Published:Updated:

டிரிங்... டிரிங் வருமானம்!

டிரிங்... டிரிங் வருமானம்!

டிரிங்... டிரிங் வருமானம்!

டிரிங்... டிரிங் வருமானம்!

Published:Updated:
தொழில்
டிரிங்... டிரிங் வருமானம்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிரிங்... டிரிங் வருமானம்!
டிரிங்... டிரிங் வருமானம்!
டிரிங்... டிரிங் வருமானம்!

வா யுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதற்குச் சரியான தொழிலாகப் பெருகி வருகிறது போன் மூலம் தகவல்களைத் தரும் ‘தொலைபேசி தகவல் சேவை நிறுவனங்கள்’தான். வணிகம், வியாபாரம் தொடர்பான தகவல்கள் எப்போது தேவைப்பட்டாலும் அதைத் தந்து உதவும் நெட்வொர்க்கோடு காத்திருந்து சேவை செய்பவர்கள் இவர்கள். இதற்கு கொஞ்சம் தகவல்கள், அதைத் தேவையானவர்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ள ஒரு தொலைபேசி எண்... இந்த இரண்டும் இருந்தால் போதும்!

சமீபகாலமாக இந்தியாவின் முக்கியமான நகரங்களில் பிரபலமடைந்து வரும் தொழில் இது. ஒரு நம்பருக்கு போன் செய்தால் தங்களுக்கு வேண்டிய தகவல்கள் எல்லாம் கிடைக்கும் என்பது எத்தனை அருமையான வசதி. கிட்டத்தட்ட ‘யெல்லோ பேஜஸ்’ என்கிற வணிகத் தகவல் கொண்ட டெலிபோன் டைரக்டரி மாதிரியான சேவை இது. நகரத்தில் எது எங்கே கிடைக்கிறது என்று புரியாதவர்களுக்கு இதுபோன்ற சேவை மிகவும் பயன்தரும்.

‘திருப்பத்தூருக்கு ஆம்னி பஸ் எந்தெந்த இடங்களில் இருக்கிறது... ஒரு மணிநேரத்தில் ரப்பர் ஸ்டாம்ப் செய்து தரும் கடை வடபழனி பகுதியில் ஏதாவது இருக்கிறதா... ஹோம் டெலிவரி கொடுக்கிற ஹோட்டல் எங்கெங்கே உள்ளது... என்னிடம் இருக்கிற ஒரு கவரை குறிப்பிட்ட இடத்தில் சேர்க்க ஏதாவது சர்வீஸ் இருக்கிறதா சென்னையில்..?’ - இப்படி ஒரு குறிப்பிட்ட நகரத்துக்குள் இருக்கும் எந்த தகவலையும் கேட்டுப் பெறலாம். இதற்கெல்லாம் பதில் சொல்ல பொறுமையான ஊழியர்கள் இருக்கிறார்கள்.

இப்படியான சர்வீஸ் தமிழகத்தில் குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டுமே இருக்கிறது. சென்னையில் நான்கு சேவைகள் இருக்கின்றன. ஞாபக மறதிக்காரர்களும் மறந்துவிடாத தொலைபேசி எண்களாகத் தேர்வு செய்து கொள்வது முக்கியம். சென்னையில் இந்தச் சேவையை முதலில் ஆரம்பித்தவர்கள் ‘டயல்-எ-சர்வீஸ்’ நிறுவனத்தார்.

டிரிங்... டிரிங் வருமானம்!
டிரிங்... டிரிங் வருமானம்!

அதன் சென்னை கிளை மேலாளர் டேவிட்டைச் சந்தித்துப் பேசினோம். ‘‘தொழிலாகட்டும், சர்வீஸ் ஆகட்டும் எதிலும் வெற்றியடையத் தேவையானது பணம் அல்ல ஐடியா தான்! நாங்கள் விற்கும் பொருளே இந்தக் கவர்ச்சியான போன் நம்பர்தான். அதை வைத்துதான் தொழில் பயணமே! இதை மனதில் வைத்துதான் பி.எஸ்.என்.எல் நிறுவனத் திடம் இதுபோன்ற ஒரு எண்ணை ஸ்பெஷலாகக் கேட்டு வாங்கினோம்.

கடந்த எட்டு வருடங்களாகச் செய்து வருகிறோம். தொழில்கள், அவை வழங்கும் சர்வீஸ்கள், அலுவலகங்கள், வியாபார ஸ்தலங்கள் (ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், பிஸினஸ் சென்டர்), மருத்துவமனைகள், ஹோட்டல், தீம்பார்க்குகள் போன்றவற்றின் முகவரிகள், தொலை பேசி எண்களை எதிர்முனையில் இருந்து தொடர்பு கொண்ட பத்து விநாடிக்குள் தரும் அளவுக்கு மின்னல் வேக நெட்வொர்க் வைத்திருக்கிறோம். ஒரு தகவலைத் தரமுடியவில்லை என்றால் நாங்கள் தோற்றுவிட்டோம் என்று பொருள்’’ என்று தொழிலை ஒரு சவால் மாதிரி எடுத்துக்கொண்டு செயல்படும் தன் டீம் பற்றிச் சொல்கிறார் டேவிட்.

‘‘ஒரு நாளுக்கு சுமார் 14,500 கால்கள் எங்களுக்கு வருகிறது. இதற்காக மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் டேட்டா பேஸ்களை சேகரித்து வைத்து, அந்தத் தகவல்களை விரல் நுனியில் வைத்து தருகிறோம். ஆரம்ப நாளில் இருந்த தகவல்களைவிட, இப்போது பலமடங்கு டேட்டாக்கள் எங்களிடம் உள்ளன. இதுதான் எங்கள் சொத்து. 2000 ஆண்டில் அதிக டேட்டா பேஸ்களை வைத்துள்ள நிறுவனம் என்று லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் எங்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.

டிரிங்... டிரிங் வருமானம்!

இந்த வேலை என்பது எப்போதுமே சக்கரம் போல சுற்றிக்கொண்டே இருப்பது. போன் நம்பர்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். அதனை அப்டேட் செய்யவேண்டியது முக்கியம். அவ்வாறு செய்யாவிட்டால் எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். மக்களின் தொலைபேசி அழைப்புகள்தான் எங்களது கோயில் மணி. எந்தளவுக்கு கால்கள் வருகிறதோ அந்தளவுக்கு வளர்ச்சி இருக்கிறது என்று அர்த்தம்’’ என்கிறார் டேவிட்.

இந்தத் தகவல்களுக்காக எந்தவித கட்டணமும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிப்பதில்லை. சரி, அப்படி யானால், இதில் இவர்களுக்கு என்ன லாபம்..?

‘‘வியாபார விசாரணைகளைப் பொருத்து, தொடர்புடைய வியாபார நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்கிறோம். அதற்கு வருட கட்டணமாக வசூலித்து, எங்களது தேவைகளை சரி செய்துகொள்கிறோம். சேவைகளைக் கேட்கும் வாடிக்கையாளரின் தொலைபேசி எண், இ-மெயில் முகவரிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கிவிடுவோம். இந்த தொலைபேசி எண்ணுள்ள வாடிக்கையாளர் உங்களது நிறுவனத்தைத் தேடுகிறார். அவரைத்தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்துவிடுவோம். இதனால் அவர்களுக்கு ஒரு நேரடியாக ஒரு கஸ்டமர் கிடைத்துவிடுவார். அதன்மூலம் அவர் தொழிலும் பெருகும். எங்களுக்கும் வருமானமும் கிடைக்கும். இப்படி சென்னையில் மட்டும் 4,000 பிஸினஸ் (நிறுவன) வாடிக்கையாளர்கள் எங்களிடம் உள்ளனர்.

எங்களது சேவை வெறும் தகவல்களோடு மட்டுமல்ல... தேவையைச் சொன்னால் போதும், இரவு பகல் பாராமல் உதவி செய்யக் காத்திருக்கிறோம்.

டிரிங்... டிரிங் வருமானம்!

எந்த தியேட்டரில் என்ன படம் நடக்கிறது, விளையாட்டு நிகழ்ச்சிகள், வியாபார கண்காட்சிகள், மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் என அனைத்தையும் கூடுதலாகத் தருகிறோம்’’ என்ற டேவிட்,

‘‘அடுத்தபடியாக இந்தியா முழுவதுக்கும் ஒரே தொலைபேசி எண்ணாகக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். தற்போது, சென்னை தொடர்பான தகவல்கள் மட்டுமே பெறமுடியும். அதை மாற்றி, நாட்டின் எந்த மூலையில் இருந்தும் எந்த பகுதியில் உள்ள போன், முகவரி கேட்டாலும் கிடைக்கும்படியான ஒரு ஏற்பாடு செய்து வருகிறோம். அதற்காக 1947 என்ற தொலைபேசி எண்ணை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் பேசி வருகிறோம்.

முதலில் மும்பையில் 1994-ம் ஆண்டு ஆரம்பித்தோம். அதன் பிறகு சென்னையில் 1998-ல் ஆரம்பித்தோம். சென்னையில் 275 பேர் கொண்ட குழுவுடன் மூன்று ஷிஃப்ட்களில் இடைவிடாமல் வேலை செய்கிறார்கள். ஐ.ஆர்.ஓ, டெலி மார்க்கெட்டிங் மற்றும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் என மூன்று பிரிவுகளாக இயங்கு கிறார்கள். ஐ.ஆர்.ஓ-வில் வேலை பார்ப்பவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் மற்றும் ஊக்கத்தொகை எனவும், டெலி மார்க்கெட்டிங்கில் வேலை பார்ப்பவர்களுக்கு 7,000 ரூபாய் எனவும், மார்க்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவ் களுக்கு 8,000 ரூபாய் எனவும் சம்பளம் தருகிறோம். இந்தப் பிரிவுகளில் பெண்களுக்கே முதலிடம்.

மார்க்கெட்டிங்குக்கு அதிகமாக ஆண்களே வேலை செய்து வருகின்றனர். பொதுவாக +2 படித்திருந்தாலே போதும். ஆங்கிலம், தமிழ் நன்றாக பேசவும், டைப்பிங் செய்யவும் தெரிந்திருக்கவேண்டும். இந்த வேலைகளுக்கு வருபவர்களை நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்கிறோம். விருப்பப்பட்டால் எங்களை அணுகலாம்’’ என்கிறார் டேவிட்.

இதுபோன்ற வேலைவாய்ப்புகள் ஒருபக்கம் இருக்க... தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகரங்களிலும் நீங்கள் இதை முயன்று பார்த்து ஆர்வம் கொண்ட பலருக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியுமே! உங்கள் நகருக்கு சேவையை ஆரம்பிக்குமுன் எக்ஸிபிஷன், விழாக்கள் போன்ற வியாபார நிறுவனங்கள் பலரும் கூடுகிற இடங்களில் உங்கள் சேவைத் திறமையை சோதித்துப் பார்க்கலாம். ஒரு சிறிய பகுதியில் சிறப்பாகச் செயல்பட்டு ஜெயித்துவிட்டால், அடுத்து, மேன்பவர், வங்கிகள் என்று ஒரு குறிப்பிட்ட செக்டாருக்கான சேவை என்று அடுத்தடுத்து விரிவுபடுத்திக்கொண்டே போகமுடியும். முயற்சியுங்கள்... முன்னேறுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism