Published:Updated:

தொழில் தொடங்கலாம், வாங்க!

தொழில் தொடங்கலாம், வாங்க!

தொழில் தொடங்கலாம், வாங்க!

தொழில் தொடங்கலாம், வாங்க!

Published:Updated:
தொழில்
தொழில் தொடங்கலாம், வாங்க!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொழில் தொடங்கலாம், வாங்க!
தொழில் தொடங்கலாம், வாங்க!

டுத்தர வர்க்கத்தின் அந்தஸ்தான அடையாளம், அலுவலகம் செல்பவர்களின் பட்ஜெட், பெண்களின் பயண சௌகரியம், இளைஞர்களின் பந்தயக்குதிரை, புகுந்து புறப்படும் புஷ்பவாகனம், வியாபாரிகளின் எடைதூக்கி... என இரண்டு சக்கர வாகனங்களுக்குத்தான் எத்தனை அவதாரம். அதன் அடுத்தகட்டமாக, நான்கு சக்கர வாகனங்களை நோக்கி படையெடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். வாகனம் என்பது வசதிதான்... ஆனால், இது எட்டாக் கனியாக இருக்கிற சிலருக்காகத்தான் கடைவிரித்துக் காத்திருக்கிறது செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்!

வண்டியை மாற்ற நினைப்பவர்களுக்கும் புதிய வண்டி வாங்க முடியாமல் பழைய வண்டியைத் தேடி வருபவர்களுக்கும் இடையே பாலமாக இருக்கும் இந்த செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டுக்கு இப்போது நல்ல மரியாதையும் தேவையும் பணம் கொட்டும் வாய்ப்பும் இருக்கிறது.

ஆக, அந்தத் தொழிலைத் தொடங்கலாமே!

இதற்காக பெரிய அளவில் அலுவலகமோ, ஷோரூம் இன்டீரியரோ எதுவும் தேவையில்லை. நீங்கள்தான் ஆபீஸே! மொபைல் ஆபீஸ். உங்களிடம் ஒரு மொபைலும் நல்ல பேச்சுத் திறமையும் இருந்தால் போதும். அதைவிட முக்கியமான முதலீடு வண்டிகள் பற்றிய ஞானம்தான். டூ வீலர்களில் எத்தனை வகைகள் இருக்கின்றன... கியர் வண்டி, கியர் இல்லாத வண்டிகள், இரண்டு ஸ்ட்ரோக், நான்கு ஸ்ட்ரோக் இரண்டுக்குமான வித்தியாசம், புதிய மாடல்கள் பற்றிய அறிவு... என்பது போன்ற விஷயங்களைக் கொஞ்சமேனும் தெரிந்து வைத்திருந்தால் போதும். குறைந்தபட்சம், வண்டிகளில் என்ன ரிப்பேர் வர வாய்ப்பிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

கார்களைப் பொறுத்த அளவில், என்ன காருக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். டூவீலரோ, கார்களோ புதிய வண்டிகளின் மார்க்கெட் விலை, எந்த வண்டிக்கு ‘ரீ-சேல் வேல்யூ’ உண்டு என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது பழைய வண்டிகளுக்கு விலை நிர்ணயம் செய்ய உதவும்.

உங்களுடைய வாடிக்கையாளர் யார்?

ங்கள் வாடிக்கையாளர்கள் உங்களைச் சுற்றியேதான் இருக்கிறார்கள். வண்டிகளை வாங்க வருபவர்கள் மட்டுமல்ல... வண்டிகளை விற்க இருப்பவர்களும் உங்கள் வாடிக்கையாளர்தான்.ஆரம்ப கட்டத்தில் உங்கள் நண்பர் வட்டாரத்தையே இதற்குப் பயன்படுத்துவது நல்லது. இப்போது இருக்கும் வண்டியை விற்று விட்டு, புதிதாக வாங்கத் திட்டமிட்டிருப்பார் உங்கள் நண்பர். உங்கள் உறவினருக்கோ மற்றவர்களுக்கோ மலிவான விலையில் ஒரு வண்டி தேவைப்படும். இந்த இரண்டு தகவல்களும் உங்களுக்குத் தெரிய வரும்போது, கைமாற்றிவிட்டால் இரண்டு தரப்பிலும் கமிஷன் பெற்று லாபம் பார்க்கலாம்.

விற்பவரிடம் சகாயமான விலைக்கு வாங்கினால்தான், அதற்குமேல் ஒரு லாபம் வைத்து இருவருமே மகிழ்ச்சியோடு வண்டியைக் கைமாற்றிக் கொடுக்கும் விலைக்கு பேரத்தைப் படிய வைக்க முடியும். அதேபோல கார் வாங்க ஆசைப்படுபவர் தன்னிடம் இருக்கும் டூவீலரை விற்க நினைப்பார். அவரே உங்களுக்கு டூ வீலரை விற்பவராகவும் கார் வாங்குபவராகவும் இரட்டை பிஸினஸ் கொடுப்பார்.

இப்போது, கல்லூரி செல்லும் மாணவர்கள், மாணவிகளிடையே டூ வீலர் மோகம் அதிகரித்திருக்கிறது. மத்திய தர குடும்பங் களிடையே கார் வாங்கும் ஆசை அதிகமாகி இருக்கிறது. ஆனால், குடும்ப பட்ஜெட்டில் திக்கித் திணறினாலும் புதிய வண்டி வாங்கிவிட ஆர்வம் காட்டுகிறவர்கள் எல்லோருமே உங்கள் வாடிக்கையாளர்கள்தான்!

பிஸினஸ் எப்படி வரும்..?

வா டிக்கையாளர்களைத் தெரிந்து கொள்வது எளிது. உங்கள் நண்பர்களின் வீட்டுக்குச் செல்லும்போது அவருக்கோ, அவரது குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ வண்டி வாங்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதன் மூலமும் பழைய வண்டி வைத்திருப்பவர்களை புதிய வாகனத்துக்கு மாற்ற முயற்சிப்பதன் மூலமும் அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம். இந்தத் தொழிலில் இறங்கிய உடனே, ஒருபக்கம் வண்டி வாங்குபவராகவும் இன்னொரு பக்கம் வண்டி விற்பவராகவும் இருதரப்பிலும் இருந்து பேசும் திறனை வளர்த்துக் கொள்வது இயல்பாகவே கைக்கு வந்துவிடும்.

இது தவிரவும் செய்தித்தாள் விளம்பரங்களில் வெளியாகும் வண்டி விற்பனை செய்ய வாங்கும் ஆர்வம் கொண்டோரை அணுகுவதும் ஒருவகை. ஞாயிற்றுக்கிழமைகளில் இதுபோன்ற விளம்பரங்கள் அதிகமாக வெளியாகின்றன. அதை அதிகாலையிலேயே படித்து, உடனே அந்த எண்ணுக்கு போன்போட்டு, வண்டியைப் பார்க்க ஒரு நேரம் வாங்கிக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஐந்து நபர்கள் வரை சந்திக்க திட்டம் வைத்துக் கொள்ளலாம். வண்டி பிடித்துப் போய் நல்ல விலைக்கு விற்கமுடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டால், உடனே சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் வண்டிக்கான டோக்கன் அட்வான்ஸாக 500 அல்லது 1,000 ரூபாயைக் கொடுத்து புக் செய்து வைத்துக்கொள்ளலாம்.

வண்டிகள் தேவைப்படும் நபர்களை அழைத்துச்சென்று காட்டி, பேரத்தை முடித்துவிடலாம். ஒரு ஞாயிற்றுக்கிழமை பார்க்கும் வண்டிகள் அந்த வாரம் முழுக்கவே உங்களுக்கு வேலை தருவதாக இருக்கும். அடுத்த ஞாயிறு, அடுத்த செட் என்று திட்டமிட்டுக் கொள்ளலாம்.

அடுத்த கட்டமாக, உங்கள் ஊரிலேயே இருக்கும் வாகன விற்பனையாளர்களுடன் நட்பை அதிகப்படுத்திக்கொண்டு, அவர் களிடம் இருக்கும் வண்டிகளை உங்கள் கஸ்டமர்களுக்குக் கொடுக்க முயற்சிக்கலாம்.

தொழில் தொடங்கலாம், வாங்க!


எதுவெல்லாம் லாபம்..?

ண்டிகளைக் கைமாற்றிவிடும் வருமானம் என்றுதான் இல்லை. வண்டி வாங்குவதற்கு லோன் ஏற்பாடு செய்து கொடுப்பதன் மூலம் கடன் வழங்கும் தனியாரிடம் இருந்து தனியாக கமிஷன் பெற முடியும். சராசரியாக தினம் இரண்டு டூ வீலர்கள் விற்றுக் கொடுத்தால்கூட மாதத்துக்கு 25 ஆயிரத்துக்கு குறைவில்லாமல் சம்பாதிக்க முடியும். கார்கள் விற்பனை சூடுபிடித்துவிட்டால் லாபம் கொட்ட ஆரம்பித்து விடும்.

ஒரு ஓனர் பராமரிப்பிலேயே இருக்கும் வாகனங்களை வாங்கி விற்பதே சிறந்தது. இரண்டு, மூன்று ஓனர்களை தாண்டி வந்த வண்டிகளை வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுவார்கள். அதன் விலையும் குறை வாகவே போகும். வாய்பேரம் தானே என்று எண்ணக்கூடாது. இத்தொழில் பொய் வாக்குறுதி கள் சீக்கிரமே பல்லிளித்துவிடும். எனவே நேர்மை இத்தொழிலுக்கு மிகவும் முக்கியம்.

எவ்வளவு முதலீடு தேவை..?

ரம்பத்தில் முதலீடு பெரிய அளவில் தேவைபடாது. ஓரளவு விஷயங்கள் தெரிந் பின் கையில் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை வைத்துக்கொண்டால் போதும். நல்ல வண்டிகள் குறைந்த விலைக்கு வரும் போது முன்பணம் கொடுத்து வாங்கி வைத்து காத்திருந்து நல்ல விலை கிடைக்கும்போது விற்கலாம். வண்டியின் முழுவிலையையும் கொடுத்து வாங்கிப்போடுவது கூடுதல் லாபம் தரும். அதற்காக, வட்டிக்கு பணம் வாங்கி இத்தொழிலில் இறங்கக்கூடாது.

எதில் கவனமாக இருக்க வேண்டும்?

ண்டியை வாங்கும்போது வண்டியின் ஆர்.சி புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதைச் சோதித்துக்கொள்ள வேண்டும். அதாவது இன்ஜின் நம்பர், சேஸிஸ் நம்பர் போன்றவை சரியாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டியது முக்கியம். இல்லையென்றால் உங்களிடம் வண்டி வாங்குபவர் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்ளும் போது நீங்களும் பதில் சொல்லவேண்டிய சூழல் உருவாகிவிடும்.

அதோடு வண்டி மாடல், எந்த வருடம் தயாரிக்கப்பட்டது, இன்ஷூரன்ஸ், டேக்ஸ் விவரங்கள், வண்டியின் உரிமையாளர் பெயர், முகவரி, போட்டோ, வயது, அடமானத்தில் உள்ளதா என ஆர்.சி புத்தகத்தில் அலசிப் பார்த்துவிடுவது நல்லது. ஆர்.சி. புத்தகம்தான் வண்டியின் ஜாதகம். மாற்றங்கள் செய்யப்பட்டது அந்தப் புத்தகத்தில் பதிவாகாவிட்டால் அந்த வண்டியைத் தவிர்த்துவிடுங்கள்.

வண்டி விற்றதற்கான ரசீது, பெயர் மாற்றம் ரசீது, இன்ஷூரன்ஸ், டேக்ஸ் ரசீது அனைத்து ஒரிஜினல் டாகுமென்டுகள் மற்றும் வண்டியை விற்றதற்கான டெலிவரி சான்று ஆகியவற்றை விற்பவரிடம் இருந்து வாங்குபவர் வசம் ஒப்படைக்க வேண்டியதும் உங்கள் கடமை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism