ஸ்பெஷல்

ஹலோ வாசகர்களே,

நா  ணயம் விகடன் மேல் நீங்கள் நாளுக்கு நாள் காட்டிவரும் ஆர்வமும் அன்பும் எங்களுக்குப் பெரும் உற்சாகம் தருகிறது.

இதோ, மாத இறுதியில் வர இருக்கிறது மத்திய பட்ஜெட். அதில் என்னென்ன புதிய அறிவிப்புகள், திட்டங்கள், பழைய நடைமுறையில் மாறுதல்கள் வரப்போகின்றன என்பதை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியத் துறையில் இருக்கும் வி.ஐ.பி-க்களும் தங்கள் எதிர்பார்ப்புகளை, ஆதங்கங்களை, யூகங்களைத் தந்திருக்கிறார்கள். இதைப் படிக்கும்போது, பட்ஜெட்டின் போக்கு பற்றி உங்களுக்கே ஒரு ஐடியா வரக்கூடும்!

ஐ.டி. துறையின் வளர்ச்சியைப் போல், வரும் காலத்தில் அனிமேஷன் துறையில் மிகப்பெரிய புரட்சி வருவதற்கான வாய்ப்பு தெரிகிறது. சினிமா, சின்னத் திரையினர் மட்டுமல்லாது பல்வேறு துறையினரும் அனிமேஷனைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். பரவலான வருமான வாய்ப்புள்ள அனிமேஷன் பற்றிய விரிவான கட்டுரை இடம் பெற்றுள்ளது.

படித்துக்கொண்டே பார்ட் டைம் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஓர் இயக்கமாகவே மாறி இத்தொழிலில் ஈடுபட்டிருப்பது சிலிர்ப்பைத் தருகிறது. இளம் வீரர்களாக களத்தில் நின்று தங்களுக்கென ஒரு வருமானப் பாதை அமைத்துக் கொண்டிருக்கும் இவர்களைப் பற்றிய கட்டுரையைப் படியுங்கள். உங்கள் ஊரிலும் இதுபோன்று வருமான வாய்ப்பை உருவாக்க முடியும்.

‘அட, இத்தனை தொழில் வாய்ப்புகளா..!’ என்று ஆச்சரியம் தருகிறது ஈரோடு நகர ‘ஊர்’வலம். தகுதியும் திறமையும் இருந்தால் எப்படியும் எங்கும் பிழைக்க முடியும் என்பது ஒருபக்கம்... அதற்கான வாய்ப்புள்ள இடத்தில் முயற்சிக்கும்போது, வருமான வழிகள் இன்னும் வேகமாகத் திறக்கும் என்பதையும் உணரமுடிகிறது.

இன்று புழக்கத்தில் இருக்கும் டூ-வீலர்கள் எந்த அளவுக்கு சரியாக, திறம்படப் பயன்படுகின்றன என்பதை அறிந்து சொல்லும் பயனுள்ள பகுதியான ‘மோட்டார் விகடனி’ல் இடம்பெறுகிறது ‘டெஸ்ட் டிரைவ்!’ மோட்டார் துறை ஆர்வலரும் இத்துறையில் நீண்ட அனுபவம் உள்ளவருமான ரவி தாமோதரன் நமக்காக இந்த ‘டெஸ்ட் டிரைவ்’ ஆய்வில் இறங்கி இருக்கிறார். அவர் தரும் அடுத்தடுத்த டெஸ்ட் டிரைவ்களில் உங்கள் வசமுள்ள டூ-வீலர் வகையும் இடம்பெறக்கூடும். கவனித்து கணிசமாக சேமிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

சென்செக்ஸ் முன் எப்போதும் இல்லாத உச்சத்தில் பறந்து கொண்டிருக்கிறது. முதலீட்டாளர்களின் உற்சாகமான சூழலைக் கண்ணாடியாகப் பிரதிபலித்திருக்கிற நாகப்பன் - புகழேந்தி, இந்தத் தருணத்தில் எப்படி உஷாராக இருக்கவேண்டும் என்ற ஆலோசனையும் தருகிறார்கள். படித்துப் பயன்பெறுங்கள்.

இதுதவிர, உற்சாகம் தரும் வெற்றிக்கதை, வங்கிகள் தொடர்பான கேள்வி-பதில், தெளிவான திட்டமிடலுக்கு உதவும் குடும்ப பட்ஜெட், தங்கத்தின் விலையேற்றம் போகிற பாதை... போன்ற அலசல் கட்டுரைகளும் அணிவகுக்கின்றன.

படியுங்கள், பணத்தைப் பெருக்குங்கள்!