Published:Updated:

முதலீடு வேண்டாம்... முதலாளி ஆகலாம்!

முதலீடு வேண்டாம்... முதலாளி ஆகலாம்!

முதலீடு வேண்டாம்... முதலாளி ஆகலாம்!

முதலீடு வேண்டாம்... முதலாளி ஆகலாம்!

Published:Updated:
தொழில்
முதலீடு வேண்டாம்... முதலாளி ஆகலாம்!
 

 

முதலீடு வேண்டாம்... முதலாளி ஆகலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலீடு வேண்டாம்... முதலாளி ஆகலாம்!
முதலீடு வேண்டாம்... முதலாளி ஆகலாம்!

வெ றுங்கையில் முழம்போடும் வித்தையைக் கற்றுத் தருகிறேன் என்கிறார் இருபத்து மூன்றே வயதாகும் ரஞ்சித் பாபா. நெடு நெடு உயரம், கம்பீரமான தோற்றம் வசீகரிக்கும் குரல்... இதுதான் ரஞ்சித் பாபா. சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு சிங்கப்பூரில் மேற்படிப்பை முடித்தவர்.

இப்போது ரியல் எஸ்டேட், ஷேர்மார்க்கெட் போன்ற துறைகளில் கால்பதித்து கம்பெனிகளை நடத்தி வருகிறார். அதோடு, தன்னிடம் உள்ள வித்தி யாசமான கருத்துகளை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் முயற்சியில் இறங்கி, அதையே தன் இன்னொரு தொழிலாக்கிக்கொண்டு சம்பாதிக் கிறார். ஆணி அறைந்தது போல தன் கருத்துக்களைப் பளிச்சென்று சொல்வது பாபாவின் பாணி!

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு செமினார்... கையில் நூறு ரூபாயை வைத்துக் கொண்டு கணீரென்ற குரலில் கேட்கிறார். ‘‘இந்த நூறு ரூபாயை இலவசமாகத் தரப்போகிறேன். உங்களில் யாருக்கு வேண்டும்?’’

கூட்டத்தில் சலசலப்பு! ஒரு சிறு மௌனத்துக்குப் பிறகு, ஒரு பெண் எழுந்து வருகிறார். குழப்பத்தோடு பலரும் என்ன நடக்கும் என்று பார்த்துக்கொண்டிருக்க, ‘‘இந்தப் பெண் நூறு ரூபாயைப் பெறுகிறார்’’ என்று அறிவித்துவிட்டு பணத்தைக் கொடுத்துவிடுகிறார்.

அடுத்து ‘‘இன்னும் சிலருக்கு இலவசம் காத்திருக்கிறது’’ என்று அறிவிக்கிறார். ‘இப்போது ஏதாவது தந்திரம் செய்வாரோ?’ என்ற தயக்கம் மாணவர்கள் மத்தியில் தென்பட, சிலர் தைரியமாக எழுந்துவந்தார்கள். அவர்களுக்கும் பணத்தைத் தருகிறார்.

‘‘நான் உணர்த்த விரும்பியது ‘முயற்சி செய்தால் சுலபமாகச் சம்பாதிக்கலாம்’ என்பதுதான்! அந்தப் பெண் சம்பாதித்த நூறு ரூபாய்க்கு எந்த முதலீட்டையும் போடவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள், வாய்ப்புகளைப் பற்றி தெரிந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ளாதவர்கள், வாய்ப்புகளைப் பற்றியே அறியாதவர்கள் என்று நம்மி டையே மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்.

முதலீடு வேண்டாம்... முதலாளி ஆகலாம்!

நூறு ரூபாயைச் சம்பாதித்த அந்தப் பெண் முதல் வகையைச் சேர்ந்தவர். அந்த மாதிரி மனிதர்களால்தான் வெற்றியைச் சம்பாதிக்க முடியும். அதற்குத்தான் நான் டிப்ஸ்களை வழங்குகிறேன்’’ என்றார் ரஞ்சித் பாபா.

‘‘இதுபோன்ற விஷயங்கள் மேடைப் பேச்சுக்கும் ஆட்களை வசீகரிக்கவும் வேண்டுமானால் பயன்படும். நிஜத்தில் முதலீடு இல்லாமல் வெற்றி பெறுவது எந்த அளவுக்குச் சாத்தியம்?’’ என்று கேட்டதும் தனது குறுந்தாடியைத் தடவிக்கொண்டு சிரித்தார்.

‘‘எந்தத் தொழிலுக்கு வேண்டுமானாலும் திட்டமிடுங்கள். அதற்கான முதலீடு என்று ஒரு தொகை தேவைப்படும் அல்லவா... அந்த முதலீட்டை சில சிறிய தொழில்களைச் செய்து சம்பாதிக்கலாம். இதற்கென எந்த முதலீடும் தேவையில்லை என்பதுதான் நான் சொல்வது!’’ என்ற ரஞ்சித் பாபா, சென்னை வேளச் சேரியில் இருக்கிறார். அப்பா சிவில் இன்ஜினீயர். படிப்புக் காக சிங்கப்பூர் போன இடத்தில் பல தொழிலதிபர்களையும் சந்திக்க நேர, பணத்தின் அருமை புரிய ஆரம்பித்திருக்கிறது. சம்பாதிக்கும் வழிகள் பற்றிய பல புத்தகங்கள் படித்து, தன் அறிவைப் பெருக்கிக்கொண்ட ரஞ்சித், அதை மற்றவர்களுக்கும் சொல்லும் அளவு இளம் வயதிலேயே தயாராகிவிட்டார். தான் மற்றவர்களுக்குச் சொல்லிவரும் ‘முதலீடே போடாத தொழில்’களில் சிலவற்றைப் பற்றியும் நம்மிடம் பேசினார்.

‘‘எல்லோரிடமும் ஒரு தனித்திறமை இருக்கும். ஏதாவது ஒரு சூழ்நிலையில் உங்களை பார்த்து, ‘உன்னால் எப்படி இதை எளிமையாகச் செய்ய முடிந்தது’ என்று மற்றவர்கள் கேட்டிருப்பார்கள். உங்களிடம் இருக்கும் அந்தத் தனித்துவம் வாய்ந்த திறமைதான் மூலதனம்.

எவ்வளவு கடினமான கணிதமாக இருந்தாலும் எளிதாகத் தீர்ப்பவர் என்றால் அந்தத் திறமையைப் பணமாக்கலாம். அந்தக் கணித முறையை சிறப்பாக பேக்கேஜ் செய்து பணம் பண்ணலாம். உங்கள் திறமை கணிதம் தொடர்பான துறையில் இருப்பவர்களிடம் எளிதாகப் போய்ச்சேரும். அப்படி எதுவுமே செய்ய வாய்ப்பில்லை என்றாலும் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்கலாம். அதில் வரும் வருமானம் உங்களுக்கான முதலீடாக மாறும்.

முதலீடு வேண்டாம்... முதலாளி ஆகலாம்!

பொருள்களை வாங்குவது, விற்பது, ஏற்றுமதி, இறக்குமதி என்று எல்லா வணிகமுமே இப்போது இணையதளங்கள் மூலமே நடக்கின்றன. இணைய தளங்களில் பொருள் தேவைப்படுபவருக்கும் பொருளை விற்க விரும்புவரின் தகவல்களும் இடம் பெற்றிருக்கும். அந்த இருவருக்கும் இடையில் தரகராக இருந்து கமிஷன் பெறலாம். இத்தொழிலுக்கு அந்தப் பொருளைப் பற்றிய குறைந்தபட்ச அறிவு இருந்தால் போதுமானது. தனியாக ஒரு அலுவலகம் கூடத் தேவையில்லை.

நிலத்தை வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையில் புரோக்கராகச் செயல்பட்டு கமிஷன் பெறுவதுகூட மூலதனம் தேவைப் படாத வருமான வழிதான். இத்தொழிலில் கொஞ்சம் பணம் சேர்த்தவுடன் அடுத்த கட்டத்துக்குச் செல்லலாம். நிலத்துக்கான விலையைப் பேசி சிறிய தொகையை அட்வான்ஸாகக் கொடுத்து ஒப்பந்தம் போட்டுக்கொண்டு லாபம் வைத்து விற்பனை செய்யலாம். இப்படி தொழில் செய்பவர்களுக்கு ‘ரியல்டார்ஸ்’ என்று பெயர். இதற்கு பேச்சுத் திறமையும், சிறிது ரியல் எஸ்டேட் பற்றிய அறிவும் இருந்தாலே போதும். இதெல்லாமே சின்னச் சின்ன டிப்ஸ்கள்தான். இப்படி உங்கள் திறமைக்கு ஏற்ப எந்தத் தொழிலிலும் ஈடுபடலாம்’’ என்றார்.

ரஞ்சித் பாபா சொன்ன வழிகளில் ஒன்றை அவரே கடைப்பிடிக்கிறார். அது தன்னிடம் இருக்கும் பேச்சுத் திறனையும் அறிவையும் பயன்படுத்தி செமினார்கள் நடத்தி, மாணவருக்கு இவ்வளவு என்று சம்பாதிப்பது.

‘‘நீங்கள் ஒரு துறையில் திறமையானவராக இருந்தால் அந்தத் துறை பற்றி தெளிவான கருத்துகளை மாணவர்கள் மத்தியிலும் அந்தத் துறை ஊழியர்கள் மத்தியிலும் செமினார்கள் நடத்தலாம். இதற்கு உங்க ளிடம் தெளிவான தயாரிப்பு இருந்தாலே போதும்... என்னைப் போல!’’ என்றார் புன்னகையுடன்!

இவர் சொல்பவதைப் பார்த்தால் வெறுங்கையால் முழம் மட்டுமல்ல... மீட்டர், கிலோமீட்டர் எல்லாம்கூடப் போடலாம் போலிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism