Published:Updated:

ஒவ்வொரு வீட்டிலும் உண்டியல்!

ஒவ்வொரு வீட்டிலும் உண்டியல்!

ஒவ்வொரு வீட்டிலும் உண்டியல்!

ஒவ்வொரு வீட்டிலும் உண்டியல்!

Published:Updated:
சேமிப்பு
ஒவ்வொரு வீட்டிலும் உண்டியல்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொரு வீட்டிலும் உண்டியல்!
ஒவ்வொரு வீட்டிலும் உண்டியல்!

நமக்கு முதன்முதலில் சேமிக்கும் பழக்கம் வருவது உண்டியலில்தானே! அதுபோன்ற கட்டுப்பாடான சேமிப்பு எதுவுமே கிடையாது. கண்ணெதிரே நம் காசு வளர்கிற அந்த சந்தோஷத்துக்கு ஈடுஇணைதான் ஏது..?

நம் உடலுக்கு உள்ளேயே ஓர் உண்டியல் இருக்கிறது தெரியுமா? சாப்பாட்டைச் சுமக்கும் வயிறு என்று சொல்லாதீர்கள். நாம் பேசுவது தேவைக்கு அதிகமாகச் சேரும் சத்துகளைச் சேமித்து வைக்கும் கல்லீரல்! சர்க்கரை போன்ற சத்துக்களைச் சேர்த்து வைக்கும் கல்லீரலும் ஒருவகையில் உண்டியல்தான். நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் இதுபோன்ற சத்துக்களில் தேவைக்கு அதிகமானது கல்லீரலில் சேர்ந்துவிடும். நம் உடலில் சத்துக்குறைவு வரும்போது தேவையான அளவை அதுவே ரிலீஸ் செய்து சமப்படுத்தும்.

சர்க்கரை வியாதிக்கார நண்பர் ஒருவர் ஒருநாள் கிறுகிறுத்துப்போய் சோர்வடைந்து உட்கார்ந்துவிட்டார். ‘‘என்ன ஏது..?’’ என்று பதறிக் கேட்டபோது, ‘‘எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. அதுதான் தளர்ச்சிக்குக் காரணம்’’ என்று சொல்லிக்கொண்டே பையில் இருந்த சாக்லெட்டை எடுத்துப் போட்டுக்கொண்டார்.

சர்க்கரை நோயாளிக்கு சாக்லெட் மருந்தா? என்ற கேள்வியோடு மருத்துவரை அணுகினால், அவர் சொன்ன பதில் இன்னும் ஆச்சரியப்படுத்தியது.

‘‘நம் உடம்பில் உள்ள லிவர்(கல்லீரல்) உடலில் சேரும் கூடுதல் சர்க்கரையை கிளைக்கோஜனாக மாற்றி வைத்துக்கொள்ளும். உடம்பில் சர்க்கரை அளவு குறையும்போது, அந்த கிளைக்கோஜனை சர்க்கரையாக மாற்றி உடலுக்குக் கொடுத்து சமநிலையை உருவாக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த லிவரின் செயல்பாடு சிறப்பாக இருக்காது. அதனால், லிவரில் இருந்து வர வேண்டிய சர்க்கரையை வெளியில் இருந்து சாக்லெட்டாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது’’ என்று டாக்டர் விளக்கம் சொன்னபோது ஆச்சரியம் விலகவில்லை.

என்ன இது... திடீரென்று மெடிக்கல் கட்டுரையாகப் போகிறதே என்று அதிர்ச்சியடையாதீர்கள். உங்கள் உடலுக்குள் இருந்துகொண்டு லிவர் சொல்லும் உண்டியல் தத்துவத்தைப் புரிந்துகொண்டால், சேமிக்கும் பழக்கம் உங்கள் உடலோடு ஒட்டிவிடும். லிவர் செய்யும் வேலையை உங்கள் வீட்டில் ஓர் உண்டியலை வைத்துச் செய்யுங்கள்.

வருமானம் வந்துகொண்டுதான் இருக்கும். செலவுகள் என்பதும் நடந்துகொண்டுதான் இருக்கும். இரண்டுக்கும் நடுவில் ஏதாவது ஒரு ரூபத்தில் சேமிப்பும் நடக்கவேண்டும்.

சென்னையில் ஓட்டல் நடத்திவந்த கோதண்ட ராமன் என்ற பெரியவர் அதற்கு நல்ல உதாரணம். வயது சுமார் எழுபது இருக்கும். இரண்டு மகன்கள். இருவருமே நல்ல வேலைகளில் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இப்போது அவரும் அவர் மனைவியும் மட்டும்தான். வயதாகி விட்டதால் ஓட்டலை விற்றுவிட்டார். ரிட்டயர்ட் வாழ்க்கையை அனுபவித்தாலும் மகன்களிடம் இருந்து ஒரு பைசாகூட எதிர்பார்ப்பதில்லை. இப்போது அவருடைய தேவைகளை சமாளிப்பது ஓட்டல் தொழிலில் கொடிகட்டிப் பறந்தபோது சேமித்து வைத்த பணத்தில்தான்.

ஓட்டல் நடத்தியபோது தினமும் இரவில் கல்லா கட்டும்போது அன்றைய வியாபாரத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை ஓர் உண்டியலில் போட்டு வைப்பது கோதண்டராமனின் பழக்கம். என்ன அவசரத் தேவை வந்தாலும் அந்த உண்டியலில் கைவைக்க மாட்டார். உண்டியல் நிரம்பியதும், அந்தத் தொகை வங்கியில் அவருடைய தனிக் கணக்குக்குப் போய்விடும். அங்கும் பெருந்தொகை சேர்ந்ததும், அதை நிலமாகவோ, தங்கமாகவோ முதலீடு செய்துவிடுவார். வாழ்க்கையில் தன் தேவைகளுக்காக அவர் கடன் வாங்கியதே இல்லை. எல்லாமே சொந்த சம்பாத்தியமும், அதில் சேமித்ததும்தான்.

அவருடைய பழக்கம் ஓட்டலில் வேலை செய்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ள, அவர்களும் அவர்கள் சக்திக்கு ஏற்ப உண்டியலில் சேர்க்க ஆரம்பித்தார்கள். அட்வான்ஸ் கேட்டு தலையைச் சொறியும் ஊழியர்களே இல்லை. கோதண்டராமனின் லிவர் தத்துவம் நன்றாகவே வேலை செய்தது.

‘உண்டியலில் பணம் சேர்ப்பதால் அந்தப் பணம் கிணற்றில் போட்ட கல் மாதிரி அப்படியேதானே கிடக்கும். அதிலிருந்து எந்த கூடுதல் வருமானமும் கிடைக்காதே!’ என்று தோன்றலாம். உண்மைதான். ஆனால், எதுவுமே மிச்சமில்லாமல் செலவு செய்துவிட்டு தேவை ஏற்படும்போது தவித்து நிற்பதைவிட, சும்மாவாவது கொஞ்சத்தை உண்டியலில் சேர்த்து வைக்கலாமே! அது கொஞ்சம் பெருகியதும் அவசரத் தேவைக்கு ஒரு தொகையை எடுத்து வைத்துக்கொண்டு மீதிப்பணத்தை முறையாக எதிலாவது முதலீடு செய்யலாமே!

‘கோதண்டராமன் போல தொழில் செய்பவர்களுக்கு இது சாத்தியம். எங்களைப் போன்ற மாதச் சம்பளக்காரர்களுக்கு பட்ஜெட் என்ற ஒன்று இருக்கிறதே?’ என்று சிலர் யோசிக்கலாம். நாம் தான் முதல் செலவாக சேமிப்பைச் செய்யவேண்டும் என்று முன்பே பேசி இருக்கிறோமே! அதுபோக, சம்பளம் தவிரவும் சிலருக்கு ஓவர்டைம் வேலை செய்து காசு வரலாம். சிலருக்கு இன்ஷூரன்ஸ், வங்கி சேமிப்பு போன்றவற்றில் முதிர்வுத் தொகையோ வட்டியோ கிடைக்கலாம். அதை எல்லாம் சேமிப் புக்குப்பயன்படுத்தலாமே!

அப்படித்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. உண்டியல் சேமிப்பிலும் புதுமையைக் கையாளலாம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் டூ வீலர் வைத்திருக்கிறார். தினமும் காலையில் வண்டியை எடுக்கும்போதும், இரவில் வண்டியை நிறுத்தும்போதும் கிலோமீட்டர் எவ்வளவு என்பதை வண்டியின் மீட்டர் ரீடிங்கைப் பார்த்து குறித்து வைப்பார். இன்று எத்தனை கிலோமீட்டர் நமக்காக நம் வண்டி உழைத்திருக்கிறது என்ற கணக்குக்காக அல்ல!

அன்று எவ்வளவு கிலோமீட்டர் வண்டி ஓட்டியிருக்கிறாரோ, அத்தனை ஐம்பது பைசாவை கணக்கிட்டு ஓர் உண்டியலில் காசைப் போட்டு வைப்பார். இந்தச் சேமிப்பு ஒருவழிப்பாதை போல. இடையில் வண்டிக்கு ஏதாவது சர்வீஸ் செலவுகள் வந்தாலும் இதில் கையே வைக்கமாட்டார். நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு பார்த்தால், அந்த உண்டியல் காசு பல ஆயிரங்களாக மாறி இருந்தது. பழைய வண்டி இனி செமத்தியாகச் செலவு வைக்கும் என்னும் நிலையில் புதிய வண்டிக்குப் போகும்போது பணத்துக்குத் திண்டாடாமல் பழைய வண்டியையும் ஜோரான எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுத்துவிட்டு, புதிய வண்டிக்கு மாறிவிட்டார். வண்டியின் பயணம் மட்டுமல்ல... புதிய உண்டியலின் பயணமும் ஆரம்பமாகிவிட்டது.

டூ வீலர் என்றுதான் இல்லை. இதேபோல, அவர் வீட்டின் எல்லா உபயோகப்பொருட்களுக்கும் இது போல ஓர் உண்டியல் சேமிப்பு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த உண்டியல் எல்லோர் வீட்டிலும் இருக்கவேண்டிய ஒன்றுதான். என்ன... நீங்க வாங்கிட்டீங்களா..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism