Published:Updated:

ஐடியா + செயல்திறன் வெற்றிக் கூட்டணி

ஐடியா + செயல்திறன் வெற்றிக் கூட்டணி

ஐடியா + செயல்திறன் வெற்றிக் கூட்டணி

ஐடியா + செயல்திறன் வெற்றிக் கூட்டணி

Published:Updated:
வேலை
ஐடியா + செயல்திறன் வெற்றிக் கூட்டணி
 

ஐடியா + செயல்திறன் வெற்றிக் கூட்டணி

‘‘இ ந்த வியாபார உலகத்தில் பணம் வைத்திருக்கிற
எல்லோரும் ஜெயிப்பதில்லை. பிரமாதமான ஐடியாக்களை,
திறம்படச் செயலாக்குபவர்கள் மட்டுமே ஜெயிக்கிறார்கள்.
இது முதலாளிகளுக்கு மட்டும்தான் என்றில்லை.
அனைத்துப் பிரிவினருக்கும் பொருந்தும்’’ என்கிற
‘கவின்கேர்’ நிறுவனத்தின் சி.எம்.டி-யான சி.கே.ரங்கநாதன்,
தன் அனுபவ டிப்ஸ்களைத் தருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐடியா + செயல்திறன் வெற்றிக் கூட்டணி

நி ர்வாகத்தைப் பொறுத்தவரை ஊழியர்களின் சின்சியாரிட்டி முக்கியம்தான். ஆனால், அதைவிட அவர்களிடம் இருந்து பூத்துக் கிளம்பும் ‘பளிச்’ ஐடியாக்களையே பெரிதும் விரும்பும்.

பு துமையான சிந்தனைகள் எப்போதுமே பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும். மக்களைக் கவரும் அதுபோன்ற ஐடியாக்கள் பிஸினஸில் இருக்கும் எல்லோருக்குமே மிக முக்கியம். ரொம்ப சாதாரண விஷயத்திலும் நம்முடைய சிறிய ஐடியாவைப் புகுத்தி மக்களைக் கவரமுடியும்.

பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஆசிட் பல குடும்பங்களிலும் இன்றும் பிரச்னை தான். சில மணிநேரங்கள் மொத்த குடும்பமும் முகமூடி போட்டுக்கொண்டு அவஸ்தைப் படுவார்கள். இதற்கு ஒரு மாற்றுத் தீர்வு இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று யோசித்து ‘ஆசிட்டின் வேலையைச் செய்யும். நெடி அடிக்காது!’ என்ற வாக்குறுதியோடு எங்கள் தயாரிப்பைக் கொண்டுவந்தபோது மக்கள் ஓடிவந்து அணைத்துக்கொண்டார்கள். ஒவ்வொரு தயாரிப்பாளருக்குள்ளும் இதுபோன்ற மாற்றுச் சிந்தனை இருந்தால் வெற்றி நிச்சயம்.

பூ ண்டு ஊறுகாய் போடலாம் என்று ஒரு பேச்சு வந்தபோது மொத்த அலுவலகமும் பதறி விட்டது. ‘கிலோ நாற்பது ரூபாய் விற்கிறது பூண்டு. ஐம்பது காசு பாக்கெட் போட்டால், அதில் எத்தனை பூண்டு வைக்கமுடியும்... என்ன லாபம் வரும்..?’ என்றெல்லாம் விவாதம் நடக்க... அதில் ஒரு மார்க்கெட்டிங் சம்பந்தப்படாத ஊழியர் சொன்ன ஐடியாதான், தக்காளி + பூண்டு என்ற புதிய கூட்டணி. கிலோ ஒன்றரை ரூபாய்க்கு விற்கிற தக்காளியோடு பூண்டையும் இணைத்தபோது, மக்களுக்குக் கட்டுப்படியாகிற விலையில், திருப்தியான அளவில் புதிய சுவை கொண்ட ஊறுகாயைக் கொண்டுவர முடிந்தது.

க்கள் நம்பிக்கையைப் பெறுவதற்காக எல்லா நிறுவனங்களுமே பல யோசனைகளை செயல்படுத்தும். எங்களுக்கும் ஹெர்பல் ஆயில் தயாரிப்பின்போது அப்படி ஒரு தேவை வந்தது. சின்ன வயதில் நம் வீட்டில் தேங்காய் எண்ணெயில் வெந்தயம், வெட்டி வேர், வாசனை திரவியங்களைப் போட்டு காய்ச்சி, தலைக்குப் பயன்படுத்துவதைக் கவனித்திருப்போம். ‘அப்படி ஒரு மூலிகை எண்ணெய் தயாரிப்பில் இறங்கப் போகிறோம். வெறுமே வாசம் வந்தால் போதாது. நாம் இயற்கைப் பொருட்களில்தான் தயாரித் திருக்கிறோம் என்பதை மக்களுக்கு அழுத்தமாகச் சொல்லும்படி புதுமையான யோசனைகள் இருந்தால் சொல்லுங்கள்’ என்று எங்கள் சீனியர் அதிகாரிகள் மீட்டிங்கில் சொல்லி இருந்தேன்.

இது பேக்கேஜிங் டிபார்ட்மென்ட்டில் இருந்த ஊழியருக்குத் தெரியவர... அவரே ஒரு ஆர்வத்தில் முயற்சி செய்து தன் யோசனையை ஒரு ஆயில் பாட்டிலில் செய்தும் கொண்டுவந்தார். மெல்லிய ஓட்டைகள் கொண்ட பிளாஸ்டிக் குழாய்க்குள் சகல மூலிகைகளும் இருக்க... பாட்டிலைத் திறந்து எண்ணெயை எடுத்தால், அந்த மூலிகைக் குழாய் மூலம்தான் எண்ணெய் வெளியே வரும். இயல்பான வாசத்துடன், நன்கு ஊற, ஊற மாதக்கடைசியில் பிரமாதமாக வாசம் வரும்.

ஒரு வியாபாரியின் கோணத்தில் எனக்கு இந்த ஐடியா ரொம்பப் பிடித்திருந்தது. மாத முடிவில் பழைய பாட்டிலில் அவர்கள் வீட்டு எண்ணெயைப் பயன்படுத்தாமல், ஒவ்வொரு மாதமும் புதிய பாட்டிலை வாங்க வைக்கும்படியான இந்தத் திட்டத்துக்கு உடனே ஓகே சொல்லிவிட்டேன். மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு. அரபு நாடுகளுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

மா ர்க்கெட்டிங்கில் இருப்பவர்கள், ஜெயிப்பதே ஐடியாக்களில்தானே! என்ன செய்தால் மக்களைக் கவரமுடியும் என்று சதா சர்வகாலமும் அதே மூச்சு, சிந்தனையுடனே இருந்தால் பளிச் ஐடியாக்கள் பல வரும். மார்க்கெட்டிங் ஐடியா என்பது ஆற்றின் போக்கில் நீந்துவதுபோல, மக்களின் தேவையோடு இயைந்து சிந்திப்பதிலும் அவர்களை இன்ப அதிர்ச்சி யில் ஆழ்த்துவதிலும்தான் இருக்கிறது. ‘நம் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட தயாரிப்பாளர்கள் இவர்கள்’ என்ற நம்பிக்கையை விதைக்கும்படியான யோசனை களுக்கு இப்போது நல்ல வரவேற்பு இருக்கிறது.

தி ட்டமிட்டு ஒவ்வொரு காயாக நகர்த்தும் ‘டு பி கன்டினியூட்...’ என்ற ஆவலைத் தூண்டும் விளம்பரங் களுக்கு இப்போது நல்ல வரவேற்பு இருப்பதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். விளம்பரங்கள் மட்டும் அல்ல... நம் பொருட்களின் பேக்கேஜிங்கும் நல்ல சேல்ஸ்மேன்தான். சூப்பர் மார்க்கெட்டில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நம் தயாரிப்பைக் கடந்து போகிற வாடிக்கையாளரை நிற்க வைக்கிற சாமர்த் தியம் பொருளின் வெளித்தோற்றத்தில் இருக்கவேண்டும். ‘ஆள் பாதி... ஆடை பாதி’ என்பதுபோல, ‘தரம் பாதி... தோற்றம் பாதி!’ என்பதும் உற்பத்தியில் வெற்றிக்கான தாரக மந்திரம்தான்.

பி ஸினஸ் என்றுதான் இல்லை. டாக்டர், வக்கீல் போன்றவர்கள் சுயதொழிலில் ஜெயிக்கவும் ஐடியாக்கள் உதவும். ‘நம் திறமை மூலம் தனித்து தெரிவது... தொழிலில் நேர்மையாக இருப்பது... எதிராளியைப் பேச விட்டுக் கேட்பதன் மூலம் வருகிற வாடிக்கையாளரை நமக்கான ‘மொபைல் பிரசாரகராக மாற்றுவது...’ என்று சில விஷயங்களை இடத்துக்கேற்ப செயல்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர முடியும்.

யிரம் திட்டங்கள் வைத்திருக்கலாம். ஆனால், அதற்கு ‘எக்ஸிகியூஷன்’ எனப்படும் செயல்திறன் மிக மிக முக்கியம்.

எதிரிப்படையின் அலுவலகத்தை பாம் போட்டு அழிக்கத் திட்டமிட்ட ஓர் அமைப்பு, இரவு முழுக்க கண்விழித்து தெளிவாகத் திட்டமிட்டுக் கொண்ட தாம். காலையில் அந்த டீம் களத்தில் இறங்கியது. மேப்பில் பார்த்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல், அங்கிருந்தவர்களிடம் விசாரித்து திணறியதாம். இப்படி ஒரு ஜோக் சொல்வார்கள். என்னதான் திட்டமிடல் இருந்தாலும் செயல்படுத்துவதில் வீக்காக இருந்தால் வீண்தான்!

ஐடியா எனப்படும் அடிப்படைக்கு வலு சேர்ப்பதே வேகமான செயல்திறன்தான். அது ஒரு கூட்டு முயற்சி. சயின்டிஸ்ட் புதிய ஃபார்முலா கண்டுபிடிப்பதிலிருந்து, மார்க்கெட்டிங் டீம் மக்களிடம் கொண்டுசேர்ப்பது வரை ஒவ்வொரு இடத்திலும் யோசனையைச் செயல்படுத்தும் ஆர்வம் வேரோடி இருக்கவேண்டும். ஆயிரம் படிகள் இருந்தாலும் அத்தனையிலும் இந்த எண்ணம் ரிலே மாதிரி தொடர்ந்து சீராக நடக்க வேண்டும். சொன்னதைச் சொன்ன நேரத்திற்குள் செய்யும் ஆற்றல் திட்டமிடுதலிலும் அதைச் செயலாக்குவதிலும் திறமைகொண்ட சிலரால் மட்டுமே முடியும். நீங்கள் அந்த வகையினராக இருங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism