Published:Updated:

மெகா மால்... மகா வருமானம்!

மெகா மால்... மகா வருமானம்!

மெகா மால்... மகா வருமானம்!

மெகா மால்... மகா வருமானம்!

Published:Updated:
தொழில்
மெகா மால்... மகா வருமானம்!
 

 

மெகா மால்... மகா வருமானம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெகா மால்... மகா வருமானம்!

ட நெருக்கடியில் வீடுகள் எல்லாம் அடுக்குமாடிகளானது போல, கடைகளெல்லாம் ஷாப்பிங் மால்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இந்த மால் கலாசாரம் இன்று சென்னையில் உச்சத்தில் இருக்கிறது.

சென்னை, அண்ணாசாலையில் உள்ள ‘ஸ்பென்சர் பிளாசா’ ஷாப்பிங் மாலில் உள்ள கடைகளை நீளவாக்கில் அடுக்கினால், சில கிலோமீட்டர் தூரத்துக்கு நீளும். அத்தனை கடை களையும் ஒரே காம்ப்ளெக்ஸுக்குள் அடைத் திருக்கிறார்கள். இதனால் இடமும் மிச்சம், மக்களும் ஒரே இடத்தில் எல்லாப் பொருட்களையும் வாங்கவும் முடிகிறது.

‘‘இப்போது ஷாப்பிங் என்பது பொருட்களை வாங்குவது என்பதைத் தாண்டி, பொழுதுபோக்கும் விஷயமாகவும் மாறிவருகிறது. அப்படி இருக்கும்போது, ஒரே இடத்தில் உலகத்தையே வாங்கும் ஷாப்பிங் மால்கள் தான் மக்களின் எதிர்பார்ப் பாக இருக்கிறது’’ என்கிறார் ‘அபிராமி மால்’ அதிபர் ராமநாதன்.

மெகா மால்... மகா வருமானம்!
மெகா மால்... மகா வருமானம்!

சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி திரையரங்க வளாகத்தை ‘மால்’ ஆக்கி பிரமாண்டம் காட்டியிருக்கிறார்.

‘‘உள்ளே எல்லாவிதமான கடைகளும் இருக்கின்றன. களைப்பானால் பசியாறிக்கொள்ள உணவகங்கள் கூட இருக்கின்றன. எங்களுக்கு ஏற்கெனவே தியேட்டர்கள் இருப்பதால், அங்கு வரும் மக்கள் பொழுது போக்குவதோடு, இப்போது பொருட்களையும் வாங்கிச் செல்கிறார்கள்.

வெறுமே கடைகள் நிறைந்த மால் என்பதையும் தாண்டி, உள்ளேயே காஷ்மீர் போல குளிரை அனுபவிக்கும் அளவுக்கு ஒரு பனிப் பிரதேசம், குழந்தைகள் விளையாடும் பகுதி போன்ற தீம் பார்க் அட்ராக்ஷன்களும் இருக்கின்றன. எல்லாமே வியாபாரத் தந்திரம்தான்’’ என்றார்.

இதுபோன்ற மால்களில் பொருட்களை வாங்க வருபவர்களுக்கு அலைச்சல் மிச்சம் என்பதோடு, கிட்டத்தட்ட எல்லா பிராண்டட் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கவும் முடிகிறது.

மெகா மால்... மகா வருமானம்!

மக்களுக்கான பயன்பாடு இப்படி இருக்க, கடை வைப்பவர்களுக்கு ஒருவகையில் இது நல்ல பிஸினஸாகவும் இருக்கிறது. நகரின் முக்கியமான இடத்தில் கடைபிடித்து, வாடகை கட்டி வியாபாரம் செய்வது என்பது அத்தனை சுலபமில்லை. அதேசமயம், இதுபோன்ற மால்களில் கடை எடுத்தால் வியாபாரத் துக்கு சுலபமான வழி பிறக்கும். இதில் கூடுதல் சாதகம் என்னவென்றால், அந்த மால் பற்றிய விளம்பரங்கள் எல்லாமே ஒருவகையில் அதில் உள்ள கடைகளுக்கான விளம்பரம் மாதிரிதான்!

ஒரு ரேமண்ட் ஷோரூமுக்குக் கொடுக்கப்படும் விளம்பரம், அதே மாலில் இருக்கும் சின்ன ரெடிமேட் கடைக்குக்கூடப் போய்ச்சேரும். ரேமண்ட் துணி வாங்க வந்தவர்கள் அப்படியே இங்கும் ஒரு விசிட் அடிப்பார்களே!

பெரும்பாலும் கடைகள் எல்லாமே வாடகைக்கு விடப்படுபவைதான். கடையின் பரப்பளவைப் பொறுத்து வாடகை நிர்ணயம் செய்யப்படுவதால், சிறிய கடை எடுத்து நடத்துபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஸ்பென்சர் பிளாசாவில் ஒரு சதுர அடி பரப்பின் மாத வாடகை 18 முதல் 22 ரூபாயாக இருந்தது. இப்போது, 60 முதல் 100 ரூபாயாக உயர்ந்துவிட்டது.

மெகா மால்... மகா வருமானம்!

அபிராமி ராமநாதன் இன்னும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பத்து ஆண்டுகளுக்கான வாடகையை மொத்தமாகக் கட்டிவிட்டால், மொத்தம் இருபது ஆண்டுகளுக்கான இடம் கிடைத்துவிடும். அதன் பிறகு, வேறு யாருக்காவது கூட வாடகைக்குக் கொடுக்கலாம்.

‘‘வெளிநாட்டில் வாழும் பலருக்கும் இது நல்ல முதலீடாக இருக்கும். அவர்களுக்கு ஏஜென்டாக இருந்து வாடகையை வசூலித்துக் கொடுக்கும் வேலையையும் நாங்களே செய்துகொடுக்கிறோம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகைதாரரிடம் 15% வாடகையை அதிகரித்துக் கொள்ளவும் அனுமதி தருகிறோம். இது எல்லாமே பக்காவாக டாகுமெண்டில் தருகிறோம்’’ என்றார்.

5 லட்ச ரூபாய் செலவழித்து 100 சதுரஅடி கடையை 20 ஆண்டுக்கு குத்தகைக்கு எடுத்தால், குறைந்தபட்சம் மாதம் 4,000 ரூபாய் வாடகையாகப் பெற முடியுமாம்.

மெகா மால்... மகா வருமானம்!

மால்கள் என்றாலே மத்திய சென்னைதான் என்று இருக்கும் நிலையை மாற்றி இப்போது ராதாகிருஷ்ணன் சாலையில் ‘சென்னை சிட்டி சென்டர்’ என்ற மால் ஒன்றை அமைத்திருக்கிறார்கள் ஈ.டி.ஏ குரூப் நிறுவனத்தார். மேல்தட்டு மக்களைக் கவரும் வகையில் இருக்கும் இந்த மால், குறிப்பாக ஐ.டி மக்களை ஈர்ப்பதாக இருக்கிறது.

‘‘இந்த மாலில் சுமார் ஒரு லட்சம் சதுர அடி பரப்புக்கு ஐ.டி தொடர்பான அலுவலகங்கள் தான் வரப்போகின்றன. அப்படி இருக்கும்போது அவர்களின் வருமானத்தைக் குறிவைக்கும் வகையில் மேல்தட்டு மக்களுக்கான கடைகள்தான் அதிகம் இந்த காம்ப்ளெக்ஸில் இடம் பிடிக்கும்’’ என்கிறார்கள் மால் வட்டாரத்தினர்.

இதில் பெரும்பான்மையான பகுதிகள் வாடகை அடிப்படையில்தான் விடப்பட்டிருக்கின்றன.

இதேபோல, அண்ணாநகருக்கு அருகில் ‘அம்பா ஹவுசிங் டெவலப்பர்ஸ்’ நிறுவனம் ‘அம்பா சென்டர் ஒன்’ மால் அமைக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறார்கள். சாப்பாட்டுக்கென தனிப்பகுதி, ஷாப்பிங்குக்கு தனிப்பகுதி என்று திட்டமிட்டுக் கட்டப்பட்டு வரும் இந்த மாலில் உள்ளேயே ஒரு தங்கும் விடுதியையும் அமைக்க இருக்கிறார்கள்.

மெகா மால்... மகா வருமானம்!

‘‘ஸ்டார் வசதியோடு அமையும் இந்த விடுதி அளவில் கொஞ்சம் சிறியதுதான். ஆனால், வெளிநாடுகளில் இருப்பது போன்ற திட்டத்தோடு உருவாக்கப்படுகிறது. அங்கெல்லாம் ஷாப்பிங் முடிந்து, அங்கேயே தங்கும் வகையில் ஏற்பாடுகள் இருக்கும். நம் ஊருக்கு வரும் வெளிநாட்டினருக்குப் பயன்படும் வகையில் இப்படி அமைக்க விரும்புகிறோம்’’ என்றார் மால் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவர்.

மால்களை அமைப்பதில் உள்ள வசதிகளை சிறு சிறு ஷாப்பிங் கம்ப்ளெக்ஸ்கள் கட்டி வாடகைக்குக் கொடுத்து வருபவர்கள் அறிந்திருப்பார்கள். சென்னை இப்போதுதான் மால்கள் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது, இனிதான் தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுக்கு இந்த ஸ்டைல் பரவவேண்டும்.

கோவை, திருச்சி, மதுரை போன்ற மகா நகரங்களில் இது போன்ற சகல வசதிகளையும் கொண்ட பெரிய மால்களை உருவாக்கினால் அது லாபகரமான தொழிலாக இருக்கும். எல்லா நகரங்களுமே வளர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலை யில், இனிமேல் இதுபோன்ற மால்கள்தான் மக்கள் தேவையைத் தீர்ப்பதாகவும், இடப்பற்றாக்குறையைச் சமாளிப்பதாகவும் இருக் கும். அதோடு, பெரிய நிறுவனங்கள் தங்கள் கிளைகளை அமைக்க இதுபோன்ற மால்களைத்தான் தேடுகின்றன.

மெகா மால்... மகா வருமானம்!

இன்னொருபக்கம், இதுபோன்ற மால்களால் வேலைவாய்ப்புகளும் பெருகுகின்றன. சின்னச் சின்ன சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் போன்றவை அமையும்போது அங்கு பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ரிலையன்ஸ் ரீடெய்ல், பிக் பஜார் உள்ளிட்டவையும் சென்னையில் மெகா மால்கள் திறக்கத் திட்டமிட்டுள்ளன. இவர்கள் சென்னையை நோக்கி வரக்காரணமே, அந்நியச் சம்பளம் வாங்கும் இங்குள்ள பணவசதி படைத்த மக்கள்தான்.

அதேசமயம், ரியல் எஸ்டேட்காரர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு! உள்ளூரில் இருக்கிற சிறிய பிராண்ட் கடைக்காரர்கள் பலர் தங்களது கிளைகளைத் திறக்க இடமில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற புதுப்புது மால்கள் வரும்போது அதற்கான டிமாண்ட் அதிகமாக இருப்பதால் நல்ல விலைக்கு விற்கும் வாய்ப்பும் கிடைக்கும். வீடுகளைக் கட்டி விற்பதைவிட இப்படி மால்களைக் கட்டினால் பன்மடங்கு லாபமும் இருக்கும் என்பதுதான் கவனிக்கவேண்டிய விஷயமே!

எல்லாரும் மாலுக்கு மாறிட்டிருக்காங்க...

அப்ப நீங்க..?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism