Published:Updated:

அந்நிய முதலீட்டாளர் மட்டுமே காரணம் அல்ல..!

அந்நிய முதலீட்டாளர் மட்டுமே காரணம் அல்ல..!

அந்நிய முதலீட்டாளர் மட்டுமே காரணம் அல்ல..!

அந்நிய முதலீட்டாளர் மட்டுமே காரணம் அல்ல..!

Published:Updated:
முதலீடு
அந்நிய முதலீட்டாளர் மட்டுமே காரணம் அல்ல..!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்நிய முதலீட்டாளர் மட்டுமே காரணம் அல்ல..!


பங்குச் சந்தை...

அந்நிய முதலீட்டாளர் மட்டுமே காரணம் அல்ல..!

‘மே லே போனது எல்லாம் கீழே வந்துதான் ஆக வேண்டும்’ என்ற நியூட்டனின் விதி பங்குச் சந்தைக்கும் பொருந்தும். ஆனால், இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் கடந்த பதினைந்து நாட்கள் பங்குச் சந்தை நடவடிக்கைகள் நமக்குச் சொல்லும் செய்தி!

கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஆறு முறை பட்ஜெட்டுக்குப் பிறகு பங்குச் சந்தை இறங்கு முகமாகத்தான் இருந்திருக்கிறது. குறிப்பாக, பட்ஜெட்டுக்கு முன்னால் பங்குச் சந்தை ஏறி இருந்தால், அதன்பிறகு கண்டிப்பாக சறுக்கியிருக்கும். கடந்த ஆண்டைப் போல விதிவிலக்கும் உண்டு. ஆனாலும் சுதாரித்து சந்தை ஏறுமுகமாகத்தான் செல்கிறது.

பட்ஜெட் தினத்தில் நிதானமாக இருந்த சென்செக்ஸ், அடுத்த சில நாட்களில் 10376 வரை கீழே இறங்குவதும் பின்னர் 10884 என்ற புதிய உச்சத்தைத் தொடுவதுமாக தனது ஊசலாட்டத்தைக் காட்டத் துவங்கியது! இடையே ‘அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் துவங்கி விட்டார்கள்’ என்ற பீதியால் ஒரே நாளில் 200 புள்ளிகள் இறங்கியது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், அன்று நடந்த வர்த்தகத்தின் அளவு வழக்கமாக நடக்கும் 30 கோடி பங்குகள் என்பது அதிகமாகி, 50 கோடியைத் தாண்டியதுதான்!

விலையும் கணிசமாக இறங்கி, அதிக அளவில் வர்த்தகமும் நடந்திருப்பதால், ‘பங்குகளை வைத்திருக்கும் அந்நிய முதலீட் டாளர்கள் அதை எல்லாம் விற்க ஆரம்பித்து விட்டார்களோ’ என்று மற்ற முதலீட்டாளர்கள் கவலையாகி விட்டனர். இந்தக் கவலை எந்த அளவுக்கு நியாயமானது?

தொழிற்துறை நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வரை பங்குச் சந்தைக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், ஜனவரி மாத தொழில் வளர்ச்சி 8.3% எனச் சொல்லப்பட்டிருக்கிறது. தவிர, வரும் ஆண்டில் பருவமழையும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பங்குச் சந்தை மேல்நோக்கி ஏறும் வகையில்தான் இருக்கும். எந்த பாதகமும் இருக்கப் போவதில்லை. இப்படி பல நல்ல விஷயங்கள் இருக்கும் சூழ்நிலையில் வெளிநாட்டினர் ஏன் பங்குகளை விற்க வேண்டும்?

200 புள்ளிகள் சரிந்த அடுத்த இரண்டு தினங்களிலேயே சிலிர்த்துக் கிளம்பிய சென்செக்ஸ் 11000 புள்ளிகளைத் தொடும் வேகத்துடன் மேலேறியது. இந்த வேகத்துக்கும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்தான் காரணம்.

அதாவது, உச்சத்தைத் தொட்ட பங்குகள் இனி விலை உயராது என்று விற்றுவிட்டு, விரைவில் மதிப்பு கூடுவதற்கு வாய்ப்புள்ள பங்குகளில் அவர்கள் அந்தப் பணத்தை மறுமுதலீடு செய்திருக்கலாம். அந்நிய நிறுவனங்களின் இந்த நடவடிக்கை யால்தான் இறங்கிய சந்தை மீண்டும் ஏறியிருக்கிறது என்பது சந்தை வல்லுநர்களின் கணிப்பு.

இதிலிருந்து சிறுமுதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதி இதுதான். குறிப்பிட்ட லாபம் கிடைத்தவுடன் அந்தப் பங்குகளைத் தயங்காமல் விற்றுவிட வேண்டும். கையில் இருக்கும் பங்குகளைவிட வேறு சில பங்குகள் விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தோன்றினால், உடனே அந்தப் பங்குகளை வாங்கிப் போடவேண்டும்.

பங்குச் சந்தை அன்றைய தினம் இறங்கியதற்கு அந்நிய முதலீட் டாளர்கள் மட்டும் காரணமல்ல... இந்த ஆண்டு தொழில் மற்றும் வர்த்தகம் நன்றாக இருந்ததாலும், பங்குச் சந்தை சக்கைப் போடு போடுவதாலும் நல்ல லாபம் ஈட்டியவர்கள், வருமான வரி கட்டியாக வேண்டும். மார்ச் பதினைந்தாம் தேதிக்குள் அட்வான்ஸ் டேக்ஸ் கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களில் சிலர், அவசரத் தேவைக்காக சில பங்குகளை விற்றிருப்பார்கள். இதனால் சற்று மந்தமாக இருக்கலாம் என்பது இன்னொரு யூகம்.

இனி பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்? பங்குச் சந்தை இந்த ஆண்டு பலருக்கு எக்கச்சக்கமாக லாபம் ஈட்டித்தந்துள்ளது. கையில் உள்ளவற்றை விற்றால் மேலும் வரி கட்டவேண்டி வருமே என்பதால், அடுத்த நிதிஆண்டு அதாவது, ஏப்ரல் மாதத்துக்குப்பின் விற்கலாம் என்ற எண்ணத்தில் சிலர் இருக்கலாம். இதனால் ஏப்ரலில் சென்செக்ஸ் கீழே இறங்கும் வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், மார்ச் மாதத்துடன் முடிந்த நிதி ஆண்டுக்கான வரவு செலவுக் கணக்குகள், ஏப்ரலில் வெளியாக இருப்பதால், அந்தந்த நிறுவனங்களின் செயல்பாட்டைப் பொறுத்தே அப்பங்குகளின் விலை அமையும். அதனால், சென்செக்ஸின் போக்கைப் பார்க்காமல், அந்தந்த நிறுவனங்களின் செயல்பாட்டைப் பொறுத்து முடிவெடுப்பதே இப்போதைக்கு நல்லது.

சன் அவுட்டேஜ்... ஒரு சந்தேகம்!

‘‘பங்குச் சந்தை என்பது காலையில் 9.55 மணிக்குத் துவங்கி மாலை 4 மணிக்குத்தானே முடியும். ஆனால், இந்த மாதம் 6-ம் தேதி முதல் முற்பகல் 11.45 மணிமுதல் 12.25 மணிவரை பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது. இது 19-ம் தேதிவரை தொடருமாம். ‘இது என்ன இடைவேளை?’ என்று கேட்டால் சன் அவுட்டேஜ் என்கிறார்கள். அதற்கு என்ன அர்த்தம்?’’

- பி.ரவிக்குமார்,சென்னை-17

அந்நிய முதலீட்டாளர் மட்டுமே காரணம் அல்ல..!

‘‘நீ ங்கள் ஆன்லைன் மூலம் நேரடி யாகவோ, அல்லது உங்கள் புரோக்கரிடம் சொல்லியோ வர்த்தகம் செய்தாலும், எல்லாமே கம்ப்யூட்டர் வழியாகத்தான் நடக்கிறது. அந்த கம்ப்யூட்டரை பங்குச் சந்தையில் உள்ள சர்வருடன் இணைக்கும் ஜியோ ஸ்டேஷனரி என்ற செயற்கைக்கோள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.

அப்படிச் சுற்றும்போது ஒரு கட்டத்தில் சூரியனும் இந்த செயற்கைக்கோளும் ஒரே நேர்க்கோட்டில் வருகிறது. அப்போது சூரியனின் கதிர்வீச்சால் செயற்கைக்கோளின் செயல்பாட்டில் சிறு பாதிப்பு ஏற்படுகிறது. பலகோடி ரூபாய் பணம் புரளும் பங்குச் சந்தையில் இதுபோல பாதிப்பு ஏற்பட்டால் பெரிய விளைவுகளை உண்டாக்கும் என்பதால் அந்த நேரத்தில் பங்குச் சந்தையின் சர்வரையே நிறுத்தி வைத்து விடுவது பாதுகாப்பானது என்று முடிவெடுத்தார்கள்.

பொதுவாக ஆண்டுக்கு இருமுறை மார்ச் மாதத்திலும், செப்டம்பர் மாதத்திலும் 15 நாட்களுக்கு நிறுத்திவைப்பார்கள் அது எந்த நேரத்தில் என்பதை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ அறிவிக்கிறது.’’

அந்நிய முதலீட்டாளர் மட்டுமே காரணம் அல்ல..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism