Published:Updated:

சம்மரில் சம்பாதியுங்கள்!

சம்மரில் சம்பாதியுங்கள்!

சம்மரில் சம்பாதியுங்கள்!

சம்மரில் சம்பாதியுங்கள்!

Published:Updated:
நடப்பு
சம்மரில் சம்பாதியுங்கள்!
 

 

சம்மரில் சம்பாதியுங்கள்!

ள்ளி,கல்லூரிகளில் லீவு ஆரம்பித்துவிட்டாலே பிள்ளைகளை ஏதாவது கோர்ஸில் சேர்த்து விடுவது வழக்கம்தான். இந்த ஆண்டும் பல பெற்றோர் அப்படி ஒரு யோசனையில் இருப்பார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் கூடுதல் வருமானம் பார்க்கவும். கோடையில் பணமழையில் நனையவும் சில வாய்ப்புகளை இங்கே தருகிறோம்.

டிரைவிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்மரில் சம்பாதியுங்கள்!

ல்லூரி மாணவ மாணவிகள் விடுமுறை நேரத்தில் குவிவது டிரைவிங் ஸ்கூல்களில்தான். கிடைக்கிற ஒரு மாத, இரண்டு மாத விடுமுறையில் முழுமையாகப் படித்து முடித்து, லைசென்ஸையும் வாங்கிவிடலாம் என்பதால் பலரும் டிரைவிங் கற்றுக்கொள்ள வருகிறார்கள். டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர்கள் சலுகைக் கட்டணத்தில் சம்மர் கோர்ஸாக நடத்தலாம்.

‘‘பயிற்சி நேரம் என்பது பொதுவாக காலையிலும் மாலையிலும்தான் இருக்கும். மற்ற நேரங்களில் இதுபோல மாணவர்களுக்குக் கற்றுத்தரலாம். மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்க பெண் பயிற்சி யாளர்களை நியமித்தால் பலரும் கற்றுக்கொள்ள வருவார்கள்’’ என்றார் சென்னையில் விஜயா டிரைவிங் ஸ்கூலை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன்.

வழக்கமாக வாங்கும் கட்டணத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு சலுகைக் கட்டணத்தை அறிவித் தால் சம்மர் நேரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்.

பொதுவாக டிரைவிங் கற்றுத்தர ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய்வரை கட்டணம் வாங்குகிறார்கள். இதைக் கொஞ்சம் குறைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தால் ஒரு ஆண்டில் சம்பாதிப்பதில் பாதியை ஒரு சம்மரிலேயே சம்பாதித்துவிடலாம். லைசென்ஸ் எடுத்துத்தருவது போன்ற சேவைகளைச் செய்வது நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தித் தரும்.

கிரியேட்டிவ் ஆக்டிவிட்டீஸ்

ப்போது ஓவியம், கட்டுரைகள் எழுதுவது போன்ற கலைகளில் ஆர்வம் காட்டுவது அதிகமாகிவிட்டது. மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கும்விதமான இந்த கிரியேட்டிவ் விஷயங்களைக் கற்றுத் தருவதை இந்த சம்மரில் பணம் பார்க்கும் தொழிலாகச் செய்யலாம்.

இதற்கென தனியாக முதலீடோ, இடவசதியோ தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே டியூஷன் சொல்லிக் கொடுப்பது போலத்தான் இதுவும். பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு எழுதுவதற்கு, படம் வரைவதற்குத் தேவையான பென்சில், பேப்பர் போன்ற பொருட்களை வழங்கி சின்னச் சின்னதாகத் தேர்வுகள் நடத்தி மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கலாம். ஒரு குழந்தைக்கு இருநூறுரூபாய் கட்டணம் வசூலித்தால்கூட, பத்து குழந்தைகள்-ஐந்து பேட்ச்கள் என்று மாதத்துக்கு பத்தாயிரம் ரூபாய் சுலபமாகச் சம்பாதித்து விட முடியும். உங்களுக்குக் கொஞ்சம் கற்பனைத்திறன் இருந்தால் முயற்சி செய்யலாமே!

மாணவர்களுக்கு ஒரு மாத கால கிரியேட்டிவ் ஆக்டிவிட்டீஸ் கோர்ஸை நடத்துகிறது பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் ஸ்கூல். ‘‘தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடக்கும் வகுப்புகளில் இசை, நடனம், யோகா, கைவினைப் பொருள்கள் செய்தல், மரத்தில் உருவங்கள் செதுக்குதல், கண்ணாடியில் ஓவியம் வரைதல் போன்ற கலைகளைக் கற்றுத்தருகிறோம். இதற்காக 3,000 ரூபாய் கட்டணம் வாங்கினாலும், திறமையான மாஸ்டர்களை வைத்து கற்றுத் தருவதால் மாணவர்கள் எளிதாகவும் சிறப்பாகவும் கற்றுக்கொள்ள முடியும்’’ என்கிறார்கள் இந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

இதே போல் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டருடன் இணைந்து ஸீல்(ஞீமீணீறீ) அமைப்பு 13-17 வயது மாணவர் களுக்குத் தகவல் தொடர்பு, மேடையில் பேசுதல், நினைவாற்றலை மேம்படுத்தல், பிரச்னைக்குத் தீர்வு காணுதல், முடிவு எடுத்தல், கற்பனை திறன் வளர்த்தல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கிறது. இதற்குக் கட்டணம் 3,500 ரூபாய்!

நடனப் பயிற்சி

டனம் என்றால் பரதநாட்டியம் போன்ற கிளாசிகல் மட்டும்தான் என்று இல்லை, இப்போது பலவிதமான நடனப் பள்ளிகள் வந்துவிட்டன.

உடலுக்கு நல்ல பயிற்சியாக இருப்பதோடு குழந்தைகளுக்கு மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும் இது வளர்ப்பதால் நடனப் பயிற்சிக்கு அனுப்ப பெற்றோர் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

சம்மரில் சம்பாதியுங்கள்!

முழுநேர நடனக் கலைஞர்களாக இருப்பவர்கள் இந்த சம்மருக்கு மட்டும் மாஸ்டர்களாக மாறி பயிற்சி அளித்து சம்பாதிக்கலாம். குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப பரதம், குச்சிப்புடி, கிளாசிகல், வெஸ்டர்ன் போன்றவற்றை கற்றுத் தந்து லாபம் பார்க்கலாம்.

இதுபோன்ற இரண்டு மாதப் பயிற்சியை சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா, சென்னை அண்ணாநகரில் அளித்து வருகிறார். ஒரு மாதக் கட்டணம் 400 ரூபாய்.

இன்டர்நெட் சென்டர்

சம்மரில் சம்பாதியுங்கள்!

ன்டர்நெட் ப்ரவுசிங் சென்டரோ அல்லது கம்ப்யூட்டர் பயிற்சி நிலையங்களோ நடத்தி வருபவர்கள் இந்தக் கோடைக்காலத்தில் மட்டும் மாணவர்களுக்கு சின்னச் சின்னதாக கோர்ஸ்கள் நடத்தலாம். அதோடு குழந்தைகளின் பொது அறிவை வளர்க்கும் விதமாக இன்டர்நெட் பற்றிய அறிமுக வகுப்புகளை நடத்தலாம்.

மாதத்துக்கு 250 ரூபாய் என்ற அளவில் ஒரு கம்ப்யூட்டருக்கு இரண்டு பேர் என்ற அளவில் மாணவர்களைச் சேர்த்து வகுப்புகளை நடத்தினால் நல்ல லாபம் பார்க்கலாம். பொதுவாக மதிய நேரத்தில் இன்டர்நெட் மையங்கள் ஃப்ரீயாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து சம்பாதிக்கலாம்.

‘‘கோடையில் அதிக மாணவர்கள் ப்ரவுசிங் செய்வதற்காக வருகிறார்கள். பிராஜெக்ட் தொடர்பான விவரங்களைத் திரட்டவும், பொதுவிஷயங்களை அறிந்துகொள்ளவும் மாணவர்கள் இன்டர்நெட் மையங்களுக்கு வருவது உயர்ந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சிறு நகரங்களில் இந்தக் கட்டணத்தை 15-20 ரூபாய் என நிர்ணயித்துக்கொண்டால் அதிக மாணவர்கள் வருவார்கள். அதற்கு ஏற்ப லாபமும் உயரும். சாதாரணமாக ஒரு மாதத்தில் கூடுதலாக 5,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம். தேவையான விவரங்களை பிரின்ட் எடுத்துக் கொடுப்பதன் மூலம் இன்னும் கூடுதல் வருமானம் ஈட்டலாம்’’ என்றார் சென்னை ஆயிரம் விளக்குப்பகுதியில் இயங்கி வரும் ‘நியூ பிரின்ட் வேர்ல்டை’ச் சேர்ந்த ரமேஷ்.

சதுரங்கம்

சம்மரில் சம்பாதியுங்கள்!
சம்மரில் சம்பாதியுங்கள்!

பி ள்ளை வெயிலில் விளையாடி, உடம்பைக் கெடுத்துக்கொள்ளப் போகிறதே என்று கவலைப்படும் பெற்றோருக்கு நல்ல வாய்ப்பாக இருப்பது செஸ்! ‘சின்ன போர்ட், பெரிய புத்திசாலித்தனம்’ என்று குழந்தைகள் வளர்வதை விரும்பாத பெற்றோர் ஏது? இதனால் இந்த சம்மரில் முறையாக செஸ் விளையாட்டைக் கற்றுத்தரும் பயிற்சி மையங்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும். விளையாட்டு சூத்திரத்தை முழுக்க கற்றுக் கொடுக்காவிட்டாலும் அடிப்படை விஷயங்களைக் கற்றுத் தரும் கோர்ஸை நடத்தலாம்.

செஸ் போட்டியில் சர்வதேச தரக்குறியீடு பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த சிவகுமார் ஐந்து வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 600 ரூபாய் கட்டணத்தில் கோடைக்கால சதுரங்க வகுப்புகளை நடத்துகிறார். ‘‘வாரத்துக்கு இரு தினங்கள் வீதம் ஒரு மணி நேரம் கற்றுக்கொடுத்தால் கூட மாதத்துக்கு 6,000 ரூபாய்வரை வருமானம் பார்க்கலாம். அதிக நேரம் விளையாடினால் நமக்கு மூளை களைப்படைந்துவிடும் என்பதால், நாள் முழுக்க இதைக் கற்றுத் தர முடியாது.

ஆரம்ப நிலையிலுள்ளவர்களை ஐந்து பேர் கொண்ட குழுவாகவும், கொஞ்சம் கற்றுத் தேர்ந்தவர்களை 10 பேருக்கு மேல் ஒன்றாகச் சேர்த்தும் வகுப்பு எடுக்கலாம். மேலும் கற்றுக்கொள்பவர்களை குறிப்பெடுக்கப் பழக்குவது மூலம் அவர்களையும் மாஸ்டர்களாக்க முடியும். அபார்ட்மென்ட்களில் குழந்தைகள் விளையாட என்று அறை இருக்கும். அதில் பயிற்சி வகுப்புகளை எடுக்கலாம். மற்ற பகுதிகளில் உள்ள கோச்களுக்கு தேவைப்பட்டால் கைடு போல் உதவ முடியும்’’ என்கிறார் சிவகுமார்.

சமையல் கலை

சம்மரில் சம்பாதியுங்கள்!

‘லீ வுதான் விட்டாச்சே... சமையல் கட்டுக்கு வந்து கொஞ்சம் உதவி செய்தால் என்ன?’ என்பது பல வீடுகளில் கேட்கும் குரல். ஆனால், முறையாக கற்றுத் தர யார் இருக்கிறார்கள்? வீட்டில் இருப்பவர்களுக்கு அதற்கான பொறுமையும், நேரமும் இருப்பதில்லை. அதனால், குக்கரி வகுப்புகள் என்பது சம்மருக்கு சரியான லாபம் தரும் தொழிலாக இருக்கும்.

இதுபோன்ற வகுப்புகளை நடத்தி வருகிறார் சமையல் கலைஞர் ரேவதி சண்முகம். ‘‘வீட்டுக்கு வரும் விருந்தாளியை வரவேற்று உபசரிப்பது, கூட்டு, பொரியல், அவியல், சப்பாத்தி, புரோட்டா என 55 வெரைட்டி செய்ய 7-10 நாள்கள் கோர்ஸ் நடத்துகிறோம். தினசரி காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை கிளாஸ் நடக்கும். மாணவி களுக்கு மதிய உணவை நாங்களே வழங்கிவிடுகிறோம். சமையல் பொருட்கள், செய்முறைகள் அடங்கிய புத்தகத்தை நாங்களே கொடுத்துவிடுகிறோம். மாணவிகள் சமைப்பதை வீட்டுக்கு எடுத்துச் சென்று குடும்பத்தினர் சுவைக்க அனுமதிக்கிறோம்.

சம்மரில் சம்பாதியுங்கள்!

பயிற்சியின்போது மாணவிகளைக் குறிப்பு எடுக்கச் சொல்கிறோம். இதன்மூலம் அவர்கள், பிறருக்கு பயிற்சி அளித்து வருமானம் ஈட்டவும் வழி ஏற்படும். ஒரே நேரத்தில் 10 பேருக்குச் சமையல் கற்றுத் தரலாம். கோர்ஸ் கட்டணமாக சென்னையில் 1,500 ரூபாய் வாங்குகிறோம். ஊருக்கு ஏற்றபடி இந்தக் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். அடிப்படை சமையல் தெரிந்தவர்களுக்கு கோர்ஸ் நடத்தவும் பயிற்சி தருகிறேன். அண்மையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் என்னிடம் கோர்ஸ் படித்துவிட்டு அங்கே சமையல் வகுப்பு நடத்திக் கொண்டிருக் கிறார்கள்’’ என்றார் ரேவதி சண்முகம்.

இந்தக் கோடையில் எல்லோருக்கும் வெயில் கொளுத்த, உங்கள் காட்டில் மட்டும் பணமழை கொட்டப் போகிறது. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism