Published:Updated:

‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!

‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!

‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!

‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!

Published:Updated:
நடப்பு
‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!
 

 

நாமக்கல்
பொன்முட்டை போடும் ஊர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!

‘‘ந டுத்தெருவுல நின்னாலும் நாமக்கல்லில் நின்னா பொழைச்சுக்கலாம்...’’ என்று கொங்கு மண்டலத்தில் ஒரு பழமொழி உண்டு. கோழி, முட்டை, லாரி, என பல தொழில் வாய்ப்புகளின் முன்னோடி நகரமாக விளங்கிக் கொண்டிருக்கிறது நாமக்கல். அங்குதான் இந்த இதழ் ‘ஊர்’வலம்...

எப்படிச் சுத்தினாலும் ஒரு மணிநேரத்தில் மொத்த நகரத்தையும் தெருத் தெருவாகச் சுற்றி வந்துவிடலாம்... அவ்வளவு சிறிய நகரம் நாமக்கல்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குப்பையில்லா நகராட்சி என்ற சிறப்பு விருதை மத்திய அரசிடமிருந்து வாங்கிய நாமக்கல் இப்போதும் கிளீனாக பளிச்சென இருக்கிறது. ஆனால், சாலை கட்டமைப்பு வசதிதான் படுமோசம். மிகக் குறுகலான சாலைகள், போதிய கழிவுநீர் வசதிகளில்லாமை என்று பிதுங்கி வழிகிறது. அதே போல நாமக்கல் பஸ்நிலையம் மிகச்சிறியது.

‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!

நாமக்கல்லில் உள்ள முக்கிய ஹோட்டல்களில் ஒன்றான ஹோட்டல் நளாவின் மேனேஜிங் டைரக்டர் சுரேஷ்குமாரைச் சந்தித்தோம். ‘‘நாமக்கல்லோட பேரு இந்தியா முழுக்க தெரியுதுன்னா அதுக்குக் காரணம் லாரி, கோழி, ஆஞ்சநேயர் கோயில் ஆகிய மூன்றும்தான். ஆனாலும் ரயில் வசதி என்பது நாமக்கல்லுக்குக் கிடையாது. இதனாலேயே வெளியூரில் இருந்து நாமக்கல்லில் வந்து தங்கும் ஆட்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைஞ்சுக் கிட்டே போகுது. நாமக்கல்லுக்கு ரயில் பாதை அமைக்க ஆரம்பிச்ச பணிகள் ஐந்து வருஷமா அப்படியே கிடக்கு’’ என்றவர், ‘‘எங்க ஹோட்டலுக்கு வருபவர்களில் வருஷத்துல 25% பேரு நாமக்கல்லைச் சுற்றிப் பார்க்க வரும் ஃபாரீனர்ஸ் தங்குறாங்க. நாமக்கல்லைச் சுற்றி கல்வி நிறுவனங்கள் ஏராளமாக இருப்பதால் 25% பேர் மாணவர்களைப் பார்க்க வரும் பெற்றோர்கள் தங்கு கிறார்கள். 10% பேர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குகிறார்கள். மீதி 40% பேர் கோழி, லாரி தொழில் சம்பந்தமாக வரும் பிஸினஸ் ஆட்கள்தான். சுற்றுலாதுறை நாமக்கல் மீது இன்னும் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்’’ என்று கோரிக்கை வைத்தார்.

‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!

லாரி பிஸினஸில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் ‘கணேஷ் டிரான்ஸ்போர்ட்ஸ்’ நிர்வாக இயக்குநர் நடராஜனைச் சந்தித்து பேசினோம்.

‘‘ஆரம்பத்தில் ஐந்து பேர்தான் லாரித் தொழிலில் இருந்தார்கள். இன்னிக்கு, லாரிகள் வாங்க லோன் பர்மிட் எல்லாம் எளிதாகக் கிடைக்கிறது. அதனால் டிரைவராக ஓடிக்கிட்டிருந்த ஆள்கூட முதலாளி ஆகிவிடுகிறார்கள். இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால் மாசம் சுமார் முப்பதாயிரம் சம்பாதிச்சுக்கிட்டு இருந்த லாரி ஓனரால் இன்னிக்கு 6,000 ரூபாய் சம்பாதிக்கிறதே பெரிய விஷயமா இருக்கு. இதுக்குக் காரணம் லாரி பெருகிட்டதுதான்.

லாரிகள் போட்டியால அடிமாட்டு வாடகைக்கு வண்டிகள் ஓடும் நிலைமை உருவாகிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் நஷ்டம் வராம இருந்தாவே பெரிய விஷயம்தான்’’ என்று சிரித்தார். இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய ஐடியாவையும் சொன்னார்.

‘‘புரோக்கரை நம்பி லாரி ஓனர் தொழில் செய்யக் கூடாது. நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்பு வெச்சுக்கிட்டு அக்ரிமென்ட் போட்டுக்கலாம். இல்லாட்டி போட்டி உலகத்துல ரொம்ப கஷ்டம்ங்க!’’ எனச் சொல்லி முடித்தார்.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் செங்கோடனைப் பார்த்தோம். ‘‘போட்டிகளால லாரித் தொழில் ரொம்பவே நசுங்கிப்போச்சு. நாமக்கல்லில் இருந்து சுமாராக 15,000 லாரிகள் இந்தியா முழுக்கப் போகுது. ஆனால், லாரி தொழிலாளர்களுக்கு எந்த வசதியும் அரசு செய்து தரவில்லை.

‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!

லோன் மட்டும் நிறையக் கிடைக்குது. அதுதான் பிரச்னைக்கு வழிவகுக்குது. அந்த லோனை வாங்கி லாரியை வாங்குவார். ஈஸியா பர்மிட் கிடைச்சிடும். அப்புறம்தான் சிக்கல் ஆரம்பமாகும். குறைஞ்ச வாடகை கட்டுப்படியாகாம தடுமாறி தத்தளிப்பார். என்னைப் பொறுத்தமட்டும் புது பர்மிட் கொடுக்கிறதை கொஞ்சகாலம் நிறுத்தி வெச்சாத்தான் லாரித்தொழில் முன்னேறும்!’’ என்றவர், லாரித் தொழிலில் இருக்கும் லாபங்களைப் பற்றியும் சொன்னார்.

‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!

‘‘டிங்கர், பெயின்டர், மெக்கானிக்கல், டிரைவர், க்ளீனர்னு நாமக்கல்ல மட்டும் லாரியால மூணு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்குது.’’

லாரி பாடிகட்டும் தொழிலில் இந்தியாவிலேயே நாமக்கல்தான் நம்பர் ஒன். நாமக்கல் நகரில் மட்டும் 252 லாரி பாடிகட்டும் தொழிற்கூடங்கள் இருக்கின்றன. சரியாக ஐம்பது வருடங்களுக்கு முன்பு குடிசைத் தொழிலாக ஆரம்பிக்கப்பட்ட பாடிகட்டும் தொழிற்கூடம் இன்று இந்தியாவையே நாமக்கல் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. லாரி பாடிகட்டும் தொழிலில் பல வருடம் அனுபவம் மிக்க ஸ்ரீமீனாட்சி லாரி பாடி பில்டர்ஸ் உரிமையாளர் எஸ்.எம்.துரைசாமியிடம் பேசினோம்.

‘‘இதுல இரும்பு சம்பந்தப்பட்ட வேலைகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஆசாரிகள் செய்யும் மரவேலை, எலெக்ட்ரீஷியனை வைத்து ஒயரிங் வேலை, கிளாஸ் ஒர்க், பெயின்டிங் ஒர்க் என அதனைச் சார்ந்த வேலைகள் என ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதனால நாமக்கல்லுக்கு திறமையுள்ள யாரு வந்தாலும் தாராளமா முன்னேறலாம்.

இந்தியா முழுக்க இருந்து லாரிகள் பாடிகட்டுவதற்கு நாமக்கல்லுக்குதான் அதிகம் வருது. லாரியோட முகப்பு மட்டும் ஸ்டேட்டுக்கு ஸ்டேட் வெவ்வேற டேஸ்ட்ல இருக்கும். அவங்க கேட்கிற மாதிரி நாங்க வடிவமைச்சுக் கொடுக்கிறோம். இந்தியாவுல எந்த ஊருக்குப் போய் பழைய லாரி வாங்கினாலும் நாமக்கல் பாடியாக இருந்தால் மட்டுமே வாங்குறாங்க. அந்த அளவுக்கு ரீசேல் வேல்யூ மிக்கது நாமக்கல் பாடிகள். உதாரணத்துக்கு, ஒரு லாரிக்கு பாடிகட்ட ஒரு லட்சம் ஆகுதுனு வெச்சுக்குங்க. பத்து வருஷம் ஓட்டிட்டு மறுபடியும் அந்த வண்டிக்கு புது பாடி கட்ட வந்தால் பெரிய அளவில் செலவு இருக்காது.

ஆரம்ப காலத்துல ஒரு லாரிக்கு பாடிகட்ட ஐம்பது நாட்கள் வரைக்கும் ஆகும். ஆனா இன்னைக்கு இருக்கிற வசதி வாய்ப்புகளால் பத்தே நாட்களில் வேலையை முடிச்சுக் கொடுக்கறோம். அந்த கால அளவை இன்னும் கூட குறைக்க முயற்சிகள் எடுத்துக்கிட்டிருக்கோம். ஒரு கம்பெனியில ஒரு ஆள் நாலு வருஷம் வேலை பார்த்தான்னா அஞ்சாவது வருசம் அவன் தனியா ஒரு கடையை ஆரம்பிச்சுடுறான். இது ஆரோக்கியமான விஷயம்தான். அதே நேரத்துல் அரைகுறையா வேலையை கத்துட்டு போய் பாடிகட்ட ஆரம்பிச்சு நாமக்கல் நகரத்திற்கு இந்தியா அளவில் இருக்கும் பெயரைக் கெடுத்துவிடாமல் இருக்கவேண்டியது முக்கியம்’’ என்கிறார் துரைசாமி.

பறவைக் காய்ச்சல் பீதியால் இப்போது நாமக்கல்லில் கோழி பிஸினஸ் கொஞ்சம் களையிழந்து போயிருந்தாலும் இன்னமும் கோழி என்றால் அது நாமக்கல்தான். தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தலைவர் நல்லதம்பியைச் சந்தித்தோம்.

‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!

‘‘நாமக்கல்லில் இருந்துதான் பல நாடுகளுக்கும் முட்டையும் கோழியும் ஏற்றுமதியாகுது. நாமக்கல்லில் மட்டும் பல ஆயிரம் கோழிப் பண்ணைகள் இருக்கு. ஒவ்வொரு பண்ணைக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்படும். இது தவிர கோழிகளுக்குப் போடப்படும் தடுப்பூசிகள், அவற்றுக்குத் தேவையான மருந்துகளைத் தயாரிக்கும் கம்பெனிகளின் நேரடி விற்பனை மையங்கள் நாமக்கல்லில் நிறைய இருக்கு. அதுக்கு விற்பனை பிரதிநிதிகளுக்கான தேவை இருந்துக்கிட்டே இருக்கு. எப்படிப் பார்த்தாலும் நாமக்கல்லில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 50% பேர் கோழியால் பயனடைபவர் களாகத்தான் இருப்பார்கள்.

வெளியூர்களில் இருந்து இங்கே பிழைப்பு தேடி வருபவர்களுக்கும் வேலைகள் நிறைய இருக்கு. கோழி பண்ணைன்னா அதுக்கு மேனேஜர், சூப்பர்வைஸர் என எல்லா வேலைகளும் இருந்துக்கிட்டே இருக்கும். நாமக்கல்லுக்கு வந்து ஒருத்தரு இப்போ புதுசா கோழிப்பண்ணை ஆரம்பிச்சாலும் கண்டிப்பா ஜெயிக்கமுடியும். முட்டை கோழி தனியாகவும், கறி கோழி தனியாகவும் வைக்கலாம். கோழி எருவை தனியா வித்துடலாம். மொத்தத்துல கோழியை நம்பி வந்த யாரும் கெட்டுப் போயிடமாட்டாங்க’’ என உறுதி கொடுத்தார்.

கோழிகளுக்கு உணவாகப் போடப்படும் தீவனங்களை விற்கும் கடைகளும் நாமக்கல்லில் ஏராளம். கோழித்தீவன மூலப்பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் கந்தசாமி, ‘‘மக்காச்சோளம், கம்பு, சோளம், தவிடு, சோயா, கடலைப் புண்ணாக்கு, சூரியகாந்தி புண்ணாக்கு, கருவாடு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு அரைத்து கோழித்தீவனம் தயார் பண்றோம். இது உண்மையிலேயே லாபகரமான பிஸினஸ்தான். பறவைக் காய்ச்சல் பீதியால் இப்போ கொஞ்சம் டல்லடிக்குது. படிச்ச இளைஞர்கள் நிறையப் பேரு எங்ககிட்ட வேலை பார்க்கிறாங்க. கோழித்தீவன கடைகளில் நாங்க வேலைக்கு எடுக்கும் இளைஞர்கள் பல்வேறு கோழிப்பண்ணைகளுக்கும் போய் ஆர்டர் எடுத்து வருவார்கள். அந்தப் பண்ணைக்கு தீவனங்களை டெலிவரி செய்வார்கள். பண்ணைகள் அதிகமாக அதிகமாக வேலைக்கான ஆட்களையும் புதுசாக எடுத்துக்கிட்டே இருக்கோம்’’ என்று சொல்கிறார்.

இங்கே அடிச்சா அங்கே வலிக்கும் என்பார்களே அது போல நாமக்கல்லில் நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அது ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கும். அப்படிப்பட்ட இந்த நகரில் எழுந்து நிற்கும் பிரச்னைகளை மட்டும் களைந்துவிட்டால் நாமக்கல் எல்லாவற்றிலும் நம்பர் ஒன் ஆகிவிடும்.

‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!
‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!
‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!
‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!
‘ஊர்’வலம் - நாமக்கல் பொன்முட்டை போடும் ஊர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism