Published:Updated:

படுசல்லிசு விலையில் பலசரக்குத் திருவிழா!

படுசல்லிசு விலையில் பலசரக்குத் திருவிழா!

படுசல்லிசு விலையில் பலசரக்குத் திருவிழா!

படுசல்லிசு விலையில் பலசரக்குத் திருவிழா!

Published:Updated:
நடப்பு
படுசல்லிசு விலையில் பலசரக்குத் திருவிழா!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படுசல்லிசு விலையில் பலசரக்குத் திருவிழா!
படுசல்லிசு விலையில் பலசரக்குத் திருவிழா!

பு ட்லூர். திருவள்ளூருக்கு அருகில் இருக்கும் சாதாரண கிராமம். குறைவான ஆள் நடமாட்டம், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் வீடுகள், இறங்குவதற்கோ ஏறுவதற்கோ பெரிய கூட்டம் இல்லாத மின்சார ரயில் நிலையம் என்று சோம்பலாகக் கிடக்கும் புட்லூர், ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதியானால், சுறுசுறுப்பாகி விடுகிறது.

திரும்பிய பக்கமெல்லாம் தலைகள், தற்காலிகமாக முளைக்கும் டீக்கடைகள், நிரம்பிவழியும் ரயில்கள் என்று புட்லூரைச் சுறுசுறுப்பாக்குவது அன்று நடக்கும் பலசரக்கு சந்தை! ஒருகாலத்தில் பருப்புக்கு பேர் வாங்கிய ஊராக இருந்த புட்லூர் இப்போது மளிகைச் சந்தையால் பிரபலமாகி இருக்கிறது.

சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தெல்லாம் பலசரக்கு வியாபாரிகள் இங்கு வந்து தற்காலிகக் கடை போடு வதும் சென்னை முதல் பக்கத்து ஊர்களில் இருந்து மக்கள் பலசரக்கை வாங்கிச் செல்வதும் என்று இந்த ஊரே வியாபார மையமாகி விடுகிறது. வழக்கமான விலையைவிட படுசல்லிசாக பலசரக்குக் கிடைப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஒரு மாதத்தில் பண்ணுகிற வியாபாரத்தை ஒரே நாளில் முடித்துவிடுவதால் வியாபாரிகளும் இங்கு வந்து விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

கடுகு, மிளகு, பூண்டு, சீரகத்தில் இருந்து பருப்பு அப்பளம்வரை குடும்பத்துக்குத் தேவையான அனைத்து மளிகைப் பொருட்களும் - அரிசி தவிர, இந்தச் சந்தையில் கிடைக்கிறது.

படுசல்லிசு விலையில் பலசரக்குத் திருவிழா!

புட்லூர் சந்தைக்கு விசிட் அடித்தோம். பல்வேறு ஊர்களில் இருந்து நானூறுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை போட்டிருக்க... கோணிப்பை சகிதம் குவிந்திருந்தார்கள் மக்கள். கடை என்றால் கீற்று கொட்டகைகூடக் கிடையாது. மேலே பாலீதீன் பேப்பர் கூரை, கீழே சாக்கு விரிப்பு என்று டெம்ப்ரவரி கடை கள்தான் எல்லாமே! சிலர் தாங்கள் சரக்கு ஏற்றிவந்த லாரியையே கடையாக்கி இருந்தார்கள்.

புட்லூர் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய அந்த சந்தைக் களம், ஊராட்சி இடம் என்பதால் கடைக்கு இவ்வளவு என்று ஊராட்சிக்கு வரி செலுத்தி விடுகிறார்கள். சின்ன கடையாக இருந்தால் 60 ரூபாய், கொஞ்சம் பெரிய கடை என்றால் 100 ரூபாய் என்று கணக்குப் போட்டு வரி வசூலிக்கிறார்கள். காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை சந்தை நேரம். முதல்நாளே வந்து இடம்பிடித்து கடையை ரெடி பண்ணிக்கொண்டு அடுத்தநாள் காலையில் கடையை ஆரம்பித்துவிடுகிறார்கள்.

மூன்று ஆண்டுகளாக நடக்கிறது இந்தச் சந்தை. இப்படி ஒரு சந்தையைக் கூட்ட வேண்டும் என்று யாரோ செய்த யோசனை இன்று பலருக்கும் பயன்தந்து பிரமாதப்படுத்துகிறது. ‘‘அரக்கோணத்தில் இதேபோன்று ஒவ்வொரு மாதமும் பதினைந்தாம் தேதி சந்தை நடக்குமாம். அதைப்பார்த்துவிட்டு புட்லூரிலும் நடத்தலாமே என்று அங்குள்ள வியாபாரிகளுக்கு தகவல் கொடுத்து இங்கே ஒருவர் துவக்கினார். அந்த புண்ணியவான் யாரென்று தகவல் தெரியலீங்க..!’’ என்கிறார் சந்தைக்கு வந்த வியாபாரி ஒருவர்.

படுசல்லிசு விலையில் பலசரக்குத் திருவிழா!

ஆற்காட்டைச் சேர்ந்த லலிதா என்ற மூதாட்டி சொன்ன தகவல் ஆச்சரியமூட்டியது. ‘‘நான் மாசத்தில் இங்கே ஒரு நாள், அரக்கோணத்தில் ஒருநாள் மட்டும் கடைபோட்டு வியாபாரம் பண்ணுவேன். அதுவே என் ஒரு மாதத்துக்கான வருமானமாகிடும். மற்ற நாட்களில் வீட்டிலேயே இருந்துடுவேன். மாசத்துலே ரெண்டுநாள்தான் வேலை என்பதால், இந்தச் சந்தையிலே எப்படி எல்லா சரக்கையும் விற்கிறது... நல்ல லாபம் பார்க்கிறது என்பதுமாதிரி திட்டமிடுவேன். ஒருமுறைகூட எடுத்துட்டு வந்த சரக்கை விற்காமல் கொண்டு போனதே கிடையாது. ஒரு இடத்தில் கடை பிடிச்சு, அதில் சரக்கு இறக்கி மாதம் முழுக்க விற்பனை செய்து கிடைக்கும் லாபத்தைவிட, இந்த ஒரே நாள் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைச்சுடுது’’ என்றார் லலிதா. மிளகு, சீரகம், மல்லி போன்ற பலசரக்குகளை மொத்தமாக வாங்கி வந்து, இங்கு விற்கிறார் இவர்.

அதே ஊரைச் சேர்ந்த பருப்பு வியாபாரி ராம்மோகன், ‘‘நான் ஊரிலே மளிகைக் கடை வெச்சிருக்கேன். பத்தாம் தேதி மட்டும் அந்தக் கடைக்கு லீவு விட்டுட்டு இங்கே கடை போடறேன். மாசம்பூரா கடையில உட்கார்ந்து பார்க்கிற வருமானத்தை இங்கே ஒரே நாளில் சம்பாதிச்சுடுவேன்’’ என்றார் ராம்மோகன்.

பூண்டுக்கு, மிளகாய்க்கு என ரகம்வாரியாக தனிக்கடைகள் இருப்பதோடு, அங்கே ரகம் வாரியாகவும் தரம் வாரியாகவும் தனித்தனியே பொருட்கள் கிடைக்கின்றன. மிளகாய் வியாபாரம் செய்துகொண்டிருந்த குமார் பேசும்போது, ‘‘நான் ஒவ்வொரு தடவையும் 10,000 ரூபாய்க்கு முதல் போட்டு சரக்கு எடுத்துட்டு வருவேன். வண்டிச் செலவு, கடைக்கான வரி எல்லாம் போக குறைந்தது 2,000 ரூபாய் லாபம் வரும். இது நல்ல வருமானம் தானே!’’ என்றார்.

படுசல்லிசு விலையில் பலசரக்குத் திருவிழா!

புட்லூரைச் சேர்ந்த சிலர் இங்கு கூடும் கூட்டத்துக்கு பயன்படும் வகையில் திருவிழாக் கடைகள் போல டீக்கடை, சர்பத் கடைகள் தின்பண்டங்கள், பொம்மைகள் வியாபாரம் என்று தனி லாபம் பார்க்கிறார்கள்!

சுற்றுவட்டாரத்தில் இருக்கும் இருநூறு கிராமங்களில் இருந்து மக்கள் மாதாமாதம் மளிகைப் பொருட்களை இங்கு வாங்கு கின்றனர். மார்க்கெட் விலையை விட எல்லாமே கிலோவுக்கு சுமார் பத்து ரூபாயாவது குறைவாக இருப்பதுதான் அவர்களை இந்தச் சந்தையை நோக்கி இழுக்கிறது.

படுசல்லிசு விலையில் பலசரக்குத் திருவிழா!

அனைத்துப் பொருட்களுமே சென்னை மற்றும் அருகில் உள்ள ஊர்களில் இருக்கும் மொத்த விற்பனை அங்காடிகளிலும் மில்களிலும் இருந்தே வாங்கப்படுகிறது என்பதால் மிகக்குறைந்த விலைக்குக் கொடுக்க முடிகிறதாம். அதோடு, இங்கு பெரும்பாலும் படி கணக்கில் அளந்துதான் தருகிறார்கள்.

சென்னையில் இருந்து இந்தச் சந்தைக்கு வந்து பொருட்கள் வாங்கிச் செல்கிறவர்கள் ஏராளம். அவர்களில் பெண்கள் தான் அதிகம். சுமதி என்பவர், ‘‘எங்க ஏரியா கடைகளில் வாங்கற விலையைவிட இங்கு ரொம்பக் குறைவாக இருக்கு. அதோடு அளவும் அதிகமாக இருக்கு. நமக்கு ஏற்ற தரத்தில் பொருட்களை வாங்க முடியுது. சம்பளம் வந்ததுமே, மளிகைச் சாமானுக்கான தொகையை இந்த பத்தாம் தேதி சந்தைக்காக எடுத்து வெச்சுடுவேன். ரயில் டிக்கெட், போக்குவரத்து செலவு எல்லாத்தையும் தாண்டி இதுல நல்ல லாபம் இருக்குது. இதேபோல ஊர் ஊருக்கு ஒரு சந்தை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’’ என்று சந்தோஷத்தையும் எதிர்பார்ப்பையும் ஒருசேர வெளிப்படுத்தினார்.

நான்கைந்து குடும்பத்தாருக்குத் தேவையான பொருட்களை ஒரே நபர் மொத்தமாக வாங்கிச் சென்று அதைப் பகிர்ந்து எடுத்துக்கொள்வதும் நடக்கிறது. அதனால்தான், ஒரேநாளில் பல லாரி சரக்குகள் காலியாவது நடக்கிறது.

என்னதான் டிபார்ட்மென்ட் ஸ்டோர், செயின் ஸ்டோர்ஸ் என்றெல்லாம் வந்து மக்களைக் கவர்ந்து கொண்டு இருந்தாலும் இதுபோன்ற ‘குறைந்த விலை, நிறைவான தரம்’ கான்செப்ட்களும் ஜெயிக்கத்தான் செய்கின்றன.

புட்லூருக்குப் போகணுமா..?

செ ன்னை டூ திருவள்ளூர் ரயில் பாதையில் ஆவடிக்குப் பிறகு வருவது புட்லூர் ஸ்டேஷன். சென்னையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புட்லூருக்குச் செல்ல கட்டணம் 9 ரூபாய்.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism