Published:Updated:

தினம் 10,000 போன்கள்!

தினம் 10,000 போன்கள்!

தினம் 10,000 போன்கள்!

தினம் 10,000 போன்கள்!

Published:Updated:
நடப்பு
தினம் 10,000 போன்கள்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினம் 10,000 போன்கள்!
தினம் 10,000 போன்கள்!
தினம் 10,000 போன்கள்!

ங்களுடைய சாதனையாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் மாநில அரசும் சொல்லிக்கொண்ட நோக்கியா தொழிற்சாலை, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புத்தூரில் எந்த அரசியல் கலப்பும் இல்லாமல் துவங்கப்பட்டிருக்கிறது. ஃபின்லாந்து பிரதமர் மேட்டி வான்ஹேனன், தமிழக கவர்னர் பர்னாலா என்று கலந்து கொண்டவர்கள் எல்லோருமே அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்தான்!

சென்னையிலேயே ஒரு செல்போன் தயாரிப்பு தொழிற்சாலை வந்துவிட்டது. இனி செல்போன் விலையெல்லாம் குறைந்துவிடும் என்று கிண்டலாகச் சொல்பவர்கள் இருந்தாலும் இந்தத் தொழிற்சாலை யினால் பத்தாயிரம் பேருக்குக் குறையாமல் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்பது உண்மை!

தொடக்கவிழா அன்று தொழிற்சாலையைச் சுற்றி வந்தபோது, கண்ணில் பட்ட டெக்னீஷியன்கள் எல்லோருமே நம்மூர் முகங்கள்தான் இருந்தன. நம் நாட்டைச் சேர்ந்த இன்ஜினீயர்களைத் தேர்வு செய்து, தகுந்த பயிற்சி கொடுத்து பணியில் அமர்த்தியிருக்கிறார்கள். பாதிக்கு பாதி வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முக்கியத் துவம் கொடுத்திருக்கிறது இந்த நிறுவனம்.

‘‘இனி வரும்நாட்களில் இன்னும் அதிகமான வேலைவாய்ப்பைப் பெறுவ தற்கான சூழ்நிலை இருக்கிறது. அதோடு, இந்திய மார்க்கெட்டுக்கு ஏற்ற மொபைல் போன்களை இங்கு தயாரிக்க இருப்பதால், இனி புதிய மாடல்கள் உடனுக்குடன் விற்பனைக்கு வரும்.

ஒருநாளைக்கு பத்தாயிரம் போன்கள் தயாரிப்பது இலக்கு! எந்த வயதைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்றவகையில் பல வண்ணங்களில் மாடல்களில் தயாரிக்கப்போகிறோம். அதற்கேற்ப அதிநவீனமான இயந்திரங்களை ஜப்பானில் இருந்து கொண்டுவந்து இருக்கிறோம்.

இந்திய சந்தை மட்டுமல்லாது இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளுக்கும் விற் பனையை விரிவுபடுத்தும் அளவுக்கு பெரிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிற் சாலையாக இது அமையும்’’ என்றார் நோக்கியாவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர்.

தினம் 10,000 போன்கள்!

செல்போன் தவிர அதற்கான நெட் ஒர்க் தொடர்பான கருவிகளையும் தயாரிக்கப் போகிறது நோக்கியா.

விழாவில் பேசிய ஃபின்லாந்து பிரதமர், மேட்டி வான்ஹேனன், ‘‘இந்தியா, பொருளா தாரத்தில் வளர்ந்துவரும் வேளையில் நோக்கியா போன்ற நிறுவனங்கள் இங்கு வந்து முதலீடு செய்வது பொருளாதாரத்துக்கு வலு சேர்ப்பதாக அமையும். மேலும் புதிய பொருட்களை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அடுத்தடுத்து முதலீடு செய்யும் போது வளர்ச்சியின் வேகம் இன்னும் அதிகரிக்கும்’’ என்றார்.

அடுத்து சில நிறுவனங்களும் தமிழ் நாட்டைக் குறிவைத்து திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கின்றன என்ற செய்தி நமக்கு உற்சாகம் தரக்கூடியதுதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism