வெளிநாடுகளாகக்கூட இருக்கலாம். பயிற்சி பெற்ற ஆட்களைத் தேடிவந்து கொத்திச்செல்லும் நிலை இன்று இருக்கிறது. கட்டுமானத் தொழிலைப் பொறுத்தவரை வளைகுடா நாடுகளில் 8 மடங்கு, 9 மடங்கு கூடுதலாகச் சம்பளம் கிடைக்கிறது.

இங்கே அந்த அளவுக்கு சம்பள வாய்ப்பு இல்லை என்பதால், நாங்கள் புதிய ஆட்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து வேலைக்குச் சேர்த்துக்கொள்கிறோம். இதற்கான பயிற்சி நிலையங்கள்தான் இவையெல்லாம்!’’ என்ற நாயக், ‘‘கட்டுமானத் தொழிலில் ராஜாவாக இருக்கிற எல் & டி, வளைகுடா பகுதியைக் குறிவைத்து பலதிட்டங்களைத் தீட்டி வருகிறது. அங்கிருக்கும் நிறுவனங்களோடு கூட்டணி அமைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறோம். தேவைப்பட்டால் சில நிறுவனங்களை வாங்கவும் முடிவு செய்திருக்கிறோம்’’ என்றார்.

நாயக் பெருமையோடு சொன்ன இன்னொரு விஷயம், தங்கள் அணுமின் திட்டங்கள் பற்றி! ‘‘இந்தியாவில் அணுமின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் போதுமானதாக இல்லை என்பதால், அதற்கான முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்றைய நிலையில் ஹெவிவாட்டர் எனப்படும் கனநீர் மற்றும் இயற்கை யுரேனியம் அடிப்படையில்தான் நமது அணுமின் திட்டங்கள் அமைந்துள்ளன. இதில் நான்கு பெரிய அணு உலை கட்டும் பணிகளை நாங்கள் செய்துவருகிறோம். இதுதவிர, ரஷ்யா போன்ற நாடுகளில் உலைகளைக் கட்டும் தொழில் நுட்ப வேலைகளைச் செய்யவும் தயாராக இருக்கிறோம். 2010-க்குள், நாங்கள் செயல்படும் எல்லா துறைகளிலும் மிகச்சிறந்த நிறுவனம் என்ற பெயரைப் பெறுவதுதான் எங்கள் திட்டம்’’ என்று பெருமிதமாகச் சொன்ன நாயக், அதற்கு ‘பிராஜெக்ட் லக்ஷ்யா’ என்று பெயரும் சூட்டியிருக்கிறார்.

காற்றைவிட வேகமாக தன் வேலைகளை முடித்த நாயக் விஷ்க்கென்று காரில் ஏறிப் பறந்து போனார். நிறுவனத்துக்கும் இந்த வேகம் இவரிடமிருந்துதான் தொற்றிக் கொண்டிருக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism