ஸ்பெஷல் |
டிக்ஷ்னரி |
டெமிங் (விருது) - மிக உயர்ந்த தரத்தில் செயல்படும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் உலக அளவிலான விருது. அண்மைக்காலமாக இந்திய ஆட்டோ உதிரிபாக நிறுவனங்கள் பல இவ்விருதைப் பெறத் தொடங்கியுள்ளன. இதைத் தரத்துக்கான ‘ஆஸ்கர்’ என்றும் குறிப்பிடுகிறார்கள். கான்சன்டிரேடட் டிரிங் - திரவ வடிவத்தில் இருந்தாலும், சற்றே கெட்டியான பானம். இந்த பானத்துடன் மேலும் தண்ணீரைச் சேர்த்து அதை குடிக்க ஏற்றதாக மாற்ற வேண்டியிருக்கும். எம்பட்டட் எலக்ட்ரானிக்ஸ் - எலக்ட்ரானிக்ஸ் நுட்பத்தை அல்லது நுண்பொருளை வெளியில் தெரியாத வாறு உள்ளுக்குள் புதைத்து வைத்து ஒரு பொருளை வடிவமைப்பது. |
