Published:Updated:

அறிமுகத்தில் அசத்துங்க!

அறிமுகத்தில் அசத்துங்க!

அறிமுகத்தில் அசத்துங்க!

அறிமுகத்தில் அசத்துங்க!

Published:Updated:
வேலை
அறிமுகத்தில் அசத்துங்க!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிமுகத்தில் அசத்துங்க!
அறிமுகத்தில் அசத்துங்க!
அறிமுகத்தில் அசத்துங்க!

வே லை தேடுபவர்கள் அத்தனை பேரும் ஒரு ஃபைல் வைத்திருப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா..? அதில் முதலிடத்தில் இருக்கிற பேப்பர் சுய குறிப்புகள் அடங்கிய பயோ-டேட்டாவாக இருக்கும். பொதுவான வழக்கத்தில் இப்படிக் குறிப்பிட்டுப் பழகிவிட்டாலும் அந்த பயோ-டேட்டா பற்றி பிரின்ஸ் சொல்லும் விளக்கம் படபடப்பாக்குகிறது.

‘‘அதை பயோ-டேட்டா என்று சொல்லாதீர்கள். பயோ-டேட்டா என்பதே தாவரங்கள், விலங்குகளை இனம் காண அவற்றின் பூர்வீகம், நிறம், வயது, உயரம் ஆகிய விவரங்களை உள்ளடக்கியதாகும். எனவே, இந்த வார்த்தை மனிதர்களுக்குப் பொருந்தாது. ‘ரெஸ்யூம்’ அல்லது ‘கரிகுலம் வைட்டே’ என்பதுதான் சரியான வார்த்தை’’ என்கிறார் பிரின்ஸ். இவர், வேலை தேடுபவர்களுக்கு உதவியாக ரெஸ்யூம் தயாரித்துத் தருவதை மட்டுமே ஒரு வேலையாகக் கொண்டு செயல்படுகிறார்.

‘பெயர், ஊர், வயது, படிப்புப் பின்னணி கொண்ட தகவல்களைத் தயாரித்துத்தர ஒரு நிறுவனமா..? இதற் கெல்லாம் ஆள் தேடி எங்கே அலைவது என்கிறீர் களா..? காலம் மாறி விட்டது... எல்லாமே ஹைடெக் காகிவிட்டது. உலக அளவில் இந்த வேலையைச் செய்ய ஆரம்பித்திருக்கின்றன சில நிறுவனங்கள். பிரின்ஸின், ‘ரெஸ்யூம் லேப்’ நிறுவனம் சென்னையில் இந்த வேலை யைச் செய்து இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகிறது.

‘‘வேலை தேடும் நபர்கள் தங்களை நிர்வாகத்துக்கு எப்படி அடையாளம் காட்ட விரும்புகின் றனர் என்பது மிக முக்கியம். சுய தகவல்களை மட்டும் கொடுத்தால் போதாது. வேலை தரத் தயாராக இருக்கும் நிறுவனங்கள் ‘இவரிடம் என்ன திறமை இருக்கிறது, அது நிறுவனத்துக்கு எப்படிப் பயன்படும்?’ என்றுதான் கவனிப்பார்களே ஒழிய, அவரது குடும்ப விவரங்களை அல்ல.

மேலும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ஒருவர் வேலைகேட்டு போகும் நிறுவனத்தினர் பல்வேறு பணிகளுக்கிடையேதான் விண்ணப்பங்களைப் பார்ப்பார்கள். கிடைக்கும் அந்த சில விநாடிகளில் எல்லா தகவல்களும் நறுக்குத் தெறித்தாற்போல், ரத்தினச்சுருக்கமாக, தெளிவாக சொல்லப்பட்டிருந்தால் அந்த அதிகாரிக்கு முடிவுசெய்ய நல்ல மூடு வரும். அவரையுமறியாமல் வேலை கேட்பவர் மீது நம்பிக்கை வரும். முதல் ரவுண்ட் ஓகே எனும் பட்சத்தில்தான், நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள். உண்மையிலேயே திறமைசாலியாக ஒருவர் இருந்தாலும் அவரைப்பற்றி சரியாகச் சொல்லத் தெரியவில்லை என்பதே மைனஸ்தானே! அந்த வகையில் ரெஸ்யூம் என்பது சக்தி வாய்ந்த ஒரு கருவி. இன்று பல திறமைகளோடு வருகிற மாணவர்களை மனதில்கொண்டுதான் இப்படி ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தோம்’’ என்கிறார் பிரின்ஸ்.

ஒருவரின் எதிர்காலவாழ்க்கையில் முக்கிய சாவியாக செயல்படுகிற ரெஸ்யூம் பற்றிய அக்கறை, வேலை தேடுபவர்களுக்கு எத்தனை முக்கியம் என்பது அவரிடம் பேசும்போது புரிகிறது. இன்றும் பலர் இன்ஸ்டன்ட் மசாலாவைப் போல தங்களைப் பற்றிய விவரங்களை மட்டுமே எழுதி அனுப்பிவிட்டு, ‘நானும் பல இடத்தில் முயற்சித்து விட்டேன். ஒரு வேலையும் கிடைக்கமாட்டேன் என்கிறது’ என்று புலம்புவதன் பின்னணி யையும் உணரமுடிகிறது.

‘‘சிலர், அடுத்தவருடைய ரெஸ்யூம் மாடலை எடுத்து, அதில் தங்கள் பெயர் மற்றும் பர்சனல் விஷயங்களை மாற்றி அனுப்பி விடுகின்றனர். இது எப்படி சரியாக இருக்கமுடியும். இன்னொரு வருக்கு அளவெடுத்த சட்டையை நீங்கள் அணிவது போன்றதாகும். அந்த இருவருக்கும் ஒரே கல்லூரி, நிறுவனம் ஒரே வயதாகக் கூட இருக்கலாம். தனிப்பட்ட திறமைகள் ஆளுக்கு ஆள் மாறுபடும் இல்லையா..?’’ என்கிற பிரின்ஸ், தன்னைத் தேடி வருகிறவர்களிடம் பேசுகிறார். அவரது முழு விவரங்களையும் உள்வாங்கிக் கொண்டு, அவர் எந்த வேலைக்கு ஏற்றவர், என்ன திறமைகள் உள்ளன எனத்தெரிந்து அதைச் சரியான ரெஸ்யூமாக்கித் தருகிறார். அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதால் ஒரு வாரம் வரை அவகாசம் கேட்போம். நல்ல முறையான தாக, வடிவமைக்கப்பட்டதாக, எழுத்து வடிவம், நடை என்பது முதற்கொண்டு கவனமாக தயார் செய்து தருவோம்’’ என்கிறார்.

அறிமுகத்தில் அசத்துங்க!

இவரது தயாரிப்பில் என்ன புதுமை இருக்கும்..?

‘‘பொதுவாக குடும்பப் பின்னணி பற்றிய அதிக விவரங்கள் வேலை கொடுக்கும் நபருக்கு முக்கியம் இல்லை. வேலை தேடுபவர் யார்... அவரது லட்சியம் என்ன... இந்த நிறுவனத்தில் இணைந்தால் அவர் சாதித்துக் கொடுக்கக்கூடிய விஷயங்கள் என்னவாக இருக்கும்... அவரது மனோதிடம், சவால்களைச் சந்திக்கும் சாமர்த்தியம்... இதெல்லாம்தான் ஒரு ரெஸ்யூமில் இருக்கவேண்டும். அதைவிட்டு பள்ளிப்பிராயத்தில் கிரிக்கெட் டீம் கேப்டனாக இருந்ததையும் காலேஜ் டிராமாவில் கட்டபொம்மனாக நடித்து பிரமாதப்படுத்தியதையும் வைத்து வேலை கொடுத்தால் அது எப்படி அவர்கள் கம்பெனிக்குப் பயன்படும் என்று யோசிப்பார்கள் இல்லையா..? ‘தன் திறன் என்ன..?’ என்பதுகூட தெரியாத இதுபோன்ற ஆட்களை வேலைக்கு எடுக்கத்தான் வேண்டுமா..? என்றெல்லாம்தானே அந்த அதிகாரி யோசிப்பார். எனவே, திறமை, எதிர்கால இலக்கு குறித்த தகவல்கள்தான் ரெஸ்யூமில் முழுமையாக இருக்கவேண்டும்.

ரெஸ்யூம் தயாரிக்கச் சொல்லி வருபவரிடம் பேசும்போதே, அவருக்குள் புதைந்திருக்கிற சில அற்புத திறமைகளான ஞாபக சக்தி, விஷயங்களைக் கிரகிக்கும் வேகம், டைமிங் சென்ஸ், தலைமைப் பண்பு, பேச்சில் இருக்கும் கம்பீரம் இதையெல்லாம் அடையாளம் கண்டு, அதை ரெஸ்யூமில் ஹைலைட் செய்வோம்.

அவர் எந்த நிறுவனத்துக்கு வேலை கேட்டுப் போகப் போகிறார் என்று தெரிந்தால், அதை அடிப்படையாக வைத்தும்கூட பிரத்யேக ரெஸ்யூம்கள் தயார்செய்து தருகிறோம்.

இதன் தேவை கல்லூரி மாணவர்களுக்குத்தான் என்றில்லை. அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்கள்கூட, இவ்வகை ரெஸ்யூம் தயாரித்து, இதைவிட, நல்ல வேலைக்கு முயற்சிக்க முடியும். 65 வயதுள்ளவர்கூட ரெஸ்யூம் தயாரிப்புக்காக எங்களிடம் வருகிறார் என்பதிலிருந்தே இதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள முடியும். இதற்காக செலுத்துவதை கட்டணமாக, செலவாகப் பார்ப்பதை விட, எதிர்கால வாழ்க்கைக்கான முதலீடாகப் பாருங்கள் என்பதுதான் நாங்கள் அவர்களுக்குச் சொல்வது!’’ என்கிறார் பிரின்ஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism