முதலீடு

நம்பிக்கை தரும் பங்குகள்!

ப    ங்கு முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் எதிர்காலத்தில் லாபம் தரும் பங்குகளைப் பரிந்துரைக்கிறோம். (பங்கு விலைகள் - பிப்ரவரி 13-ம் தேதி நிலவரம்)

சி  மென்ட், கட்டுமானம் போன்ற அடிப்படை கட்டமைப்புப் பணிகள் துறையில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனத்தின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. 30 வயதாகிற இந்நிறுவனம், இன்று நீர்மின் நிலையங்கள் கட்டுவது, மிகப்பெரிய சாலை அமைப்புப் பணிகளில் ஈடுபடுவது என வலுவடைந்துள்ளது. இந்நிறுவனம், தனக்கெனவே நீர்மின்உற்பத்தி பணிகளையும் செய்துவந்தது. கடந்த ஆண்டில் அதைத் தனி நிறுவனமாக மாற்றியது. அப்போது தன்னிடமிருந்த பங்குகளை புதிய நிறுவனத்துக்கு மாற்றியதன் மூலம் 360 கோடி ரூபாய்க்கு வருமானம் பெற்றது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் 11, பூடானில் ஒன்று என்று நீர்மின் நிலையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இத்துடன், ஆந்திராவில் பாசன கால்வாய்த் திட்டம் ஒன்றிலும் ஈடுபட்டு வருகிறது. 9 மீட்டர் அளவுக்கு மலையைக் குடைந்து 50 கிலோமீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் இப்பணி 60 மாதங்களில் முடியும். இத்திட்டத்தின் மதிப்பு, 1,925 கோடி ரூபாய்.

இதுதவிர உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிமென்ட் ஆலைகளை வாங்க உள்ளது. இதுபோன்ற பல திட்டங்களுக்குத் தேவையான பெரும் தொகையைத் திரட்ட எதிர்காலத்தில் பங்குகளாக மாற்றத்தக்க அந்நிய நாட்டு கரன்ஸி மதிப்பில் கடன் பத்திரங்களை வெளியிட்டு 125 மில்லியன் யூரோக்களைத் திரட்டியுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வருமானம் இந்நிறுவனத்துக்கு அதிக லாபத்தைப் பெற்றுத்தரும்.

இந்நிறுவனம் கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 797 கோடி ரூபாயை மொத்த வருமானமாகப் பெற்று அதில் 57 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்றுள்ளது. இதன் மூலம் இதன் ஒருபங்கு வருமானம் 3.23 ரூபாய். இதன் அடிப்படையில் முழு ஆண்டுக்கான இதன் பி/இ விகிதம் 34.02. இதன் புத்தக மதிப்பு 74.1 ரூபாய். இத்துறைக்கான சராசரி பி/இ விகிதம் 32.3. இத்துடன் ஒப்பிடும்போது தற்போதைய விலை நியாயமானதாகவேபடுகிறது.

இந்நிறுவனத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டால் இதன் லாபம் வருங்காலங்களில் கணிசமாக அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. நீண்டகால முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளை நம்பி வாங்கலாம்.

கே  ரளத்தைத் தலைமை இடமாகக் கொண்ட வங்கித்துறை நிறுவனம் இது. வங்கிச் சீர்திருத்தத்தில் முன்னணியில் உள்ள இவ்வங்கி தனியார்துறை வங்கிகளில் மிகப்பழமையான வங்கிகளில் ஒன்று. 400 கிளைகளுக்கு மேல் விரிந்துள்ள இந்த வங்கி கேரளாவில் இருந்து வெளிநாடு சென்று உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து நல்ல வருமானம் ஈட்டுகிறது.

நவீன தொழில் நுட்பங்கள் மூலம் தனது வாடிக்கை யாளர்களுக்கு சிறப்பான சேவையாற்றி வரும் இவ்வங்கி அண்மையில் ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்ட கணேஷ் வங்கியை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இது போன்ற வங்கி இணைப்பால் இந்த ஆண்டில் இது பல சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அண்மையில், தனது பங்குகளில் 49% வரை அந்நிய நேரடி முதலீட்டுக்கு திறந்து விட்டுள்ளது. இதனால் பன்னாட்டு முதலீட்டாளர்கள் இந்த வங்கியைக் கவனிக்க அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் இது 410.87 கோடி ரூபாய் மொத்த வருமானமும் 71.64 கோடியை நிகர லாபமும் பெற்றுள்ளது. இதன்படி இவ்வங்கியின் ஒரு பங்கு வருமானம் 10.92. இதன் கேப்பிடல் அடிக்குவசி ரேஷியோ, ரிசர்வ் வங்கி குறிப்பிடும் 9 சதவிதத்தைத் தாண்டி 11.34 என்ற அளவில் மிக வலுவாக உள்ளது. இதன் புத்தக மதிப்பு 110.3 ரூபாய். பி/இ விகிதம் 4.17. இன்றைக்குத் தனியார் துறை வங்கிகளின் சராசரி பி/இ விகிதம் 19.0 என்பதால், இந்தப் பங்குகள் மிக உறுதியான நிலையில் உள்ளது. இந்தப் பங்குகள் வாங்கிய கொஞ்ச காலத்திலேயே நல்ல அறுவடை காத்திருக்கிறது.

இ  ந்திய தனியார்த் துறையினரில் முன்னணியில் உள்ள இந்நிறுவனம் டிராக்டர் மற்றும் ஜீப்களைத் தயாரிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பே, ஆல்வின் நிசான் என்ற ஜப்பானிய கூட்டு நிறுவனத்தை, தன்னுடன் இணைத்துக் கொண்டது. இது மூன்று வெவ்வேறு திறனில் டிராக்டர் மாடல்களை அறிமுகம் செய்து, இந்திய சந்தையில் வலுவாகக் கால் ஊன்றத் தொடங்கி உள்ளது. அதோடு, பாதுகாப்புத் துறைக்குத் தேவையான வாகனங் களையும் உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டுகிறது. 40 முதல் 60 குதிரை சக்தி கொண்ட இந்நிறுவன டிராக்டருக்கு அமெரிக்கச் சந்தையில் மிக முக்கியமான இடம் உண்டு. அந்தச் சந்தையில் 80 சதவிகிதத்தை பிடித்துள்ளது. மேலும், அமெரிக்க ஆட்டோ துறையிலும் கால்பதிக்க ஆர்வம் காட்டி வருகிறது மஹேந்திரா.

ஐரோப்பியச் சந்தையில் இந்நிறுவனம், தனது 85 மற்றும் 100 குதிரை சக்தி டிராக்டரை, விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் மிகப்பெரிய ஃபோர்ஜிங் கம்பெனி ஒன்றையும் வாங்கியுள்ளது.

அண்மையில், ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் வாகனத்தை அறிமுகம் செய்தது. இந்த வாகனங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிறுவனம் ஐந்து மாதங்களுக்கு முன் தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்கியுள்ளது.

மஹேந்திரா நிறுவனம் கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 2207.16 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து, 233.46 கோடி ரூபாயை நிகர லாபமாகக் கண்டிருக்கிறது. இதன் மூலம் ஒரு பங்கு வருமானமாக 10.43 ரூபாய் பெற்றுள்ளது. முழு ஆண்டுக்கான பி/இ விகிதம் 14.31. இதன் புத்தக மதிப்பு 88.6 ரூபாய். இப்பங்கு சார்ந்த துறைக்கான சராசரி பி/இ விகிதம் 17.1. இதனுடன் ஒப்பிட்டால் இந்நிறுவனத்தின் பங்குவிலை தற்போது குறைவாகத்தான் உள்ளது. ஓராண்டு கால இலக்கில் இப்பங்குகளில் முதலீடு செய்வது நல்ல பலன் தரும்.

ம  ங்களம் சிமென்ட், பி.கே.பிர்லா குழுமத்தின் அங்கம். ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா உள்ளிட்ட இரு இடங்களில் சிமென்ட் ஆலைகளைக் கொண்டுள்ளது. வட மாநிலங்களில் முக்கியமான சிமென்ட் நிறுவனமான இது ‘மங்களம்’ மற்றும் ‘பிர்லா உத்தம்’ என்ற இரு பிராண்ட் பெயர்களில் சிமென்ட் விற்பனை செய்து வருகிறது. அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தேவையான அளவு சுண்ணாம்பு கற்களைத் தோண்டியெடுக்கப் போதுமான அளவு மூலப்பொருள் வசதிகளைச் சொந்தமாகக் கொண்டிருக்கும் இது, அண்மையில் ராஜஸ்தான் மாநில அரசிடம் கூடுதல் சுரங்கப்பணிக்கான அனுமதியைப் பெற்றுள்ளது.

அண்மையில் அனல்மின் உற்பத்தி தயாரிப்பு திட்டத்திலும் இறங்கியுள்ள இந்நிறுவனம் தனது உற்பத்தி முழுவதையும் உள்நாட்டிலேயே விற்பனை செய்கிறது.

அதேசமயம், ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்தாத இந்நிறுவனத்தின் பங்குகளில் கணிசமான அளவை தன்வசம் வைத்திருந்த ஐ.டி.பி.ஐ., அண்மையில் அதில் பெருமளவை பங்குச் சந்தையில் விற்றுவிட்டதும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 85.81 கோடி ரூபாய் டர்ன் ஓவரும் 7.16 கோடி ரூபாய் நிகர லாபமும் பெற்றுள்ளது.

ஒரு பங்கு வருமானம் - 2.53 ரூபாய். முழு ஆண்டுக்கான பி/ இ விகிதம் - 9.06. புத்தக மதிப்பு 13.4 ரூபாய். வட இந்திய சிமென்ட் துறை நிறுவனங்களின் சராசரி பி/இ விகிதமான 29 என்பதுடன் ஒப்பிட்டால் இந்தப் பங்கு இன்னும் நல்ல முன்னேற்றம் காண வாய்ப்புகள் உள்ளது.

தற்போது இந்தியாவில் காணப்படும் தொழில் வளர்ச்சி, கட்டுமான வளர்ச்சி போன்ற பல விஷயங்களை கருத்தில் கொண்டால் இந்த நிறுவனப் பங்குகள் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. இது தவிர பன்னாட்டு சிமென்ட் நிறுவனங்கள் இந்திய சிமென்ட் நிறுவனங்களை வாங்கிப்போடும் சம்பவங்கள் அதிகரித் துள்ள சூழலில் இந்த நிறுவனத்தின் பக்கம் பார்வை திரும்பினாலும் இந்த பங்கு முதலீட்டாளர்கள் நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு பெற நேரலாம்.