Published:Updated:

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

Published:Updated:
தொழில்
பிஸினஸ் குட்டிக்கதை
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிஸினஸ் குட்டிக்கதை

ளிகைக்கடையில் பரபரப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

‘‘ஒரு ரூபாய்க்குப் பச்ச மிளகாய் கொடுங்க கடைக்காரரே!’’ என்று ஒரு பெண்மணி கேட்க, தராசுத்தட்டில் மிளகாயை அள்ளிப்போட்டார் முதலாளி. அவர் வைத்த எடைக்கு ஒருமிளகாய் அதிகமாக இருந்தது. அதை எடுத்து கூடையில் போட்டுவிட்டு, தராசில் இருந்த மிளகாயை அந்தப் பெண்ணின் பையில் போட்டார்.

‘‘என்னமோ தங்கத்தை எடைபோடற மாதிரி தராசிலே இப்படி நூல் பிடிக்கிறீங்களே... ஒரு மிளகாய் கூடுதலாப் போட்டா குறைஞ்சா போயிடுவீங்க?’’ என்று முணுமுணுத்தபடியே அந்தப் பெண், காசைக் கொடுத்துவிட்டுப் போனாள்.

கடை ஊழியனான சுந்தருக்கும் அந்தப் பெண்மணியின் புலம்பல் நியாயமானது தானோ என்று தோன்றியது. நம் முதலாளி ஏன் இத்தனை கஞ்சத்தனமாக இருக்கிறார்..? என்றுகூட எரிச்சல் வந்தது.

அடுத்தநாள் காலை. கடையைத் திறந்தவுடன் முதல் வேலையாக கூடையில் இருந்த அழுகிப்போன மிளகாயை எடுத்து குப்பையில் கொட்டச் சொன்னார் முதலாளி. தயங்கியபடியே தனக்கு ஏற்பட்ட கோபத்தை, குழப்பத்தை முதலாளி யிடம் கேட்டே விட்டான் சுந்தர்.

‘‘வீணாகக் குப்பையில் கொட்டும் மிளகாயை நேற்றே அந்த அம்மாவுக்குக் கொடுத்திருந்தால், நம் கடையைப் பற்றி நாலுபேரிடம் பாராட்டிச் சொல்லி இருப்பார். வாடிக்கையாளர்கள் கூட்டத்தை அதிகப்படுத்தியிருப்பாரே!’’ என்று கேட்டான்.

‘‘இந்த சின்ன சூட்சுமம்கூட முதலாளிக்குத் தெரியவில்லையே என்று யோசிப்பது ஒரு கோணம். அப்படிக் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்றுகூடச் சொல்வார்கள். ஆனால், தொழில் என்று வரும்போது அதில் பாவ புண்ணியம் எல்லாம் பார்க்கக்கூடாது. இன்று அந்த அம்மா கேட்பதற்காக ஒரு பச்சைமிளகாயைக் கொடுத்தால், நாளைக்கும் அவரது மனது அதேபோன்ற இலவசத்துக்கு ஏங்கும். எதிர்பார்க்கும். கொடுக்கவில்லை என்றால், அவரிடமிருந்து எதையோ பறித்த உணர்வு வந்து, திட்ட ஆரம்பித்துவிடுவார். கடைப்பக்கம் வருவதையும் நிறுத்த வாய்ப்ப்பு உண்டு.

நாமே ஏன் ஒரு தவறுக்கு வழி வகுக்கவேண்டும். எடையிலே, சுத்தமாக நியாயமாக இருப்பதுதான் தொழிலுக்கு முக்கியம். தவறான பாதைக்குத் தூண்டாத இதுவும் ஒருவகையில் தொழில் தர்மம்தான். இதுதான் தொழிலின் சூட்சுமம். புரிகிறதா?!’’ என்றார் முதலாளி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism