Published:Updated:

இந்திய சொத்தில் அந்நிய பங்காளி..?

இந்திய சொத்தில் அந்நிய பங்காளி..?

இந்திய சொத்தில் அந்நிய பங்காளி..?

இந்திய சொத்தில் அந்நிய பங்காளி..?

Published:Updated:
நடப்பு
இந்திய சொத்தில் அந்நிய பங்காளி..?
 

இந்திய சொத்தில் அந்நிய பங்காளி..?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய சொத்தில் அந்நிய பங்காளி..?

‘உ லக நாடுகள் பலவும் கடைபிடிக்கிற கட்டுப்பாடு இல்லாத நாணய பரிமாற்ற (கரன்ஸி எக்ஸ்சேஞ்ச்) முறைக்கு மாறுவது பற்றி நாம் பரிசீலிக்கும் நேரம் வந்துவிட்டது. அதற்கான ஏற்பாடுகளில் இறங்க வேண்டும்’ என்று அண்மையில் பேசி இருந்தார் பிரதமர் மன்மோகன்சிங். மேலோட்டமாகப் பார்த்தால், அந்நியர்கள் அதிக பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வரும் வாய்ப்பு போலத் தோன்றினாலும், அதில் உள்ள சில பாதகங்களைப் பலரும் எடுத்து வைக்க... பிரதமரின் பேச்சு அனலைக் கிளப்பிவிட்டது. ‘உடனடியாக அதற்கான சாத்தியமில்லை. குறைந்தபட்சம் 2009\ம் ஆண்டில்தான் முழுமையான கட்டுப்பாடுகளை விலக்குவது பற்றி யோசிக்க முடியும்’ என்று ஒரு பேட்டியில் சொல்லி, சூட்டைக் குறைத்திருக்கிறார் நிதியமைச்சர் ப.சிதம்பரம்!

நாம் ஒருநாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்குச் செல்லும்போது, இவ்வளவு அந்நிய செலாவணிதான் எடுத்துச் செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு ஒருசில நாடுகளில் இருக்கிறது. பல நாடுகள் இந்தக் கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ளவில்லை. இந்த நாணய பரிமாற்றக் கட்டுப்பாடு, உலக வர்த்தகத்தில் ஒரு நாட்டின் பங்களிப்பு, அவர்களது அந்நியச் செலாவணி கையிருப்பு போன்ற பல விஷயங்களைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

‘கட்டுப்பாடுகளை விலக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்’ என்று மன்மோகன் சிங் சொன்னதை அடுத்து, ரிசர்வ் வங்கி அமைத்த ஒரு குழு, ‘முழு நாணய பரிமாற்றப் பாதைக்கு இந்தியா எப்படிச் செல்லவேண்டும்?’ என்ற வழிகளை உருவாக்கும் பணிகளைத் தொடங்க உள்ளது. அடுத்த 3 மாதங்களில் அறிக்கை கிடைக்கக்கூடும்.

இந்த விஷயத்தில் ஏற்கெனவே ஒருமுறை தாராப்பூர் கமிட்டியால் தரப்பட்ட பரிந்துரைகள் சிலபல காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இப்போது, உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி சுமார் 8 சதவிகிதத்தைத் தொட்டிருக்கும் நிலை, 13 மாத இறக்குமதியை சமாளிக்க அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது போன்ற திருப்தி தரும் விஷயங்களால் மீண்டும் இந்த விவகாரம் கிளம்பியுள்ளது.

இந்த முழு நாணயப் பரிமாற்ற முறையைக் கொண்டுவரக் கூடாது என்று பல பொருளாதார நிபுணர்களும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய சொத்தில் அந்நிய பங்காளி..?

அந்நியச் செலாவணியில் நிபுணத்துவம் பெற்ற சென்னையைச் சேர்ந்த நாகேஸ்வரனிடம் இந்த விஷயம் பற்றிப் பேசினோம். இவர், விகேசி கிரெடிட் அண்ட் ஃபாரக்ஸ் சர்வீஸஸின் இயக்குநரும்கூட. ‘‘முழு அளவு நாணயப் பரிமாற்ற முறை அமலுக்கு வந்தால் பணத்தைக் கொண்டு வருவதற்கும் கொண்டு செல்வதற்கும் உள்ள கட்டுப்பாடு தளர்ந்து விடும். எவ்வளவு பணம் உள்ளே வருகிறது... எவ்வளவு பணம் வெளியே போகிறது என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாத நிலை உருவாகும். பல நாட்டவர்களும் இங்கே சொத்துக்களை வாங்க முடியும்.

இன்றுள்ள இந்திய பொருளாதாரத்தின் வலுவான நிலை, பலரை இந்தியாவின் பக்கம் இழுக்கும் என்பதால் நம் நாட்டில் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயரலாம். இந்திய பங்குச் சந்தையில் நாம் பார்க்கும் அதேநிலை மற்ற துறைகளுக்கும் வரலாம். இப்படி மதிப்பு உயர்வது லாபம் என்று சொல்கிறார்கள். ஆனால், வெளிநாட்டினர் வந்து குவிவதால் இங்குள்ள பலருக்கு சொத்து வாங்குவது பற்றி கனவுகூட காண முடியாத நிலை ஏற்படும்.

பல இடங்களில் புதுப்புது திட்டங்களில் முதலீடுகள் பாய்ந்து, அதை சார்ந்து மற்ற அடிப்படை கட்டமைப்பும் வளர்ச்சி பெரும். இன்ஷூரன்ஸ் போன்ற துறைகளிலும் நிறைய மாற்றங்கள் வரும். போட்டி அடிப்படையில் பிரீமியங்களும் குறைந்து விடும். இப்படி பல விஷயங்களில் முன்னேற்றமான மாற்றங்கள் வருமே என்கிறார்கள். வரும்தான்... ஆனால், இதற்கான விலை என்ன என்பதுதான் முக்கியம்!

இந்தியாவுக்குள் மற்றவர்கள் பணம் வருவது போலவே, இங்கிருந்தும் கட்டுப் பாடு இன்றி பணம் வெளியேறும் வாய்ப்புகள் இருக்கின்றன. கவர்ச்சிகரமான திட்டங்கள் கிடைத்தால், இந்திய முதலீடும் நாட்டை விட்டு வெளியேறலாம். இன்னும் சொல்லப்போனால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நடந்ததுபோல, ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா பணமும் நம் நாட்டை விட்டு ஒரே நேரத்தில் வெளியேறவும் வாய்ப்புகள் இருக்கின்றன. பணப்புழக்கத் தில் கட்டுப்பாடு இல்லாத ஏற்ற இறக்கங் கள் ஏற்பட வாய்ப்புண்டு. இது பணவீக்க விகிதத்தில் பிரதிபலிக்கும். அந்நிலையில் மறைமுகமாக வங்கிகளின் வட்டி விகிதங் களும் அல்லாடும். இதனால், ஒருகட்டத் தில் நாட்டின் பொருளாதாரமே ஸ்திரத் தன்மையை இழக்ககூடும்.

இந்திய சொத்தில் அந்நிய பங்காளி..?

அதை சமாளிக்கப் போதுமான வலு நம் வங்கிகளிடம் இல்லை. ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ போன்ற மிகப் பெரிய வங்கிகள்கூட இந்த அதிர்வுகளை தாங்கக்கூடிய மூலதன வலுவோடு இல்லை. அதோடு, நம் வங்கி அதிகாரிகளும் இவ்விஷயத்தை திறமையாகக் கையாண்டு விடுவார்கள் என்றும் சொல்வதற்கில்லை. அதனால் படிப்படியாகத்தான் இந்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள்.

முந்தைய தாராப்பூர் கமிட்டி பரிந்துரைத்ததிலேயே இன்னும் பூர்த்தியாகாத நிபந்தனைகள் பல உள்ளன. அப்படி இருக்கும்போது, அரசு இதில் அவசரம் காட்டக்கூடாது’’ என்றார்.

பொருளாதாரக் கட்டுரைகள் எழுதி வரும் சுந்தரம் இதுபற்றிப் பேசும்போது, ‘‘இந்த கட்டுப்பாடு இல்லாத நாணயப் பரிமாற்றத்தில் இப்போது அமெரிக்க டாலர்தான் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயத்தில் ஓரளவாவது பொருளாதார பலத்தோடு இருந்த அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் கிடைத்து பல நாடுகளிடையே பணப் பரிவர்த்தனைக்கு டாலரைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதேசமயத்தில் அமெரிக்காவில், ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு 35 டாலர் என்ற அளவில்தான் கரன்ஸியை புழக்கத்தில் விட வேண்டும் என்று ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. தங்க கையிருப்பு குறைந்தால் அதை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னதோடு, அதைக் கண்காணிக்க பலநாட்டு முதன்மை வங்கிகளின் கூட்டமைப்பு நியமிக்கப்பட்டது.

இந்திய சொத்தில் அந்நிய பங்காளி..?

1971ல் அமெரிக்க பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளானபோது, கூடுதல் கரன்ஸியை அச்சடிக்க தங்கம் வாங்கிச் சேர்க்கத் தேவையில்லை என்று அமெரிக்காவே அறிவித்து, அதை நடைமுறைப்படுத்தவும் ஆரம்பித்து விட்டது. அப்போது உலகின் பல நாடுகள் அரசியல், பொருளாதார ரீதியாகவும் பலவீனமாக இருந்ததால் இதை எதிர்க்க முடியவில்லை. இதுவே வழக்கமாகி போய்விட்டது’’ என்றார்.

அப்படியே மற்ற நாடுகளின் நாணயப் பறிமாற்றத்தையும் அமெரிக்க டாலரோடு ஒப்பிடும் பழக்கம் வந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. என் கணிப்பில் இந்தியாவில் நாணய பரிமாற்ற கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்கு சமீபத்தில் சாத்தியம் ஏதும் தட்டுப்படவில்லை’’ என்றார் அழுத்தமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism