Published:Updated:

சேமிப்பு: சேமிப்பை என்ன செய்வது?

சேமிப்பு: சேமிப்பை என்ன செய்வது?

சேமிப்பு: சேமிப்பை என்ன செய்வது?

சேமிப்பு: சேமிப்பை என்ன செய்வது?

Published:Updated:
சேமிப்பு
சேமிப்பு: சேமிப்பை என்ன செய்வது?
 

சேமிப்பை என்ன செய்வது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேமிப்பு: சேமிப்பை என்ன செய்வது?
சேமிப்பு: சேமிப்பை என்ன செய்வது?

ணேசன் தனியார் கம்பெனியில் ஹெட் கிளார்க்காக முப்பது வருடம் சர்வீஸ் போட்டவர். மகன் இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு, மகள் பள்ளிக்கூடத்தில்! தன் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தைச் சேமிக்கிறார் கணேசன். அநாவசியமாகச் செலவழிக்கும் பழக்கம் அவர் குடும்பத்தில் யாருக்குமே கிடையாது. என்றாலும், சம்பளம் அந்தந்த மாதத் தேவைகளுக்கே சரியாக இருக்கும்.

பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்டவேண்டிய மாதத்தில் கொஞ்சம் விழி பிதுங்கிப் போவார். ‘நான் ஒண்டியாளுதான் சம்பாதிக் கிறேன். என்ன செய்யமுடியும்?’ என்று அவ்வப் போது அங்கலாய்ப்பார். ஆனா லும் வண்டி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. சேமிப்பு முதிர்ந்து வரும்போது ஏதாவது வீட்டு உபயோகப் பொருள் வாங்குவது கணேசனின் பழக்கம். இந்தக் கோடையில்கூட ஏ.ஸி மெஷின் வாங்கும் திட்டத்தோடு ஒரு சேமிப்பில் இறங்கி இருக்கிறார்.

இப்போது அவரும் மனைவியும் திருச்சிக்கு அருகேயுள்ள கிராமத்துக்குச் சென்றுகொண்டு இருக்கிறார்கள். கணேசனின் தம்பி வீட்டில் விசேஷம். ‘பாவம்... கிராமத்தில் விவசாயம் செய்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான். ‘கிஃப்டை’க் கொடுப்பதை விட, பணமாகக் கொடுத்தால் அவனுக்கு உதவியாக இருக்கும்’ என்ற எண்ணத்தில் இருந்தார் கணேசன்.

கணேசனின் தம்பி கிராமத்தில் கோட்டை போல வீடு கட்டியிருந்தார். ‘‘என்னப்பா... அகலக்கால் வெச்சுட்ட போலிருக்கே... கடனை உடனை வாங்கி இத்தனை பெரிய வீடு தேவைதானா?’’ என்றார் உண்மையான அக்கறையுடன்.

‘‘கடனா..! அண்ணே, இது எல்லாமே என் சொந்தப் பணம்... எல்லாமே என் சேமிப்பு. ஒரு பைசாகூட கடன் வாங்கலை’’ என்றார் தம்பி. கணேசனுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. ‘தான் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறோம். ஆனால், இரண்டு பெட்ரூம் வீடு வாங்குவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது. அதுவும் வங்கியில் லோன் போட்டுத்தான் வாங்கமுடிந்தது. இவன் எப்படி கடனே வாங்காமல் வீடு கட்டும் அளவுக்குச் சேமித்தான்?’ என்று கணேசனுக்கு ஆச்சர்யமாகிவிட்டது.

அடுத்த நாள் காலையில், ‘‘அண்ணே... வாங்க, வயலுக்குப் போய்விட்டு வரலாம்’’ என்று கணேசனை அழைத்துப் போனார் அவருடைய தம்பி. கூடவே, கணேசனின் மனைவியும் வந்தார். காலாற நடந்தார்கள்.

சில வருடங்களுக்கு முன் சின்னதாக இருந்த வயல், இப்போது ஏக்கர் கணக்கில் விரிந்து கிடந்தது. உழுது பயிரிடத் தயாராக இருந்த இடங்களைக் காட்டி, போன வருடம் வாங்கியதாகச் சொன்னார் தம்பி. ‘‘வயலில் கிடைத்த பணத்தை வயலிலேயே போட்டேன்’’ என்று தம்பி சொன்னது கணேசனுக்கு பொட்டில் அடித்தாற்போல புரிந்தது.

உங்களுக்குப் புரிந்ததா..?

கணேசனும் சேமித்தார், அவருடைய தம்பியும் சேமித்தார். இருவருக்கும் இடையில் உள்ள முக்கியமான வேறுபாடு அந்தச் சேமிப்பை என்ன செய்தார்கள் என்பதுதான்! கணேசன் தன்னுடைய சேமிப்பையும் சேமிப்பில் கிடைக்கும் லாபத்தையும் கூடுதல் வருமானமாக நினைத்து, அவ்வப்போது பொருட்களை வாங்கப் பயன்படுத்திக்கொண்டார்.

சேமிப்பு: சேமிப்பை என்ன செய்வது?

அவருடைய தம்பியோ, சேமிப்பையும் சரி... சேமிப்பில் கிடைக்கும் லாபத்தையும் சரி, மீண்டும் நிலத்திலேயே முதலீடு செய்திருக்கிறார். சேமிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு அந்தச் சேமிப்பை மறுபடியும் முறையாக முதலீடு செய்ய வேண்டியதும் முக்கியம்.

அப்போதுதான் நம் சேமிப்பும் நமக்காக தனியாக ‘உழைக்க’ ஆரம்பிக்கும். கணேசனின் தம்பி விஷயத்தில் நடந்தது இதுதான். அவர் தன்னுடைய வயல்வெளியில் உழைத்தார். அதில் கிடைத்த வருமானத்தைச் சேமித்து வைத்து, அதைக்கொண்டு இன்னும் கொஞ்சம் நிலத்தை வாங்கினார். அந்த நிலம் தனியாக வருமானத்தைக் கொடுக்கத் தொடங்கியது. அதில் கிடைக்கும் மேல் வருமானத்தைச் சேமித்து இன்னும் கொஞ்சம் நிலத்தை வாங்கிப் போட அதுவும் உழைத்து கூடுதல் வருமானத்தைக் கொடுக்கத் தொடங்கியது.

இப்படி உங்கள் சேமிப்பும் தனியாக ‘உழைக்க’ ஆரம்பித்தால், உங்கள் வருமானம் தானாகவே இரண்டு மடங்கு, மூன்று மடங்கு ஆகும். அப்போது எதிர்பாராத செலவு வரும் போது, அந்த வருமானத்தில் கொஞ்சத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த மறுமுதலீடு என்பதை ஒரே துறையில்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. உங்களுக்கு நன்றாகத் தெரிந்த வேறுவேறு துறைகளில்கூட முதலீடு செய்யலாம். ஆனால், சேமிப்பு முறையான வகையில் முதலீடு ஆக வேண்டும், அதுதான் முக்கியம்!

கணேசன் ஏ.ஸி வாங்குவதற்காக சேமித்த பணத்தை எடுத்து வருமானம் தரும் வகையில் முதலீடு செய்ய முடிவெடுத்துவிட்டார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism