தொழில்

பிஸினஸ் குட்டிக்கதை

கோ  யம்பேட்டில் மொத்தவியாபாரக் கடை வைத்திருப்பவர் ‘பழக்கடை’ பாண்டி! பல ஊர்களில் இருந்தும் ஆப்பிள், ஆரஞ்சு என்று வாங்கி விற்கக்கூடிய ஆள். அவர் கடைதேடி ஒரு இளைஞன் வந்து நின்றான். ‘‘அண்ணாச்சி... என் பேர் கண்ணன். ஒரு ஃப்ரெண்டோடு சேர்ந்து புதுசா தொழில் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். குறைஞ்ச அட்வான்ஸுக்கு நூறு ஆப்பிள் பழங்கள் கொடுத்தீங்கன்னா வித்து உங்க பணத்தை செட்டில் பண்ணிடுவேன்’’ என்றான்.

‘‘தொழில் தொடங்கறது நல்ல விஷயம். நான் ‘குரோர்பதி’ அமிதாப்பச்சன் ஸ்டைலில் ஒரு கேள்வி கேட்கிறேன். சரியா பதில் சொல்லிட்டா, உனக்கு முன்பணம் இல்லாமலே பழம் தர்றேன். ரெடியா..?’’ என்ற பாண்டி, கேள்வியைக் கேட்டார்.

‘‘ஒரு ஆப்பிள் விலை நாலு ரூபாய். அப்படின்னா அம்பது ஆப்பிளின் மதிப்பு என்ன? உனக்கான நாலு விடைகள்... 200, 250, 300, 500’’ என்று சாய்ஸைக் கொடுத்தார்.

கண்ணனுக்கு ஆச்சரியமாகி விட்டது. ‘நான் என்ன நாலாம் வாய்ப்பாடுகூட தெரியாத ஆளா...?’ என்று எண்ணியபடி, ‘‘அண்ணாச்சி... இந்தக் கேள்விக்கு எனக்கு எந்த ஹெல்ப் லைனும் தேவையில்லை. 200 ரூபாய்தான் என் பதில்!’’ என்று சொல்லிவிட்டு பாண்டியின் முகத்தை ஆர்வமாகப் பார்த்தான்.

‘‘ஸாரி தம்பி... நீ தொழிலுக்கு இன்னும் பழக வேண்டியிருக்கு. உனக்கு பழம் தர முடியாது’’ என்று அனுப்பிவிட்டார்.

கண்ணன் தன் நண்பன் ரமேஷிடம் போய் விஷயத்தைச் சொன்னான். அந்தக் கேள்வியை உள்வாங்கிய ரமேஷ் உற்சாகமாக எழுந்தான். ‘‘கவலைப்படாதே கண்ணா... பாண்டி அண்ணாச்சிகிட்டே பழம் வாங்கி, நாம கடையை ஆரம்பிக்கிறோம்’’ என்று கண்ணனையும் அழைத்துக்கொண்டு பாண்டியின் கடைக்குப் போனான்.

‘‘அண்ணாச்சி... நீங்க இவன்கிட்டே கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லவா? நீங்க சொன்ன நாலு பதிலும் சரியான விடைதான்!’’ என்றான். பாண்டி முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, ‘‘எப்படிச் சொல்றே?’’ என்றார்.

‘‘அண்ணாச்சி... நாலு ரூபாய் ரேட்டுக்கு அம்பது பழம் வாங்கி அப்படியே விற்றால் 200 ரூபாய். அதையே ஒரு ரூபாய் லாபத்துக்கு கடையில் வைத்து விற்றால் 250 ரூபாய். இரண்டு ரூபாய் லாபத்துக்கு தெருத்தெருவாக கூவிக்கூவி விற்றால் 300 ரூபாய். அதையே ஜூஸ் போட்டு கிளாஸ் பத்து ரூபாய் என்று விற்றால் 500 ரூபாய். பழத்தின் மதிப்பு, அதை எப்படி விற்கிறோம் என்பதில்தான் இருக்கிறது’’ என்று ரமேஷ் சொல்லச் சொல்ல... கண்ணன் வியப்போடு பார்த்தான்.

‘‘தம்பி... எந்தத் தொழிலுக்கும் அணுகுமுறை என்பது முக்கியம். உன்னை நம்பி பழக்கடையையே தரலாம்’’ என்று பாராட்டியதோடு, அட்வான்ஸ் இல்லாமல் பழங்களைத் தந்தார் பாண்டி.