சேமிப்பு

திட்டமிடல்... சேகர் சொல்லும் ரகசியம்!

ஒரு மாதத்தில் செய்யும் செலவுகளில் எப்படியெல்லாம் சிக்கனம் பிடிக்கமுடியும்... சேகர் குடும்பத்தாரின் பிராக்டிக்கல் பட்ஜெட்!

செ  ன்னை அம்பத்தூரில் இருக்கிறது சேகரின் குடும்பம். திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநராக இருக்கிறார் இவர். இவரது மனைவி சரஸ்வதி அரசுப் பணியில் இருக்கிறார். குழந்தைகள் - தினகரன், ஜனார்த்தனன், காவ்யா. இந்தக் குடும்பத்தினர் தங்கள் குடும்பச் செலவுகளில் எப்படி சிக்கனம் பிடிக்கின்றனர்... அவர்களின் மாத பட்ஜெட் இதோ...

‘‘எங்கள் இருவரின் சம்பளமும் சேர்ந்து ஏறக்குறைய 29,000 ரூபாய் வரும். பிடித்தங்கள் போக, மீதி பணத்தில்தான் எங்கள் குடும்ப பட்ஜெட்டைத் திட்டமிடுகிறோம்.

குடும்பத்தின் முதல் செலவே, சேமிப்பு தானே! சுமார் 30% சேமிப்பு என்பது ஆரம்பம் முதலே நாங்கள் வைத்திருக்கும் கணக்கு. அதன்படி 6,000 ரூபாயை எடுத்து வைத்து விடுவோம். இதில் குழந்தைகளுக்கான எல்.ஐ.சி. பாலிசிகள், வங்கியில் ஆர்.டி. சேமிப்பு, தவிர, சிறிய ரொக்க சேமிப்பு என்று திட்டமிட்டிருக்கிறோம். இந்தப் பணம் மருத்துவச் செலவுகளுக்காக ஒதுக்கி வைப்பது. ஒருவேளை அதற்கான அவசியம் ஏற்படாவிட்டால், எதிர்பாராமல் ஏற்படும் இதர செலவுகளுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்வோம்.

இது தவிர, வீட்டுக்காக வாங்கிய கடனுக்கு மாதம் ரூபாய் 7,500 தவணை கட்டுகிறோம். இதுவும் ஒருவகை சேமிப்புதான். குழந்தைகள் படிப்புக்காக மாதம் சராசரியாக ரூபாய் 2,250 தேவைப்படுகிறது. அது அத்தியாவசிய செலவு. மாதாமாதம் அதை தனியே எடுத்து வைத்து விடுவோம். இல்லாவிட்டால், ஃபீஸ் கட்டும் மாதத்தில் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாகி விடுவோம். அதற்கு இடம் கொடுப்பதில்லை.

மாத பட்ஜெட்டில் நாங்கள் முக்கியமாக நினைப்பது புத்தகங்கள் வாங்குவது. வார, மாத இதழ்கள் மற்றும் குழந்தைகளின் பொது அறிவுக்கான புத்தகங்கள் வாங்குவதை ஒரு பழக்கமாகவே ஆக்கிக்கொண்டு விட்டோம். படிக்கும் பழக்கத்தை எப்போதுமே நாங்கள் செலவாகப் பார்ப்பது கிடையாது. இதற்கு ஒதுக்கும் ரூபாய் 1,000 ஒருவகையில் முதலீடுதான். எனவே, இதிலும் மிச்சம் பிடிக்க நினைப்பதில்லை.

குடும்பத்தின் முக்கிய தேவையான உணவுச் செலவுகள். சென்னை போன்ற ஊர்களில் ஒருவருக்கு மாதத்துக்கு ரூபாய் 500 என்பது சராசரியாகத் தேவைப்படத்தான் செய்கிறது. வளரும் குழந்தைகளுக்கு ஊட்டமான உணவு அளிப்பது முக்கியம். என்றாலும் விளம்பரச் செலவுகளால் கூடுதலான விலையில் விற்கும் ஊட்டச்சத்து பானங்கள் பக்கம் போவதில்லை. இயற்கை யாகவே சத்துக் கொழித்துக் கிடக்கும் தானியங்களை வாங்குவது லாபகரமாக இருக்கிறது.

பலசரக்குக் கடைக்குள் நுழையும் போதே, எதையெல்லாம் வாங்க வேண்டும் என்ற திட்டத்துடன்தான் போவோம். அங்கே போனபிறகு கண்ணில் படுகிற பொருட்களை, நமக்கு அத்தியாவசியத் தேவை இல்லாத பொருட்களை வாங்க மாட்டோம். இலவசம் கிடைக்கிறதே என்று எந்தப்பொருளையும் இரட்டிப்பாக வாங்கி, ஸ்டாக் வைப்பதும் கிடையாது. சுத்தம், சுகாதாரமான பொருளாக இருந்தாலே போதும். அது பிரபல பிராண்டாகத்தான் இருக்கவேண்டும் என்று பார்த்து கூடுதல் விலையில் ஒரு பொருளை எப்போதுமே வாங்கமாட்டோம். அதனால்தான் எங்கள் மளிகை பட்ஜெட் ரூபாய் 2,500 என்ற கட்டுக்குள் நிற்கிறது. காய்கறிகள், கீரை, பழங்கள், அன்றாடச் செலவுகள் எல்லாமே இதில் அடங்கிவிடும்.

காபி, டீயைக் கூடியவரை தவிர்க்கப் பார்ப்போம். இதனால் அந்தச் செலவுகள் எங்களுக்கு மிச்சம்தான். பால் வாங்குவதற்கான செலவு மட்டும்தான். அதற்கு ரூபாய் 500-ம் வீட்டு வேலை ஆளுக்கு மாதம் ரூபாய் 500-ம் செலவாகிறது. இருவருமே வேலைக்குச் செல்வதால், வீட்டு வேலைக்கு ஆள் என்பது அவசியமாகிறது.

செல்போன், வீட்டு போன், மின்சாரச் செலவுகளுக்காக மாதம் ரூபாய் 1,200 வரை செலவாகிறது. ஒரு மாதம் டெலிபோன் பில்லும் அடுத்த மாதம் கரன்ட் பில்லும் வருமாறு திட்டமிட்டுக் கொண்டதால், மாத பட்ஜெட்டில் தொகை ஒதுக்குவதில் குளறுபடி வருவதில்லை. அதேபோல டெலிபோனில் என்ன பேசுவது என்பதை முதலிலேயே திட்டமிட்டுக் கொள்வதால் எங்களுக்கு போன் செலவு அதிகமாக வருவதில்லை. கூடுமானவரை எல்லோரும் ஒரே அறையில் இருப்பதால் வீட்டில் ஒரு அறையில் மட்டும் விளக்கு, மின்விசிறியைப் பயன்படுத்துவதால் மின்சாரத்துக்கும் அதிகம் செலவாவதில்லை.

கேபிள் போன்ற பொழுதுபோக்குச் செலவுக்காக மாதம் ரூபாய் 100தான்! அதிலேயே சினிமா போன்ற விஷயங்கள் கிடைத்து விடுவதால் சினிமாவுக்கு எங்கள் பட்ஜெட்டில் இடம் கிடையாது.

குழந்தைகளுக்கு ஆளுக்கொரு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இதனால், அவர்களுக்கு உடற்பயிற்சி கிடைத்தமாதிரியும் ஆகிவிடும். அதோடு பள்ளிக்கூட வேன் செலவு மிச்சமாகிறது.

எங்கள் வீட்டில் இருக்கும் டி.வி, ஃப்ரிஜ் போன்ற வீட்டு உபயோக சாதனங்களை நாங்கள் மாதத் தவணைத் திட்டத்தில் வாங்கவில்லை. வாங்கும்போது எளிதாகக் கிடைப்பது போலத் தோன்றினாலும் அதற்காக நாம் செலுத்தும் தொகை மிக அதிகம் என்பதால் எங்கள் பட்ஜெட்டில் பொருட்கள் வாங்கியதற்கு தவணை கட்டுவதற்காக எந்தத் தொகையும் செலவழிப்பதில்லை.

பண்டிகை நாட்களில் புதுத்துணி எடுப்பதற்கு என்று ஒரு பெரிய தொகை தேவைப்படும். அதற்காக அந்த நேரத்தில் கடனோ, சேமிப்பை எடுப்பதோ சரியாக இருக்காது என்பதால் எங்கள் சம்பளத்தில் 1,000 ரூபாயை எடுத்து தனியே வைத்து விடுவோம். பண்டிகை நேரத்தில் உடைகள் வாங்க அந்தப் பணம் போதுமானதாக இருக்கும்.

தங்களுடைய வேலைகளை தாங்களே செய்து கொள்வது என்ற நல்ல பழக்கத்தை எங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறோம். அதனால், அவர்களுடைய துணிகளை அவர்களே அயர்ன் செய்துகொள்வது போன்ற சிறுசிறு வேலைகளுக்குக்கூட குழந்தைகள் எங்களை எதிர்பார்ப்பதில்லை. லாண்டரி தேடி ஓடும் செலவும் மிச்சமாகிறது.

நம்முடைய திட்டங்களும் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்வதுமே சிக்கனத்துக்கு முதல்படியாக இருக்கும். அதை நாங்கள் மந்திரமாகவே கடைப்பிடிக்கிறோம்.