Published:Updated:

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

ஹலோ வாசகர்களே

Published:Updated:
ஸ்பெஷல்
ஹலோ வாசகர்களே,
 

ட்ஜெட் வந்த சூட்டோடு அதுபற்றிய அலசலை விரிவாகத் தந்த +16 சிறப்பு இணைப்பை உங்களில் பலரும் பூரிப்போடு வரவேற்றிருக்கிறீர்கள். உங்கள் உற்சாகம் தந்த தெம்போடு இந்த இதழில் தொழில் தொடர்பான புதிய பல திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம்.

நாணயம் விகடன் தங்களுக்கான பத்திரிகை என்ற உரிமையோடு புத்தகம் வெளியான தேதியில் பாய்ந்துசென்று வாங்கிப் படிக்கிற வாசகர்கள், ‘எங்கள் துறை செய்திகள் நிறையவேண்டும்... அதைப்பற்றியும் எழுதுங்களேன்!’ என்று எதிர்பார்ப்போடு அன்புக் கட்டளை இடவும் ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், தங்கள் பகுதி செய்திகளும் இதழில் இடம்பெறவேண்டும் என்ற ஆர்வத்தோடு தகவல் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். வாசகர்களின் தேவைகளையும் தகவல்களையும் அடிப்படையாக வைத்து சில கட்டுரைகளை அனைத்து வாசகர்களுக்கும் கொடுக்க முடிகிறது.

அப்படி ஒன்றாகத்தான் சென்னை அருகே புட்லூரில் நடக்கும் மாதச் சந்தையைப் பற்றி கவர் செய்திருக்கிறோம். நகரத்தில் வாங்குவதைவிட, குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை வாங்குபவர்களையும், சந்தையில் கடைபோட்டு சூப்பர் வருமானம் பார்க்கிற வியாபாரிகளையும் சந்திக்க முடிந்தது அங்கே.

இந்த இதழ் அட்டையில் வெளியாகி இருக்கிற கிரெடிட் கார்டு உஷார் கட்டுரை, நம்மில் அநேகம் பேருக்கு பயனுள்ள, பொருளாதார இழப்பைத் தடுப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கற்றாழை பிஸினஸ் தமிழகத்தில் அங்கங்கே சிறிய அளவில் நடந்து கொண்டிருந்தாலும் அதன் பயன்பாடுகளை வைத்து, சிலர் பெரிய லாபம் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது. நல்ல தொழில் வாய்ப்பாக இருக்கும் அந்தத் தொழிலில் எப்படி எல்லாம் வருமானம் பார்க்கமுடியும் என்று பலரையும் சந்தித்துத் தொகுத்துத் தந்திருக்கிறோம்.

படித்துவிட்டு, வேலைதேடும் இளைஞர்களுக்கு தங்களைப் பற்றிய சுய அறிமுகம் எத்தனை முக்கியம்... அதை எப்படி சுவாரஸ்யமாகச் சொல்வது என்று விளக்குகிறார் பிரின்ஸ். அவர் பயோ-டேட்டாவுக்குத் தரும் விளக்கத்தைப் படியுங்கள். ஆச்சர்யத்தில் மூழ்கிப்போவீர்கள்.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கவேண்டும் என்று அரசாங்கம் சொல்வதுபோல், வீட்டுக்கு ஓர் உண்டியல் வைக்கவேண்டும் என்று சொல்கிறது உள்ளே இருக்கிற சேமிப்புக் கட்டுரை. அதைத் தவறாமல் செயல்படுத்தி, எதிர்கால நலன் காத்துக் கொள்ளுங்கள்.

‘நாணயம் பங்கு பரிந்துரைகளைப் பார்த்து முதலீடு செய்த நான், இன்று நல்ல லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கடிதங்கள் வருவது மகிழ்ச்சியாகவும் அதேசமயம் எங்கள் பொறுப்பை மேலும் அதிகப்படுத்துவதாகவும் இருக்கிறது. இந்த இதழிலும் நான்கு பங்குகள் பரிந்துரைத்திருக்கிறோம். உங்கள் சொந்த ஆய்வுக்குப்பின் முதலீடு செய்யுங்கள்.

பங்குச் சந்தையின் ஆக்ரோஷ ஏற்றமும் வேகமும் பலரையும் அதை நோக்கித் திருப்பி இருக்கிறது. புதியவர்கள் பலர் உள்ளே நுழைய தருணம் பார்த்துக் கொண்டிருப்பதோடு, அதன் அடிப்படையை யார் சொல்லித் தருவார்கள்... எப்படி இந்தத் துறை பற்றித் தெரிந்து கொள்வது என்று அலைபாய்வது புரிகிறது. அதற்காகவே, மகிழ்ச்சிகரமான அறிவிப்பு ஒன்று கடைசி பக்கத்தில் வெளியாகியுள்ளது.

உங்கள் வளர்ச்சியே எங்கள் மகிழ்ச்சி. படியுங்கள்... பணத்தைப் பெருக்குங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism