தொழில்

ஒருநாள் முதலாளி

‘‘ச    வால்களின் காதலன் நான். காதலர் தின ஸ்பெஷலாக ஒரு சவாலைச் சந்திக்க நான் ரெடி’ என்று நமக்குக் கடிதம் எழுதியிருந்தார் செந்தில்குமார் என்ற வாசகர். பாண்டிச்சேரிக்காரரான செந்தில்குமார், சினிமாக் கனவுகளுடன் வந்திருக்கும் சென்னை விருந்தாளி. ‘‘காதலர் தின ஸ்பெஷல் வியாபாரம்னு ஒண்ணு இருக்கா என்ன?’’ என்றோம். ‘‘காசைக் கொடுங்க... ஃபீல்டுல பாருங்க! இந்த செந்தில் என்ன பண்றான்னு. சும்மா செம்மு செம்முனு செம்மிடுவேனுங்க!’’ என்றார் உதாராக.

ஆயிரம் ரூபாய் கைமாறியது. செந்தில்குமார் அடுத்தகணம் பாரீஸ்கார்னருக்கு பறந்தார். ‘‘இங்கே இருக்கற காசிச்செட்டி தெருதான் சில்லறை வியாபாரிகளின் சொர்க்கம். காதலுக்கு கண்ணுதான் இல்லை. கை நிறைய காசு இருக்கும். காதலுக்காக செலவுன்னா கவலையே பட மாட்டாங்க! ஆனாலும் கம்மியான ரேட்டுதானே காதலர்களின் பர்ஸுக்கு நல்லது’’ என்றபடி கடைகளுக்குள் ஏறி இறங்க ஆரம்பித்தார்.

ஒருகடையில் ஜோடிப் புறாக்கள் முத்தமிட்டுக் கொள்வது போல இருந்த அழகான கிரிஸ்டல் பொம்மையைப் பார்த்தவுடன், ‘‘இதை... இதை... இதைத்தான் எதிர்பார்த்தேன்’’ என்றபடி முப்பது பொம்மைக்கு ஆர்டர் கொடுத்தார். ஒரு பொம்மையின் விலை பத்து ரூபாய். அப்படியே அடுத்தகடைக்கு தாவி ஆறு ரூபாய் ரேட்டுக்கு, ஹாட்டீன் வடிவத்தில் ஐம்பது கீ செயின்களை அள்ளினார். ‘‘காதலுக்கு கவிதை முக்கியம். கவிதை எழுத கிரீட்டிங் கார்டு முக்கியம்’’ என்றபடி இருபது கார்டுகளை வாங்கினார். 15 ரூபாய் ரேட்டில் பளபளவென்று இருந்தன.

பொம்மை, கீசெயின், கிரீட்டிங் கார்டு என்று மூன்று காதல் வகையறாக்களையும் முன்னூறு ரூபாய் வீதம் 900 ரூபாய்க்குள் பர்ச்சேஸ் கணக்கை முடித்தார். மீதி 100 ரூபாய்க்கு ஒரு ஃபேன்ஸி ஸ்டோரில் அட்டை பெட்டி களும், கிஃப்ட் பேப்பர், செல்லோடேப் எல்லாம் வாங்கிக் கொண்டார்.

‘‘தனியாகப் பார்த்தால் இதுக்கு மதிப்பு கிடைக்காது. மூணும் சேர்ந்த காதல் பரிசா, அட்டை டப்பாவுக்குள் ரகத்துக்கு ஒண்ணுனு போடும்போது இதுக்கு விலைமதிப்பே கிடையாது. இதைத்தான் இங்கிலீஷ்ல ‘வேல்யூ அடிஷன்’னு சொல்றாங்க. ச்சும்மா இப்படி சில பீட்டர் வார்த்தைகளைக் கத்து வெச்சுக் கிட்டா பிஸினஸுக்கு நல்லது. நான் இதை ஐம்பது ரூபாய்க்கு விற்கப் போகிறேன்’’ என்றபடி, காதலர்களின் சரணாலயமான மெரீனா கடற்கரைக்கு கிளம்பினார். சில பொம்மைகள், கீ செயின் கள் கிரீட்டிங் கார்டுகளை உதிரியாகவும் வைத்திருந்தார்.

‘‘சென்னைக் காதலர்கள் சங்கமிக்கிற இடம்... நிச்சயம் அவ்வளவுமே போணியாகிடும்!’’ என்று தனக்குத் தானே நம்பிக்கை கொடுத்துக்கொண்ட செந்தில்குமார், மணலில் கால்கள் புதைய பீச்சில் இறங்கினார்.

அந்த மொட்டை வெயிலைச் சட்டை பண்ணாமல் கர்மமே கண்ணாக காதல் செய்து கொண்டிருந்தன சில ஜோடிகள். துப்பட்டா குடை பிடித்தபடி கடற்கரை மணலில் கைகோத்து நடை பழகிக் கொண்டிருந்த ஒரு ஜோடியை மடக்கி வியாபாரத்தைத் தொடங்கினார்.

‘‘பார்க்க அஜீத் - ஷாலினி மாதிரி இருக்கீங்க. அவங்களை மாதிரியே அடிக்கடி பரிசுகள் கொடுத்து அசத்திக்கணும் தெரியுமா... வாலன்டைன்ஸ் டேவும் அதுவுமா ஆன் தி ஸ்பாட் அசத்தல் பரிசு கொடுங்க. உங்களை அலைய வைக்காம, நானே காதல் பரிசுகளோட வந்திருக்கிறேன்’’ என்றபடி பரிசுப் பெட்டியை எடுத்து நீட்டினார். காதலர் கொஞ்சம் தயக்கமா கப் பார்க்க, காதலியோ ‘‘உள்ளே என்ன இருக்கு?’’ என்றபடி பெட்டியைக் கையில் வாங்கினார்.

சட்டென்று பையைத் திறந்த செந்தில்குமார் உள்ளேயிருந்த ஜோடிப்புறா, கீ செயின் வகையறாக்களைக் காட்டி, ‘‘இந்த மாதிரி லவ் பேர்ட்ஸ் பரிசு கொடுத்தால் பிரியம் கூடும், தெரியுமா?’’ என்று சென்டிமென்டாகப் பேச, ‘‘பிடிச்சிருந்தா வாங்கிக்க செல்லம்...’’ என்றபடி பர்ஸைப் பிரித்தார் காதலர்.

இதில் என்ன விசேஷம் என்றால் அதுவரை காதல் ஜோடி இருவருமே அந்தப் பரிசுப் பொருள் என்ன விலை என்று கேட்கவில்லை. நூறு ரூபாய் கொடுத்த காதலரிடம், ‘‘சார்! ஐம்பது ரூபாய் சில்லறையா இல்லை! இன்னொரு பீஸ் தரட்டுமா?’’ என்றார்.

காதலர் கொஞ்சம் உஷாராகி, ‘‘ஐம்பது ரூபாயா...?’’ என்று தன் பர்ஸில் இருந்து ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு நூறு ரூபாயை வாங்கிக்கொண்டார்.

‘‘அறுபது... எழுபது கூடச் சொல்லியிருந்தாலும் அஜீத் வாங்கி இருப்பார் போலிருக்கே!’’ என்றபடி அடுத்த ஆளைத் தேடிக் கிளம்பினார் செந்தில்குமார்.

அடுத்து ஒரு ஜோடியைப் பிடித்து, ‘‘உங்க பேரை மட்டும் சொல்லுங்க.. உங்க காதலுக்கு என்னென்ன தடங்கல் இருக்கு... காதல் நிறைவேறுமா, நிறைவேறாதானு பார்த்து சொல்றேன்!’’ என்றார். அந்த ஜோடியும் கொஞ்சம் ஜாலிமூடில் இருந்தார்கள். சுவாரஸ்யமாகக் கையை நீட்டியபடி, ‘‘சித்ரா, ராஜேந்திரன்!’’ என்றார்கள் கோரஸாக. ‘‘இது கைரேகை ஜோசியம் இல்லை, பெயர் ராசி ஜோசியம். கையை மடக்கிக்கோங்க...’’ என்ற செந்தில் குமார் ஒருநிமிடம் கண்களை மூடி, தியானித்தார்.

ராஜேந்திரனிடம், ‘‘நீங்க பொண்ணுங்ககிட்ட கொஞ்சம் கலகலனு பேசற ஆள் போலிருக்கே! அம்மா... நீங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்’’ என்று சொல்ல, ராஜேந்திரன் கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டார்.

‘‘கையிலே என்ன... பார்சல்..?’’ என்று ராஜேந்திரனே பேச்சை மாற்ற, சட்டென்று செந்தில் ஒரு பார்சலை தள்ளிவிட்டார். ஐம்பது ரூபாய் கைமாறியது.

‘‘பொண்ணுங்ககிட்டே பேசற ஆள்னு சொன்னதும் ஆள் எப்படி டாபிக்கை மாற்றினார் பார்த்தீங்களா... வீக் பாயின்டில் கை வெச்சா வியாபாரம் ஜோரா நடக்கும்’’ என்றபடி நடைபோட்ட செந்தில்குமார், ஜோடி வேட்டையைத் தொடர்ந்தார். அவரே எதிர்பார்க்காத ஓர் இன்பஅதிர்ச்சி!

அருகில் இருந்த இளைஞர் பட்டாளம் ஒன்று அவரை அழைத்தது. ‘‘இங்கே வாங்க தலைவா! உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே..!’’ என்று இழுக்க... உடனே செந்தில்குமார், ‘‘நான் சீஸனுக்கு தகுந்த மாதிரி வியாபாரம் பண்ணுவேன். அதனால பல ஏரியாக்கள்ல பார்த்திருக்கலாம். கிரிக்கெட் நடந்தா சேப்பாக்கம் ஸ்டேடியத்துல தொப்பி, தேசியக் கொடி விற்பேன். உங்க ஏரியா அம்மன் கோயில் திருவிழானா காத்தாடி விற்கிறதுக்காக வந்திருப்பேன். நான் பண்ணாத பிஸினஸ் இல்லை’’ என்று அள்ளிவிட்டபடி அவர்களிடம் வாலன்டைன் பேக்கை நீட்டிப் பார்த்தார்.

‘‘பரவாயில்லையே... டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரிதான் பிஸினஸ் பண்ணுறீங்க நண்பா! ஆனா நாங்க பி.எம்.கே-வுக்குத் தாவிட்டோமே!’’ என்றார்கள். பி.எம்.கே..? பெண்கள் மறுப்பு கொள்கையாளர்களாம்.

சூடான செந்தில், விக்ரமன் படம் ரேஞ்சுக்கு, ‘‘காதல்ங்கிறது காய்ஞ்சு போன பெருங்காய டப்பா இல்லீங்க..! அது பாய்ச்சு வர்ற சுனாமி. எப்ப வரும்னே தெரியாது. வந்தா வாரிச் சுருட்டிடும். அதை நீங்க அத்தனை சுலபமா விட்டுட முடியாது!’’ என்று வாய்க்கு வந்த ஒரு மொக்கை டயலாக்கை உதிர்த்தார். டயலாக்கை ரசித்துக் கேட்டவர்கள் கடைசியில், ‘‘காதலுக்காக இல்லைனாலும் உங்க ஆர்வத்துக்காக ஒண்ணு வாங்கிக்கறோம் நண்பா!’’ என்று ஒரு செட் வாங்க, செந்தில் முகத்தில் மகிழ்ச்சி.

அடுத்து பெண்கள் கூட்டம் இருந்த ஏரியாவுக்குத் தாவினார். காலேஜ் வெளிநடப்பு கோஷ்டி போலிருக்கிறது. ‘விர்’ரென அருகில் வந்த செந்தில் குமாரைப் பார்த்ததும் ‘யாரோ என்னவோ..?’ என்று பதறிவிட்டார்கள். பிறகு செந்தில் தன் பிஸினஸைப் பற்றி விளக்க, வெட்கத்தோடு மூன்று செட்களை வாங்கிக் கொண்டார்கள். ஆனால், ரேட் நாற்பது ரூபாய்க்குத்தான் போனது.

நூற்றிஐம்பது ரூபாயை ஒரு பெண் எடுத்துக் கொடுக்க, ‘‘மீதி சில்லறை இல்லையே மேடம்... வேணா இதை வாங்கிக்கறீங்களா...’’ என்று தனியாக ஒரு ஜோடிப்புறா பொம்மையை விற்று நஷ்டத்தை ஈடுகட்டினார்.

அடுத்து அப்படியே கடற்கரையோரமாக இருக்கும் கல்லூரிக்குள் ஒரு ரவுண்ட் வந்தார்.

ஆண்களும் பெண்களுமாக மாணவர்கள் கூடி நிற்க, ‘‘சார்... வரப்போகுது பிப்ரவரி பதினாலு. கிஃப்ட் கேட்பாளே உங்காளு!’’ என்று விஜய டி.ஆராக மாறினார். ‘‘காதல் பற்றி பேசாதீங்க. நட்புக்கு ஏதாவது பரிசு இருக்கா?’’ என்று டிராக் மாற்றினார்கள். ‘‘ரெண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? நட்பு தானேங்க காதலா மாறுது. இன்றைய நட்பு நாளைய காதல்னு தமிழ் சினிமாவிலே பார்த்ததில்லையா நீங்க..? நம்ம பார்வையில் நட்பா இருக்கறது மத்தவங்க பார்வையில் காதலாத் தெரியுமே... அதுமாதிரி இந்தப் பரிசுப் பொருளை உங்க நண்பருக்காக வாங்கித் தந்து குஷிப்படுத்துங்களேன்...’’ என்று செந்தில் விளக்கம் மாதிரி ஒன்றைச் சொல்ல, கூடியிருந்த மாணவர்கள் பெரிதாக ஒரு ‘ஓ’ போட்டார்கள். ஆனாலும், பேச்சுக்கு பலன் கிடைத்தது. கல்லூரியை ரவுண்ட் அடித்து முடித்தபோது, இரண்டு செட் பரிசுப் பொருட்கள் விற்றிருந்தன.

‘‘வாங்க... வள்ளுவர் கோட்டம் போயிடலாம். மிடில் கிளாஸ் காதலர்களின் கூடாரம் அதுதான்’’ என்றார்.

‘‘ஏன் அப்படி?’’ என்றதற்கு, ‘‘பீச்சில் பெரியவர்கள் நிறைய வருவாங்க. அப்புறம், ஐஸ்க்ரீம், சுண்டல்னு பாக்கெட் பழுத்திடும். நாம தேடிப் போகும்போது காலி பர்ஸோடு இருப்பாங்க. ஆனா, வள்ளுவர் கோட்டத்தில் செலவே கிடையாதே... அந்த பணத்தை நாம் டார்கெட் பண்ணுவோம். எப்போதுமே போட்டி இல்லாத இடத்தில் சொல்லி அடிக்கிறதுதான் ஈஸி!’’ என்றார்.

எதிர்பாராத அதிர்ச்சியாக வள்ளுவர் கோட்டத்தில் பலரும் குடும்பம், குழந்தைகளோடு வந்திருந்தார்கள். மருந்துக்குக் கூட ஒரு காதல் ஜோடி இல்லை. சட்டென்று காதல் செட்டை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘‘லவ் பேர்ட்ஸ் சார்... வீட்டுல ஷோ கேஸ்ல வைக்கலாம் சார்... டி.வி மேல வெச்சா அழகா இருக்கும் சார்...’’ என்றெல்லாம் பேசிப் பேசியே கையில் இருந்த ஜோடிப்புறா பொம்மைகள் சிலதும் கீ செயின்கள் கொஞ்சமும் விற்றுத் தீர்த்தார்.

மேற்கொண்டு, ‘ரூட்டை மாத்து!’ என்று ஏரியாவை மாற்றினார். பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்! அங்கு செந்தில்குமாரை உற்சாகப்படுத்த காத்திருந்தது போலவே கூட்டம் கூடியிருந்தது. கூட்டமாக வந்திருந்த காலேஜ் பெண்கள் டீம் முன்னால் ஆஜராகி, பொருட்களை டிஸ்ப்ளே பண்ணி, ‘‘வரப்போற பிப்ரவரி பதினாலாம் தேதி அன்னிக்கு...’’ என்று செந்தில்குமார் ஆரம்பிக்க, ‘‘அன்னிக்குத்தான் ராக்கி கட்டும் ஃபங்ஷன் வெச்சிருக்கோம். அப்போ வாங்க... ஆளுக்கு ஒரு ராக்கி கயிறு வாங்கிக்கறோம். ஏன்னா... ஆல் பாய்ஸ் ஆர் அவர் பிரதர்ஸ்’’ என்று கலாய்த்தார்கள்.

அங்கிருந்து கிளம்பி அப்படி இப்படிச் சுற்றியதில் செட்டாக விற்காத இடங்களில், தனியாக கிரீட்டிங் கார்டு, கீ செயின் என்று விற்றார். வாங்கியதை விட சிறிய லாபம் கிடைத்தால்கூட போதும் என்று விற்க ஆரம்பித்தார். பேக்-அப் சொல்லும் நேரம் வந்து விட்ட கவலை அவருக்கு! தனிப் பொருள் வியாபாரம் சூடுபறந்தது.

கடைசியில் கையில் தங்கியது இரண்டு செட் பரிசுப் பொருட்கள்.

கடலில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு ஜோடியை நெருங்கி ‘‘இது சீனக் களிமண்ல செஞ்சது சார்... சீன வாஸ்துபடி இது வீட்டிலே இருந்தால் சந்தோஷம் பொங்கும். இதை லவ்வர்ஸ் வாங்கி மாத்தி மாத்தி கிஃப்ட் பண்ணினாங்கன்னா சீக்கிரமே கல்யாணம் ஆகும். காலையிலயிருந்து அறுபது செட் வித்திருக்கேன்’’ என்றார், பிஸினஸ் டெக்னிக்கின் ஒரு பகுதியாக. ‘‘நீங்க சொல்றது நல்லாத்தான் இருக்கு. ஆனா, எங்களுக்கு போன மாசம்தான் கல்யாணம் ஆச்சு’’ என்று சிரித்தார் நாகராஜ். ஆனாலும், ஒரு செட் வாங்கி தன் நேற்றைய காதலி இன்றைய மனைவி விமலா கையில் கொடுக்க, அவர் முகத்தில் அத்தனை வெட்கம்!

ஒரே ஒரு செட் மிச்சம். ‘‘இன்றைய ஒருநாள் உழைப்பின் அடையாளமாக இதை நானே வெச்சுக்கப் போறேன்’’ என்ற செந்தில்குமார், அங்கேயே உட்கார்ந்து கணக்கைப் பார்த்தார்.

‘‘இன்னமும் காதல் நம்மூரில் அத்தனை வெளிப்படையா வரலை. அதனால், காதலை நம்பி கடற்கரையில் இறங்கினா கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா, ‘காபி ஷாப்’ன்னெல்லாம் தனியா இருக்கிற நம்மூர்ல ‘காதல் ஷாப்’னு ஒண்ணு ஆரம்பிச்சா, வியாபாரம் பிச்சுக்கிட்டுப் போகும்னு தோணுதுங்க. என் ஒருநாள் அனுபவத்திலே சொல்றேன்.’’ என்று ஒரு மெஸேஜோடு, நம்மிடம் ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார். அவர் கையில் இருநூற்று நாற்பது ரூபாய் இருந்தது.

‘காதல் வாழ்க!’ என்றபடியே பஸ்ஸைப் பிடித்தார் செந்தில்குமார்.