Published:Updated:

மின்சாரம் ஷாக்கா... லாபமா?

மின்சாரம் ஷாக்கா... லாபமா?

மின்சாரம் ஷாக்கா... லாபமா?

மின்சாரம் ஷாக்கா... லாபமா?

Published:Updated:
முதலீடு
லாபம் தரும் பங்குகள்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மின்சாரம் ஷாக்கா... லாபமா?
மின்சாரம் ஷாக்கா... லாபமா?

ஃபிளக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

( FLEX ) ரூ.68.80

மின்சாரம் ஷாக்கா... லாபமா?

டெ ல்லியில் தலைமையகம் கொண்டுள்ள இந்த நிறுவனம் 1988-ல் ஃபிளக்ஸ் குழுமத்தின் மற்ற சில நிறுவனங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு, பேக்கேஜிங் பொருட்கள் உற்பத்தியில் இறங்கியது. வளைந்து கொடுக்கும் பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்களின் மொத்த மார்க்கெட்டில் 30 சதவிகிதத்துக்கு மேல் இப்போது இந்நிறுவனத்திடம் உள்ளது. இத்துடன் பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் ஃபிலிம்கள் ஏற்றுமதியில் ஈடுபட்டுவருகிறது இந்நிறுவனம். மேலும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு ஒன்றும் இந்நிறுவனத்தில் செயல்படுகிறது. கடந்த ஆண்டு துபாயில் பேக்கேஜிங் பொருள் உற்பத்தி ஆலை ஒன்றை அமைக்க இந்நிறுவனம் 50 மில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்துள்ளது.

இடையில், இந்நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் வரி ஏய்ப்பு முயற்சியில் ஈடுபட்டு லஞ்ச ஊழல் குற்றச் சாட்டில் சிக்கியதும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். இதுதவிர, மூன்றாண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய தீ விபத்து, இந்த நிறுவனத்தின் நொய்டா தொழிற் கூடத்தில் கணிசமான நஷ்டத்தை உண்டாக்கியது.

மின்சாரம் ஷாக்கா... லாபமா?

கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் இது 304.58 கோடிக்கு விற்பனை செய்து, 11.61 கோடி நிகர லாபமாகப் பெற்றுள்ளது. இதன்மூலம் ஒரு பங்கு வருமானமாக ரூபாய் 2.37 பெற்றுள்ளது. இந்தப் பங்குகளின் புத்தக மதிப்பு 74 ரூபாய். பேக்கேஜிங் துறைக்கான சராசரி பி/இ விகிதமான 15.5 உடன் ஒப்பிடும்போது இந்நிறுவன பி/இ விகிதம் 7.26 என்பது குறைவுதான்.

பேக்கேஜிங் பொருட்களுக்கான தேவை மற்ற தொழில்களின் வளர்ச்சியைச் சார்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இப்பங்கு நம்பிக்கை தருகிறது. இது ஓராண்டு இலக்கில் நல்ல லாபத்தைப் பெற்றுத் தர வாய்ப்புகள் உள்ளன.

பிஏஜி ஃபிலிம்ஸ்

( BAGFILMS ) ரூ 11.85

மின்சாரம் ஷாக்கா... லாபமா?

செ ய்தி மற்றும் ஊடகத்துறையில் உள்ள வாய்ப்புகளை குறிவைத்து 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிறுவனம் இது. எலக்ட்ரானிக் மற்றும் மல்ட்டிமீடியா வளர்ச்சியில், குறிப்பாக சின்னத்திரையில் துடிப்புடன் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், தற்போது டி.வி. நிகழ்ச்சிகள், சினிமா தயாரிப்பு, எஃப்.எம் ரேடியோ போன்றவற்றுடன் இணையத்திலும் கால்பதித்துள்ளது. ஹிந்தி சீரியல்கள், செய்தி தொடர்பான நிகழ்ச்சி தயாரிப்பிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகிறார்கள். ஹிந்தியில் ஒன்றும், பஞ்சாபியில் ஒன்றும் என இரண்டு திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. அத்துடன், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் 10 நகரங்களில் எஃப்.எம் ரேடியோ நிகழ்ச்சிகளை வழங்க லைசென்ஸ் பெற்றுள்ளது. தற்போது டெல்லி, மும்பை, சென்னை என மூன்று இடங்களில் அலுவலகம் அமைத்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

மின்சாரம் ஷாக்கா... லாபமா?

கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் இது 9.07 கோடிக்கு விற்பனை செய்து, 96 லட்சம் ரூபாய் நிகர லாபம் பார்த்துள்ளது. இதன் மூலம் ஒரு பங்கு லாபம் 0.16 ரூபாய். 2 ரூபாய் முக மதிப்புகொண்ட இந்தப் பங்கின் இன்றைய புத்தக மதிப்பு 7.5 ரூபாய். இன்றைய நிலையில் இந்தப் பங்கின் பி/இ விகிதம் 18.52. இது, இத்துறையின் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பிடும் அளவில் இல்லை என்றாலும், இதன் லேட்டஸ்ட் முயற்சியான எஃப்.எம்-மில் நன்றாக கால் ஊன்ற வாய்ப்புகள் உள்ளன. அது இதன் லாபத்தை அதிகரிக்கும். இந்தப் பங்கு அடுத்த 6 மாதம் முதல் ஓராண்டுக்குள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டும் எனச் சொல்லலாம்.

பிரிகால்

( PRICOL ) ரூ 40.00

மின்சாரம் ஷாக்கா... லாபமா?

கோ வையைச் சேர்ந்த இந்நிறுவனம் 1975-ம் ஆண்டு டாஷ் போர்ட் உற்பத்தியில் தொடங்கியது. இன்றைக்குப் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான சென்ஸார்கள் தயாரிப்பு, ஆட்டோ உபகரணங்கள் உற்பத்தி என்று கிளை விரித்திருக்கிறது. இந்நிறுவனத்துக்கு ஹரியானாவிலும் ஓர் உற்பத்திக்கூடம் உள்ளது. இது 1988-ல் உற்பத்தியைத் தொடங்கியது. இன்று டெல்கோ, எச்சர், கைனடிக் ஹோண்டா, எஸ்கார்ட்ஸ், அசோக் லேலண்ட், மஹேந்திரா அண்ட் மஹேந்திரா, பஜாஜ் உள்ளிட்ட பல வாகன உற்பத்தி நிறுவனங் களுக்கு உதிரிபாக சப்ளையராக உள்ளது.

இருசக்கர வாகனங்களுக்கான டிஸ்க் மற்றும் அமெரிக்க நிறுவனத்துடன் சேர்ந்து வாகன செக்யூரிட்டி சிஸ்டம் போன்றவற்றை லேட்டஸ்ட்டாக சந்தைக்குக் கொடுத்துள்ளது. விரைவில் இந்தோனேஷியாவில் ஓர் உற்பத்திக் கூடத்தை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. மேலும் தற்போது ‘எம்பட்டட் எலக்ட்ரானிக்ஸ்’ என்ற புதிய துறையில் இறங்க ஆர்வம் காட்டி வருகிறது.

மின்சாரம் ஷாக்கா... லாபமா?

கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் இது 117.69 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து 8.16 கோடியை நிகர லாபமாகப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு லாபத்துடன் ஒப்பிடும்போது குறைவுதான். இதனடிப்படையில் இந்தப் இதன் ஒரு பங்கு லாபம் ரூ 0.91. அத்துடன் முழுஆண்டுக்கான பி/இ 10.99. ஒரு ரூபாய் முகமதிப்புகொண்ட இப் பங்கின் இன்றைய புத்தக மதிப்பு 13.9.

அண்மை பட்ஜெட், ஆட்டோ துறைக்குச் சாதகமாக இருப்பதாலும் ஆட்டோ துறையில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் பார்க்கும்போதும் இந்தப் பங்குகள் சிறப்பான லாபத்தை ஈட்டித்தரும் என நம்பிக்கை வருகிறது.

மோட்டார் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனி

( MICO ) ரூ.3,081.00

மின்சாரம் ஷாக்கா... லாபமா?

‘மை க்கோ’ என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் இந்நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ உதிரிபாக நிறுவனம். உலகின் முன்னணி ஆட்டோ உதிரிபாக நிறுவனமான ஜெர்மனி நாட்டின் ‘ராபர்ட் பாஷ்’ இதன் தாய் நிறுவனம். இப்போதும் ‘மைக்கோ’வின் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்குகள் தாய் நிறுவனத்திடம்தான் உள்ளது. இன்ஜெக்ஷன் பம்ப், வால்வ், பில்டர்ஸ், ஸ்டார்ட்டர் மோட்டர், ஸ்பார்க் பிளக் என பலவும் இந்நிறுவனத்தில் உற்பத்தியாகிறது. கடந்த சில ஆண்டுகளாக, கார்களில் பயன்படுத்தப்படும் எம்பி-3 பிளேயர், காம்பாக்ட் டிஸ்க் டிரைவ் போன்றவற்றையும் உற்பத்திசெய்யத் தொடங்கி உள்ளது. இதன் தொழிற்சாலைகள் பெங்களூர், நாசிக் என இரண்டு இடங்களில் உள்ளது.

மின்சாரம் ஷாக்கா... லாபமா?

இந்நிறுவனம் கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 822.29 கோடிக்கு விற்பனை செய்து, அதில் 63.13 கோடியை நிகர லாபமாகப் பெற்றுள்ளது. இதன்படி, இப்பங்குகளின் ஒரு பங்கு சம்பாத்தியம் 19.70 ரூபாய். 10 ரூபாய் முக மதிப்பு கொண்ட இந்தப் பங்குகளின் புத்தக மதிப்பு 391.2 ரூபாய். முழுஆண்டுக்கான இதன் பி/இ விகிதம் 39.01. ஆட்டோ உதிரிபாகத்துறைக்கு உள்ள வாய்ப்புகள், எதிர்காலத்துக்கான முன்னேறிய தொழில்நுட்பத்துக்கு தயார் நிலை போன்ற பலவற்றையும் கவனிக்கும்போது நீண்டகால முதலீடாக இந்நிறுவனப் பங்குகளை வாங்குவது நல்ல லாபம் தரும்.

மின்சாரம் ஷாக்கா... லாபமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism