Published:Updated:

‘‘பணக்கார குடும்பம் எங்களுடையது!’‘

‘‘பணக்கார குடும்பம் எங்களுடையது!’‘

‘‘பணக்கார குடும்பம் எங்களுடையது!’‘

‘‘பணக்கார குடும்பம் எங்களுடையது!’‘

Published:Updated:
சிக்கனம்
‘‘பணக்கார குடும்பம் எங்களுடையது!’‘
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘பணக்கார குடும்பம் எங்களுடையது!’‘
‘‘பணக்கார குடும்பம் எங்களுடையது!’‘

‘‘சி க்கனம் என்பது செலவே செய்யாமல் கஞ்சத்தனமாக இருப்பது அல்ல. செலவுகளைக் கட்டுப்படுத்துவதுதான்’’ என்று இலக்கணமே சொல்கிறார் சென்னை, ஆல் இண்டியா ரேடியோவில் பணிபுரியும் ஆதம்பாக்கம் ராஜேந்திரன். வீட்டில் அன்றாடச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று விரிவாகவும் விளக்கமாகவும் சொல்கிறார் ராஜேந்திரன்.

‘‘எந்த ஒரு விஷயத்திலும் திட்டமிடல் முக்கியமான தேவை. நம் சம்பளத்தில் எதற்கு முக்கியத்துவம் என்பதை நாம் தெளிவாக முடிவு செய்துகொள்ள வேண்டும். அதைமீறும் போதுதான் கடன் என்ற சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கவேண்டி வருகிறது. நான் அதற்கு இடம் கொடுப்பதில்லை.

முதல் தேதியே உட்கார்ந்து அந்த மாதத்துக்கான செலவுகளை எழுதி வைத்துவிடுவேன். மளிகைக்கு என்று நான் ஒதுக்கும் தொகை 1,500 ரூபாய். நான்குபேர் இருக்கும் வீட்டுக்கு இது கொஞ்சம் அதிகம்தான். ஆனால், அதை சுருக்கக்கூடாது. சுவர் இருந்தால்தானே சித்திரம். வாரம் ஒருநாள் ஹோட்டல், கடைகளில் ஸ்நாக்ஸ் மனது ஊர்சுற்றக் கிளம்பும். ஆனால், மயங்கிவிடக்கூடாது. எந்த உணவாக இருந்தாலும் வீட்டுத் தயாரிப்புதான். என் மனைவி ராதாவின் கைப்பக்குவம் என்னை இப்படி கட்டிப் போட்டிருக்கிறது.

அதோடு மளிகையை மாதத்துக்கொருமுறை மொத்த மாக வாங்குவதால், நூறு ரூபாயாவது மிச்சமாகும். இதுதான் சிக்கனம். மிச்சம் பிடிப்பதற்காக பட்டினி கிடக்கக்கூடாது. அதேபோல, குழந்தைகளுக்கு ஊட்டம் தரக்கூடிய பால், காய்கறிகளில் மிச்சம் பிடிப்பதில்லை.

பாலுக்கு கூப்பனாக வாங்கிவிடுவதால், வெளியே வாங்குவதைவிட விலை குறைவாக இருக்கிறது. காய்கறிகளைப் பொறுத்தவரை விலையைவிட எவ்வளவு ஃப்ரெஷ்ஷாக கிடைக்கிறது என்பதைத்தான் பார்ப்பேன். பாலுக்கு 650 ரூபாயும் காய்கறிக்கு 250 ரூபாயும் செலவாகிறது.

இரண்டு மாதத்துக்கு ஒரு முறை கரன்ட் பில் 350 ரூபாயும், டெலிபோன் பில் 350 ரூபாயும் கட்டுகிறோம்.

சமையல் சிலிண்டருக்கு 290 ரூபாய் ஆகும். சமையல் வேலைகளுக்கு மட்டும் சரியாக பயன்படுத்தினால் 30 நாளுக்கு வரும் கேஸ் 40 நாளுக்கு வரும். சூடு செய்ய வேண்டிய பண்டங்களை ஒரே நேரத்தில் சூடுபடுத்துவது, வெந்நீர் போடுவதற்கு மரப்பட்டை, கொட்டாங்கச்சி போன்றவற்றைப் பயன்படுத்துவது என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சிக்கனத்தைக் கையாளுவோம். இதனால், 100 ரூபாய் வரை மிச்சமாகும்.

தவணை முறையில் பொருட்கள் வாங்குவது என்னைப் பொறுத்தவரை நஷ்டம் வீண்செலவு தான். போனஸ் போன்று மொத்தமாக பணம் கிடைக்கும்போது சேமிப்பையும் சேர்த்துப் போட்டு விழாக்கால நேரத் தள்ளுபடிகளில் பொருட்களை வாங்கிக் கொள்வோம். அதில் கிடைக்கும் சலுகைகள் கூடுதல் போனஸ்தானே!

ஆதம்பாக்கத்தில் இருந்து ஆபீஸுக்கு டூ வீலரில் வந்துகொண்டிருந்த நான், பெட்ரோல் விலை உயர்ந்ததும் ரயிலுக்கு மாறிவிட்டேன். என்னுடைய அலுவலக நேரம் தெளிவானது. அதோடு, ரயிலில் பாஸ் வாங்கிக்கொண்டால் போதும். மாதம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம். பெட்ரோலுக்கு மாதம் 800 ரூபாய் கொடுப்பதைவிட, ரயில் பாஸுக்கு 135 ரூபாய் கொடுப்பது லாபகரமான சிந்தனைதானே!

வீட்டு வேலைப் பணியாளுக்கு மாதம் 250 ரூபாய் தருகிறோம். மகள் அபிராமி இன்ஜினீயரிங்கும், மகன் ஆதித்யராஜன் ஐந்தாம் வகுப்பும் படிக்கிறார்கள். குழந்தைகளின் படிப்பை மனதில்வைத்து ஆரம்பம் முதலே கேபிள் கனெக்ஷன் வாங்கவில்லை. தூர்தர்ஷன் மட்டுமே பார்க்கிறோம். குழந்தைகள் படிப்பும் நன்றாக இருக்கிறது. கேபிள் கட்டணமும் மிச்சம். இதற்கு ஆகும் 150 ரூபாயை செய்தித்தாள், பத்திரிகைகள் வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக் கொள்கிறோம்.

இதைத்தவிர, மாத பட்ஜெட்டில் திருமணம் போன்ற விழாக்களுக்காக 100 ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவோம். விழா வரும்போது எல்லாத் தேவைகளுக்கும் பயன்படும். பரிசுப் பொருட்களை விலை குறைவான சமயங்களில் வாங்கி வைத்துக்கொள்வோம்.

இப்படியாக பெரிய பணக்காரர்களாக இருக்கிறது என் குடும்பம். என்ன பார்க்கிறீர்கள்... பார்த்துப் பார்த்து செலவழிக்கிற இவரா பணக்காரர் என்றா..? கடன் இல்லாமல் இருக்கிறோமே அதைச் சொல்கிறேன்.’’

‘‘பணக்கார குடும்பம் எங்களுடையது!’‘
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism