Published:Updated:

சுற்றிப் பார்க்காதீர்கள்... கற்றுக் கொள்ளுங்கள்!

சுற்றிப் பார்க்காதீர்கள்... கற்றுக் கொள்ளுங்கள்!

சுற்றிப் பார்க்காதீர்கள்... கற்றுக் கொள்ளுங்கள்!

சுற்றிப் பார்க்காதீர்கள்... கற்றுக் கொள்ளுங்கள்!

Published:Updated:
நடப்பு
சுற்றிப் பார்க்காதீர்கள்... கற்றுக் கொள்ளுங்கள்!
 

சுற்றிப் பார்க்காதீர்கள்... கற்றுக் கொள்ளுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுற்றிப் பார்க்காதீர்கள்... கற்றுக் கொள்ளுங்கள்!
சுற்றிப் பார்க்காதீர்கள்... கற்றுக் கொள்ளுங்கள்!

ரு கண்காட்சிக்குப் போனால் பாப்கார்ன் சாப்பிட்டு சுற்றி வருபவர் களும் இருக்கிறார்கள். அதில் இருந்து பாடங்கள் கற்றுக்கொண்டு தொழிலைத் தொடங்குபவர்களும் இருக்கிறார்கள். சிங்கப்பூர்வாசியான ரிச்சர்ட் ஹோ இரண்டாவது வகை!

சென்னை டிரேட் சென்டரில் நடந்த எக்ஸ்போ 2006 கண்காட்சியில் அவருடைய கடையைச் சுற்றித்தான் ஏகக் கூட்டம்.

‘‘போனமுறை இதேபோன்ற எக்ஸ்போவைப் பார்க்க வந்திருந்தேன். ‘மக்கள் எந்த ஏரியாவில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்’ என்று பார்த்தேன். தெய்வ உருவங்களையும் கலை வடிவங்களையும் அதிகமானோர் ஆர்வமாக வாங்கினார்கள். ஊருக்குச் சென்றவுடன், அது தொடர்பான தேடலில் இறங்கி, கலைப்பொருட் களைத் தயார் செய்துகொண்டு இந்த வருடம் கடைபோட வந்துவிட்டேன்’’ என்றார் நம்பிக்கை மனிதர் ஹோ.

விதவிதமான மாடல்களில் பிள்ளையார் உருவத்தையும், இந்து தெய்வங்களையும் கலை நுணுக்கங் களுடன் வடிவமைத்து கொண்டு வந்திருக்கிறார். ‘‘நான் எதிர்பார்த்தைவிட அமோக வரவேற்பு இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் சென்னையே எனது முக்கிய வியாபார ஸ்தலமாக மாறிவிடும்’’ என்றும் சொல்கிறார்.

சுற்றிப் பார்க்காதீர்கள்... கற்றுக் கொள்ளுங்கள்!

இந்தக் கலைப் பொருட்களுக்கான டிமாண்டைப் போலவே செயற்கை மலர்களுக்கும் ஏக டிமாண்ட் இருக்கிறது. குறிப்பாக, தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த வகை மலர்கள் நன்கு விற்பனையாகி கொண்டிருக்கின்றன. அதேபோல, வீட்டு உபயோகப் பொருட்களான மின்சார ஸ்டவ்கள், பாத்ரூம் ஃபிட்டிங்குகள் போன்றவையும் பரபரப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றன.

சென்னை நந்தம்பாக்கத்தில் இந்த மாதம் 16\ம்தேதி வரை நடக்கிறது எக்ஸ்போ! இதுபோன்ற வர்த்தக கண்காட்சிகளுக்கு விசிட் அடியுங்கள், ரிச்சர்ட் ஹோவுக்குக் கிடைத்தது போல ஓர் உந்துதல் உங்களுக்கும் கிடைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism