தொழில்

சிவராம் சொல்லும் சக்சஸ் ஃபார்முலா!

தெ  ளிவான திட்டமிருந்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள் ‘கிளாஸிக் போலோ’ நிறுவனத்தார். இந்திய அளவில் டி-சர்ட், சட்டைத் தயாரிப்பில் டாப் 5 இடத்தில் இருக்கிற நிறுவனம் இது.

டெக்ஸ்டைல் நகரமான திருப்பூரில் இருந்தபடி, கடந்த 5 வருடங்களில் இந்திய மார்க்கெட்டைப் பிடித்திருக்கிற ‘ராயல் கிளாஸிக் மில்ஸ்’ஸின் சீரான வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. நிர்வாகத்தில் இருக்கும் சகோதரர்கள் மூவரின் கடுமையான உழைப்புதான் வெற்றியின் வேராகி இருக்கிறது.

‘‘கல்லைக் கையிலே எடுத்துட்டம்னா, மாங்கா விழாம இருக்கக் கூடாது. அப்படி ஒரு அடி அடிக்கணும். அந்தத் திட்டம்தான் ஜெயிக்கும். எங்களோட ஒவ்வொரு மூவ்லயுமே இதைத்தான் நாங்க ரொம்ப சின்ஸியரா பின்பற்றிக்கிட்டு வர்றோம்.

டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரி யோட வளர்ச்சி ரொம்ப விநோதமானதுங்க. 20 வருஷம் முன்னாலே டீ, காபி வித்ததுக்கும் இன்னிக்கும் விலையிலே பார்த்தீங்கன்னா, கிட்டத்தட்ட 10 மடங்கு வித்தியாசம் இருக்கும். ஆனா, ஒரு பிராண்டட் சட்டையை எடுத்துக்கிட்டீங்கன்னா, அன்னிக்கு என்ன விலை வித்ததோ, கிட்டத்தட்ட அதே விலைதான் இன்னிக்கும் விற்குது.

அதாவது, மக்கள் பயன்படுத்தற விகிதம் அதிகமாகி இருக்கு. அதே அளவு உற்பத்தியும் பெருகி இருக்கு. இது ரெண்டும் ஒரே அளவிலே வளர்ந்ததால, பற்றாக்குறைனு ஏதும் வரலை. அதனாலேயே விலை கட்டுக்குள்ளே இருக்கோ என்னவோ..?’’ என்று ஜாலியாக ஆரம்பிக்கிறார் சிவராம். இவர் ராயல் கிளாஸிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

‘‘ஃபேக்டரிகளைப் பார்க்கலாமா..?’’ என்றபடியே திருப்பூரைச் சுற்றி உள்ள பல இடங்களுக்கும் நம்மோடு ஒரு விசிட் அடிக்கிறார்.

‘‘1974-ல் ஒரு நிட்டிங் மெஷின்ல ஆரம்பிச்சது. இன்னிக்கு 44 மெஷின்கள் இங்கே இருக்கு. இந்தியாவிலேயே ஒரே ஒரு மெஷின்தான்னு சொல்ற அளவுக்கு 10 கலர் ‘ஆட்டோ ஸ்ட்ரைப்பர்’ என்கிற நவீன ஜெர்மன் மெஷினையும் வாங்கி வெச்சிருக்கோம். இது கப்பலிலே வந்தா ஒரு மாசம் ஆகும்னு ப்ளைட்ல வரவழைச்சோம்.

எப்போ ஒரு டெக்னாலஜி உலகத்துக்கு வருதோ, அப்பவே அது இங்கே இருக்கணும். இல்லேன்னா, நாம் உலகப் போட்டியிலே பின்தங்கிடுவோம்’’ என்கிறார்.

போகிற இடத்தில் தேவைப்படுகிற சின்னச் சின்ன உதவிகளுக்கும் யாரையும் எதிர்பார்க்காமல், தானே செய்து கொள்கிறார்.

‘‘பொதுவா ஒரு கம்பெனியை நிர்வகிக்கும்போது, கீழே உள்ள அதிகாரிகளை முழுக்க நம்பி விட்டுடணும். அதேசமயம், நாம இப்படி விசிட் அடிக்கிற போதுதான், நாமளும் தொழிற் சாலையைப்பற்றி முழுமையாக தெரிஞ்சுக்கமுடியும். அது ரொம்ப முக்கியம். அதேசமயம், நாங்க தொழிலாளிகளை விட்டு விலகிடறதும் இல்லே! அவங்களைத் தனியா பிரிச்சுப் பார்க்கறதில்லை. அவங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடற அளவு நெருக்கத்தோட தான் இருக்கோம். இப்போ ஒரு விசிட் வர்றேன் இல்லையா..? அப்படியே ‘டக்’னு கேன்டீன் பக்கம் போவேன். அங்கே ஊழியர்களோட அமர்ந்து அவங்களுக்குச் சமமா சாப்பிடு வேன். இப்படி, நான் எப்போ வேணும்னாலும் வந்து நிற்பேன் என்பதால், ஊழியர்களுக்குத் தரமான உணவு எப்போதுமே கிடைக்கும்’’ என்கிறார்.

அவருடைய சகோதரரும் நிறுவன எம்.டி-யுமான சண்முகம் தாங்கள் வளர்ந்த கதையை ஆரம்பித்தார். ‘‘இந்த ஊர்ல 1960-களிலே பனியன் கம்பெனியை முதன்முதலில் தொடங்கின ஐந்து பேரில் என் அப்பாவும் ஒருவர். ஆரம்பத்திலே நல்லாப் போன நிறுவனத்தில் சில சரிவுகள்... ஏற்றங்கள்னு தடுமாற்றம் இருந்தது. தாக்குப் பிடிச்சு நடத்திக்கிட்டிருந் தோம். 1984-ல் எங்கப்பா தவறிட்டார். அந்தச் சமயத்திலே புதிதா தொழிலுக்குள்ளே வந்த எங்களால சரியா ஷைன் பண்ண முடியலை.

தெளிவான திட்டங்கள் இல்லாதது ஒரு காரணம், அப்புறம் இந்தியாவிலே நூலுக்கு ஏற்பட்ட விலை குறைவு. அதிக விலைக்கு பஞ்சு வாங்கி நூலா நூற்று, ரொம்பக் குறைவான விலைக்கு மார்க்கெட்ல விற்க வேண்டிய நிலை. விலைகூடும் விற்கலாம்னு ஸ்டாக் பண்ற அளவுக்கு நிதி வசதி இல்லை. வந்த விலைக்கு நஷ்டத்துக்கு வித்ததிலே கையிலே இருந்த மூன்றரை லட்சம் முதலும் போச்சு. அதுவரை சம்பாதிச்ச அத்தனை காசையும் இழந்ததோடு, புதுக்கடனையும் உண்டாக்கிடுச்சு! நாங்க அண்ணன், தம்பி, மூணு பேரும் வேலைக்குப் போகவேண்டிய நிலை.

எந்த ஊர்ல ஃபேக்டரி முதலாளிகளா தலைநிமிர்ந்து நடந்தோமோ, அதே ஊரில் தொழிலாளிகள்..! துக்கம் விசாரிக்கறவங்களைத் தவிர்க்க முடியாம அவமானங்களை முழுங்கிட்டு வாழ்ந்தோம்.

இந்தத் தொழிலில் மூலதனம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அனுபவமும் முக்கியம். அதைக் கத்துக்கத்தான் நாங்க வேலைக்குப் போனோம். எங்க அப்பாகிட்டே வேலைபார்த்து, ஒரு கட்டத்திலே இங்கிருந்து விலகி, தனியா ஃபேக்டரி போட்ட ஒருத்தர் எங்களை வேலைக்குச் சேர்த்துக்கிட்டார். 3,000 ரூபாய் சம்பளம். அங்கே கடுமையா உழைச்சோம்.

ஒவ்வொரு துறையா கத்துக்கிட்டோம். ஒரு நாளைக்குப் பதினெட்டு மணிநேர வேலை. நாங்கள் உள்ளே நுழையும்போது 25 பணியாளர்களா இருந்தது, 150 என்கிற எண்ணிக்கையைத் தொட்டது. ரூபாய் ஏழு லட்சமாக இருந்த கம்பெனியின் டர்ன் ஓவர் மெள்ள மெள்ள வளர்ந்து, ஐந்து வருட முடிவில் பத்தரை கோடியாக அதை உயர்ந்தது. என் திறமையை நிரூபிக்கிற ஒரு வாய்ப்பா அந்தக் காலம் இருந்தது. 3,000 ரூபா சம்பளத்திலே சூபர்வைஸரா வேலைக்குச் சேர்ந்த நான், மேனேஜராக உயர்ந்தேன். உழைப்பின் அருமையால் வந்தது இந்த லாபம் என்று உணர்ந்த முதலாளி, தன் நிறுவனத்தில் என்னையும் 25% அளவுக்கு லாபப் பங்கீடு தர்ற ஒரு பங்குதாரராகவே ஆக்கிவிட்டார்’’ என்று தன் குடும்பம் சரிவில் இருந்து மீண்ட கதையைச் சொன்ன சண்முகம், வெற்றிப்படிக் கட்டுகளில் ஏறியதைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘தோத்துப்போன நாம திரும்ப ஜெயிக்கணும்னு எங்களுக்குள்ளே இருந்த வைராக்கியம்தான் எங்களை அந்த அளவுக்கு வளர்த்து விட்டுச்சு. நானும் தம்பியும் நிட்டிங்ல தொழில் கத்துக்கிட்டோம். எங்கே எப்படி மார்க்கெட் பண்ணணும்னு எல்லாமே எங்களுக்கு அத்துபடியா இருந்தது. அண்ணன் கோபால், வேறொரு ஃபேக்டரியிலே டையிங் யூனிட்ல எல்லா வித்தையும் கத்துத் தேர்ந்திருந்தார்.

91-ல் எனக்குக் கல்யாணம். முக்கியமான திருப்புமுனை ஆண்டு அது. நாங்க தனியா ஒரு ஃபேக்டரி பண்ணலாம்னு திட்டமிட்டோம். அப்போ என் கையிலே நாலு லட்சம் சேர்ந்திருந்தது.

நாங்க எங்க முதலீடா வெச்சிருந்த காசு, நடுவிலே அனுபவம்ங்கிற பெரிய பாடத்தைத் தர்றதுக்காகவே, எங்களை விட்டுப் போயிட்டு, திரும்ப எங்க கைக்கே வந்துச்சுனுதான் சொல்லணும்.

‘ராயல் கிளாஸிக்’ என்கிற பெயரில் இந்த ஃபேக்டரியை ஆரம்பிச்சோம். நிட்டிங் மெஷின் ஒன்றுதான் எங்கள் ஆரம்பம். அதைக் கட் பண்ணி, சலவை பண்ணி, தைச்சு, பேக் பண்றது எல்லாத்துக்கும் வெளி ஆட்களைத்தான் நம்ப வேண்டி இருந்தது. வந்த வருமானம் எல்லாத்தையும் வைராக்கியமா திரும்பத் திரும்ப தொழில்லயே போட்டுட்டே வந்தோம். ஒவ்வொரு தேவையாக பூர்த்தி செய்துகொண்டே வந்ததில், எல்லா தொழிற் சாலைகளையும் நாங்கள் அமைத்துவிட்டோம். மூணு மெகா வாட் அளவுக்கு மின்சாரம் தேவைப்பட, காற்றாலை ஒன்றை அமைச்சோம்.

விவசாயிகளுக்குப் பருத்திவிதை கொடுத்து, அதை விளைவிச்சு வாங்கறதிலே இருந்து, கார்மென்ட்டா தயார் பண்ணி விற்கிற வரைக்கும் என்னென்ன தேவைகள் உண்டோ அத்தனையையும் நாங்களே ஆரம்பிச்சோம். இதனால, யாரையும் எதுக்கும் எதிர்பார்த்து காத்திருக்கிற நேரம் எங்களுக்கு மிச்சமானது. அந்த அளவுக்கு முழு வீச்சில் நாங்கள் தயாரானோம்.

சமீபத்திலே, ஸ்மாஷ்னு இன்னொரு பிராண்டை வாங்கி, அதையும் மார்க்கெட் பண்ணிட்டிருக்கோம்.

ஒரு பிஸினஸ் என்பது ஆலமரம் மாதிரி இருக்கணும் என்றால், தொடர் முதலீடுகள் விழுதுகள் மாதிரி அதைத் தாங்க வேண்டும். நாங்க அப்படிப் பண்ணினதாலதான் திரும்ப தலை நிமிர முடிஞ்சது. நடுவிலே ஒரு ஏழு வருஷம் எங்களைப் படாதபாடு படுத்துச்சு பார்த்தீங்களா...! அந்தக் கால கட்டம்தான், அடுத்த முறை காசு சம்பாதிக்க எங்களுக்குத் தெளிவான அறிவைக் கொடுத்துச்சு. ஒவ்வொரு கஷ்டம் வரும்போதும், அதுக்குப் பின்னால கிடைக்கப்போற நல்லதுக்கான அடித்தளம் இது என்பதை உணர்ந்தோம். அது இறைவனோட விருப்பமா இருந்தது. இன்னொரு விஷயம் என்னன்னா, எங்களுக்குத் தொழில் கத்துத் தந்தவரோட அடுத்த தலைமுறைக்கு நாங்க தொழில் கத்துத் தர்ற வாய்ப்பு கிடைச்சது. இதுவும் இறைவன் விருப்பம்தான்!’’ - தத்துவம் போலச் சொல்கிறார் சண்முகம்.

‘‘டெக்ஸ்டைல் துறையைப் பொறுத்தவரை தென்னிந்தியாவில் வருடம் முழுக்க சீசன் இருக்கும். ஆனால், வட இந்தியாவில் இயற்கை ஆறு மாதத்துக்கு மட்டுமே நமக்கு ஒத்துழைக்கும். ஆறு மாதத்துக்கு பெரிய பிஸினஸ் இருக்காது. இதைச் சமாளிக்கத்தான் எக்ஸ்போர்ட் பக்கம் எங்கள் கவனத்தை முழுமையாகத் திருப்பினோம். இப்போது, முக்கியமான நாடுகளுக்குப் பெரிய அளவில் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம்.

சைனாவில் தொழில் நிறுவனங்களுக்கு அரசுத் தரப்பில் தொடர் சப்போர்ட், பாதுகாப்பு உண்டு. ஆனால், இங்கே யாரையும் எதிர்பார்த்து எந்தத் தொழிலையும் தொடங்க முடியாது. நம்மை நாமேதான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்கு, ஒரு தொழிலின் சார்புத் தொழில்களான உபதொழிலில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். தொடர்பில்லாத வேறு தொழிலில் முதலீடு செய்வதைவிட இதுதான் சிறந்தது’’ என்ற சிவராம், தொடர்ந்தார்.

‘‘எங்கள் இலக்கே 25-40 வயதினர்தான். மாதம் 7,500 முதல் 15,000 வரை சம்பாதிக்கும் நடுத்தர வர்க்கத்தினர்தான் எங்கள் வாடிக்கையாளர்கள் என்று தீர்மானித்து அந்த ஏரியாவில் பயணித்துக் கொண்டிருக் கிறோம்.

அவர்களைத் தொடர்ந்து கவனித்து வருவதில், அவர்கள் டேஸ்ட் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது புரிகிறது. நாங்கள் எக்ஸ் போர்ட்டுக்கு செய்யக்கூடிய டிஸைன்களை உள்ளூரிலும் கொடுப்பதால், அந்நிய நாட்டு டிஸைனை அவர்களுக்கு முன்பாகவே நாம் உள்ளூரில் பயன்படுத்திவிட முடியும் என்பது லாபம்தானே!

நாங்கள் கண்களையும் காதுகளையும் எப்போதுமே திறந்து வைத்திருக்கிறோம். எப் போதுமே எதையுமே மிஸ் பண்ணு வது இல்லை.’’ என்றார் தெளிவாக.

‘‘தொழிலில் இருக்கிற எல்லோருக்குமே முக்கியமா ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்’’ என்று ஆரம்பித்து தங்கள் வளர்ச்சியின் வெற்றி ஃபார் முலாவைச் சொன்னார் சிவராம்.

‘‘ஒவ்வொரு வருடமும் ஒரு தொழிலில் 15 சதவிகித வளர்ச்சி என்பது மிக முக்கியம். அவசரம் இல்லாமல், ஸ்லோ அண்ட் ஸ்டடி என்ற அடிப்படையில் சீரான வளர்ச்சிக்கு இந்த விகிதத்தில் தொழில் வளர்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த வளர்ச்சி 12 மாதங்களிலும் தொடர்கிறதா என்பதைக் கவனிக்க, ஒரு மாதத்துக்கு ஒன்றேகால் சதவிகிதம் என்பதைக் கணக்கிட்டுக் கொண்டே வருவோம்.

இது 15 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டால் நல்ல வளர்ச்சி என்று பொருள். உதாரணத்துக்கு இந்த வருடம் 100% என்பது அடுத்த வருடத்தில் 115% அல்லது அடைந்த வளர்ச்சியை அடிப்படையாக எடுத்துக் கொண்டு, அதற்கு மேல் 15% என்ன என்பதைக் கவனித்துக்கொண்டு நம் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆடிட்டிங் தவிரவும் தனி துறையே, எங்கள் வளர்ச்சியைக் கண்காணிக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இலக்கு என்பது இருந்தால்தான் நம் ஓட்டத்தின் வேகம் கூடும்.

நிறுவன வளர்ச்சிக்கு என்றில்லை. ஒவ்வொரு தொழிலுக்கும், தனி மனிதரின் வருமானத்துக்கும்கூட இது பொருந்தும்’’ என்றவர்,

‘‘எப்போதுமே ஒரே துறையிலே நம்ம முதலீட்டை ஈடுபடுத்தக் கூடாது என்பது மாதிரி, நம் விற்பனை ஏரியாவையும் ஒரே இடத்தை மட்டுமே நம்பி வைக்கக் கூடாது. இதனால்தான் எங்கள் விற்பனையை அமெரிக்க ஏற்றுமதிக்கு 33%, ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதிக்கு 33%, இந்திய மார்க்கெட்டில் 33% என்று சம அளவில் பிரித்து வைத்திருக்கிறோம். ஒரு மார்க்கெட் டல்லானாலும் இன்னொரு மார்க்கெட் நமக்குக் கை கொடுக்கும்.’’ என்றார் சிவராம். ‘‘இப்போது, இந்தியா முழுக்க எங்களுக்கென பிரத்யேக ஷோ-ரூம்கள் இருக்கின்றன. இதை வட இந்தியாவில் வலுவாக அமைக்கவும், தென்னிந்தி யாவில் மாவட்ட வாரியாக ஷோ-ரூம்கள் அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம். இந்த நெட் ஒர்க்கை இன்னும் இரண்டு வருடங்களுக்குள் அமைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால், அடுத்த ஆண்டு ஜனவரியில் நாங்கள் பங்கு வெளியிட முடிவு செய்திருக்கிறோம்’’ என்று உற்சாகத்தோடு சொல்கிறார் சிவராம்.

‘எதிலுமே திட்டமிட்ட உழைப்புதான் சீரான வளர்ச்சி தரும்’ என்பதைச் சொல்கிறது கிளாஸிக்கின் வளர்ச்சி!

எ  ந்த ஒரு தொழிலிலும் ஒரே விதமாகப் பொருட்களைத் தயாரித்துக்கொண்டே இருந்தால் அது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. மக்களின் விருப்பம் முக்கியம். இதற்காகத்தான் நாங்கள் உலகம் முழுக்க சுற்றி, கவனித்துக் கொண்டே இருப்போம். எங்கே எந்த புது டிஸைன் வந்தாலும் அதை உடனே இங்கே கொண்டுவந்து உள்ளூர் டேஸ்ட்டுக்குத் தரத் தயாராக இருப்போம்.

இன்றைய நிலவரப்படி நாங்கள் மாதத்துக்கு 150 புதிய டிஸைன்களை, அதாவது தினம் மூன்று புதிய டிஸைன்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறோம். இந்தப் புது டிஸைன் தயாரிப்புக்கு என்றே எங்களிடம் தனி டிபார்ட்மென்ட் இருக்கிறது. வருடத்துக்கு கிட்டத்தட்ட ஆயிரம் புதிய டிஸைன்கள்... மார்க்கெட்டில் ஓரளவுதான் தேவை இருக்கிறது என்கிற நிலையில் இந்த புதியவற்றை இறக்கும்போது, பழைய டிஸைன்களை வெளியே எடுக்கவேண்டிய அவசியமும் இருக்கிறது. அதற்கு மக்கள் எதை ரசிக்கிறார்கள், எந்த டிஸைனை விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்வது அவசியம். நாம் தொடர்ந்து மார்க்கெட் லீடராக இருக்க வேண்டும் என்பதாலேயே இந்தச் சவாலை நாங்கள் எதிர்கொள்கிறோம்.

பிராண்ட் முக்கியம்!

எ  ங்களது எக்ஸ்போர்ட் வருமானம் முழுவதையும் பிராண்ட் பெயரை பிரபலப்படுத் துவதற்காகவே செலவு செய்தோம். இங்கே செலவு என்பது பிராண்டை வளர்க்க நாங்கள் செய்த முதலீடு!

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். தரமான பொருளைத் தயாரிக்கும் யாருமே பிராண்ட் பெயரில் மார்க்கெட்டிங் செய்வதுதான் அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது. பிராண்டிங் என்பது என்ன..? ஒரு தனித்த அடையாளம்.

‘இந்தக் கடையில் கடந்த முறை வாங்கிய துணி நன்றாக இருந்தது’ என்று ஒரு வாடிக்கை யாளர் திரும்பவும் வந்தால், நம் துணிக்கான கிரெடிட் கடைக்குப் போகும். அப்போது, நம் துணியை அவர் தேடி வாங்கினால் நல்லது. வேறு ஒன்றுக்குப் போய்விட்டால்... லாபம் நம் பாக்கெட்டுக்கு வராது. அதுவே, நம் பிராண்ட் பெயரைச் சொல்லிக்கேட்டு வாங்கினால் அதுதானே நம் வளர்ச்சிக்கு உதவும்.

உங்கள் பெயரை வைத்துத் தயாரிக்கும் போதுதான், இன்று ஒன்றாக இருக்கிற உற்பத்தி நாளை பத்தாக மாறும். அதாவது, இன்று பெட்டி, இஞ்சினைத் தள்ளிக்கொண்டு போகிறது. ஒருகட்டத்தில் பிராண்ட் என்கிற ‘இஞ்சின்’ ஸ்டார்ட்டான பிறகு, அது மற்ற அத்தனை தொழில் ‘பெட்டி’களையும் இழுத்துச் செல்கிற தெம்புக்கு வந்துவிடும். இடையில் வருகிற எல்லா சோதனைகளையும் பொறுமையோடு தாங்கிக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.

ஒரு பிராண்டை உருவாக்கி, அதை மார்க்கெட்டில் தக்க வைக்க இன்றைய நிலையில் ஆறேழு வருடங்களாவது ஆகும் என்பது எங்கள் கணக்கு. நீண்டகாலத் திட்டத்தோடு தொழில் தொடங்குகிற யாருக்குமே இந்த வைராக்கியம் உள்ளுக்குள் வளரவேண்டும்.