Published:Updated:

குறைந்தகட்டண குடும்ப டாக்டர்!

குறைந்தகட்டண குடும்ப டாக்டர்!

குறைந்தகட்டண குடும்ப டாக்டர்!

குறைந்தகட்டண குடும்ப டாக்டர்!

Published:Updated:
நடப்பு
குறைந்தகட்டண குடும்ப டாக்டர்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறைந்தகட்டண குடும்ப டாக்டர்!
குறைந்தகட்டண குடும்ப டாக்டர்!
குறைந்தகட்டண குடும்ப டாக்டர்!

ரபரப்பான உலகமாக மாறிவிட்ட சூழ்நிலையில் நாம் இழந்திருக்கும் விஷயங்களில் முக்கியமானது மருத்துவமுறை. முன்பெல்லாம் குடும்ப டாக்டர் என்று ஒருவர் இருப்பார். சின்ன தலைவலி என்றாலும் பெரிய டைபாய்ட் என்றாலும் அவரிடம்தான் முதலில் செல்வோம். நம்முடைய குடும்ப நிலவரமே அவருக்கு அத்துபடியாக இருக்கும்.

அவருடைய சக்திக்கு மீறிய விஷயம் என்றால் அவரே ஒரு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வார். அதன்பிறகுதான் பெரிய அளவில் வைத்தியம் நடக்கும். அப்போதுகூட அவர் நம் உடல்நிலை பற்றித் தெரிந்துகொண்டுதான் இருப்பார்.

இப்போது அதெல்லாம் மாறிவிட்டது. ஒன்று, வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டாக்டரிடம் அப்போதைய தேவைக்கு காட்டிக் கொள்கிறோம். அடுத்து வேறு டாக்டரிடம் போகிறோம். அல்லது சின்ன விஷயத்துக்குக் கூட பெரிய மருத்துவ மனைகளைத் தேடி ஓடுகிறோம். முன்னது ஆரோக்கியமான விஷயம் இல்லை என்றால் பின்னது பர்ஸுக்கு வேட்டு. அதிலும் இப்போது எதற்கெடுத்தாலும் ஸ்பெஷலிஸ்ட் களைத் தேடி ஓடி, அவர்கள் எடுக்கச் சொல் லும் டெஸ்ட்களை எடுத்து தேவையில்லாமல் பணம் செலவழிப்பது சகஜமாகிவிட்டது.

நடுத்தர குடும்பங்கள் பலவும் இழந்து விட்ட குடும்ப டாக்டர் முறையை இப்போது மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது ‘குவாலிடாஸ் ஃபேமிலி கிளினிக்!’

வெளிநாடுகளில் இதுபோன்ற குடும்ப நல மருத்துவமனைகள் அதிகம். மலேசியாவில் 85 மருத்துவ மனைகளை நடத்திவரும் தமிழரான டாக்டர் நூருல் அமீன், தற்போது இந்தியாவிலும் முழுவேகத்தில் இதுபோன்ற குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெறக்கூடிய ஃபேமிலி கிளினிக்குகளை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். சென்னை, ராயப்பேட்டையில் இதுபோன்ற கிளினிக் இருக்கிறது. ‘குவாலிடாஸ் மெடிக்கல் குரூப்’பின் நிர்வாகியான நூருல் அமீன் சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

‘‘எங்கள் கிளினிக்குக்கு வரும் நோயாளியைப் பற்றிய விவரங்கள் அனைத்துமே கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுவிடும். அதன்பிறகு சிகிச்சைக்காக வரும்போது முந்தைய ரெக்கார்டுகளைப் பார்த்துவிட்டு அதற்கேற்ப சிகிச்சை வழங்குவோம். அதுதவிர, எல்லாதுறைக்கான ஸ்பெஷலிஸ்ட்களும் எங்கள் கிளினிக்குக்கு வருகிறார்கள். அவர்களின் கன்சல்டேஷன் தேவைப்படும்போது பயன் படுத்திக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் ஐம்பது ரூபாய்தான் என்பது எங்கள் திட்டம். மக்களுக்கு நல்ல மருத்துவச் சேவையை வழங்கவேண்டும். அதுவும் அவர்கள் எளிதாகச் செலுத்தும் விதமான கட்டணத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதைத் தொடங்கி, நடத்திவருகிறோம். விரைவில் சென்னையில் இன்னும் சில பகுதிகளிலும், பெங்களூர், ஹைதராபாத், திருச்சி, மதுரை போன்ற நகரங்களிலும் கிளைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள் ளோம்’’ என்றார்.

உறுப்பினர்களுக்குக் கட்டணச் சலுகை என்ற அடிப்படையில், மருந்துக்கடை, எக்ஸ்ரே, ஸ்கேன், இ.சி.ஜி., டிரெட்மில், ரத்தப் பரிசோதனை, கண்பரிசோதனை போன்ற வசதிகளும் வைத்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism