Published:Updated:

புதியவர்களுக்கு ஏற்ற புதுமையான திட்டம்!

புதியவர்களுக்கு ஏற்ற புதுமையான திட்டம்!

புதியவர்களுக்கு ஏற்ற புதுமையான திட்டம்!

புதியவர்களுக்கு ஏற்ற புதுமையான திட்டம்!

Published:Updated:
முதலீடு
புதியவர்களுக்கு ஏற்ற புதுமையான திட்டம்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதியவர்களுக்கு ஏற்ற புதுமையான திட்டம்!
புதியவர்களுக்கு ஏற்ற புதுமையான திட்டம்!

நூ ற்றுக்கணக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருப்பதால் எதில் முதலீடு செய்வதென்றே முடிவுசெய்ய முடியவில்லையே” எனக் குழம்புபவரா நீங்கள்? குழப்பத்தைவிட்டு தெளிவாக முதலீடு செய்ய கதம்ப கூட்டணி ஃபண்ட் ஒன்றை உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.

கவலையை விடுங்கள்... இருக்கவே இருக்கிறது ‘ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்’ என்ற பெயரில் புதிதாக வந்திருக்கும் திட்டம். பூக்கடைக்குப் போயிருக்கிறீர்களா...? அங்கே மல்லிகை, முல்லை, ரோஜா, என பல பூக்களின் அணிவகுப்பைப் பார்த்திருப்பீர்கள். இப்பூக்களைத் தனித்தனியாக தொடுத்து மாலையாக்குவார்கள். பூக்களின் தனித்துவத்துடன் இருக்கும் அந்த மாலைகளின் விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். ஆனால், அனைவரும் வாங்கும் அளவுக்கு விலை குறைவாகவும், அதேசமயம், பச்சை, ரோஸ், வெள்ளை என பல நிற பூக்களின் கூட்டணியாக அழகாகவும் இருப்பது கதம்ப மாலைதானே! அதுபோல, இத்திட்டமும் ஒரு கதம்பம் எனச் சொல்லலாம்.

சமீபகாலமாகப் பிரபலமாக ஆரம்பித்திருக்கும் ‘ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்’ திட்டம், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையை நினைவூட்டுவதாக இருக்கிறது. ஆம், இது பல மியூச்சுவல் ஃபண்ட்கள் கலந்த ஒரு கூட்டணித் திட்டம்!

அதாவது, இத்திட்டத்தில் நாம் முதலீடு செய்யும் பணத்தை அவர்கள், சிறப்பாகச் செயல்படும் மற்ற பல மியூச்சுவல் ஃபண்ட்களிலேயே மறுமுதலீடு செய்கிறார்கள் என்பதுதான் இதன் தனித்தன்மை! இத்திட்டதில் நாம் போடும் பணத்தை, அதே நிறுவனம் நடத்தும் மற்ற பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அல்லது மற்ற நிறுவனங்கள் நடத்தும் திட்டங்களில் முதலீடு செய்வார்கள்.

ஃபிராங்க்ளின் டெம்பிள்டன், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடன்ஷியல், பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் போன்றவர்கள் தாங்கள் நடத்திவரும் திட்டங்களிலேயே முதலீடு செய்கிறார்கள். ‘கோட்டக்’ போன்ற சிலர் மட்டும், பாகுபாடு இல்லாமல் மற்ற நிறுவனங்கள் நடத்தும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் முதலீடு செய்கிறார்கள். இது வரவேற்கத்தக்க விஷயம்.

‘இது என்ன வேடிக்கை... நேரடியாக பங்குச் சந்தையிலோ, கடன் பத்திரங்களிலோ முதலீடு செய்ய நமக்குள்ள தயக்கத்தினால் தானே நிபுணர்களால் நிர்வகிக்கப்படுகிறது என மியூச்சுவல் ஃபண்டில் பணம் போடுகிறோம். அப்படியிருக்க அந்த மாதிரி நிபுணர்களே ஏன் மீண்டும் மற்ற திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும்?’ என்ற கேள்வி எழலாம். இங்கே ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பங்குச் சந்தையில் இருக்கும் ஏற்ற இறக்கங்களைப்போல இல்லையென்றாலும், அதன் போக்கைச் சார்ந்தே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன.

எனவே பலவகையான திட்டங்களில் முதலீடு செய்வதால், இந்த பரோமீட்டர் அதிர்வுகளைக் குறைத்து, அதனால் ஏற்படும் நஷ்டங்களையும் மட்டுப்படுத்தமுடியும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம், நம்பிக்கையும்கூட! இன்னொரு பக்கம், மற்ற திட்டங்களில் வாங்கப்பட்ட பங்குகளின் விலையில் அதிக ஏற்றம் இருந்தால் அதனால் வரும் கூடுதல் லாபத்தில் நமக்கும் பங்கு கிடைக்கும் என்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது இல்லையா?

‘எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதீர்கள்!’ எனும் தத்துவத்தின் அடிப்படையில்தான் இத்திட்டமும் செயல்படுகிறது. இங்கே முழுவதும் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள், முழுவதும் கடன் பத்திரம் சார்ந்த திட்டங்கள், இரண்டும் கலந்த திட்டங்கள், ஒரே துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யும் செக் டோரல் ஃபண்ட்கள், என பலவிதமான திட்டங்களில் முதலீடு செய்வதால் இதை ஒரு டைவர்சிஃபைடு திட்டமாக பார்க்கலாம். மேலும், பல திறமையான நிர்வாகிகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் திட்டங்களில் முதலீடு செய்வ தால் முதலீட்டின் மீதான ரிஸ்க் பரவலாகி பாதுகாப்பான முதலீடாக மாறுகிறது.

பல நல்ல ஃபண்ட்கள் இருக்கும் இன்றைய சூழலில், அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் இருப் போருக்கு, இத்திட்டம் கைகொடுக்கும். எல்லாத் திட்டங் களிலும் உள்ள நல்லவையும் பலன்களின் சாராம்சமும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கிடைக்கும். அதேசமயம், எல்லாத் திட்டங்களிலும் உள்ள குறைகளும் இதில் பிரதிபலிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஆனால், பல அனுபவஸ்தர்களின் அறிவு, திறமையால் நிர்வகிக்கப்படும் திட்டங்கள் நன்றாகச் செயல்படாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.

மற்ற திட்டங்களில் பணம் போடுவதைவிட, இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம் எனச் சொல்வதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. பொதுவாக, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய, ஆரம்பத்தில் குறைந்தபட்சம் ரூ.5,000 தேவை. நம் கையில் இருக்கும் மொத்த பணத்தையும் ஒரே திட்டத்தில் முதலீடு செய்வது ரிஸ்க்காக இருக்கலாம் என ஒருவர் நினைக்கும்பட்சத்தில், பல திட்டங்களிலும் பிரித்து முதலீடுசெய்ய கையில் நிறைய பணம் வேண்டுமல்லவா? அப்படி இரண்டு அல்லது மூன்று திட்டங்களில் பிரித்து முதலீடு செய்ய வேண்டுமென்றால், ஒருவரிடம் ரூ.15,000 அல்லது ரூ.20,000 வரை தேவை. எத்தனை சிறுமுதலீட்டாளருக்கு இது சாத்தியம்? எனவே, இது போன்றவர்களுக்கு ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்’ திட்டம் மிக பொருத்தமானது. இங்கு ஒரே ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும் ரூ.5,000-த்தின் மூலம் பல திட்டங்களில் முதலீடு செய்த பலன்களை அடைய முடியும். எனவே, குறைந்ததொகை கொண்ட எளியவர் களுக்கும் சாத்தியமான முதலீடாக இத்திட்டம் உள்ளது.

சரி... பணம் ஒரு பிரச்னையில்லை என வைத்துக் கொண்டால்கூட, பல திட்டங்களில் முதலீடு செய்ய வேறு சில சிக்கல்கள் உள்ளன. இதற்கு பல விண்ணப்ப படிவங்களைப் பூர்த்தி செய்வது, பின் அத்திட்டங்களை தொடர்ந்து கவனிப்பது என்பது எல்லாம் இன்றைய சூழ்நிலையில், பலருக்கும் கஷ்டமான, இயலாத காரியம்தான்.

‘ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்’ஸில் முதலீடு செய்வதால் இந்த நடைமுறை நிர்வாகம் எளிதாகிறது. பத்து திட்டங்களை நிர்வகிப்பதைவிட, ஒரே திட்டத்தை இன்னும் கூர்ந்து கவனித்துக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மீது சொல்லப்படும் ஒரே குற்றச் சாட்டு, நிர்வாகச் செலவுகள் கூடுதலாக இருக்கும் என்பதுதான். அதாவது, இத்திட்டத்தை நிர்வாகிக்க ஆகும் செலவுகள்போக, இவர்கள் நம் பணத்தை முதலீடு செய்துள்ள மற்ற மியூச்சுவல் ஃபண்ட்களின் நிர்வாகச் செலவும் மறைமுகமாக இதில் சேர்வதால், இருமுறை நிர்வாகக் கட்டணம் செலுத்தும்படி அமைந்துவிடுகிறது.

இத்திட்டத்தின் முக்கியமான பலனைச் சொல்ல மறந்துவிட்டோம். அது வரிச்சலுகை! நாமே நேரடியாக, பங்குகளையோ மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களையோ, வாங்கி விற்கும்போது கிடைக்கும் கேப்பிடல் கெயினுக்கு வருமான வரி உண்டு. அதாவது, ஒரு வருடத்துக்கு உட்பட்ட லாபம் என்றால், அதற்கு பத்து சதவிகித வருமான வரி கட்ட வேண்டி இருக்கும். ஆனால், ‘ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்’ திட்ட லாபத்துக்கு எந்த விதமான வரியும் கிடையாது! இதனால், 10% மிச்சம் என்பதால், நாம் கொடுக்கும் கூடுதல் நிர்வாகக் கட்டணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

சரி! இந்தத் திட்டம் யாருக்கு ஏற்றது? புதிதாக உள்ளே வருபவர்களுக்கு! புதிதாக ஒரு ஹோட்டலுக்குள் நுழைகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அங்கு எது ஸ்பெஷல் என உங்களுக்குத் தெரியாது. அந்த நேரத்தில் எதை ஆர்டர் செய்வது என்ற குழப்பம் வருவது சகஜம்தான். எல்லா அயிட்டங்களையும் ருசிபார்க்க ஆசை வேறு! தனித்தனியாக ஆர்டர் செய்தால் விலையும் அதிகம். அளவும் அதிகமாக இருக்கும் என்பதால் சாப்பிட முடியாமல் வீணாகப் போகும். ஆனால் அதற்கும் பணம் கொடுக்க வேண்டியிருக்கும் இல்லையா?

அப்போது என்ன செய்வோம்? பேசாமல் ஃபுல் மீல்ஸ் அல்லது பஃபே ஆர்டர் செய்வோமல்லவா... அதேபோல, முதன் முறையாக தயக்கத்துடன் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வருபவர்களுக்கு மிக ஏற்ற திட்டம் இது!

யூ.டி.ஐ. கான்ட்ரா ஃபண்ட்...

‘‘மாற்று திசையில் முதலீடு!’’

புதியவர்களுக்கு ஏற்ற புதுமையான திட்டம்!

யூ .டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட், ‘கான்ட்ரா ஃபண்ட்’ என்ற புதிய திட்டத்தை வழங்கியுள்ளது. இந்தமாதம் 22-ம் தேதி வரை இத்திட்டத்தில் பணம் போடலாம். அதன்பிறகு, நிகர சொத்து மதிப்பில் எப்போது வேண்டுமானாலும் வாங்கமுடியும். இப்போது யூனிட்டின் விலை 10 ரூபாய். குறைந்த பட்ச முதலீடு 5,000 ரூபாய்.

‘‘எல்லோரும் செல்லும் திசையில் செல்லாமல் மாற்று திசையில் செல்வது தான் ‘கான்ட்ரா ஃபண்ட்’. இப்போதைக்கு அடிப்படை வலு உள்ள, அதேசமயம் அதிக டிமாண்ட் இல்லாத பங்குகளாக ஆராய்ந்து முதலீடு செய்யப் போகிறோம்’’ என்கிறார் யூ.டி.ஐ. அசட் மேனேஜ்மென்ட் கம்பெனி யின் செயல் இயக்குநர் மூர்த்தி.

இத் திட்டத்தின் ‘ஃபண்ட் மேனேஜர்’ சித்தார்த் டெம்பி, ‘‘அடுத்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக 12 முதல் 15 சதவிகித லாபத்தைப் பெறும் வகையில் திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு இந்த ஃபண்ட், இன்னும் அதிக லாபத்தைத் தரும். நிகர சொத்து மதிப்பு குறிப்பிட்ட அளவை எட்டியவுடன் யூனிட்களை விற்றுவிடச் சொல்லி கட்டளையைப் பதிவுசெய்து வைக்கும் ‘ஆட்டோ டிரிக்கர்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட்...

‘‘ரிஸ்க் இல்லாத முதலீடு!’’

புதியவர்களுக்கு ஏற்ற புதுமையான திட்டம்!

ன்ஷூரன்ஸ் துறை மட்டுமல்லாது மியூச்சுவல் ஃபண்ட் துறையிலும் பழுத்த அனுபவம் உள்ள எல்.ஐ.சி நிறுவனம் புதிதாக ‘ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 17-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். யூனிட் மதிப்பு 10 ரூபாய். குறைந்தபட்ச முதலீடு 10 ஆயிரம் ரூபாய். இதன் முதலீட்டு கால அளவு 13 மாதங்கள்!

இந்தத் திட்டம் பற்றி ‘எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட்’ தலைமை நிர்வாகி மோகன்ராஜிடம் பேசினோம். ‘‘இந்த ஃபண்டில் திரட்டப்படும் தொகையை கடன் சந்தை மற்றும் நிதி சந்தையில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். இது ரிஸ்க் அதிகம் இல்லாத திட்டம் என்பதால், சேமிப்புக்கு ஏற்றது. இது ஒரு குறித்த காலத்தில் மட்டும் முதலீடு செய்யும் திட்டம் என்பதால், அதன்பிறகு பங்குச் சந்தையில்தான் வாங்கமுடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் என்பதை இந்தியாவின் கிராமங்களுக்குக் கொண்டு சென்று சாதாரண மக்களும் அதன்மூலம் பயனடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்கேற்ற திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறோம்’’ என்று நம்பிக்கையான குரலில் சொன்னார் மோகன்ராஜ்.

- ஆர்.ரெங்கராஜ்,

படம் : உசேன்

ந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்’ திட்டம் ஃப்ராங்க்ளின் இந்தியா டைனமிக் பி.இ ரேஷியோ ஃபண்ட்!

அக்ரெசிவ், மாடரேட், கன்சர்வேடிவ், டைனமிக் டெப்ட் என நான்கு வகைத் திட்டங்களை வழங்குகிறது பிர்லா அசெட் அலகேஷன் ஃபண்ட்.

‘ஐ.சி.ஐ.சி.ஐ புரூடன்ஷியல்’ இப்பிரிவில் ஐந்து வகை திட்டங்களை வழங்குகிறது.

புதிய வெளியீடு!

.என்.ஜி இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் (இந்தியா) நிறுவனம், ‘ஆப்டிமிக்ஸ் இன்கம் குரோத் மல்டி மேனேஜர் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் (ளிமிநி திஷீதி) எனும் புதிய திட்டத்தின் யூனிட்களை முதன்முறையாக பொதுமக்களுக்கு வழங்குகிறது. இம்மாதம் 9-ம் தேதி துவங்கும் இப்புதிய வெளியீடு, ஏப்ரல் 7-ம் தேதியோடு முடிவடைகிறது. யூனிட் ஒன்றின் முகமதிப்பு ரூ.10. நுழைவுக் கட்டணமாக ஒரு சதவிகிதம் வசூலிக்கப்படும். விற்கும்போது கட்டணம் ஏதும் இல்லை. குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000/-

புதியவர்களுக்கு ஏற்ற புதுமையான திட்டம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism