பாதுகாப்பு

கல்யாணத்துக்கும் இருக்கு, காப்பீடு!

ம   னதுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகளில் திருமணமும் ஒன்று. அதில் ‘எந்தவிதச் சிக்கலும் வந்துவிடக் கூடாது’ என்பது எல்லோரது எதிர்பார்ப்பும். ஒரு திருமணம் நல்லபடியாக நடந்து முடிய எத்தனையோ விஷயங்களும் நடப்புகளும் உண்டு.

ஆனால், மிக அரிதாக திருமணங்களில் சிக்கல் ஏற்பட்டு ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் தள்ளிப் போவதோ, தடைபடுவதோ உண்டுதானே! அதுபோன்ற சம்பவங்களின்போது, அதில் தொடர்புள்ளவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் ஒருபுறம் என்றால், மறுபுறம் அதுவரை திருமண ஏற்பாட்டுக்காகச் செலவிட்ட பணமும் நஷ்டமாகிறது. திருமணத்துக்குச் செலவிடப் படும் தொகை அவரவர் வசதியைப் பொறுத்து மாறு படும் என்றாலும் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தள்ளிப் போகும்போது பண ரீதியாகச் சம்பந்தப் பட்டவர்கள் சந்திக்கும் சவால் மிகப்பெரியது.

அப்போது அந்தக் குடும்பத்தார் அடையும் மன வருத்தத்துக்கும், சங்கடத்துக்கும் ஆறுதல் இல்லை என்றாலும், அவர்கள் சந்திக்கும் பண இழப்பையாவது தடுக்க முடியுமா என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இன்ஷூரன்ஸ் பாலிசிகளும் உண்டு. திருமண நிகழ்ச்சிக்கான இழப்பைத் தடுப்பதற்கென்றே அறிமுகம் செய்யப்பட்ட இந்தக் காப்பீடு, ‘வெட்டிங் இன்ஷூரன்ஸ்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

திருமணம் நின்றுபோவது அல்லது தள்ளிப்போவது என்பது பல காரணங்களால் நடக்கிறது. மிகநெருங்கிய உறவினர்களுக்கு உடல்நலமின்மை, விபத்து, காலமாதல், திருமண நாள் சமயத்தில் நடக்கின்ற மிகப்பெரிய கலவரம், பொது அமைதிக்கு ஏற்படுகிற பாதிப்பு... திருமணத்துக்காக வைத்திருந்த பணம், நகை திருமண நாளுக்கு மிக நெருக்கத்தில் காணாமல் போவது அல்லது களவுபோவது போன்ற காரணங்கள் இருக்கலாம். இவ்விதம் நஷ்டமடைய நேரும் எனத் தோன்றும் பெரும்பாலான செலவுகளுக்கு காப்பீடு செய்யமுடியும்.

இந்தவகை காப்பீடுகளுக்கான பிரத்யேகத் திட்டங்கள் தனியார்த்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சிலவற்றிடம்தான் உள்ளன. அத்துடன் அவை அண்மைக்காலமாக மிக அதிக அளவில் இந்தவகை பாலிசிகளை விற்று வருகின்றன. ‘திருமணம் நின்றுபோகும் என்று நினைப்பதும் கூட தவறு; அபசகுனம்’ என்ற சென்டிமென்ட் தாக்கத்தில் இருந்து வெளியேறி, நமது கட்டுப்பாட்டில் இல்லாத எதார்த்த நிலைகளைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் நிலைக்கு மக்கள் முன்னேறியிருப்பதன் அடையாளம் தான் இது.

ஒருவர் இந்த பாலிசியின்படி காப்பீடு பெற விரும்பினால், எவ்வகைச் செலவுகளுக்கெல்லாம் காப்பீடு தேவை, எவ்வளவு தொகை வரை தேவை என்பதை முடிவு செய்து, அத்தொகை முழுவதற்கும் சேர்த்தே காப்பீடு பெற்றிருக்க வேண்டும். எனவே, அதற்கு ஏற்ப பிரீமியம் செலுத்தி இருக்கவேண்டும். அதுமட்டுமின்றி, ஒருவேளை எதிர்பாராதவிதமாக அந்த அசம்பாவிதம் நடந்து அவர் இழப்பீட்டுத் தொகை யைக் கோர நேர்ந்தால், அப்போது மேற்கண்ட வகையில் பணம் செலவிடப்பட் டதை நிரூபிக்கும் ரசீதுகள் அல்லது சான்றுகளை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். எந்தத் தொகைக்கு ரசீதுகள் தரப்படுகிறதோ அந்தத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் திரும்பத் தரும்.

எந்தச் செலவெல்லாம் திரும்பக் கிடைக்கும்?

திருமண மண்டபம், ஹோட்டல் வாடகை அல்லது முன்பணம்; திருமணக்கூடம் அல்லது மணமக்கள் இருக்கும் வீட்டு அலங்காரத்துக்குச் செலவிட்ட தொகை; இசைக்குழு போன்ற கலைநிகழ்ச்சிக் கட்டணம்; மணமக்கள் அல்லது நெருங்கிய உறவினருக்கு விபத்து நேரிட்டால் ஏற்படும் செலவு; மணமக்கள் வீட்டில் பொருட்கள் திருட்டு அல்லது காணாமல் போவது அல்லது தீ விபத்து போன்றவற்றால் இழப்பு; திருமண நிகழ்ச்சியின்போதே நடந்துவிடும் திடீர் அசம்பாவிதங்களால் ஏற்படும் செலவு; திருமண விருந்து உணவில் ஃபுட் பாய்ஸன் போன்றவை நடந்துவிட்டால் ஏற்படும் செலவுகள் ஆகியவை திரும்பப் பெறக்கூடியவை என்று பொதுவாகப் பட்டியல் இடப்படுகிறது.

இந்தவகை இன்ஷூரன்ஸ் பெற வசூலிக்கப்படும் பிரீமியத் தொகை, பொதுவாக 1 லட்ச ரூபாய்க்கு உத்தேசமாக ரூபாய் 1,300 முதல் 1,800 வரை இருக்கும். உதாரணமாக, ஒரு தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனம் 2 லட்ச ரூபாய் காப்பீடு பெற 3,800 ரூபாயை பிரீமியமாகவும், அதுவே 8 லட்ச ரூபாய்க்கு காப்பீடு பெற 14,300 ரூபாயைப் பிரீமியமாகவும் வசூலிக்கிறது. சில தனியார் நிறுவனங்கள் அதிகபட்சமாக 55 லட்சம் ரூபாய் வரைகூட இவ்வகை காப்பீடு வசதி அளிக்கின்றன.

இதில் இன்னொரு விஷயம், இதற்கான பிரீமியத் தொகை, இந்தக் காப்பீடு வசதி எத்தனை நாட்களுக்குத் தேவை என்பதைப் பொறுத்தும் மாறுபடும். அதனால், ஒருவேளை நிச்சயதார்த்தம் நடந்து நீண்ட நாள் கழித்து திருமணம் என்று முடிவு செய்தால், அப்போதே காப்பீடு வசதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. முடிந்தவரை திருமண நாளுக்கு நெருக்கத்தில் - அதற்காகச் செய்யப்பட்டுள்ள செலவுகள் நம் தாங்கும் சக்தியைத் தாண்டும் கட்டத்தில் இந்த வசதியைப் பெறுவது சிறந்தது.