Published:Updated:

காக்டெய்ல்

காக்டெய்ல்

காக்டெய்ல்

காக்டெய்ல்

Published:Updated:
நடப்பு
காக்டெய்ல்
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காக்டெய்ல்

செ ல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களை வேலை வெட்டி இல்லாதவர்கள் என்பதுபோல பார்ப்பவர்களே... உங்கள் பார்வையை பரிசீலனைக்கு உட்படுத்துங்கள். சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் நடத்திய பொது அறிவுப் போட்டியில் ஒருவருக்கு கார், கலர் டெலிவிஷன், ரஜினி பற்றிய கேள்விகளுக்கு ரஜினி சந்திரமுகியில் அணிந்த கண்ணாடி எல்லாம் பரிசாகக் கிடைத்திருக்கிறது.

பல நெட்வொர்க்குகளும் வந்து கலக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஏதாவது செய்து மக்களைத் தன் பக்கம் ஈர்க்க நினைத்து ஏர்டெல் செய்ததுதான் இந்த எஸ்.எம்.எஸ் கலாட்டா! விழாவுக்கு வந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய நடிகர் பிரசன்னாவும், ‘ரேடியோ மிர்ச்சி’ சுசித்ராவும் பேசும்போது, ‘‘செல்போன் பேசறதுக்கு மட்டுமல்ல, இப்படி பரிசுகளை வாங்கறதுக்கும் பயன்படுதே... நல்ல விஷயம்தான்’’ என்றார்கள்.

ரஜினி கண்ணாடியை வாங்கிய அந்த ரசிகருக்கு, கூடவே இது ரஜினி அணிந்த கண்னாடிதான் என்று சந்திரமுகி தயாரிப்பு நிறுவனம் சான்றிதழையும் கொடுத்திருக்கிறது.

காக்டெய்ல்

ட்டோ ஓட்டிக்கொண்டே எல்.ஐ.சி பாலிசிகளை பிடிப்பதிலும் படு ஸ்பீடாக இருக்கிறார் வின்சென்ட். வெறுமே ஏஜென்டாக இல்லாமல் பிரமிட் உண்டியல் என்ற புதுமையைப் புகுத்தி பலரைக் கவர்ந்திருக்கிறார். ‘‘சென்னையில் ஆட்டோ அதிகமாகிவிட்டதால் பெரிதாக வருமானம் இல்லை. கூடுதல் வருமானத்துக்கு வழி தேடும் போது ஓய்வுபெற்ற எல்.ஐ.சி அதிகாரி ஒருவர் கொடுத்த ஐடியாபடி நான்கு வருடமாக ஏஜென்டாக உள்ளேன். ஒவ்வொரு ஆளாகத் தேடி அலைந்து பாலிசி பிடிக்க நேரம் கிடைப்பதில்லை. அதனால் பிட் நோட்டீஸ் போட்டு, ‘என்னிடம் பாலிசி எடுத்தால் பிரமிட் உண்டியல் இலவசம்’ என்று அறிவித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு!

சவாரி வருகிறவர்கள் இந்த உண்டியல் பற்றி விசாரிப்பதுண்டு. அவர்களிடம், ‘இதில் தினமும் ஐந்து முதல் ஐம்பது ரூபாய் வரை உங்கள் சக்திக்கு ஏற்ற மாதிரி போட்டு வையுங்கள். இதனால் பாலிசி கட்டும் தேதியில் பணத்துக்குச் சிரமப்பட வேண்டாம். உங்கள் வளமான எதிர்காலத்துக்கு இதை அவசியம் கடைபிடியுங்கள்’’ என்று பக்குவமாக எடுத்துச் சொல்லிவிட்டு, பாலிசிகளைப் பற்றி விவரிப்பேன். இதுவரை 100 பேர் பாலிசி எடுத்திருக்கிறார்கள். இன்னும் 300 பேர்வரை சேர்வதாக சொல்லி இருக்கிறார்கள். ஜூன் மாதத்துக்குள் மொத்தம் 500 பாலிசிதாரர்களை சேர்ப்பதுதான் இப்போது என் குறிக்கோள்’’ என நம்பிக்கை பொங்கச் சொல்கிறார் வின்சென்ட்.

ஆட்டோ வருமானத்தைவிட பாலிசியில் நல்ல வருமானம் கிடைக்கிறதாம்.

படம்: ‘ப்ரீத்தி’கார்த்திக்

காக்டெய்ல்

சி னிமா பிரபலங்கள் பெரிய நிறுவனங்களுக்கு அம்பாசடராக இருப்பது அதிகமாகி வரும் நேரம் இது. குறைந்தபட்சம் புதிய வெளியீடுகளுக்காவது சினிமா பிரபலங்களை அழைக்கின்றன நிறுவனங்கள்.

அந்த வரிசையில் சமீபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய ‘கிளாஸிக்’ மற்றும் ‘கோல்ட்’ கடன் அட்டைகளை அறிமுகப்படுத்தினார் நடிகர் விக்ரம்.

‘‘விசா இன்டர்நேஷனல் அமைப்புடன் இணைந்து வழங்கப்படுகிற இந்தக் கடன் அட்டைகளை இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பயன்படுத்தலாம். இதை வைத்து ரூபாய் ஐந்து லட்சம் வரை கடன் பெறவும் முடியும்’’ என்றார் ஐ.ஓ.பி வங்கியின் தலைவர் நாராயணசாமி.

காக்டெய்ல்

டுக்கைக்குப் போகும் நேரத்தில், ‘எனக்கு ஏதாவது கதை சொல்லு!’ என்று கேட்கும் குழந்தைகளுக்குச் சொல்ல இன்றைய பெற்றோர் பலரிடமும் எந்தக் கதையும் இல்லை. தாத்தா பாட்டி கதைகள், முல்லா கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் என்று பல சி.டி-க்கள் மார்க்கெட்டில் வலம் வந்து நம் பிரச்னையைத் தீர்க்க ஆரம்பித்திருக்கின்றன. இத்தொழிலுக்கு வருங்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை உணர்ந்து பலரும் இதில் இறங்க ஆரம்பித்துள்ளனர். அப்படி ஒருவர்தான் சென்னை அடையாறு பகுதியில் ‘கரடி கதைகள்’ நிறுவனம் வைத்திருக்கும் விஸ்வநாத்.

‘‘சின்ன வயசில் நாம தெரிஞ்சுக்கிட்ட காக்கா, நரி கதையைக்கூட இப்போ சொல்றதுக்கு நேரமில்லை. மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் குழந்தை களுக்கான கதைகளை ஆடியோ கேசட்டாக, சி.டி-யாகப் போட்டிருக்கிறோம். வீடுகளில் இப்போதும் சொல்கிற பாட்டி கதை மனதில் நிற்கிறது. இதுதான் இந்த பிஸினஸின் அடிப்படை. அதனை நாம் ஏன் செய்யக் கூடாது என எண்ணம் தோன்றவே கரடிக்கதைகள் என்ற பெயரிலே நிறுவனத்தை ஆரம்பித்தோம். கதை சொல்லும் இடத்தில் பாட்டிக்குப் பதிலாக, கரடியை உட்கார வைத்தோம். எங்கள் இலக்கே பள்ளிக் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள்தான். குழந்தைகள் ஆடியோவில் ஓரு விஷயத்தைக் கேட்கும்போது மொழி அறிவும் கிரியேட்டிவிட்டியும் அதிகரிக்கிறது.

ஆங்கில மொழியை வளர்க்கவேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால், நகரங்களைவிட கிராமத்தில் படிக்கும் மாணவர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. நாசர் போன்ற சினிமா பிரபலங்களை வைத்து கதை சொல்கிறோம். பாடல்களை சங்கர் மகாதேவனும் பாம்பே ஜெயஸ்ரீயும் பாடி இருக்கிறார்கள். குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, காந்தி சுயசரிதை போன்றவற்றையும் வெளியிட்டுள்ளோம். நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் தவிர ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில், இதுவரை 32 ஆடியோ மற்றும் சி.டி-க்களை வெளியிட்டுள்ளோம். இவற்றின் விலையும் 50 முதல் 150 ரூபாய்வரை கிடைக்கிறது.

இத்தொழிலில் இறங்க நினைப்பவர்கள், குழந்தைகள் விருப்பத்தைத் தெரிந்துகொண்டு ஆரம்பிக்கவேண்டும். குறைந்தது 5,000 சி.டி-க்கள் விற்றால்தான் தயாரிப்பு செலவுகளை ஈடுகட்ட முடியும். இப்போது எஃப்.எம். ரேடியோவில் கொடுத்து காசு பார்க்கலாம்...’’ என்றார் விஸ்வநாத்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism