Published:Updated:

விலைவாசி ஜிவ்வ்..! உயரே பறக்குது உளுந்து!

விலைவாசி ஜிவ்வ்..! உயரே பறக்குது உளுந்து!

விலைவாசி ஜிவ்வ்..! உயரே பறக்குது உளுந்து!

விலைவாசி ஜிவ்வ்..! உயரே பறக்குது உளுந்து!

Published:Updated:
நடப்பு
விலைவாசி ஜிவ்வ்..!  உயரே பறக்குது உளுந்து!
 

 

விலைவாசி ஜிவ்வ்..!
உயரே பறக்குது உளுந்து
!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விலைவாசி ஜிவ்வ்..!  உயரே பறக்குது உளுந்து!

ந்தப் பொருளின் விலை ஏறினாலும் யானை விலை, குதிரை விலை என்று சொல்வார்கள். இனி உவமையை மாற்றி உளுந்து விலை, பருப்பு விலை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு உளுந்தின் விலை எட்டாத உயரத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.

‘‘சராசரி குடும்பத்தில் இட்லி, தோசை என்பதே திருவிழாப் பண்டம் போல ஆகிவிடும் போலிருக்கிறது. உளுந்தை அடிப்படையாக வைத்து தொழில் நடத்தும் எங்களைப் போன்ற தோசைமாவு பிஸினஸில் இருப்பவர்கள் பாடு திண்டாட்டமாக இருக்கிறது’’ என்ற ஆதங்கக் குரலோடு நமக்கு போன் செய்தார் ‘தாயார் ஃபுட்’ பிஸினஸ் நடத்திவரும் சென்னையைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன்.

இவர் மட்டுமல்ல... அப்பள வியாபாரம், உலர் மாவு வியாபாரம் செய்பவர்கள், ஹோட்டல் தொழிலில் இருப்பவர்கள் எல்லோருமே கையைப் பிசைந்துகொண்டு நிற்கும் அளவுக்கு உளுந்து விலை கிடுகிடுவென்று உயர்ந்துவிட்டது. கணக்கிட்டுப் பார்க்கும்போது கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 95% விலை உயர்வைச் சந்தித்திருக்கிறது இந்த உளுந்து!

விலைவாசி ஜிவ்வ்..!  உயரே பறக்குது உளுந்து!

‘‘மற்ற பருப்பு என்றாலாவது மாற்றாக எதையாவது பயன்படுத்தலாம். ஆனால், உளுந்துக்குப் பதிலாக அப்படி எந்த மாற்றுப் பொருளையும் பயன்படுத்த முடியாது. இப்படி விலை உயர்கிறதே என்று எங்களால் மாவு விலையையும் உயர்த்த முடியவில்லை. சில இடங் களில் எடையைக் குறைத்து நிலைமையைச் சமாளிக்கி றார்கள். ஆனால், இதெல்லாம் நிரந்தத் தீர்வு கிடையாது. விலை உயர்வைச் சமாளிக்க பல உளுந்து வியாபாரிகள் கொஞ்சம் தரம் குறைந்த பர்மா உளுந்தைக் கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள்.

இதனால் மாவின் தரமும் அளவும் குறைவதோடு, சுவையும் குறைகிறது. தத்தளிக்க வைக்கும் இந்தப் பிரச்னைக்கு என்னவெல்லாமோ காரணம் சொல்கிறார்கள். தலை சுற்றுகிறது. உருவாக்கிய பெயரைக் காப்பாற்ற வேண்டுமே என்று பல்லைக் கடித்துக் கொண்டு உழைத்துக் கொண்டிருக் கிறோம்’’ என்றார் அனந்தகிருஷ்ணன்.

ஏன் இந்தத் திடீர் விலை உயர்வு? என்று விசாரித்தபோது, விளைச்சல் குறைவு, மொத்த வியாபாரிகள் ஸ்டாக்கை அதிகரித் திருப்பது, பருப்பு வணிகத்தில் புதிதாக கமாடிட்டி சந்தை வணிகமும் நுழைந்திருப்பது என பல காரணங்கள் கூறப்படுகின்றன.

இந்த விலை உயர்வு குறித்து, சென்னை நகர பருப்பு வியாபாரிகள் சங்கச் செயலாளர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, ‘‘தமிழ்நாட்டின் தினசரி உளுந்து தேவை 21 லட்சம் கிலோ. சென்னை நகருக்கு மட்டுமே தினமும் 3 லட்சம் கிலோ உளுந்து தேவைப்படுகிறது. ஆனால், அந்த அளவுக்கு சப்ளை இல்லை. தற்போது கூடுதலாக கமாடிட்டி சந்தை யில் உளுந்தும் சிக்கிக்கொண்டது. ஆன்லைனில் புக் செய்துவிட்டு அதனை மற்றொரு வருக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதால், சூதாட்டம் போல் பருப்பு வகைகளின் விலை உயர்ந்து வருகிறது. 2005 ஏப்ரலில் ஒரு மூட்டையின் விலை (100 கிலோ) 2,600 ரூபாயாக இருந்தது. இப்போது 5,100 ரூபாயைத் தாண்டி விட்டது’’ என்றார் ராஜேந்திரன்.

விலைவாசி ஜிவ்வ்..!  உயரே பறக்குது உளுந்து!

நம்முடைய விளைவிக்கும் முறையிலும் குறை இருப்பதாக விவசாயிகள் சிலர் சொல்கிறார்கள். ‘‘இந்தியாவில் ஒரு ஏக்கரில் 3 முதல் 4 மூட்டை உளுந்துதான் விளைகிறது. இதுவே, பர்மாவில் 13 முதல் 15 மூட்டையாக இருக்கிறது. அதற்குக் காரணம் நம்முடைய விவசாயமுறைதான். நம்நாட்டில் இன்னும் ஆதிகால விவசாய முறையே பின்பற்றப்படுகிறது. இதனை மாற்றி, நவீன தொழில்நுட்பத்தை புகுத்தினால் விளைச்சல் திறன் உயரும்’’ என்றார்கள்.

இந்த விலை உயர்வெல்லாம் அரைக்கிலோ, ஒரு கிலோ உளுந்தம் பருப்பு வாங்கும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்குமா என்று தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவரான சொரூபனிடம் கேட்டபோது, ‘‘நிச்சயம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார் கள். கமாடிட்டி சந்தை வர்த்தகர்கள், தமிழகத்திற்காக இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள், மளிகைப் பொருள்களை மொத்தமாக வாங்கி ஸ்டாக் வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், சந்தையில் மளிகைப் பொருள்களுக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. மேலும் சிறு வியாபாரிகளிடம் தற்போது பருப்பு வகைகள் ஸ்டாக் இல்லை என்பதால் விலை உயர்ந்து வருகிறது. உளுந்தைப் பொறுத்தவரை உற்பத்தியை விட தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதுவும் அதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.

சில்லரையில் ஒரு கிலோ நாட்டு உளுந்தின் விலை ஓராண்டுக்கு முன் 28 ரூபாய் என்ற அளவில் இருந்தது. அது, ஐந்தே மாதத்தில் 40 ரூபாயாக உயர்ந்து தற்போது, 55 ரூபாயை எட்டி விட்டது. இறக்குமதி செய்யப்படும் பர்மா உளுந்தின் விலை ஒரு மாத காலத்தில் 40-லிருந்து 44 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் அவசியம். அதோடு இதுபோன்ற பருப்பு வகைகளின் தேவைக்கு பெரிய அளவில் வட மாநிலங்களையே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது.

விலைவாசி ஜிவ்வ்..!  உயரே பறக்குது உளுந்து!

தமிழ்நாட்டில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் விற்பனைக்கு பருப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அவர்கள் மாற்று தொழிலுக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை. கமாடிட்டி சந்தையில் இருந்து உணவு தானியங்களை நீக்கிவிட்டாலே அவற்றின் விலை வெகுவாகக் குறைந்துவிடும்’’ என்றார்.

வடமாநிலங்களில் உற்பத்தி போதுமானதாக இல்லாத சூழ்நிலையில் இன்னும் விலை ஏறலாம் என்கிறார்கள். உஷாராகிவிடுங்கள் இப்போதே!

உளுந்தோடு உயர்ந்தவை!

ளுந்தைப் போலவே இன்னும் சில மளிகைப் பொருட்களும் பெரிய அளவில் விலை ஏற்றத்தைச் சந்தித்திருக்கின்றன. அவற்றை எல்லாம் காரணங்களோடு பட்டியலிட்டார் சொரூபன்.

ஆந்திராவின் குண்டூர், தமிழகத்தின் பரமக்குடி, விளாத்திக்குளம் ஆகிய இடங்களில் உற்பத்தி குறைந்ததால் மிளகாய் சில்லரை விலை ஒரு மாத காலத்தில் கிலோவுக்கு 7 ரூபாய் கூடி 45 ரூபாயாகியுள்ளது.

குஜராத், மத்தியப்பிரதேசத்தில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வெந்தயம் விலை ஒரு மூட்டைக்கு 200 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தி வீழ்ச்சி ஏற்பட்டதால், தமிழகத்துக்கு வரும் பச்சைப் பயறு விலை கூடியிருக்கிறது.

கர்நாடகா, ஆந்திராவிலிருந்து, புளி வரத்து குறைந்ததால் அதன் விலை கிலோவுக்கு 5 ரூபாய் கூடியுள்ளது. இதேபோல் கடலைப் பருப்பு கிலோவுக்கு 3 ரூபாய் உயர்ந்துள்ளது.

சப்ளை குறைவால் கடுகு, சீரகம், தனியாவின் விலையும் அதிகரித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism