தொழில்

‘‘வங்கிகளின் அடையாளத்தை மாற்றினோம்!’’

‘‘ஒ   ரு காலத்தில் வங்கியில் பணமோ, டிமாண்ட் டிராஃப்டோ எடுக்க வேண்டுமானால் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். வங்கிகள் தனியார்துறைக்கு வந்தபிறகு ஏற்பட்ட போட்டியைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, இன்று எல்லாமே மின்னல் வேகத்தில் நடக்கிறது’’ என்று தொடர்ந்து பேசுகிறார்கள் ஐ.சி.ஐ.சி.ஐ தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவிகள்.

‘‘எங்கள் வங்கிக்கு வரும் கஸ்டமர் எந்தக் காரணத்துக்காகவும் காத்திருக்கக்கூடாது. இதுதான் எங்களின் முக்கிய நோக்கம். எங்கள் வங்கி இந்த விஷயத்தில் மிகக் கவனமாக இருக்கிறது. இதை மனதில் வைத்து ஏராளமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்’’ என்று பேட்டியைத் துவங்கினார் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் துணை மேலாண் இயக்குநர் கல்பனா மோர்பாரியா.

வங்கித்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற இவர்தான் இந்த வங்கியின் மனிதவள மேம்பாட்டு துறை தலைவர். வங்கியில் வேலை செய்யும் அத்தனை ஊழியர்களின் ஏற்றத்துக்கும் இவர்தான் பொறுப்பு. ஒவ்வொரு தனி ஊழியரின் திறமை களையும் கணக்கிட்டு அவர்களை ஊக்கப் படுத்தும் ‘பர்சனல் டச்’ கொடுத்து அசத்துவது இவருடைய ஸ்டைல்!

கல்பனா சட்டம் படித்தவர் என்பதால் வங்கியின் அனைத்து நடவடிக்கைகளுமே இவருடைய சட்ட ஆலோசனைப்படிதான் நடக்கிறது. வங்கியின் செய்தித் தொடர்பாளரும் இவர்தான் என்பதால் வங்கி விஷயங்கள் எல்லா வற்றையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்.

‘‘பணம் எடுப்பவர்களின் வசதிக்காக மூலைக்கு மூலை ஏ.டி.எம்-களைத் திறந்தோம். ஆனால், பணம் போடுபவர்கள்..? பணத்தை எடுக்கும் அதே ஏ.டி.எம்-மிலேயே பணத்தை டெபாசிட் செய்யும் வசதியையும் கொண்டு வந்தோம். இந்த வசதி எங்களுடைய ஏராளமான ஏ.டி.எம்-களில் இருக்கிறது. இதனால், சிறிய அளவில் பணம் செலுத்த வருபவர்களுக்கு ஓகே! ஆனால், வியாபாரிகள் மற்றும் பிஸினஸில் இருப்பவர்கள் எல்லாம் தினம் தினம் கட்டு கட்டாக பணத்தை டெபாசிட் செய்ய வருகிறார்கள். எங்கள் ஊழியர் பணத்தை எண்ணி முடிக்கும்வரை வாடிக்கையாளர் தங்கள் நேரத்தை வீணாக்கிக் காத்துக்கொண்டிருக்க வேண்டிய நிலை. அதைத் தவிர்க்கும் பொருட்டு, பணத்தை ஒரு கவரில் போட்டு ஒட்டி வாடிக்கையாளர் தன் பெயர், கணக்கு எண், எவ்வளவு தொகை என்பது போன்ற தகவல்களை எழுதி, வங்கியில் கவரைக் கொடுத்துவிட்டுப் போகலாம். அந்தத் தொகை அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். பிரச்னையை எளிதாக்க இப்படி ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்’’ என்று கல்பனா சொன்னதும் நமக்கு இயல்பான சந்தேகம் எழுந்தது.

‘‘கவரில் நான் 1,500 ரூபாய் வைத்திருந்தேன். ஆனால், ஆயிரம் ரூபாய்தான் என் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது என்று யாராவது முறையிட்டால்..?’’ கேள்வியை முடிப்பதற்குள்ளாகவே கல்பனாவிடமிருந்து பதில் வருகிறது.

‘‘நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள் மீதும் ஊழியர்கள் மீதும் நம்பிக்கையோடுதான் இருக்கிறோம். ஆனாலும் எந்தக் குற்றச்சாட்டும் எழுந்துவிடாத அளவுக்குத் தெளிவான திட்டமிடலோடும் இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் பண கவரை கேமரா முன் வைத்துதான் பிரிக்கிறார்கள். கேமரா முன்புதான் பணம் எண்ணப்படும். அதனால், வீண் குழப்பங்கள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. இதில் புகார் ஏதும் எழும் நிலையில் புகார் தாரருக்கு வீடியோ ஆதாரம் காட்டப்படும். தப்பு யாருடையது என்பது அங்கேயே தெரிந்துபோகும்’’ என்றார் கல்பனா.

வாடிக்கை யாளர்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் முதலில் அங்கே நிற்பவர் சந்தா கோச்சர். வங்கியின் எக்ஸி கியூட்டிவ் டைரக்டரான இவர், நிர்வாகப் பயிற்சியாளராக நுழைந்தவர். இருபதாண்டு கால சர்வீஸில் வங்கியின் அத்தனை படிக்கட்டுகளையும் பார்த்து, இன்று உச்சத்தில் இருப்பவர். வாடிக்கையாளர்களின் தேவைகள், வசதிகளை அறிந்தவர். வங்கியின் கடன்பிரிவில் இவருக்கு பல ஆண்டுகால அனுபவம் இருக்கிறது. நாற்பத்து மூன்று வயது என்பதை நம்பமுடியாத அளவுக்குத் துடிப்போடு இருக்கிறார். அதேசமயம் தெளிவான அனுபவமும் பேச்சில் தெரிகிறது.

‘‘கிரெடிட் கார்ட் என்பது ஒருகாலத்தில் வசதியானவர்கள் மட்டுமே பயன்படுத்தும் பொருளாக இருந்தது. எங்கள் வங்கி, இந்தத் துறையில் காலடி வைத்த பிறகுதான் மாதச் சம்பளம் வாங்குகிறவர்கள்கூட கிரெடிட் கார்ட் பயன்படுத்த முடியும் என்ற நிலை உருவானது. எந்தக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக கிரெடிட் கார்டை வழங்கியதும் நாங்கள்தான்.

பெட்ரோலிய நிறுவனங்கள், விமானச் சேவை நிறுவனங்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் என்று பலருடன் இணைந்து அந்தப் பொருட்களை வாங்கும் எங்கள் கார்ட்தாரர்களுக்கு மேலும் சலுகைகள் கிடைக்கும் வகையில் கோ பிராண்டட் கிரெடிட் கார்ட்களைக் கொண்டு வந்தோம்.

வீட்டுக் கடன் விஷயத்திலும் ஃபிக்ஸட் இன்ட்ரஸ்ட் எனப்படும் நிலையான வட்டி விகிதம் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்த நேரத்தில் நாங்கள் உள்ளே நுழைந்து, ஃப்ளோட்டிங் இன்ட்ரஸ்ட் சிஸ்டம் எனப்படும் மாறும் வட்டி விகிதத்தைக் கொண்டுவந்தோம். இதையெல்லாம் பெருமைக்காகச் சொல்லவில்லை. எங்கள் சேவை அடித்தட்டு மக்கள் வரை போய்ச் சேரவேண்டும் என்ற முனைப்போடு செயல்படுகிறோம் என்பதற்காகச் சொல்கிறேன்’’ என்ற சந்தா கோச்சர், தங்கள் வங்கியின் அடுத்தகட்ட திட்டங்களை விவரித்தார்.

‘‘டெக்னாலஜி வளர்ச்சிக் கேற்ப, வங்கியை இன்டர் நேஷனல் ரேஞ்சுக்குக் கொண்டு செல்வது ஒரு திட்டமென்றால், அடிப்படை வசதிகளுக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் கிராமப்புற மக்களுக்கும் எங்கள் சேவை செல்ல வேண்டும் என்பது எங்கள் ஆசைகளில் ஒன்று.

இன்னும் சொல்லப்போனால், வெறுமனே நகரங்களோடு நின்றுவிட்டால் எங்களின் சீரான வளர்ச்சியில் தேக்கநிலை வந்துவிடும் என்பதே உண்மை! இதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். அதனால்தான் தமிழகத்திலும் ஆந்திராவிலும் சுமார் 100 கிளைகளை கிராமப் பகுதிகளில் துவங்கி இருக்கிறோம். பல்வேறு தொழில் செய்யும் 8,500 மகளிர் சுய உதவிக் குழுக்களோடு இணைந்து செயல்படுகிறோம்’’ என்றார் வங்கியின் எதிர்கால வளர்ச்சி அக்கறையோடு.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியை இத்தனை உயரத்துக்குக் கொண்டு செல்லப் பாடுபடுகிற ஐந்து பெண்களுக்கும் ஒரு சல்யூட் வைத்து விடைபெற்றோம்.