Published:Updated:

தேன் நெத்திலி... திகட்டாத வருமானம்!

தேன் நெத்திலி... திகட்டாத வருமானம்!

தேன் நெத்திலி... திகட்டாத வருமானம்!

தேன் நெத்திலி... திகட்டாத வருமானம்!

Published:Updated:
தொழில்
தேன் நெத்திலி... திகட்டாத வருமானம்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேன் நெத்திலி... திகட்டாத வருமானம்!
தேன் நெத்திலி... திகட்டாத வருமானம்!
தேன் நெத்திலி... திகட்டாத வருமானம்!

ருவாடு விற்று கோடீஸ்வரர் ஆக முடியுமா? விழுப்புரத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு ஆகியிருக்கிறார். இவருடைய கருவாடு பிஸினஸின் டர்ன் ஓவர் ஐந்துகோடி ரூபாய்!

சாதாரண மீனவக் குடும்பத்தில் பிறந்த சாமிக்கண்ணு இன்று பெண்கள் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, பள்ளிக்கூடம் மருத்துவ மனை என்று பல சேவை கள் செய்து வருகிறார்.

‘‘மதுராந்தகம்தான் என் ஊரு. எஸ்.எஸ்.எல்.சி-யில் ஃபெயிலானதும் விழுப்புரத்துக்குப் போயிட்டேன்.

அங்கே எங்க சித்தப்பா கருவாட்டு வியாபாரம் பண்ணிட்டு இருந்தார். ஒருநாள் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். அந்தநேரம், வந்து இறங்கிய ஒரு வேகன் கருவாடும் பரபரப்பாக விற்றுப்போனது. அந்த வேகனில் இருந்த விலாசத்தை வைத்து மும்பையில் விசாரித்து விவரம் கேட்டேன். சரியான தகவல் கிடைக்கலை.

நேரடியா போய் பார்க்கலாம்னு நானும் என் நண்பனும் மும்பைக்குக் கிளம்பினோம். அப்ப எனக்கு பதினஞ்சு வயசு. கடல் மாதிரி இருந்தது மும்பை கருவாடு மார்க்கெட். அங்கே ஒரு கடையில், ‘ஸ்கூல்டூர் வந்திருக்கோம். எங்கப்பாவுக்கும் இந்த பிஸினஸ்தான். அதான் பார்க்க வந்தேன்’னு சொல்லி விலையை விசாரிச் சேன். என்னோட ஆர்வத்தைப் பார்த்துட்டு அவர் அந்த பிஸினஸ் பத்திச் சொன்னார். அங்கே விலை ரொம்ப கம்மியா இருந்தது. அதை வாங்கிட்டு வந்து இங்கே வித்தா நல்ல லாபம் கிடைக்கும்னு தோண... ‘எனக்கு 5 வேகன் கருவாடு வேணும். ஒவ்வொண்ணா அனுப்புங்க. நான் இப்ப பணம் கொண்டு வரல. ஊருக்குப் போய் பணம் அனுப்ப றேன்’னு ஒரு நம்பிக்கையில சொல்லிட்டேன்.

தேன் நெத்திலி... திகட்டாத வருமானம்!

ஊருக்குத் திரும்பி வந்து, அப்பாகிட்ட என் ஆசையைச் சொன்னேன். ‘பணம் எல்லாம் தர முடியாது. நீ சின்னப் பையன்’னு சொல்லிட்டாரு. அப்புறம் ஒரு வழியா அம்மா மூலம் பேசி கெஞ்சிக் கூத்தாடி சம்மதம் வாங்கிட்டேன். வந்த வேகத்தில் முதல் வேகன் கருவாடு வித்துத் தீர்ந்ததும் மனசுல ஒரு நம்பிக்கை வந்தது. அப்படியே பிக்-அப் பண்ணிக்கிட்டேன். அந்த வேகத்தோட இன்னும் ஓடிட்டிருக்கேன்’’ என்றார் சாமிக்கண்ணு.

‘‘நான் 10% லாபம்தான் வைப்பேன். இதனால என்னைத்தேடி அதிகம் பேர் வர்றாங்க. அதுதான் வியாபார ரகசியம்’’ என்று சொல்லும் சாமிக்கண்ணு, சமீபத்தில் நெத்திலி சிப்ஸ் ஒன்றை இங்கே அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

‘‘சிங்கப்பூர்ல எல்லாம் மீனை காப்பர்நெட்ல காய வைப்பார்கள். அதனால், மண் ஒட்டாது. சுகாதாரமானது. அதில் தேன் போன்ற பொருட்களைச் சேர்த்து நெத்திலி சிப்ஸ் பண்ணி விற்பாங்க. அது அங்கே ரொம்ப பிரபலம். அதேபோன்ற சுவையை நம் மக்களுக் கும் கொடுக்கவேண்டும் என்பதற்காக என் மகன் செந்தில் துணையோடு பெரிய ஆராய்ச்சியே நடத்தினேன்.

எங்கள் தயாரிப்பை மைசூரில் இருக்கும் ‘சென்ட்ரல் ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ ( central food corporation of India ) அங்கீகரித்து பதிவு செய்திருக்கிறது. நெத்திலி மீனை தாய்லாந்து, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். நம் ஊர் சுவைக்கு ஏற்றபடி மசாலா சேர்க்கிறோம். கேரளாவிலும் ஸ்ரீலங்கா, நேபாளம், துபாய் போன்ற நாடுகளிலும் அதிகமாக விற்பனை ஆகிறது.

நெத்திலிதான் என்றில்லை, நம்மூர் கடற்பகுதிகளில் கிடைக்கும் சில சிறிய வகை மீன்களைக்கூட இதேபோல தயாரிக்கமுடியும். கருவாடு விற்பது கவுரவக் குறைவு என்ற எண்ணம் நம் இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், இளைஞர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிற தொழில் இது!

எந்தத் தொழில் செய்தாலும் பொதுநோக்கம் வேண்டும். தொழிலாளர்களிடம் நெருக்கமா இருக்கணும். அவங்களுக்கு உறுதுணையா நாம இருப்போம் என்கிற நம்பிக்கையை ஊட்டுவது முக்கியம்’’ என்றார் சாமிக்கண்ணு.

உழைப்பு மட்டுமல்ல... இந்த நோக்கமும்தான் சாமிக்கண்ணுவை உயர்த்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism