Published:Updated:

படம் காட்டி பாடம்! வளவள கமல்... ‘நச்’ ரஜினி!

படம் காட்டி பாடம்! வளவள கமல்... ‘நச்’ ரஜினி!

படம் காட்டி பாடம்! வளவள கமல்... ‘நச்’ ரஜினி!

படம் காட்டி பாடம்! வளவள கமல்... ‘நச்’ ரஜினி!

Published:Updated:
நடப்பு
படம் காட்டி பாடம்! வளவள கமல்... ‘நச்’ ரஜினி!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படம் காட்டி பாடம்! வளவள கமல்... ‘நச்’ ரஜினி!
படம் காட்டி பாடம்! வளவள கமல்... ‘நச்’ ரஜினி!
படம் காட்டி பாடம்! வளவள கமல்... ‘நச்’ ரஜினி!

‘ப டிச்சது ஒண்ணு.. ஆனா இப்ப பாக்குற தொழில் படிச்சதுக்கு சம்பந்தமில்லாம இருக்கே?’ என்று புலம்புபவரா நீங்கள்? உங்களுக்குப் பதில்சொல்ல வருகிறார் மோகன்ராம். சின்னத்திரையில் பிஸியான பிரபலம். மாதத்தின் முக்கால்வாசி நாட்கள் சின்னத்திரை ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் இவர் தற்போது ஒரு மாதத்தில் நான்கைந்து நாட்கள், படித்த படிப்புக்கு சம்பந்தமான வேலையைப் பார்க்கிறார். என்ன புரியவில்லையா? இதோ அவரே விவரிக்கிறார்.

‘‘நான் ஜாம்ஷெட்பூரில் உள்ள எக்ஸ்.எல்.ஆர்.ஐ-ல் எம்.பி.ஏ படித்தேன். கொஞ்சநாட்கள் மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்த நான், தனியாகத் தொழில் தொடங்கினேன். முதலில் தொழிற்சாலை, பிறகு டிராவல் ஏஜென்சி என்று இருந்த என்னை, ‘இதயம்’ படத்தின் மூலம் நடிகராக்கினார் தயாரிப்பாளர் ‘சத்யஜோதி’ தியாகராஜன். அதன்பிறகு, சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த நான், கே.பி சாரின் சின்னத்திரை தொடர் மூலம் டி.வி-யிலும் நடிக்க ஆரம்பித்தேன். அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க, முழுநேர நடிகனாகிவிட்டேன்.

2003-ம் வருஷம் என்னோடு படித்தவர்கள் எல்லோரும் கூடி ஒரு கெட்-டு-கெதருக்காக கூடினோம். அப்போது என்னோடு படித்த ஸ்ரீநாத், ‘‘பிரபலமான ஆளாக இருக்கும் நீ ஒரு எம்.பி.ஏ கன்ஸல்டன்சி தொடங்கலாமே’’ என்று ஐடியா கொடுத்தான்!

நானும் செயலில் இறங்கினேன். அப்படித்தான், மேனேஜர்கள் மற்றும் கார்ப்பரேட் ஆட்களுக்கான மேனேஜ்மென்ட் டிரெயினிங் கொடுக்கும் ஐடியா தோன்றியது. அதில் நான் இருக்கும் சினிமாத் துறையை யும் புகுத்தி வித்தியாசம் காட்டலாம் என்றும் முடிவெடுத்தேன்! வகுப்புகளில் மிக நீண்ட லெக்சருக்கு பதிலாக சினிமா காட்சிகளைக் காட்டத் தொடங்கி னேன். அது நன்றாகவே ஒர்க்-அவுட் ஆனது.

ஒருவரைப்பற்றி தீர விசாரித்துவிட்டு அவருக்கு ஏற்றமாதிரி நடந்துகொண்டு காரியத்தை வெற்றி கரமாக முடிப்பது எப்படி என்பதைப் பற்றி பக்கம் பக்கமாக பேசுவதைவிட, ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிகாந்த், தன்னை இன்டர்வியூ செய்கிற தேங்காய் சீனிவாசனை இம்ப்ரஸ் பண்ணி வெற்றி பெறும் காட்சியைக் காட்டுவேன்.

அதேபோல, திடீரென்று ஒரு குற்றச்சாட்டு நம்மீது திணிக்கப் படுகிற நேரத்தில் அதை எதிர்கொள்வது எப்படி என்ற கருத்தை விளக்குவதற்காக ‘குஷி’ படத்தில் நண்பன் தன் காதலிக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி விஜய்யும், ஜோதிகாவும் பேசும் காட்சியைக் காட்டுவேன். ஜோதிகா உணர்ச்சிவசப்பட்டு திட்டுவதும், விஜய் தன் தரப்பு விளக்கத்தை நிதானமாகச் சொல்வதுமான அந்தக் காட்சி நிஜமான மேனேஜ்மென்ட் டிப்ஸ்!

அதோடு, இதேபோன்ற அனுபவம் உங்களுக்கு நேர்ந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று கேள்வி கேட்பேன். அசடு வழிந்த சம்பவங்கள், சண்டைக்குப் போன நிகழ்ச்சிகள் என்று அவர்களும் தங்கள் அனுபவங்களைச் சொல்வார்கள். எப்படி ரியாக்ட் பண்ணியிருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம் என்று சொல்வேன்.

எதுவாக இருந்தாலும் சுருக்கமாக தெளிவாகப் பேச வேண்டும். இல்லையென்றால் அது வீண் சர்ச்சைகளில் முடிந்துவிடும் என்பதற்கு நான் சொல்லும் உதாரணம் ‘நாயகன்’ படக்காட்சி. கமலிடம் அவருடைய மகள், ‘‘எப்பப்பா நிறுத்தப் போறீங்க?’’ என்று ஒரு கேள்விதான் கேட்பார். அதற்கு கமல் சுருக்கமாக பதில் சொல்லாமல் சுற்றிவளைத்துப் பேச... அப்பாவுக்கும் மகளுக்கும் சண்டையாகிவிடும்.

எப்படி பேச வேண்டும் என்பதற்கு ‘பாட்ஷா’ படத்தைக் காட்டுவேன். அதில் ரஜினியின் தங்கைக்கு கல்லூரியில் சீட் கிடைக்காது. அப்போது ரஜினி, கல்லூரி முதல்வரிடம் போய் தன்னுடைய பழைய தாதா வாழ்க்கையை எல்லாம் சொல்லி மிரட்டுவார். கல்லூரி முதல்வரும் சீட் கொடுத்துவிடுவார். ரஜினியிடம் அவருடைய தங்கை, ‘‘எப்படிண்ணா... என்னண்ணா சொன்னே?’’ என்று கேட்பார். ‘‘உண்மையைச் சொன்னேன்’’ என்று இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிட்டுப் போவார் ரஜினி.

இந்த இரண்டு படங்களின் காட்சிகளுமே அந்தந்த படங்களுக்கு ஏற்றமாதிரி சரியாகவே இருக்கும். ஆனால், என் கருத்துக்கு ஏற்ப இரண்டு காட்சிகளை மட்டும் வெட்டி, ஒரு புதிய கருத்தைச் சொல்வேன்.

படம் காட்டி பாடம்! வளவள கமல்... ‘நச்’ ரஜினி!

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருக்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு கூட்டுமுயற்சி, பழகும் விதம், ஆளுமைத்திறன் போன்ற மூன்று விஷயங்களை இலக்காக வைத்துக் கொண்டுதான் பயிற்சி கொடுக்கிறேன். ஹிந்தி, ஆங்கில சினிமாக்களும் பார்க்கும் பழக்கம் இருப்பதால், மல்ட்டி நேஷனல் கம்பெனிகள் பலவற்றுக்கும் இதேபோன்ற பயிற்சி கொடுக்கிறேன்.

நிறுவனங்களுக்கு ஏற்றபடி புதிய அணுகுமுறைகளை ஏற்படுத்திக்கொள்வேன். தொழிலாளர் சார்ந்த நிறுவனம் என்றால் அதற்கு ஏற்ற மாதிரி ஸ்கிரிப்டை தயாரித்துக் கொள்வேன். எல்லாமே என்னுடைய எம்.பி.ஏ படிப்பில் கற்றுக்கொண்டவைதான். இந்தப் பயிற்சிக்குப் பிறகு நல்ல மாற்றம் இருப்பதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன’’ என்றார்.

தன்னுடைய நடிப்பு வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் இதுபோன்ற பயிற்சிகளை ஏற்பாடு செய்துகொள்ளும் மோகன்ராம் கம்பெனிகளின் ரேஞ்சைப் பொறுத்து 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை கட்டணம் வாங்குகிறார். ‘‘படித்த படிப்புக்கு தகுந்த வேலை பார்த்த திருப்தியும் கிடைக்கிறது. விருப்பமான நடிப்புத்துறையில் சாதிக்கவும் முடிகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!’’ என்று சிரிக்கிறார் மோகன் ராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism