Published:Updated:

‘ஊர்’வலம் - திருச்சி - யாரும் இங்கே பிழைக்க முடியும்!

‘ஊர்’வலம் - திருச்சி - யாரும் இங்கே பிழைக்க முடியும்!

‘ஊர்’வலம் - திருச்சி - யாரும் இங்கே பிழைக்க முடியும்!

‘ஊர்’வலம் - திருச்சி - யாரும் இங்கே பிழைக்க முடியும்!

Published:Updated:
நடப்பு
‘ஊர்’வலம் - திருச்சி
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஊர்’வலம் - திருச்சி - யாரும் இங்கே பிழைக்க முடியும்!

யாரும் இங்கே பிழைக்க முடியும்!

‘ஊர்’வலம் - திருச்சி - யாரும் இங்கே பிழைக்க முடியும்!

திருச்சியைச் சுற்றி வந்தபோது
ஏராளமான தொழில் வாய்ப்புகளைப் பார்க்க முடிந்தது.
‘ஊர்’வலம் இந்த இதழிலும் தொடர்கிறது...

மு ழுமையாகத் தொழில் நகரம் என்று சொல்லத்தூண்டும் அளவுக்கு திருச்சி நகருக்கு உள்ளேயும் தொழிற்சாலைகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. பெல் நிறுவனத்தைப் போலவே திருச்சி நகருக்கு அடையாளமாக இன்னும் பல தொழிற் சாலைகள் இருக்கின்றன. கன்வேயர் பெல்ட்களில் பயன்படும் ‘பெல்ட்டிங் ஃபேப்ரிக்ஸ்’ மெட்டீரியல் தயாரிப்பில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் இருக்கும் ஸ்ரீராம் ஃபேப்ரிக்ஸ் எனப்படும் எஸ்.ஆர்.எஃப் கம்பெனி அப்படிப்பட்ட அடையாளங்களுள் ஒன்று. வண்டிகளில் கட்டப்படும் தார்பாலின் தயாரிப்பிலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய சப்ளையர் இந்த நிறுவனம். இதன் மார்க்கெட்டிங் பிரிவின் துணைத்தலைவரான ஜான் ஜோசப்பிடம் பேசினோம்.

‘‘வாகனங்களின் டயர்களுக்குத் தேவையான லைனர்களில் தொடங்கி, பெல்டிங் ஃபேப்ரிக்ஸ், தார்பாலின் என நிறைய பொருட்களை தயார் செய்கிறோம். உள்நாட்டு விற்பனையைவிட வெளிநாட்டு ஏற்றுமதியில் எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட முப்பது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறோம். கடந்த வருடம் மட்டும் 150 கோடிக்கு வணிகம் செய்திருக்கிறோம். தொழில் வளர்ச்சி என்பது ஒருபக்கம் இருந்தாலும், இன்னொருபக்கம் எங்கள் பகுதியைச் சேர்ந்த மக்களின் நலனில் அக்கறைகொள்ளும் வகையில் மருத்துவ முகாம்கள் போன்றவற்றை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

விராலிமலை ரோட்டில் நிறைய ஆட்டோமொபைல் உதிரிபாக தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன.

‘ஊர்’வலம் - திருச்சி - யாரும் இங்கே பிழைக்க முடியும்!

டெல்கோ மற்றும் அசோக் லேலண்ட் போன்ற வாகனத் தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பவர் ஸ்டீயரிங் தயாரிப்பு நிறுவனமான ரானே டி.ஆர்.டபிள்யூ நிறுவனம் திருச்சியில்தான் இருக்கிறது. ஜப்பான் வழங்கும் ஆட்டோமொபைல் துறையின் உயர்ந்த விருதான ‘டெமிங்’ கடந்த வருடம் இந்த நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கிறது.

இதன் பொதுமேலாளரான பார்த்திபன், ‘‘சர்வதேச தரத்துடன் எங்கள் தயாரிப்புகள் இருந்தாலும் எங்கள் உற்பத்தி முழுக்கவே உள்நாட்டு தேவைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கில்தான் இருக்கிறது. பஸ் மற்றும் டிரக்குகளுக்கு தேவையான பவர் ஸ்டீயரிங், வால்வுகள் உள்ளிட்ட பொருட்களை இங்கு தயார் செய்கிறோம். கிட்டத்தட்ட ஐந்நூறு தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்’’ என்றார் உற்சாகமாக.

இரும்பை அதிக கொதிநிலையில் எரியவிட்டு நமக்குத் தேவையான உருவத்துக்கு இரும்பை அடித்து மாற்றும் ஃபோர்ஜிங் துறையில் இந்தியாவிலேயே பெரிய கம்பெனி என்ற அடையாளத்துடன் இருக்கும் எம்.எம். ஃபோர்ஜிங்ஸ் நிறுவனமும் திருச்சியில்தான் அமைந்திருக்கிறது. சுமார் இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்தத் தொழிற்சாலையில் அறுநூறு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்தத் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு மேலாளர் மணிகண்டன், ‘‘இன்ஜின் கனெக்டிங் ராடு, கியர் போன்ற ஆட்டோமொபைல் உதிரி பாகங்களைத் தயாரிக்கிறோம். 1,200 டன் உற்பத்தித் திறன்கொண்ட இந்த யூனிட்டில் தயாராகும் பாகங்களில் 80% ஏற்றுமதியாகிறது. வருடா வருடம் எங்கள் உற்பத்தித் திறன் அதிகமாகிக்கொண்டே போவதால் எங்களுக்கு தேவையான ஆட்களின் எண்ணிகையும் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது’’ என்றார். இதோடு முடியவில்லை. ஆட்டோமொபைல் துறையில் பிரபலமான டி.வி.எஸ் நிறுவனமும் ஸ்பெயினைச் சேர்ந்த இரிஷார் நிறுவனத்தோடு சேர்ந்து ‘டி.வி.எஸ்-இரிஷார்’ என்ற பெயரில் பஸ் பாடி கட்டும் தொழிற்சாலையை அமைத்திருக் கிறார்கள். முழுக்க அயல்நாட்டு தொழில் நுட்பத் துடன் தயாராகும் இந்த வண்டிகள் பெரும்பாலும் ஏற்றுமதி சந்தையைத்தான் குறிவைத்திருக்கின்றன.

‘ஊர்’வலம் - திருச்சி - யாரும் இங்கே பிழைக்க முடியும்!

‘ஊர்’வலம் - திருச்சி - யாரும் இங்கே பிழைக்க முடியும்!

ஐரோப்பிய நாடுகளில் இரிஷார் கம்பெனியின் பஸ்கள் மிகப்பிரபலம். இங்கிருந்து சுமார் நாற்பது பேரை ஸ்பெயினுக்கு அழைத்துப்போய் ட்ரெயினிங் கொடுத்து அவர்களை வைத்துதான் பஸ் கட்டுகிறோம். இந்தியாவைவிட ஏற்றுமதியில்தான் எங்களுக்கு மிகப்பெரிய சந்தையிருக்கிறது. அதிலும் குறிப்பாக மலேஷியா, துபாய், கத்தார், ஓமன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். வருடத்துக்கு 700 பஸ்கள் என்று இருக்கும் எங்கள் இலக்கை அடுத்த ஆண்டு 1,000 பஸ்களாக மாற்ற இருக்கிறோம். வால்வோ பஸ்ஸுக்கு இணையான வசதிகளோடு இந்த ஆண்டு நாங்கள் அறிமுகப் படுத்திய ‘இன்டர் செஞ்சுரி’ பஸ்ஸுக்கு டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது’’ என்கிறார் டி.வி.எஸ்-இரிஷார் நிறுவனத் தலைவர் சுப்பிரமணியன்.

பெல் அளவுக்கு இல்லாவிட்டாலும் பாய்லர் உற்பத்தியில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் ‘சிதார் வெசல்ஸ்’ நிறுவனமும் திருச்சியின் குறிப்பிடத்தக்க அடையாளம்தான். பெல்லில் பணியாற்றிய மோகன்ராஜு, சுப்புராஜு ஆகிய இருவர் தொடங்கிய நிறுவனம் இது. பத்துக் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இன்றைக்கு ஏழு பிளான்ட்களுடன் படு விஸ்தாரமாக விரிந்து நிற்கிறது.

‘‘பெல் போன்ற நிறுவனங்கள் பெரிய பாய்லர்களின் தேவையைத்தான் பூர்த்தி செய்கின்றன. சிறிய அளவிலான பாய்லர்கள் மற்றும் பவர்பிளான்ட் தயாரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பல்வேறு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். கடந்த ஆண்டில் மட்டும் 325 கோடி ரூபாய்க்கு வணிகம் செய்திருக்கிறோம். வரும் ஆண்டில் 800 கோடி என்ற இலக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக் கிறோம்’’ என்கிறார் சிதார் வெசல்ஸின் லீகல் பிரிவு உதவி மேலாளர் தினேஷ்குமார்.

‘ஊர்’வலம் - திருச்சி - யாரும் இங்கே பிழைக்க முடியும்!

புதிது, புதிதான பிஸினஸ்களைக் கேள்விப்பட்டு அவற்றைச் செயல்படுத்து வதிலும் திருச்சிக்காரர்கள் கெட்டிக் காரர்கள். அந்த வகையில் மாத்தூர் சிப்காட்டில் வெரைட்டியான தொழிற் சாலைகள் முளைத்திருக்கின்றன. இந்திய கடற்படையின் ஏவுகணைகள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்குத் தேவையான பேட்டரிகளைத் தயாரிக்கும் ‘ஹை எனர்ஜி பேட்டரி’ நிறுவனம் மட்டும்தான், இந்தியாவிலேயே இந்த வகையான பேட்டரிகளை தயாரிக்கிறது.

இதன் எம்.டி ஸ்ரீதரன், ‘‘கடற்படைக்கு ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டபோது எங்களுக்கு ஆர்டர் கொடுத்தார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு இன்றுவரை சிறப்பாக சப்ளை செய்து கொண்டிருக்கிறோம். இப்போது தொலைதூர ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் பார்பிடோ பேட்டரிகளையும் தயார் செய்கிறோம். தேசநலன் கருதி இந்த பேட்டரிகளை நாங்கள் தனியார் நிறுவனங்க ளுக்குச் செய்து கொடுப்பதில்லை’’ என்று நாட்டுப்பற்றோடு சொன்னார் ஸ்ரீதரன்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டையே கவர்ந்திழுத்த பெட் பாட்டில்கள் தயாரிப்புத் தொழிலுக்குப் பிள்ளையார் சுழி போட்டது திருச்சிதான். அந்தத் தயாரிப்பின் முன்னோடியான ரமணன் பேசும்போது, ‘‘1988\ல் இந்தியாவி லேயே இரண்டாவதாக இந்தத் தொழிற் சாலையைத் தொடங்கினேன். எங்கள் பாட்டில்களைப் பார்த்த மக்கள் வெகுவாகக் கவரப்பட்டு எங்களுக்கு பெரும் ஆதரவைத் தந்தார்கள். இன்றைக்கு தமிழகத்தில் பெட் பாட்டில்கள் இல்லாத வீடே இருக்காது எனச் சொல்லுமளவிற்கு மக்களைக் கவர்ந்திருக் கிறது. தற்போது எங்களுக்குப் போட்டியாக நிறையப் பேர் வந்துவிட்டாலும்கூட இந்திய அளவில் இந்த பிஸினஸில் நான்காவது இடத்தில் இருக்கிறோம். சாதாரண ஸ்கூல் வாட்டர் பாட்டில்களில் தொடங்கி மெக்டெவல் கம்பெனி பாட்டில் வரைக்கும் நிறைய தயாரிப்புகளைச் செய்கிறோம். வடக்கே மகாராஷ்டிரா வரைக்கும் எங்களது தயாரிப்புகள் நீண்டிருக்கின்றன’’ என்று பெருமை பொங்கச் சொல்கிறார்.

இவர்களைப் போன்றே ஏ.கே.ஆர் பிளாஸ்டிக் நிறுவனம்தான் முதன்முதலில் பிளாஸ்டிக் கப்கள் மற்றும் பேப்பர் கப்கள் தயாரிப்பில் இறங்கி வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குண்டூசியில் தொடங்கி தையல் மெஷின் ஊசி வரைக்கும் பலவிதமான ஊசிகள் தயாரிப்பில் ஹிப்பான் நீடில்ஸ் மற்றும் யூனிவர்சல் நீடில்ஸ் ஆகிய கம்பெனிகள்தான் தமிழகத்திலேயே ஊசி தயாரிப்பில் முன்னணியில் இருக்கின்றன.

சிறியதும், பெரியதுமாக இப்படி பல நிறுவனங்கள் ஊரைச் சுற்றி இருப்பதாலேயே கணிசமான அளவிற்கு வேலை வாய்ப்புகளும்கூட இங்கு குவிந்துகிடக் கின்றன. படித்த இளைஞர்களுக்கு மட்டுமின்றி படிக்காத சாதாரண நபர்களுக்கும் கூட வேலை வாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் இங்கு பரவிக் கிடக்கின்றன. ஏ.பி.சி என்ற பெயரில் ‘ஹுயூமன் ரிசோர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நடத்திவரும் மதியழகனிடம் பேசினோம்.

‘ஊர்’வலம் - திருச்சி - யாரும் இங்கே பிழைக்க முடியும்!

‘‘தமிழகத்தின் மையப்பகுதியாக அமைந்திருப்பது தான் திருச்சி நகரம் தொழில் வளர்ச்சி அடைய பெரிய ப்ளஸ் பாயின்டாக அமைந்தது. தேவையான அளவு இடவசதி, குறைவில்லாத தண்ணீர் வசதி, தடையில்லாத போக்குவரத்து வசதி போன்றவைதான் திருச்சியைச் சுற்றி இப்படி நிறைய தொழிற் சாலைகளைக் கொண்டு வந்திருக்கிறது.

பெல்லைச் சார்ந்த நிறைய சார்பு தொழிலகங்கள் திருவெறும்பூர், மாத்தூர், மண்டையூர் பகுதிகளில் உள்ளன. இந்த நிறுவனங்களிளெல்லாம் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூபாய் 3,000-8,000 வரை சம்பளத் தில் நிறைய வேலை வாய்ப்புகள் கொடுத்திருக்கின்றன. படிக்காத, வேலை தெரிந்த லேபர்களுக்கு தினசரி 80 ரூபாயில் தொடங்கி 150 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. வேலை தெரியாத சாதாரண ஹெல்ப்பர்களுக்கு தினசரி 50 ரூபாய் கிடைக்கிறது. இந்த சிறு, சிறு நிறுவனங்களிளெல்லாம் பத்தாயிரம் பேர் வரைக்கும் பணியாற்றுகின்றனர். ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா போன்ற வெளிமாநிலங் களில் இருந்தெல்லாம் கூட இங்கு வந்து பணியாற்றுகிறார்கள். செலவு குறைந்த நகரமாக திருச்சி இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இப்படி படித்த ஆளாக இருந்தாலும் சரி, படிக்காத ஆளாக இருந்தாலும் சரி... இங்கு வந்தால் ஏதாவது ஒரு வேலை கிடைக்கும். பிழைத்துக் கொள்ளலாம்’’ என்றார்.

‘ஊர்’வலம் - திருச்சி - யாரும் இங்கே பிழைக்க முடியும்!

‘‘இப்படி பல்வேறு தொழிற்துறையில் ரொம்பவே முன்னேறிக் கொண்டிருக்கும் நகரமாய் இருந்தாலும் கூட திருச்சியின் உட்கட்டமைப்பு வசதிகள்தான் கவலைப்பட வைக்கிறது’’ என்றார் திருச்சியில் மூன்று முறை எம்.பி-யாக இருந்தவரும் தொழிலதிபருமான அடைக்கலராஜ். ‘‘திருச்சி வளர்ந்து வரும் வாய்ப்புகள் அதிகமுள்ள ஊர். ஆனால், அந்த நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லை. பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளே ஒருவருடத்திற்கு முன்புதான் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. சாலை வசதிகள் ஓரளவுக்கு இருந்தாலும், வளர்ந்து வரும் வேகத்திற்கு இது போதாது. நகரின் மையப்பகுதியில் பாலக்கரையில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு மேம்பாலம் கட்டப் பட்டுக்கொண்டே இருகிறது. அது முடிக்கப்படாமல் இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஒருபக்கம்... அந்தப் பகுதி முழுக்கவே வியாபார பாதிப்புகள் இன்னொரு பக்கம்’’ என்றார் அடைக்கலராஜ்.

அடைக்கலராஜின் இந்த ஆதங்கங்களுக்கெல்லாம் ரெடியாக பதில் வைத்திருக்கிறார் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார். ‘‘திருச்சி பெரு நகரமாக வெகுவேகமாக வளர்ந்து வருவதால்தான் நாங்களும் ஊரின் வளர்ச்சியில் தனிக் கவனம் கொண்டு செயல்படுகிறோம். பாதாள சாக்கடை பணிகளெல்லாம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. தங்க நாற்கரத் திட்டத்தின் கீழ் நான்குவழிச் சாலைகளை அமைப்பதற்கான நில ஆர்ஜிதமும் தொடங்கி விட்டது. விரைவில் சாலைகளுக்கான ஆரம்பப் பணிகள் தொடங்கிவிட்டால் சாலைகள் பிரச்னை இருக்காது. பாலக்கரை மேம்பாலப் பணிகள் வருகிற ஜூன் மாதத்துக்குள் உறுதியாக முடிந்துவிடும்.

இதுபோக, விமான நிலையத்தை விரிவுபடுத்தும் ஆரம்பக்கட்ட வேலைகளும் தொடங்கப் பட்டிருக்கிறது. பல்வேறு வெளிநாட்டு விமான சர்வீஸ்களும் திருச்சிக்கு வர ஆர்வமாக இருக்கின் றனர். அரசுக்கும் திருச்சியை மேம்படுத்துவதில் தகுந்த அக்கறை இருப்பதால் மேற்கொண்டு நகரின் வளர்ச் சிக்கு தேவையான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

திருச்சியை பொறுத்தவரைக்கும் எல்லா தொழில் களுக்குமான வாய்ப்பு களும் வாசல்களும் திறந்தேதான் கிடக்கின்றன. புதிதுபுதிதான நிறைய தொழில்களில் திருச்சி மக்கள் சக்ஸஸ் புல்லாக வலம்வந்தாலும்கூட இன்ஜினீயரிங் இண்டஸ்ட்ரி மற்றும் எனர்ஜி இண்டஸ்ட்ரியின் தேவையும் வளர்ச்சி வேகமும்தான் அதிகமாயிருக்கிறது.

இந்த இரண்டு தொழில்துறைகளுக்குமான ஸ்பெஷல் ஜோனாக திருச்சியை அறிவித்து உதவிகள் செய்வதின் மூலம் திருச்சியை ஒரு மாபெரும் தொழில் சாம்ராஜ்யமாக மாற்ற முடியும். மாற்றங்களை வரவேற்க திருச்சியும் ஆவலுடன் காத்திருக்கிறது.

மிழகத்திலே சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்தான் சரக்குகள் ஏற்றிச் செல்லும் கார்கோ விமானங்கள் வந்து செல்கின்றன. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிராஃபிக் நெருக்கடிகளால் திருச்சி விமான நிலையத்தை சரக்குகள் கையாளும் விமான நிலையமாக மாற்றும் முடிவில் இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை விரைந்து செயலாற்ற ஆரம்பகட்டப் பணிகளை முடித்திருக்கிறார்கள்.
கரின் மையப்பகுதியில் பெரிய சௌராஷ்டிரா தெரு மற்றும் குஜிலித் தெருவில் நூற்றுக்கும் அதிகமான வட இந்திய சேட்டுகள் கடை வைத்திருக்கின்றனர். ஃபேன்ஸி பொருட்களில் தொடங்கி பாரீன் ஐட்டங்கள் என பல்வேறு பொருட்களையும் மிகக்குறைந்தவிலையில் விற்பனைக்கு வைத்திருக்கின்றனர். இந்த ஏரியா பொருட்கள் அக்கம்பக்கத்து மாவட்டங்கள் வரை கொடிகட்டிப் பறக்கிறது. இந்தக் கடைகளில் தினமும் பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது.
ந்திய தொழிற்கூட்டமைப்பின் திருச்சி மண்டலம் சார்பாக வருகிற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திருச்சியில் இன்டர்நேஷனல் டூரிஸம் கண்காட்சியை நடத்தவிருக்கிறார்கள். உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் கலந்துகொள்கின்றன. இந்த கண்காட்சியை முடித்த கையோடு பன்னாட்டு நிறுவனங்களை அழைத்து ஒரு மிகப்பெரிய ஜாப் ஃபேர் எனப்படும் வேலை கண்காட்சியையும் நடத்தவிருக்கிறார்கள்.

தி ருச்சியில் மலைக்கோட்டை, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட நிறைய ஆன்மிக ஸ்தலங்கள் அமைந்திருப்பதால் ஆன்மிக சுற்றுலா வருவாயும் அதனால் நடக்கும் வியாபாரங்களும் கணிசமான அளவு இருக்கிறது. இந்த மாதிரி வரும் சுற்றுலா பயணிகளை மட்டும் நம்பி கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றன.

தி ருச்சியில் மக்கள் காவிரிப்பாலத்தில்தான் மாலை வேளைகளில் பொழுதைப் போக்குகிறார்கள். வாரக் கடைசி பொழுதுபோக்கே திருச்சியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் முக்கொம்பு மட்டும்தான்!
தி ருச்சி காட்டூரில் கோத்தாரி சர்க்கரை ஆலையும், பெட்டவாய்த்தலையில் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலையும் அமைந்திருக்கிறது. இந்த இரண்டு ஆலைகளால் நேரடியாக கிட்டத்தட்ட ஆயிரம் பேர் தொழில் வாய்ப்பு பெறுகிறார்கள். மறைமுகமாக ஐந்தாயிரம் பேர் வரைக்கும் பயன்பெறுகிறார்கள். வருடத்துக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் வரை வணிகம் நடக்கிறது.
ல்வித்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த நூற்றாண்டுகளைக் கடந்த பல முக்கிய கல்லூரிகள் திருச்சியில் இருக்கின்றன. இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட முக்கியமான பள்ளிகளும், பதினைந்துக்கும் அதிகமான கல்லூரிகளும், இருபதுக்கும் அதிகமான பொறியியற் கல்லூரிகளும், பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அமைந்திருக்கின்றன. எல்லாவற்றையும் விட என்.ஐ.டி எனப்படும் தேசிய பொறியியற் மையக் கல்லூரி (பழைய ஆர்.இ.சி) அமைந்திருப்பதைப் பெருமையாக நினைக்கிறார்கள் திருச்சி மக்கள்.
‘ஊர்’வலம் - திருச்சி - யாரும் இங்கே பிழைக்க முடியும்!
செ ன்னையில் இருக்கும் எல்லா மருத்துவ வசதிகளும் திருச்சிக்கு வந்துவிட்டதால் மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகிறது. அகில இந்திய அளவில் மெடிக்கல் டூரிஸத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் திருச்சியும் ஒன்று. அப்போலோவின் கிளையும் இங்கு விரைவில் வரவிருக்கிறது. இதெல்லாவற்றையும் விட திருச்சி அரசு மருத்துவமனையை 100 கோடி ரூபாய் செலவில் உயர் மருத்துவ ஆராய்ச்சி மையமாக மாற்றப்போகிறார்கள். இதற்காக இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மருத்துவமனைகளில் திருச்சி அரசு மருத்துவமனையும் ஒன்று.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism