வேலை

சின்ன வேலை... பெரிய சம்பளம்!

‘‘பை  யன் என்ன செய்யறான்?’’

‘‘டிகிரி படிக்கிறான்...’’

‘‘வெரிகுட்... எவ்வளவு சம்பாதிக்கிறான்?’’

‘‘படிக்கும்போது சம்பாத்தியமா?’’ என்று அதிர்ச்சி அடையும் அப்பாக்கள் யாரும் இல்லை. படிக்கும்போதே சம்பாதிப்பது என்பது இன்றைய மாணவர்களின் அடையாளமாகவே ஆகிவிட்டது.

சரி, மாணவர்கள் என்ன வேலை செய்ய முடியும்? காலை நேரத்தில் பேப்பர் போடுவதில் ஆரம்பித்து, போன் பூத்தில் மாலை நேர வேலை செய்வது வரை பார்ட் டைம் வேலை செய்வது அந்தக் காலம். வளர்ந்து வரும் டெக்னாலஜியைப் பயன்படுத்தி அதிலும் காசு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பது, விழா பற்றிய தகவல்களை உரியவர்களுக்குத் தெரிவிப்பது போன்ற ஈவென்ட் மேனேஜ்மென்ட் பணிகள் ஒருபக்கம். கலைநிகழ்ச்சிகள், நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் போன்ற வேலைகளைச் செய்வது, விளம்பர உதவிகளைச் செய்வது, சினிமாக்களில் மாணவர்கள் பாத்திரங்களில் நடிப்பது போன்ற வேலையையும் செய்கிறார்கள். மணிரத்னம் டைரக்ட் செய்த ‘யுவா’, ரேவதி டைரக்ட் செய்த ‘பிர் மிலேங்கே’ போன்ற இந்திப்படங்கள், சமீபத்தில் வெளிவந்த ‘கண்ட நாள் முதல்...’ போன்ற தமிழ்படங்களிலும் மாணவர்களாகவே நடித்த பலரும் நிஜத்திலும் மாணவர்கள்.

இதுபோன்ற வேலைகளில் சின்ன வேலை... பெரிய சம்பளம் பார்க் கிறார்கள் மாணவர்கள். படிப்பையும் கெடுத்துக் கொள்ளாமல் கிடைக்கும் பார்ட் டைம் வருமானம்! இப்படி பார்ட் டைம் வேலைக்குத் தயாராக இருக்கும் மாணவர்களை எங்கே போய்த் தேடுவது?

இதற்காகவே ஒரு இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார் மனோஜ்! ஆறு வருட உழைப்பு... 16 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ உறுப்பினர்கள், அவர்களுக்கு வேலை தரக் காத்திருக்கும் நானூறுக்கும் அதிகமான நிறுவனங்கள் என்று மனோஜ் உருவாக்கியிருக்கும் இந்த நெட்வொர்க்கின் பின்னணியில் சுவாரஸ்யமான கதை இருக்கிறது!

மனோஜ் பள்ளியில் பத்தாவது படிக்கும்போது, அடுத்து என்ன குரூப் எடுப்பது என்று தெரியாமல் இருந்திருக்கிறார். ‘ஏன் எனக்கு எதிர்கால படிப்பு பற்றிய தெளிவான யோசனை இல்லை!’ என்று அவருக்குள் ஆச்சரியமான கேள்வி வந்திருக்கிறது.

அடுத்து நடந்ததை மனோஜே விவரிக்கிறார். ‘‘பட்டப்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றபோது அங்கிருக்கும் மாணவர்கள் படிக்கும்போதே பகுதிநேரமாக வேலைக்குப் போவதைப் பார்த்தேன். நானும் பகுதி நேர வேலைக்குப் போனேன். நிறுவனங்களையும் அங்குள்ள மனிதர்களையும் சூழ்நிலை களையும் புரிந்துகொள்ள இது சுலபமான வழியாக இருக்கிறதே என்று வியந்தேன். மேலும் இந்த வேலை அந்த வேலை என்று எந்தப் பாகுபாடும் ஈகோவும் இல்லாமல் எல்லா மாதிரியான வேலைகளையும் சந்தோஷமாகச் செய்ய முடிவதையும் அதன்மூலம் பயனுள்ள அனுபவமும் கிடைப்பதை உணர்ந்தேன். இந்தியா ஏன் இப்படி இல்லை என்று எனக்குள் யோசனைகள் எழுந்தன!

படிப்பு முடிந்து, இந்தியா திரும்பியதும், பள்ளி கல்லூரி களுக்குப் போய், படிக்கும் போதே வேலை அனுபவம் பெற வேண்டிய அவசியத்தையும், சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதையும் எடுத்துச் சொன்னேன். அதேபோல, நிறுவனங்களைச் சந்தித்து மாணவர்களை பகுதிநேரமாக வேலைக்கு எடுத்துக் கொள்வது பற்றியும் பேசினேன். என் நண்பர் சசிகாந்த் எனக்கு உதவியாக உடன் வந்தார். அப்படி என் வீட்டு பால்கனியில் சிறிதாக தொடங்கப்பட்டதுதான் இந்த ‘ஸ்டூடன்ட் கான்செப்ட்’!’’ என்று பெருமிதமாகச் சொல்கிறார் மனோஜ்.

நகரில் எங்கு எங்கோ பரவிக்கிடக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்தது ஒரே எண்ண ஓட்டம் கொண்ட இதயத்தால் மட்டுமல்ல, மனோஜ் தொடங்கிய இணையத்தாலும்தான்.

இந்தத் திட்டத்துக்குள் நுழைவது எப்படி... பயன்பெறுவது எப்படி?

‘‘இதில் உறுப்பினர் ஆவதற்குக் கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால், சேர விரும்புகிறவர்களின் திறமை, முயற்சி குறித்து தெளிவாகச் சோதித்து அறிந்துகொண்ட பிறகே சேர்த்துக் கொள்கிறோம். அவர்களுக்கு நேர்முகத்தேர்வு உண்டு.

அடுத்தகட்டமாக மாணவர்களின் பகுதிநேர வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள்  new.studentconcepts.com  இணைய தளத்துக்குச் சென்று தங்கள் பெயர், இ-மெயில் விலாசத்தைக் கொடுக்க வேண்டும். அடுத்த 24 மணி நேரத்துக்குள் எங்கள் இணையதளத்தில் இருந்து மேலும் விவரங்கள் கேட்டு மெயில் வரும். என்ன மாதிரியான வேலை, எவ்வளவு நாட்களுக்கு மாணவர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பது போன்ற கேள்விகளை உள்ளடக்கிய அந்த மெயிலுக்கு பதில் அனுப்ப வேண்டும். அதன்பிறகு கைவசம் இருக்கும் வேலையைப் பற்றிய தகவலை மாணவர்கள் தெரிந்து கொள்ளும்வகையில் இணையதளத்தின் ‘வாய்ப்புகள்’ பகுதியில் போடுவோம். அந்த வேலையில் ஆர்வமிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்’’என்கிறார் மனோஜ்

அந்த விண்ணப்பங்களில் இருந்து பொருத்தமான மாணவர்களைத் தேர்வுசெய்து அந்த வேலைக்கு அனுப்பி வைப்பார்கள், ஸ்டூடன்ட் கான்செப்ட்டை சேர்ந்தவர்கள். இதற்கு முன் கொடுத்த பொறுப்பைக் கச்சிதமாகச் செய்து முடித்தவர்கள் யார் என்ற பட்டியலை வைத்து அவர்கள் முடிவு செய்வார்கள். இதில் ஒரு நாளுக்கு 200 முதல் 1,000 ரூபாய் வரைகூட சம்பளம் கிடைக்கும்.

இதை நடத்தும் மனோஜ், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து சர்வீஸ் சார்ஜ் என்று ஆர்டருக்கு ஏற்ப வசூல் செய்து, அதிலிருந்து மாணவர்களுக்கு ஊதியம் தந்து விடுகிறார்.

புத்திசாலித்தனமாக, நேர்த்தியாகச் செய்ய வேண்டிய வேலைகள், கருத்துக்கணிப்புகள், விற்பனைக்கு வரும் புதிய பொருட்கள் அறிமுகம், மேடை நிகழ்ச்சிகள் நடத்துவது, அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வரும் இடங்களில் பொருட்கள் பற்றிய விவரங்கள் சொல்வது, வழி காட்டுவது போன்ற வேலைகள் பெரும்பாலும் என்பதால் மாணவர்களுக்கு இதில் சிரமம் இருக்காது.

23 வயது பிஜேய் சரவணனும் மற்றும் 21 வயது பிஜேய் கார்த்திக்கும் சகோதரர்கள். சரவணன் கம்ப்யூட்டர் சயின்ஸும், கார்த்திக் விஷ§வல் கம்யூனிகேஷனும் படிக்கிறார்கள். வலைத்தளம் மூலமாக ஸ்டூடன்ட் கான்செப்ட் அறிமுகம் ஆக, இப்போது இவர்கள் பார்ட் டைம் வேலைகளில் பிஸி. நிகழ்ச்சிகள் பலவற்றுக்கும் போய் ஒரு நாளில் அதிக பட்சமாக 800 ரூபாய் வரைகூட வருமானம் பார்க்கிறார்கள்.

22வயது வருண் சென்னை கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ முடித்தார். யாரோடும் பேசுவதற்கே பயப்படும் மிகவும் கூச்ச சுபாவமுள்ள பையன். நண்பர் மூலம் ஸ்டூடன்ட் கான்செப்ட்ஸ் பற்றி தெரியவந்து அங்கே போயிருக்கிறார். அனிதா ரத்னத்தின், இன்டர்நேஷனல் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தித் தரும் ஈவென்ட் மேனெஜ்மென்ட் வேலை. மொத்தம் ஏழு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் தன்னாலும் செய்ய முடியும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்த வருணுக்குள் புது உற்சாகம். நேர்த்தியாக வருண் நிகழ்ச்சியை நடத்திக்கொடுத்த விதத்தினைப் பார்த்த குழுவினர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வருண் தான் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

தொடக்கத்தில் வருணுடைய பெற்றோர்களுக்கு இதில் சம்மதமில்லை. ‘படிக்கிற காலத்தில் இப்படி கண்ட வேலைக்கும் போக வேண்டுமா?’ என்று தடுத்திருக்கிறார்கள். போகப் போக பணம் மட்டுமல்ல... இதில், தங்கள் மகன் உலக அனுபவமும் பெறுகிறான், மற்றவர்களுடன் கலந்து பழக மற்றும் செயல்படக் கற்றுக்கொள்கிறான் என்பதைப் புரிந்து கொண்டு, ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

வருண் இப்போது விப்ரோ நிறுவனத்தில் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். அந்த நிறுவனம் நடத்திய நேர்முகத்தேர்வில் சபாஷ் வாங்கியிருக்கிறார். சொல்வதைத் தைரியமாகத் தெளிவாகச் சொன்னதற்கு, வேலை மட்டுமல்ல, வெளிப்படையான பாராட்டே கிடைத்திருக்கிறது. இப்படி, படிக்கும்போதே பணம். அதோடு, அனுபவங்கள்தரும் தன்னம்பிக்கையும் பெரிய போனஸ்தானே!

ஸ்டூடன்ட் கான்செப்டில் சேர்ந்த ஆயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் கல்லூரியில் படிக்கும்போதே பல்வேறு வேலை அனுபவங்கள் பெற்று, இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். திட்டமிடுதல், செயல்படுத்துதல், எதிர்பாராமல் வரக் கூடிய பிரச்னைகளைச் சமாளித்தல், மனிதர்கள் தொடர்பாக வரக்கூடிய சிக்கல்களைப் புரிந்து கொள்ளுதல், தீர்த்தல் முதலியனவற்றை காசு வாங்கிக் கொண்டு பெற்றிருக்கிறார்கள்.

‘யுவா’ படத்தில் பங்கு பெற்ற 1,800 மாணவர்களில் இப்போது நான்கு மாணவர்கள் டாகுமென்ட்ரி படமெடுக்கவும், இருவர் சொந்தமாக திரையரங்குகள் தொடங்கவும் போய்விட்டார்கள். அனுபவம் கொடுத்த, தைரியம் காட்டிய வழி.

மனோஜுக்குள் விழுந்த சிறு பொறி இன்று பலருக்கு பகுதிநேர வேலைவாய்ப்பைத் தரும் பெருநெருப்பாக மாறியிருக்கிறது. இது எல்லா ஊரிலும் எல்லா மாணவர்களும் செய்யக்கூடிய விஷயங்கள்தான். எப்படி செயல்படுத்துவது என்று வழிகாட்ட மனோஜும் தயாராக இருக்கிறார்.

படிக்கும்போதே சம்பாதிக்க பல வழிகள். பற்றிக் கொள்ளுங்கள் மாணவர்களே!

கல்லூரியிலேயே இருக்கு வேலைவாய்ப்பு!

க  ல்லூரியில் படிக்கும்போதே சப்ஜெக்ட் தவிரவும் ஏதாவது கூடுதலாக படித்து வைத்துக் கொண்டால் வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்குமே என்ற நோக்கத்தில் பல கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு தொழிற் கல்வியை வழங்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

சென்னையில் உள்ள பாரதி பெண்கள் கலைக்கல்லூரியில் இதுபோல மாணவிகளுக்கு தொழிற்கல்வி கற்றுத் தருகிறார்கள். கிளாஸ் பெயின்டிங், கம்ப்யூட்டர் அனிமேஷன் கோர்ஸ்கள், ஆரோக்கிய உணவுத் தயாரிப்பு, மொழி பெயர்ப்பு திறமையை வளர்க்கும் கல்வி என்று பலவிதமான பாடங்களை வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு துறையின் பேராசிரியர்களும் தங்கள் துறையில் ஒரு பாடத்தை தொழிற்பாடமாகத் தேர்வு செய்து, அதை மாணவிகளுக்குக் கற்றுத் தருகிறார்கள். இதன்மூலம் எந்தத் துறையில் படிக்கும் மாணவியும் எந்தத் துறையில் உள்ள தொழிற்பாடத்தையும் கற்றுக்கொள்ளலாம். இதற்காக, அந்தக் கல்லூரி பேராசிரியைகள் தவிர, வெளியில் இருந்தும் சிறப்புப் பயிற்சியாளர்களை அழைத்துவந்து பயிற்சி கொடுக்கிறார்கள்.

இதைக் கட்டாயப் பாடமாகவோ மாணவிகளுடைய ரெகுலர் கோர்ஸைத் தீர்மானிக்கும் விஷயமாகவோ அமைக்காமல், மாணவிகளே விருப்பப்பட்டு படிக்கும்வகையில் பாடங்களை அமைத்திருக்கிறார்கள்.

சிறப்பு அழைப்பாளராக இந்தக் கல்லூரிக்கு வந்து மாணவிகளுக்கு கிளாஸ் பெயின்டிங், வாழ்த்து அட்டைகள் மற்றும் பேப்பர் ஃபைல், பைகள் தயாரிப்பது போன்ற கைவினைக் கலையைக் கற்றுத்தரும் ஸ்ரீலக்ஷ்மி, ‘‘வெறும் தொழிற்கல்வியாக மட்டுமல்லாமல், தயாரித்த பொருளை எப்படி மார்க்கெட் செய்வது என்பது போன்ற டிப்ஸ்களையும் வழங்குகிறோம். இதனால், படிப்பு முடிந்து வெளியில் செல்லும் மாணவிகள் தைரியமாக இந்தச் சமூகத்தை எதிர்கொள்ள முடியும்’’ என்றார்.

பாரதி கல்லூரியின் பொருளாதாரத் துறை பேராசிரியையான ஞானபுஷ்பம் கூறும்போது, ‘‘மாணவிகள் படிப்பு முடிந்ததும் வேலை தேடி அலையாமல் கற்றுக்கொண்ட கலையை வைத்து சிறுதொழில் செய்து பணம் சம்பாதிக்க இது நல்ல வழியாக இருக்கிறது. ஓராண்டு காலம் படிக்கும் இந்தத் தொழிற் கல்விக்காக சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கிறோம். அதிக அளவில் பிராக்டிக்கல் வகுப்புகளே இருப்பதால் மாணவிகள் தெளிவாகக் கற்றுக்கொள்ள முடியும். இந்தத் தொழிற்கல்வியை வழங்குவதற்கான ஆதார நிதியை யூ.ஜி.சி வழங்குகிறது.

எங்களிடம் பயிற்சி பெறும் மாணவிகளை நாங்களே ஊக்கப்படுத்தவும் செய்கிறோம். எங்களிடம் குக்கரி கோர்ஸ் படிக்கும் மாணவிகளையே கல்லூரி விழாக்களுக்கு உணவு தயாரிக்கும் பணிக்குப் பயன்படுத்துகிறோம். அதேபோல வெளியில் நடக்கும் சிறு நிகழ்ச்சிகளுக்கும் உணவு தயாரிக்க இந்த மாணவிகளை சிபாரிசு செய்து அனுப்புகிறார்கள். இதன்மூலம் படிக்கும்போதே அவர்களால் பணம் ஈட்டவும் முடிகிறது’’ என்றார்.

மற்ற கல்லூரிகளிலும் இதைப் பின்பற்றலாமே!

- ஆர்.ரெங்கராஜ்