Published:Updated:

அடடே மீண்டும் ஸ்டெர்லிங்!

அடடே மீண்டும் ஸ்டெர்லிங்!

அடடே மீண்டும் ஸ்டெர்லிங்!

அடடே மீண்டும் ஸ்டெர்லிங்!

Published:Updated:
நடப்பு
அடடே, மீண்டும் ஸ்டெர்லிங்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடடே மீண்டும் ஸ்டெர்லிங்!
அடடே மீண்டும் ஸ்டெர்லிங்!

த்து வருடங்களுக்கு முன் பரபரப்பைக் கிளப்பிய விஷயம் நிதிநிறுவனங்களின் தலைமறைவு ஓட்டம். அதிக வட்டிக்கு ஆசைப் பட்டு நிதி நிறுவனங்களில் போட்டுவிட்டு பணத்தைப் பறிகொடுத்த மத்திய தர குடும்பத்தினர். இதில் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இந்தக் கலாட்டாவின்போது சிக்கலில் மாட்டிக்கொண்ட நிறுவனங் களில் ஒன்று ‘ஸ்டெர்லிங் குரூப்’. இந்தியாவில் முதன்முறையாக சுற்றுலாவுக்கென ‘டைம் ஷேர்’ என்ற கான்செப்ட்டைக் கொண்டுவந்த நிறுவனம் இது.

அது, புது ஐடியாவாக இருக்க, மக்களும் இதில் ஏராளமாக முதலீடு செய்தனர். சுமார் 85 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்த்தது ஸ்டெர்லிங். இந்தச் சூழ்நிலையில்தான் நிதிநிறுவனங்களின் தடுமாற்றம்.

பெரிய இடைவெளிக்குப் பிறகு, இப்போது மறுஅவதாரம் எடுத்து வந்திருக்கிறது ஸ்டெர்லிங். புதிய திட்டங்களோடு திரும்பி வந்திருக்கும் இந்நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டரான சுப்பிர மணியனைச் சந்தித்தோம்.

‘‘திரும்ப வந்துவிட்டீர்கள் போல் இருக்கிறதே?’’ என்றதும் கடகடவென்று பேச ஆரம்பித்தார்.

‘‘நாங்கள் எங்கேயும் போகவில்லை. இங்கேதான் இருக்கிறோம். நிதிநிறுவனச் சிக்கல் இருந்த காலகட்டத்தில் பங்குச் சந்தையும் பரஸ்பர நிதியும் தடுமாற்றத்தில் இருந்தது. இங்கேயும் சூழல் சரியாக இல்லை.

அந்த பயத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைத் திரும்பக் கேட்டனர். சிலர் வழக்குகூடத் தொடர்ந்தார்கள். அவர்களுக்கெல்லாம் முறையாக பணத்தை செட்டில் செய்தோம். அந்தச் சூழலிலும் பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் நம்பிக்கையோடு இன்றும் எங்களுடன் கைகோத்திருக் கிறார்கள்.

அந்த நிதிநிறுவன சுனாமியால் புதிய முதலீட்டாளர்கள் கிடைக் காமல் பாதிப்புக்கு ஆளானோம். இப்போது மக்கள் நல்லது கெட்ட தைப் பகுத்துப்பார்க்கும் தெளிவோடு இருக்கிறார்கள். இது சரியான நேரம் என்பதால் மீண்டும் முழுவேகத்தில் இறங்கி இருக்கிறோம்’’ என்றார்.

‘‘ஆனாலும் மக்கள் பயத்தைப் போக்க முடியுமா?’’ என்றோம். தொடர்ந்தார்.

‘‘அத்தனை பெரிய சிக்கலை சந்தித்துக் கடனாகத் தரவேண்டிய பணத்தைக் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டபோதுகூட, முதலீட் டாளருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை’’ என்றவர்,

‘‘எப்போதும்போல பிஸினஸில் தீவிரமாகவே இருந்தோம். எங்கள் ரிசார்ட்டுகள் ஒரு பக்கம் லாபம் சம்பாதிக்க, பங்குச் சந்தையிலும் விட்ட இடத்தைப் பிடித்தோம். அதன் மூலமாக அதிகப்படியான பங்கு முதலீடாக 45 கோடி ரூபாயைப் பெற்றோம்.

ஒரு குறிப்பிட்ட பகுதி சொத்துக் களை விப்ரோ நிறுவனத்துக்கு விற்று 33 கோடி ரூபாய் உபரி மூலதனத்தைப் பெற்றோம். நிலுவையில் நின்ற திட்டங்களை 15 கோடி ரூபாய் செலவில் முடித்துவைத்தோம். நிறுவனத்தின் சரிவின்போது ஏற்பட்ட இழப்பு களான 30 கோடி ரூபாய் கடன் தொகையை ஒப்பந்தப்படி முதலீட்டாளர்களுக்கு பட்டுவாடா செய்தோம்.

இதனால் இன்று மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. இப்போது மிகுந்த திட்ட மிடலுடன் நடுத்தர மக்களுக்கும் சரியாகப் பயன் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நாடு முழுவதும் 1,437 காட்டேஜ்களை வடிவமைத் திருக்கிறோம். இனி வளர்ச்சிப் பாதையில் மட்டுமே செல்வோம்!’’ என்றார் நம்பிக்கை பொங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism