Published:Updated:

சிலிர்த்து எழுமா சில்லறை வணிகம்?

சிலிர்த்து எழுமா சில்லறை வணிகம்?

சிலிர்த்து எழுமா சில்லறை வணிகம்?

சிலிர்த்து எழுமா சில்லறை வணிகம்?

Published:Updated:
முதலீடு
சிலிர்த்து எழுமா சில்லறை வணிகம்?
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிலிர்த்து எழுமா சில்லறை வணிகம்?
சிலிர்த்து எழுமா சில்லறை வணிகம்?

‘‘அ ன்றாட தேவைகள்! என்று நாம் கடைகளில் வாங்கும் பொருட்கள், அவை உற்பத்தியான இடத்தில் வாங்கப்படும் விலை தெரிந்தால், விக்கித்துப் போவீர்கள்!’’ என்கிறார் அர்விந்த்.கே.சிங்கல். ‘டெக்னோபேக்’ என்ற பெயரில் இவர் நடத்தும் நிறுவனம் தற்போது இந்தியாவில் ரீடெய்ல் துறைக்கு ஆலோசனைகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. இவரது தகவல்படி வெங்காயம் உற்பத்தியான இடத்தில் வாங்கப்படும் விலையைப் போல, சில்லறை விற்பனைக் கடைகளில் 4 மடங்கு விலை விற்கிறது. கோதுமை 2 மடங்கு விலை, உருளைக்கிழங்கு 5 மடங்கு! இதற்கெல்லாம் காரணம், அவை உற்பத்தியாளரிடமிருந்து பல கை மாறி, நம் கைக்கு வரும்போது ஏற்படும் விலை உயர்வுதான்.

‘‘இந்தியாவில் தற்போது தொடங்கியுள்ள ‘ரீடெய்ல் புரட்சி’ வலுவடையும்போது இப்போதைய நிலை தலைகீழாக மாறலாம். இந்தியாவில் உள்ள 784 நடுத்தர நகரங்களில் இந்தவகை ரீடெய்ல் செயின் கடைகள் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 7 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பல நகரங்களிலும் கிளை பரப்பும் ரீடெய்ல் கடைகளுக்கு தேவைப்படும் என இந்தக் கடைக்காரர்கள், பொருட் களை வாங்க உற்பத்தியாளர்களையே நேரடியாக அணுகுவார்கள். இது பொருட்களின் கொள்முதல் விலையைக் குறைத்து, இந்தக் கடைகளின் லாபத்தை அதிகரிப்பதுடன், நுகர்வோருக்கும் குறைந்தவிலையில் கிடைக்கச் செய்யும்’’ என்பது அர்விந்தின் வாதம். எனவே இதில் பலனடையப் போவது ரீடெய்ல் துறை மட்டுமல்ல... ரீடெய்ல் நிறுவனப் பங்கு முதலீட்டாளர்களும்தான்.

‘சில்லறை விற்பனைக் கடைகள்’ என்று சொல்லப்படும் ரீடெய்ல் ஸ்டோர்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் (விவேக்-கோ), மளிகைச் சாமான்கள் (ஃபுட்வேர்ல்ட்), துணிமணி ரகங்கள் (பேன்டலூன்), உடல் ஆரோக்கியம் (பிளானட் ஸ்போர்ட்ஸ், ஸ்பென்சர்ஸ்), வாட்ச் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள் (டைட்டன்), நகைக்கூடங்கள் (தனுஷ்) காலணிகள் (பாட்டா), பொழுதுபோக்கு சாதனங்களான இசை ஆல்பங்கள் (மியூஸிக் வேர்ல்ட்), புத்தகக் கடைகள் (லேண்ட் மார்க்) என எந்த மாதிரி பொருட்களை விற்கும் கடையாகவும் இருக்கலாம். தேவை எதுவானாலும் இங்கே கிடைக்கும் என இவற்றைத் தேடிவருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதுதான் முக்கிய செய்தி. இதனால்தான் பிரமால், ரெஹேஜா, ஆர்.பி.ஜி போன்ற பெரிய தொழில் குழுமங்களோடு ரிலையன்ஸ், டாடா, போன்றவர்களும் இதில் இறங்கத் தீவிரம் காட்டிவருகிறார்கள். இதுபோன்ற நிறுவனங்கள் பல பங்குச் சந்தையில் இருந்தாலும், மற்ற துறை நிறுவனங்கள் போல இன்னும் மக்களின் மனதில் உறுதியான இடத்தைப் பிடிக்கவில்லை.

இந்தநிலை இந்தியாவில்தான். மற்ற வளர்ந்த நாடுகளில் இந்தத் துறை நன்றாகவே முன்னேறி இருக்கிறது. குறிப்பாக, சிங்கப்பூர், மலேஷியா, துபாய் போன்ற நாடுகளின் மொத்த வளர்ச்சியில் இத்துறை யின் பங்கு கணிசமானது. அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்ஸிகோ, தாய்லாந்து போன்ற நாடுகளில் ரீடெய்ல் துறையின் தாக்கம் இன்னும் அதிகம். அமெரிக்காவில் இரண்டாவது பெரிய தொழிலே ரீடெய்ல் தொழில்தான் என்கிறது சி.ஐ.ஐ அறிக்கை. எனவேதான், வளர்ந்துவரும் நாடு, அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்றவிதத்தில் இந்தியாவிலும் இந்தத் துறை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பன்னாட்டு நிறுவனங்களும் இங்கே கால் பதிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை இந்தத்துறை பங்கு நீண்டகால அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு மிக அதிக லாபம் தர எல்லா வாய்ப்புகளும் கொண்டதாக இருக்கிறது.

சிலிர்த்து எழுமா சில்லறை வணிகம்?

பெருகி வரும் பி.பீ.ஓ மற்றும் கால் சென்டர்களில் காசு மழை கொட்டும் வேலைகளில் இருக்கும் இளைஞர்கள் தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியைச் செலவழிப்பது ரீடெய்ல் இண்டஸ்ட்ரியில்தான். ரீடெய்ல் துறை லாபம் பெறும் என்பதற்கு உறுதி தரும் இன்னொரு விஷயம் இது. இந்தியாவில் 40 வயதுக்குக் குறைவானவர்களின் எண்ணிக்கை தற்போது 60%-க்கு அருகில்! இந்தத் தரப்பினர் விரும்பும் அதிநவீன ஆடைகள் முதற்கொண்டு லேட்டஸ்ட் கேட்ஜட் வரை எல்லாமும் புழங்குவது நவீன ரீடெய்ல் மால்களில்தான். இது மட்டுமின்றி, அண்மைக்கால புள்ளிவிவரங்கள் இந்தியாவின் வழக்கமான சேமிப்பு அளவுகள் குறைந்து, மற்ற பல நாடுகளைப் போலவே ஒருவர் தன் வருமானத்தில் செலவழிக்கும் பணத்தின் சதவிகிதம் அதிகரித்திருப்பதாகச் சொல்கின்றன. இதுவும் இந்தத் துறைக்கு நம்பிக்கை தருகிறது.

இதுதவிர, ‘பிரிக்’ என சுருக்கமாகச் சொல்லப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா நாடுகளைப் பற்றிய ஙிஸிமிசி ரிப்போர்ட்டில் ‘கோல்ட்மென் சாக்ஸ்’ என்ற பன்னாட்டு மேலாண்மைத்துறை நிபுணர் ‘அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி இப்போது இருப்பதைப்போல, இரு மடங்காக அதிகரிக்கும்’ என்கிறார். இவரது கணிப்பில் இந்தியாவின் வளர்ச்சியும், நம்மவர்களின் தனி நபர் வருமான வளர்ச்சியும் மற்ற பல நாடுகளோடு ஒப்பிடும்போது பிரமிக்கத்தக்க அளவில் இருப்பது, இத்துறைக்கு இருக்கும் பிரகாசமான வாய்ப்பையே காட்டுகிறது.

இதுதவிர, இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய ரீடெய்ல் துறையில் ‘ஒரே பிராண்ட்’ விற்பனைக் கடைகளில் 51% வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள இந்திய நிறுவனங்களோடு சேர்ந்து புதிய கடைகளைத் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த முயற்சியின்போது அந்நிய முதலீடுகளைப் பெறும் இந்திய நிறுவனப் பங்குகளுக்கு கவர்ச்சி அதிகரிக்கும். ஏற்கெனவே, இந்திய நிறுவனங்களுடன் இணைந்து வால்மார்ட் இங்கு கால்பதிக்கப் போவதாக அறிவித்திருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

சிலிர்த்து எழுமா சில்லறை வணிகம்?

ரீடெய்ல் துறையில் இப்படி பல சாதகங்கள் இருக்கும் அதேநேரம், ரீடெய்ல் கடை நிர்வாகத்துக்கு தகுதியான ஆட்கள் கிடைக்கவேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது. அண்மையில் ரிலையன்ஸின் ரீடெய்ல் சாம்ராஜ்யத்தில் நுழைந்துள்ள ரகுபிள்ளை இதுபற்றி தெளிவான விமரிசனத்தை முன்வைக்கிறார். ‘‘இந்தியர்களுக்கு இந்தத்துறையில் போதிய அனுபவமில்லை. இதை நிர்வகிக்க சரியான ஆட்கள் கிடைக்காவிட்டால் கொள்முதல் செய்வதில் தொடங்கி, கடைசியாக விற்கப்படும்வரை பல இடங்களில் தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது. எங்கே தவறு நடந்தாலும் பாதிப்பும், நஷ்டமும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் இத்துறையில் சராசரியாக 35 முதல் 40% ஆட்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதாகவும் ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அடுத்து இதுபோன்ற பணிகளுக்கான பயிற்சி கொடுக்கவும் பொருத்தமான கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் அதிகம் இல்லை. இது ரீடெய்ல் துறையில் கால்வைக்கும் எல்லாரும் ஆரம்ப நாட்களில் சந்தித்தாகவேண்டிய பிரச்னை’’ என்கிறார்.

அடுத்து, அந்நிய நிறுவனங்களோடு சில நிபந்தனைகளின் அடிப்படையில் கைகோக்கும் திட்டத்தோடு சில நிறுவனங்கள் செயல்பட்டாலும் அந்நிய நிறுவனங்களை சமாளிக்கும் திட்டங்களையும் சில நிறுவனங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

அந்நிய நிறுவனங்களின் வருகையை விரும்பாத இந்திய நிறுவனங்கள் பெருநகரங்களில் உருவாகும் பல புதிய ஷாப்பிங் மால்களில் தேவையோ இல்லையோ பெருமளவு இடங்களைப் பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், இடம் பிடிப்பதில் அளவுக்கு அதிகமாக முதலீடு செய்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இதனால் இந்நிறுவனங்களின் நிதி தேவைகள் அதிகரித்து, சிக்கனமான நிதி சுழற்சி தடைபடும் சாத்தியங்கள் உள்ளன.

ரீடெய்லில் லேட்டஸ்ட்!

ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி 30 ஆயிரம் கோடி ப்ராஜெக்ட்டோடு இத்துறையில் நுழைந்திருக்கிறார். இதைச் சிறப்பாகச் செய்ய அனுபவமும் திறமையும் வாய்ந்த பெருந்தலைகள் பலரை உள்ளே இழுத்துப் போட்டிருக்கிறார். ‘எலக்ட்ரோலக்ஸ்’ ராஜிவ் கர்வால், ‘பேன்டலூன் ரீடெய்ல்’ ரகுபிள்ளை, ‘யூனிலீவர்’ குனந்தர் கபூர் போன்ற பலர் இப்போது ரிலையன்ஸ் வசம் உள்ளனர். ‘பெப்சி’ நிறுவனத்தின் ராஜீவ் பக்ஷியும் இந்த பட்டியலில் சேருவார் எனச் சொல்லப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த 280 கோடி ரூபாய் மதிப்பிலான, 145 கடைகள் கொண்ட ‘சுபிக்ஷா ரீடெய்ல் செயின்’ ஹைதராபாத்தில் 80, பெங்களூரில் 56, குஜராத்தில் 80, மும்பை மற்றும் பூனாவில் 180, கொல்கத்தாவில் 95, கேரளாவில் 74 என ஏராளமான புதிய கடைகளைத் தொடங்க உள்ளது. தங்கள் விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியின் ஒரு பகுதியைத் திரட்ட பங்குச் சந்தையில் கால் வைக்கவும் திட்டமிடுகிறது.

‘விவேக்ஸ்’ நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்காக பங்கு வெளியிட உள்ளது. நீல்கிரீஸ் நிறுவனமும் பங்கு வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது.

ரீடெய்ல் சந்தையில் உறுதியாக கால் ஊன்றும் முயற்சியில் இறங்கியிருக்கும் ‘பேன்டலூன் ரீடெய்ல் நிறுவனம்’, தற்போது சிறப்பு உணவகங்களை அமைக்க முயற்சிசெய்கிறது. விரைவில் இது மும்பை மற்றும் பெங்களூரில் தனது சிறப்பு உணவகத்தைத் தொடங்க இருக்கிறது. தேவையானால் இதற்காக மற்றவர்களுடன் கூட்டு சேரவும் தயாராக இருக்கிறது. இதோடு ‘ஃபுட் பஜார்’ என்ற பெயரில் தற்போது அமைத்துள்ள உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்களை 40-லிருந்து 2007-க்குள் 150 ஆக உயர்த்தும் எனத் தெரிகிறது. தங்கள் நிறுவன கடைகளில் பொருட்களை வாங்கத் தூண்டும் விதத்தில் தகுதியான நபர்களுக்கு கடன்வசதி வழங்க தனி ஃபைனான்ஸ் கம்பெனி ஒன்றையும் தொடங்க உள்ளது.

வாட்ச் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள டைட்டன் பல விரிவாக்கப் பணிகளில் இறங்கியுள்ளது. தற்போது பெருகிவரும் உயர்விலை வாட்ச் சந்தையைக் கருத்தில்கொண்டு இது ஸ்விஸ் நாட்டு ‘ஸைலஸ்’ வாட்ச்களை வாங்கி, விற்க தீவிர ஆர்வம் காட்டுகிறது. டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் விரைவிலும், அடுத்தகட்டமாக சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், பூனா போன்ற நகரங்களிலும் இது கிளைகள் அமைக்கப்போகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism