Published:Updated:

லட்சாதிபதி ஆக்கும் லாபக் கொடி!

லட்சாதிபதி ஆக்கும் லாபக் கொடி!

லட்சாதிபதி ஆக்கும் லாபக் கொடி!

லட்சாதிபதி ஆக்கும் லாபக் கொடி!

Published:Updated:
தொழில்
லட்சாதிபதி ஆக்கும் லாபக் கொடி!
 

 

லட்சாதிபதி ஆக்கும் லாபக் கொடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லட்சாதிபதி ஆக்கும் லாபக் கொடி!

‘‘த மிழ்நாட்டில் ஒரு விவசாயப் புரட்சியையே உண்டாக்கி விடலாம், ஒரே ஒரு கிழங்கை வைத்துக்கொண்டு...’’ என்று பீடிகையோடு ஆரம்பித்தார் இந்திய மூலிகை விவசாயிகள், ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் அமீர் ஜகான்.

லட்சாதிபதி ஆக்கும் லாபக் கொடி!

அவர் சொல்வது கிராமப்புறங்களில் கண் வலி மூலிகைக் கொடியில் இருந்து கிடைக்கும் விதைகள் பற்றி! ‘‘இந்தக் கிழங்கின் விதைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருடத்துக்கு ஒரு ஏக்கரில் சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்’’ என்றார் அவர்.

அதென்ன பெயர் கண்வலிக் கிழங்கு?

700 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கிழங்கைப் பயிரிட்டு ஏற்றுமதி செய்துவரும் சிவகாசிக்காரரான டி.டி.ராஜேந்திரன், கிழங்கின் பூர்வாசிரமத்தைச் சொன்னார்.

‘‘இலக்கியங்களில் சொல்லப்பட்ட செங் காந்தள் மலர்தான் இந்தக் கண்வலிக் கிழங்கின் மலர். பார்ப்பவர்களின் கண்களை மீண்டும் பார்க்க வைக்கும் இதற்கு ‘கண் நோக்கும் மலர்’ என்று பெயர். அது மருவி, கண் நோகும் மலரானது. நோகும் என்பதற்கு வலி என்றும் ஒரு பொருள் உண்டல்லவா... அதனால் ‘கண்வலி மலர்’ என்று ஆகிவிட்டது. அதில் இருந்து விளையும் கிழங்கும் விதைகளும் தான் இப்போது விவசாயிகளுக்கு அதிக வருமானத்தைத் தருகிறது’’ என்றார்.

தமிழகம் முழுக்க சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள இந்த கண்வலி கிழங்கு மூலம் ஆண்டுக்கு 200 டன் வரை விதைகள் கிடைக்கிறது. அதிலிருந்து தயாரிக்கப் படும் மருந்துகளும் ஏற்றுமதி ஆகின்றன. இதில் வருடந்தோறும் நமக்கு 10 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி கிடைக்கிறது.

லட்சாதிபதி ஆக்கும் லாபக் கொடி!

‘ட்ரக்ஸ் இந்தியா நிறுவன’த்தை நடத்தி வரும் ராஜேந்திரன் தன் கண்வலி தோட்டத்தில் நடந்தபடியே நம்முடன் பேச ஆரம்பித்தார்.

‘‘ஆரம்பத்தில் தீப்பெட்டி தொழிலில் இருந்தேன். அதில் சில பிரச்னைகள் வந்ததும் சுண்ணாம்பு கற்களை வைத்து வியாபாரம் செய்தேன். அப்போதுதான் சுண்ணாம்பு குவாரிகளில் ஒருவகைக் கிழங்கு விளைவதைப் பார்த்தேன். அது என்ன கிழங்கு என்பதைக் கண்டுபிடிக்க வெளிநாட்டு நண்பர்கள் மூலமாக லண்டனில் உள்ள ஓர் ஆராய்ச்சிக் கூடத்தில் சோதனை செய்தேன். அப்போதுதான் ‘கிளோரியோசா சூப்பர்பா’ ( Gloriosa Superba ) என்ற தாவரவியல் பெயர் கொண்ட அந்தக் கிழங்கின் மருத்துவக் குணங்கள் தெரியவந்தன. கூடவே, அந்தக் கிழங்கின் தேவை அதிகமாக இருக்கும் நாடுகளைப் பற்றியும் எனக்குத் தகவல் கிடைத்தது. உடனே, கண்வலிக் கிழங்கு சாகுபடியில் இறங்கிவிட்டேன்’’ என்றார் ராஜேந்திரன்.

ஆர்வம் அதிகமாகி, தமிழ்நாடு முழுக்க ஆராய்ச்சியே நடத்தி இருக்கிறார் ராஜேந்திரன். குறிப்பாக, திருவண் ணாமலை மாவட்டத்தில் இந்தக் கிழங்கு அதிகமாக விளைந்து கிடந்திருக்கிறது. உடனே சேலம் மாவட்டம் ஆத்தூரிலும், ஈரோடு மாவட்டம் மூலனூரிலும் கண்வலிக் கிழங்கைப் பயிரிட்டிருக்கிறார்.

லட்சாதிபதி ஆக்கும் லாபக் கொடி!

அதுவரை வேலி ஓரங்களில் கவனிப்பாரற்றுக் கிடந்த கண்வலிக் கொடிகள் பணப்பயிராக மாறின. இதைப் பயிரிடும் முறை பற்றிச் சொன்னார் ராஜேந்திரன்.

‘‘கண்வலிக் கிழங்கு சாகுபடிக்கு செம்மண், கரிசல்மண் போன்ற மண்வகைகள் ஏற்றவை. இதற்கு வருடம் முழுவதும் தண்ணீர் பாய்ச்சவேண்டியது அவசியம். வடிகால் வசதி உள்ள இடங்களில் பயிரிடலாம். இந்த பயிர் லேசான விஷத்தன்மை வாய்ந்தது என்பதால் விவசாயிகள் இதைப் பயிரிடத் தயங்கினர். வேளாண்மைத்துறை அலுவலர்கள் ‘மனிதர்களோ, மிருகங்களோ நேரடியாக உட்கொள்ளாமல் பார்த்துக்கொண்டாலே போதும். மருந்துக்கான மூலப் பொருள்தான் இது!’ என்று அவர்களது பயம் போக்கி, வங்கி மூலம் தேவையான கடன் வசதிகளை ஏற்பாடு செய்தபிறகு, இதைப் பயிரிடுவதில் ஆர்வம் காட்டினார்கள்.

ஒரு ஏக்கர் நிலத்துக்கு 500 முதல் 600 கிலோ கிழங்குகள் மூலம் 18,000 கன்றுகள் வரை நடலாம். நீர்ப் பாய்ச்சலுக்கு வசதியாக ஒரு மீட்டர் இடைவெளியில் 20 செ.மீ ஆழம் உள்ள வாய்க்கால் இருக்கவேண்டும். ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இடவேண்டும். விதைக் கிழங்குகளை பூஞ்சானக் கரைசலில் (ஒரு லிட்டர் தண்ணீரில் 1 கிராம் மருந்து) 30 நிமிடம் நனைத்து வரிசையாக நடவேண்டும். முளைத்துவரும் கொடிகளைக் குச்சிகளை நட்டு வைத்தோ, வேலி கட்டியோ படரவிடலாம்.

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் விதைக்க வேண்டும். ஒரு கிலோ சுமார் 35 ரூபாய் என்பதால் ஆரம்ப முதலீடாக 21,000 ரூபாய் வரை தேவைப்படும்.

இலைப்புழு, இலைப்புள்ளி நோய் மற்றும் கிழங்கு அழுகல் நோய் போன்ற நோய்கள் இந்தப்பயிரைத் தாக்கக் கூடும். அதற்குரிய மருந்துகளைத் தெளித்து பயிரைப் பாதுகாக்க வேண்டும். அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் வேப்பம் புண்ணாக்கு உரங்களை இடவேண்டும்.

லட்சாதிபதி ஆக்கும் லாபக் கொடி!

இப்பயிரில் தன் மகரந்தச்சேர்க்கை ஏற்படாது என்பதால் அயல் மகரந்தச்சேர்க்கை செய்யவேண்டும். வேறு பூவிலிருந்து எடுக்கப்பட்ட மகரந்தத்தூளை பஞ்சால் கட்டப்பட்ட குச்சி மூலமாக மகரந்தச்சேர்க்கை செய்யவேண்டும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் பூக்கத் தொடங்கிவிடுவதால் அந்த மாதங்களில் மகரந்தச் சேர்க்கை செய்யவேண்டும். நல்ல பராமரிப்பில் இருந் தால் ஏக்கருக்கு 250 கிலோ வரை விதைகள் கிடைக்கும்.

ஒருமுறை சாகுபடி செய்தால் அப்பயிரை நன்கு பராமரிப்பதன் மூலம் ஐந்தாண்டு காலம் வரை நல்ல மகசூல் பெறலாம். விதைகள் தந்தபின் அடுத்த ஆண்டுதான் அந்தக் கிழங்கு உயிர் பெறும். அதுவரை கண்வலிக் கொடி உறக்கத்தன்மையில் இருக்கும். தற்போது இதன் திசுக்கள் மூலமாக கிழங்குகளை உயிர் பெறச் செய்வது குறித்து ஆய்வு நடக்கிறது. அதில் வெற்றி பெற்றால், வருடத்துக்கு 2 மகசூல் எடுக்கமுடியும்’’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ராஜேந்திரன்.

இந்த மூலிகைக் கிழங்கின் விதையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ‘கொல்சிசின்’ (சிஷீறீநீலீவீநீவீஸீமீ) என்கிற வேதிப்பொருள், மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாகவும், கேன்சர் நோய்க்கு மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது.

கொடியில் பூ பூத்து அதிலிருந்து கிடைக்கிற விதைகள் ஒருபுறம்... மண்ணடி வேரில் இருக்கிற கிழங்கு உள்ளுக்குள்ளேயே வளர்ந்து இரண்டாவது ஆண்டில் இரண்டு தனி கன்றுகளை வெளித்தள்ளும். அந்த கன்றுகளைத் தனியே எடுத்து விற்கவும் செய்யலாம்... அல்லது நடவு செய்து கொடிகளைப் பெருக்கலாம். கிட்டத்தட்ட ஐந்தாவது வருட முடிவில் தாய்க் கிழங்கு தன் வாழ்நாளை முடித்துக் கொள்ளுமாம்.

ஒரு கிலோ விதை 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும். இதைப்போல் வருடம் ஒருமுறை வீதம் மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் வரை மகசூல் கிடைக்கும். முதல் வருடம் செலவுகள் போக சுமார் ரூபாய் நாற்பதாயிரமும் அடுத்தடுத்த வருடங்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேலும் லாபம் கிடைக்கும். இதில் 75% உள்ளூர் நிறுவனங்களே வாங்கிக் கொள்கின்றன. இதுதவிர ஏற்றுமதி வாய்ப்பும் இருக்கிறது!

லட்சாதிபதி ஆக்கும் லாபக் கொடி!

இது குறித்து அமீர்ஜகானிடம் கேட்டபோது, ‘‘தற்போது மருத்துவப் பொருட்களுக்கான தேவைகள் அதிகரித்து வருவதால் இந்த விதைகளை இத்தாலி, ஃபிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியும். வருடத்துக்கு 400 டன் அளவுக்கு ம் மேலாக இந்த விதைகளின் தேவை உலகம் முழுவதும் இருக்கிறது’’ என்றார்.

இந்தியாவிலேயே சன்மார்க் கெமிக்கல் என்ற நிறுவனம் இந்த கிழங்குகள் மூலம் கிடைக்கும் பொருட்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ‘டெக்கான் பைடோ கெமிக்கல்’ என்ற நிறுவனம் ஹைதராபாத்திலும் இண்டீனா எஸ்.பி.ஏ என்ற இத்தாலி நிறுவனம் பெங்களூரிலும் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை விரைவில் துவங்க இருக்கின்றன. எனவே இந்தக் கிழங்கின் மூலம் கிடைக்கும் பொருட்களுக்கான தேவைகள் அதிகரித்து வருவதால், நல்ல ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன’’ என்கிறார்.

சிவகாசி ராஜேந்திரனே இந்த விதைகளை வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்கிறார். ‘‘இந்தக் கிழங்கு சாகுபடி செய்ய ஆர்வமாக உள்ள விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்று தந்து, அதற்கான தொழில் நுட்ப உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளோம்’’ என்றார் ஆர்வம் பொங்க!

அதிக வெப்பநிலையிலும் நன்றாக வளரும் தன்மையுடையதால் தமிழ்நாட்டில் வளர்வதற்கு ஏற்ற மூலிகை இது. இதற்கான பயிற்சிகளை கோவை வேளாண் பல்கலைக்கழகமும் வழங்குகிறது. கண்வலிக் கிழங்கின் தேவை அதிகமாக இருப்பதால், எவ்வளவு உற்பத்தி செய்தாலும் லாபம்தான் என்கிற அளவில் இருக்கிறது.

பிறகென்ன... விவசாயிகளே! உடனே களத்தில் இறங்கி கண்வலிக் கொடியைப் பயிர் செய்யுங்கள். லட்சாதிபதியாகுங்கள்!

லட்சாதிபதி ஆக்கும் லாபக் கொடி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism