Published:Updated:

ஐஸ்க்ரீமில் அள்ளுங்க அட்டகாச லாபம்!

ஐஸ்க்ரீமில் அள்ளுங்க அட்டகாச லாபம்!

ஐஸ்க்ரீமில் அள்ளுங்க அட்டகாச லாபம்!

ஐஸ்க்ரீமில் அள்ளுங்க அட்டகாச லாபம்!

Published:Updated:
தொழில்
ஐஸ்க்ரீமில் அள்ளுங்க அட்டகாச லாபம்!
 

 

ஐஸ்க்ரீமில் அள்ளுங்க அட்டகாச லாபம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐஸ்க்ரீமில் அள்ளுங்க அட்டகாச லாபம்!
ஐஸ்க்ரீமில் அள்ளுங்க அட்டகாச லாபம்!

கோ டைக்காலம் தொடங்கிவிட்டது. அதோடு, பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை ஆரம்பமாகிவிடும். வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் வெயிலில் அலையும்போது கண்கள் தேடுவது குளிர்ச்சியான உணவுகளை. அந்த வகையில் கோடைக்கு ஏற்ற தொழில் ஐஸ்க்ரீம் பார்லர்!

இப்போது இருக்கும் சூழலில் சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்க்கக் கூடிய அற்புதமான வாய்ப்பு இது. இளைஞர்களும் குழந்தைகளும் கூடும் பகுதிகளில் ஒரு கடையைப் போட்டால், ஜிலுஜிலுவென்று காசு கொட்டத் தொடங்கிவிடும் தொழில் இது.

கடை என்றால் பெரிய இடமாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. பத்துக்குப் பத்து இடம் இருந்தால்கூடப் போதும். பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் சின்னதாக இடம் கிடைத்தால்கூட தொழிலை ஆரம்பித்துவிடலாம். ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்காக பெரிய ஹோட்டலைத் தேடிச் செல்பவர்களைவிட இதுபோன்ற சிறு ஐஸ்க்ரீம் பார்லர்களைத் தேடி வருபவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது.

ஐஸ்க்ரீமில் அள்ளுங்க அட்டகாச லாபம்!

அதனால் இடத்தின் அளவைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். ஃப்ரீஸர் வைக்க கொஞ்சம் இடம்... அது தவிர, மூன்று மேஜை, அதற்கான நாற்காலிகள் போடும் அளவு இடமிருந்தால் போதும்.

இடத்தைப் பிடித்துவிட்டாலே பாதி வேலை முடிந்த மாதிரிதான். ஏனென்றால், ஐஸ்க்ரீம் போன்ற சாப்பாடு விஷயத்தில் இடம்தான் பாதி வியாபாரத்தைத் தீர்மானிக்கும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஐஸ்க்ரீம் தயாரிக்கும் மெஷின் எல்லாம் வாங்கத் தேவை இல்லை. ஒரு ஃப்ரீஸர் வாங்கி வைத்துக்கொண்டால் போதும். பிரபல நிறுவனங்களின் ஐஸ்க்ரீமை வாங்கி விற்பனை செய்யலாம். விற்பனை அளவைப் பொறுத்து 300 லிட்டர் முதல் 500 லிட்டர் ஃப்ரீஸரை வாங்கி வைக்கலாம். இதற்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு பிடிக்கும்.

ஐஸ்க்ரீமில் அள்ளுங்க அட்டகாச லாபம்!

ஆனால், இப்போது ஃப்ரீஸரைத் தேர்வு செய்து செலவுகூட தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு ஐஸ்க்ரீம் நிறுவனங்களே அதைக்கொண்டு வந்து நம் கடையில் வைத்து விடுகின்றனர். இதற்கென ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட்டாகக் கட்டினால் போதும். சில நிறுவனங்கள் அதைக்கூட கேட்பதில்லை. அவர்களது தயாரிப்புகளை விற்பனை செய்யவேண்டும் என்பதுதான் ஒரே கண்டிஷன். எவ்வளவு ஐஸ்க்ரீம் விற்கிறோமோ அதற்குரிய கமிஷன் கிடைக்கும்.

ஐஸ்க்ரீமில் அள்ளுங்க அட்டகாச லாபம்!

இப்படிக் குறிப்பிட்ட நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடும்போது, அவர்களே கடைக்கான அலங்காரம், சுவரில் ஒட்டும் போஸ்டர், பெயர்ப் பலகை, லோக்கலில் விளம்பரம் செய்யும் துண்டு பிரசுரங்கள் போன்றவற்றையும் ஏற்பாடு செய்துவிடுவார்கள். இதிலுள்ள ஒரே ஒரு குறை, மற்ற நிறுவன ஐஸ்க்ரீம்களை விற்பனை செய்யமுடியாது என்பதுதான்.

24 மணி நேரமும் ஃப்ரீஸர் இயங்கிக்கொண்டு இருக்க வேண்டும். மின்சாரச் செலவென்று பார்த்தால் ஒரு நாளைக்கு மொத்தமாக 5 யூனிட் வரை ஆகும்.

இதுவே, சிறிய பிராண்ட் ஐஸ்க்ரீம்களை வாங்கி விற்கும்போது, சுமார் 50% வரை லாபம் கிடைக்கும். டெபாசிட் கட்டும் அவசியம் இருக்காது. வாங்கிய சரக்குக் கான காசைக் கூட சிறிதுகாலம் கழித்து - அதாவது பொருள் விற்றவுடன் தந்தால்கூட போதுமானது. அடிப்படையாக பிரீஸர் ஒன்றும்,கோனில் ஐஸ்க்ரீமை நிரப்பும் மெஷின் ஒன்றும் வாங்கி வைத்துக்கொண்டால் கூடுதல் லாபம் வரும்.

ஐஸ்க்ரீமில் அள்ளுங்க அட்டகாச லாபம்!

பொதுவாக, ஐஸ்க்ரீம் என்பது பாதிக்கு பாதி லாபம் தரக்கூடிய தொழில். பிரபலமான பிராண்ட்களை வாங்கி விற்பனை செய்தால்கூட 20 முதல் 30% வரை கமிஷன் கிடைக்கும்.

இது சீசன் பிஸினஸ் என்பதால், கோடைக்காலத்தில் கடையின் வருமானம் இருமடங்காக இருக்கும். ஒரு சீசனிலேயே நீங்கள் கடைக்காக முதலீடு செய்த தொகையை எடுத்துவிடலாம்.

மற்ற நேரங்களில் ஐஸ்க்ரீமைத் தேடி வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதனால், விற்பனை கொஞ்சம் டல்லடிக்கும். சில சமயங்களில் பாதியாகக்கூடக் குறையலாம். அப்போது ஸ்நாக்ஸ், ஹாட் ட்ரிங்ஸ் என்று வேறு சில விஷயங்களையும் கடையில் வைக்கலாம்.

ஐஸ்க்ரீமில் அள்ளுங்க அட்டகாச லாபம்!

வீடுகள் அதிகமுள்ள பகுதியில் அமைந்திருக்கும் கடை என்றால் பால் பாக்கெட்கள், சாட் உணவுகளை வாங்கி வைத்து விற்கலாம். இவை தவிர்த்து, காயின் டெலிபோன், ஜெராக்ஸ் மெஷின் போன்றவற்றைக்கூட நம் ஏரியாவின் தேவைக்கேற்ப வாங்கி வைத்து வருமானம் பார்க்கலாம். ஐஸ்க்ரீம் லாபம் குறைகிற நேரத்தில் அதை ஈடுகட்டும் விதமாக இது பயன்படும்.

சீசன் இருக்கிறதோ இல்லையோ திருமண விசேஷங்கள், மீட்டிங்குகள், விழாக்கள் நடக்கும் இடங் களுக்குப் போய் லம்ப்பான ஆர்டர் பிடித்து அவர்களுக்கு சப்ளை செய்தும் கூடுதல் லாபம் பார்க்கமுடியும்.

இந்தத் தொழிலில் மாத செலவுகள் என்று பார்த்தால் ஊழியர்களின் சம்பளம், கடை வாடகை, மின்கட்டணம் போன்றவைதான். கடையில் டி.வி., ரேடியோ போன்ற வற்றை அமைத்து குழந்தைகள், குடும்பத்தலைவிகள், யுவதிகளின் கவனத்தை ஈர்க்கலாம்.

வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க... ஐஸ்க்ரீம் உருக உருக... பணமும் பெருகும்!

எது நமக்கு வசதியான பிராண்ட்..?

300 லிட்டர் ஃப்ரீஸர் வைக்க குவாலிட்டி நிறுவனத்தில் பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் கட்டவேண்டும்.

கடை ஆரம்பிக்கும்போது நமக்குத் தேவையான அளவுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக்கொள்ளலாம். கமிஷன் தொகை- 20%

ஐஸ்க்ரீம்களுக்கான உத்தரவாத காலம் ஒரு வருடம்!

இதே அளவுக்கான ஜமாய் ஐஸ்க்ரீம் வாங்கி விற்க...

ஃப்ரீஸர் டெபாசிட் பதினாலாயிரம் ரூபாய் கட்டவேண்டும்.

தேவையான அளவுக்கு ஐஸ்க்ரீம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். கமிஷன் தொகை- 25%

இதிலும் ஒரு வருடம் வரை விற்க முடியும்.

இதே அளவுக்கான அருண் ஐஸ்க்ரீம் வாங்கி விற்க...

கடை ஆரம்பிப்பவர்களே அதற்கான ஃப்ரீஸரை வாங்க வேண்டி இருக்கும். அதைத்தவிர டெபாசிட்- இருபதாயிரம் ரூபாய் கட்ட வேண்டும். ஐஸ்க்ரீம்களை ஒரு மாதத்துக்கு மேல் வைத்திருந்து விற்கக்கூடாது.

கமிஷன் தொகை - 20%.

செலவுகள்

குந்த இடத்தை வாடகைக்குப் பிடிக்க வேண்டும். மக்கள் கூடுமிடத்தைப் பொறுத்து வாடகை மாறுபடும்.

டேபிள், சேர், ஃபர்னிச்சர் செலவு - ரூபாய் 5,000.

மின் விசிறி உள்ளிட்ட மின்சார உபகரணச் செலவு - ரூபாய் 5,000.

ஃப்ரீஸர் டெபாசிட் தனி! (பார்க்க பெட்டிச் செய்தி).

காலை ஒன்பது மணி முதல் இரவு எட்டு மணி வரை வியாபாரம் நடக்கும் என்பதால் ஒரு ஊழியரே போதும். அவருக்கான சம்பளம் - ரூபாய் 2,000. கடை வாடகைக்கு ஒரு தொகை - அது ஏரியாவைப் பொறுத்து மாறும்.

வருமானம்

தி னசரி சராசரியாக ரூபாய் 1,500 வரை விற்பனையானாலும் கூட, செலவுகள் எல்லாம் போகவே தினசரி குறைந்தபட்ச வருமானம் ரூபாய் 250 வரை கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism