Published:Updated:

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

Published:Updated:
தொழில்
பிஸினஸ் குட்டிக்கதை!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிஸினஸ் குட்டிக்கதை

‘‘ந ம் கம்பெனி, போட்டிகளை தாண்டி நம்பர் 1 ஆகி விட்டது’’ என்று வீனஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சேர்மன் வினோத் அறிவிக்க, எல்லோரும் கைதட்டினார்கள்.

‘‘இனி செய்வதற்கு ஏதுமில்லை. இருக்கிற இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியதுதான்’’ என்று வினோத் சொன்னபோது, சட்டென்று எதிர்ப்புத் தெரிவித்தார் ரஞ்சன்.

‘‘அடுத்த நிலைக்கு நம் பயணம் தொடர வேண்டாமா..? இப்போது கம்ப்யூட்டருக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக் கிறதே... அந்தத் துறையில் இறங்கலாமே...’’ என்றார் ரஞ்சன்.

‘‘பிளாஸ்டிக் பொருள் தயாரிக்கும் நாம் எப்படி கம்ப்யூட்டர் தயாரிக்க முடியும்? அந்த டெக்னாலஜியே வேறு... சான்ஸே இல்லை’’ என்று வினோத் சொன்னதும் புரொடக்ஷன் டிபார்ட்மென்ட் தலைவர் மோகனுக்கு சுருக்கென்று கோபம் வந்துவிட்டது.

‘‘பக்கெட் தயாரிப்பில் இருந்து ஃபர்னிச்சர் தயாரிப்புக்கு மாறியபோது, நாங்கள்தானே தயாரித்தோம். அப்போது நம் ஊழியர்கள் சாதித்துக் காட்டவில்லையா... கம்ப்யூட்டரையும் அதேபோல எங்களால் தயாரிக்க முடியும். இதை நான் சவாலாகவே சொல்கிறேன்’’ என்றார் மோகன். மனிதவளத் துறைத் தலைவர் சங்கரும் அதை ஆமோதித்து, ‘‘அதற்கான ஆட்களைத் தேட வேண்டியது என் பொறுப்பு’’ என்றார்.

ஆனால், வினோத்துக்கு நம்பிக்கை வரவில்லை. ‘‘தயாரித்துவிட்டால் போதுமா... இன்றைக்கு தெருவுக்கு தெரு கம்ப்யூட்டர் கம்பெனிகள் வந்துவிட்டன. பெரிதாக விற்பனையை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது’’ என்றார்.

மார்க்கெட்டிங் தலைவர் கொந்தளிப்போடு, ‘‘மண்ணைக் கூட விற்றுக் காட்டக் கூடியவர்கள் நம் ஆட்கள். எதுவானா லும் விற்கவேண்டியது எங்கள் பொறுப்பு!’’ என்றார்.

‘‘எனக்கு நம்பிக்கையில்லை, ஆனாலும் எல்லோரும் சொல்வதற்காக ஒப்புக்கொள்கிறேன். கம்ப்யூட்டரில் இறங்கிப் பார்ப்போம்’’ என்றார் வினோத்.

வினோத்தும் ரஞ்சனும் அன்றிரவு சியர்ஸ் சொல்லிக் கொண்டார்கள். ‘‘நான் கம்ப்யூட்டர் பிராஜெக்டில் இறங்கலாம்னு சொல்லியிருந்தால் நான் சொன்ன நொண்டி சாக்குகளை அவங்க சொல்லி முட்டுக்கட்டை போட்டிருப்பாங்க. இப்போ, சவால்னு சொல்லி களத்தில் இறங்கியிருக்காங்க. தேங்க்யூ ரஞ்சன்ஜி... அபார யோசனை உங்களுடையது’’ என்றார் வினோத்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism